அஸ்திவாரம்

Tuesday, March 08, 2011

கனிமொழி - சுற்றிச் சுழலும் சூறாவளி

"நான் பிறந்த நாள் முதல் இன்று வரைக்கும் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் விமர்சனத்திறகு பஞ்சமில்லை.  அது குறித்து நான் கவலைப்படுவதும் இல்லை. எப்போதும் என் வழியில் நான் முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றேன்."

கலைஞர் மு. கருணாநிதி மகள் கனிமொழி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். காரணம் இன்று முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ராசா மேல் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் மெகா ஊழலுக்குப் பின்னால் இருப்பவர் கனிமொழி என்று சுட்டிக் காட்டப்படுவதைப் போலவே மற்றொன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 

இன்று காங்கிரஸ் கேட்கும் அளவற்ற ஆசையுள்ள சீட்டுக்கு முக்கிய காரணம்  ஸ்பெக்ட்ரம் என்ற மெகா ஊழல். இந்த மெகா ஊழலில் திமுக சம்மந்தப்பட்டுள்ளதை வைத்து தான் இன்று காங்கிரஸ் முடிந்தவரைக்கும் மிரட்டிப் பார்க்கலாம் என்று ஐவர் குழுவை வைத்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.  கேட்ட சீட்டைத் தருகிறாயா? இல்லை மகளையும் உள்ளே தள்ளட்டுமா?என்கிற தொனி தான் முக்கியமாக இருக்கிறது.  பாராளுமன்றத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக உள்ள கனிமொழிக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் என்ன தொடர்பு?

கனிமொழி 1968 ஜனவரி 1 அன்று பிறந்தவர்.  ஜெயலலிதாவைப் போலவே தனது பள்ளிப் படிப்பபை சர்ச் பார்க் ல் படித்தவர்.  வணிகவியல் முதுகலை பட்டம் பெற்றவர். சிவகாசியில் உள்ள பெருந் தொழில் அதிபர் குடும்பத்தில் 1989 ஆம் ஆண்டு அதிபன் போஸ் உடன் திருமணம் நடந்து மிக குறுகிய காலத்தில் விவகாரத்தும் ஆகி இன்று சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தன என்பவரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து ஆதித்யா என்ற ஆண் வாரிசுக்கு தாயாகவும் இருப்பவர். தொடக்கத்தில் சென்னையில் தி ஹிந்து பத்திரிக்கையிலும் பணிபுரிந்தவர்.

கருணாநிதியின் மற்ற குழந்தைகளை விட கனிமொழி படிப்பிலும், கலையார்வத்திலும் சூட்டிகையாக இருந்தவர். கலைஞர் மேல் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் மொழி ஆற்றல், இலக்கியத்திறனை மாற்று அணியில் உள்ள தலைவர்களும் புகழ்ந்து பேசுவர். ஆனால் கலைஞரின் வாரிசுகளில் கனிமொழியிடம் மட்டுமே அப்பாவின் திறமை உண்டு. கலைஞரைப் போலவே பத்திரிக்கையாளர். இலக்கிய ஆர்வம் மிக்கவர்.கவிதைகளுடன் வெகுஜன இலக்கிய வட்டாரத்தில் அரசியல் கலப்பில்லாமல் பழகியவர்.

எழுத்தாளர் சுஜாதாவுடன் மின்னம்பலம் இணையத்தில் பணியாற்றியவர். மற்றவர்கள் குற்றஞ்சாட்டும் அளவிற்கு தயாநிதி மாறன் போல ஒரே நாளில் இந்த அரசியல் உலகத்திற்கு வந்தவர் அல்ல. எழுத்துலகம் மூலம் தனது சமூக பங்களிப்பை காட்டியவர். அதன் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு கருத்து என்றொரு ( எந்த துறை குறித்தும் எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை பதிய வைக்கக்கூடிய வலைதளம்) அமைப்பை இன்றைய உள்துறை அமைச்சர் மகன் கார்த்தி சிதம்பரம் உடன் சேர்ந்து தொடங்கியவர். ஆனால் இறுதியில் வெற்றி பெறவில்லை. விமர்சனம் அதிகமாக இருந்தாலும் அருள்தந்தை ஜெகத் கஸ்பருடன் சேர்ந்து 2007 முதல் சங்கமம் என்ற அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைகளுக்கு , கலைஞர்களுக்கு நகர்புறங்களில் உரிய அங்கீகாரம் கொடுக்க வைத்தவர்.

கலையார்வத்தைப் போலவே கலைஞர் 85 என்று தமிழ்நாட்டில் உள்ள சிறுநகரகங்களை அடிப்படையாகக் கொண்டு முதன் முதலாக விருதுநகர் அருகே காரியாபட்டியில் வேலைவாய்ப்பு கண்காட்சியை நடத்தியவர்.  ஆனால் கனிமொழியின் இந்த சமூக அரசியல் அங்கீகாரமென்பது கலைஞரின் மகள் என்கிற ரீதியாக இருந்தாலும் ஸ்டாலின், அழகிரியின் ஆளுமையை மீறி மேலே வருவது லேசுபட்ட காரியமா என்ன?  

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளின் மற்றொரு பெயர் தர்மாம்பாள். கருணாநிதியுடன் நாடகத்தில் நடித்தவர். நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். கருணாநிதிக்கு தோழியாகி இறுதியில் துணைவியாக மாறியவர்.  கருணாநிதியின் ஒவ்வொரு கால கட்டத்தின் வளர்ச்சியிலும் வளர்ந்த குடும்பத்தினரைப் போலவே இன்று கனிமொழியும் அரசியலில் வளர்ந்து கொண்டிருபபவர்.

அரசியல் உலகில் ஆண் அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கம் முக்கியமில்லை. ஆனால் பெண் என்கிறபோது கிசுகிசுகளுக்கு பஞ்சமிருப்பதில்லை.  அது தான் இன்று ராஜா கனிமொழி தொடர்பு என்கிற வரைக்கும் றெக்கை கட்டி பறக்கின்றது. காரணம் டெல்லி லாபியில் கனிமொழி குறுகிய காலத்தில் உருவாக்கிய தாக்கம்.  பவர் புரோக்கர் நீராடியா மூலம் தயாநிதி மாறனை தவிர்த்து தொலை தொடர்பு அமைச்சகத்திற்கு ராஜாவை கொண்டு வந்து சேர்த்தது முதல் இந்த கனிமொழி கிசுகிசுக்கு பஞ்சமில்லாமல் போக அதுவே இன்று மெகா ஊழல் சமாச்சாரத்தை பின்னுக்கு தள்ளி தனி மனித வக்ர தாக்குதல்கள் அதிகமாகியுள்ளது. கலைஞர் ஜெயலலிதா மேல் வீசிய இது போன்ற அம்புகள் இன்று தன் மகள் மேல் வந்து விழுந்து கொண்டிருப்பதை பார்க்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ராஜாத்தியம்மாளுடன் வாழ்ந்த திருமண வாழ்க்கையை கருணாநிதி தொடக்கத்தில் கருணாநிதி வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அப்பா அரவணைப்பு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவர் தான் கனிமொழி. இது குறித்து கேள்வி வந்த போது கருணாநிதி அன்றைய சூழ்நிலையில் வேறு விதமாக சொன்னார்.  'என் மகள் கனிமொழியின் தாயார் ராஜாத்தி' என்றார். நடிகை மனோரமா கூட சமீபத்தில் நடந்த ஒரு மேடைக் கூட்டத்தில் இந்த விசயங்களை தெரியப்படுத்திய போது கருணாநிதியும் அதனை வழிமொழிந்தார். . . 

ஆனால் முத்து, ஸ்டாலின், அழகிரி தமிழரசு, செல்வி போன்றவர்களை விட கனிமொழியின் வாழ்க்கை சற்று வித்யாசமானது. ராஜாத்தி அம்மாளுக்கு கிடைத்த துணைவி என்ற மரியாதையும் உருவான வேறுபாடுகளையும் மீறி இன்று கனிமொழி தன்னையும் இந்திய அரசியலில் ஒரு நபராக நிலை நிறுத்திக் கொண்டவர். ஜெயலலிதாவால் நடு இரவில் கருணாநிதியை கைது செய்யப்பட்டு மறுநாள் காலையில் இப்போது இடிக்கப்பட்ட சென்ட்ரல் சிறைவளாகத்தின் முன்புறம் அமர்ந்து இருந்த கருணாநிதியின் புகைப்படம் எல்லா ஊடகத்திலும் வெளிவந்தது நினைவில் இருக்கலாம். 

அன்று கருணாநிதியுடன் அமர்ந்திருந்த கனிமொழி உருவாக்கிக் கொண்ட அரசியல் வெளிச்சம் இன்று வரைக்கும் மேலேறி இப்போது டெல்லி அரசியல் லாபி வரைக்கும் கொண்டு போய் சேர்த்துள்ளது. அதுவும் எதற்காகவும் ஒன்று சேர்ந்து விடாத மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்த்து பெண்களுக்கான 33 சதவிகித மசோதாவை ரகணகளப்படுத்திய ஆணாதிக்கத்திற்கு மத்தியில் தன்னை ஒரு ஆளாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.

கலைஞர் அப்பழுக்கற்றவர் என்று சொன்னால் எப்படி சிரிப்பு வருமோ அதை விட சோனியா காங்கிரஸ் ஆட்சியென்பது உழலற்ற நிர்வாகம் என்று எவராவது சொன்னால் 'கேழ்வரகில் நெய் வடிகின்றது' என்கிற கதையாகத்தான் இருக்கும்.. 

ஒரு வகையில் பெரம்பலூர் ராசா பரிதாபத்துக்குரியவர். எடுத்த தேனில் நகத்தில் ஓட்டியதை நக்கியத்திற்கே திகார் ஜெயில் என்றால் கையில் வாங்கி குடித்தவர்களுக்கும், அண்டாவுக்குள் தலையை விட்டு முகம் ஒட்டி சுவைத்தவர்களுக்கும் சட்டத்தில் என்ன தண்டனை இருக்கும்? 

ஆனால் நம்முடைய இந்தியச் சட்டம் என்பது அரசியல்வாதிகளுக்கு அல்ல. எப்போதும் விசாரணைக் கமிஷன் என்பதே ஒரு விளக்கெண்ணை கமிஷனாகத் தான் இருக்கிறது. இந்திய அரசியலில் ஒவ்வொரு விசாரனை கமிஷனுக்கென்று செலவழித்த தொகையை ஒதுக்கியிருந்தால் கூட இன்று ஆயிரக்கணக்கான கிராமங்கள் அடிப்படை வசதிகளை பெற்று இருக்கக்கூடும்..

காரணம் இன்று இந்தியாவில் ஊழல், லஞ்சம் என்பது இன்று வெகுஜன மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயல்பான விசயமாக மாறிவிட்ட ஒன்று. ஆனால் இன்று பாராளுமன்ற ( ராஜ்ய சபா) உறுப்பினராக இருக்கும் கனிமொழிக்கும் இந்த மெகா ஊழலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?


ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த 206 கோடி ரூபாய் பணம் கலைஞர் டிவிக்கு வந்துள்ளது. கலைஞர் டிவியில் ஷேர் ஹோல்டர் என்கிற விதத்தில் கனிமொழியும் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றவாளியே. கனிமொழிக்கும் இது தெரிந்து இருக்கக்கூடும். ஆனால் கனிமொழி நான் கலைஞர் தொலைக் காட்சியில் பங்குதாரர் இல்லை என்பது போன்று போய்க் கொண்டிருக்கும்  கிளைக்கதை ஒன்று தனியாக இருக்கிறது.

இது சிபிஐ விரிக்கும் வலை. காரணம் சிபிஜ விரித்த வலையில் சிக்கிய முக்கியப் புள்ளி ஷாகீத் பால்வா கொடுத்த ஆதாரத்தை வைத்தே வலை சுருக்கப்படுகின்றது.   இந்தியாவில் உள்ள சிபிஐ என்றால் அதற்கு மற்றொரு பெயர் ஒன்று உண்டு.  அடக்குவது அல்லது முரண்டு பிடிப்பவர்களை வழிக்கு கொண்டு வருவது.  இது தான் முக்கியப்பணி.  இதற்குப் பிறகு மற்ற அவர்களின் பணியெல்லாம் வரும். இந்த சிபிஐ விரித்து வைத்துள்ள வலையில் அடுத்து மாட்ட்ப் போகும் சூழ்நிலையில் இருப்பவர் தான் கனிமொழி. 


கருணாநிதியின் அக்கா மகன் முரசொலி மாறன் தான் திமுகவிற்கு தேவைப்படும் டெல்லி லாபி அரசியலை கரைத்து குடித்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.  அன்று மாறனுக்கு பக்கபலமாக இருந்தவர் வைகோ. ஆனால் முரசொலி மாறனுக்குப் பிறகு அவர் மகன் தயாநிதி மாறன் கொடுத்த பாடத்தில் கருணாநிதிக்கு இப்போதைய சூழ்நிலையில் கனிமொழியைத் தவிர வேறு யாருமில்லை.

டெல்லிக்கு தேவைப்படும் ஆங்கில மொழியறிவு உள்ள கனிமொழி கூட சகோதரர்களின் விழிகளின் மொழியை பார்த்து தான் மெதுவாக நகர முடிகின்றது. ஸ்டாலின், அழகிரிக்கு கிடைத்த வாய்ப்புகளை விட கனிமொழிக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் சடுகுடு ஆட்டத்தில் கனிமொழியின் அரசியல் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. . 

அண்ணாவிற்குப் பிறகு காங்கிரஸ் ஒவ்வொரு சமயத்திலும் தமிழ்நாட்டில் ஏதேவொரு வண்டியில் இடம் கிடைத்தால் போதுமென்று வாசல்படியில் தொத்திக் கொண்டு தான் வந்தது. இப்போது ஓட்டுநர் இருக்கைக்கு ஆசைப்படுகின்றது. காரணம் சோனியா மகன் ராகுல். 

உத்திர பிரதேசத்தில் மகன் கணக்கு வென்றதைப் போலவே தமிழ்நாட்டிலும் வென்று விடும் என்று சோனியாவும் நம்பிக்கொண்டுருக்கிறார். டெல்லியில் ராகுல் தலைமையில், சிதம்பரம் மேற்பார்வையில் உருவாக்கும் வலையை உடைத்தெறிவது கலைஞருக்கு பெரிய விசயமல்ல.

இப்போது ப. சிதம்பரம் உருவாக்கும் பாதை காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலத்திற்குத் தேவைப்படும் அஸ்திவாரம் என்பதற்கான அடிப்படை மட்டுமல்ல. ஆந்திரத்தில் சிதம்பரம் விருப்பத்தின் பேரில் ஒரு டம்மியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரண்ரெட்டி முதல் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கோஷ்டிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது வரைக்கும் அத்தனைக்கும் பின்னாலும் ப.சிதம்பரத்திற்கு நீண்ட காலத் திட்டம் இருக்கிறது. மகன் உடையான படைக்கு அஞ்சான் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். காரணம் கருணாநிதி மறைவுக்குப் பிறகு உருவாகப் போகும் வெற்றிடத்திற்கு இப்போதே காங்கிரஸ் தயார் நிலையில் இருப்பதற்கான அறிகுறியே இப்போது நடக்கும் அத்தனைக்கும் ஆசைப்படு.

எந்த பிரச்சனையிலும் நிதானமாகவே முடிவு எடுக்கும் கலைஞருக்கு நேற்று (மார்ச் 7) ராஜினாமா செய்ய டெல்லிக்குச் சென்ற அமைச்சர்களுக்கு இன்று வரைக்கும் அமைதி காக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதால் என்னமோ திட்டம் இருக்கு என்பது மட்டும் தெரிகின்றது.  ஆனால் மழைவிட்டாலும் தூவானம் விடாத இன்றைய அரசியல் சூழ்நிலையில் ராகுலின் எதிர்கால தமிழ்நாடு காங்கிரஸ்க்கு உண்டான திட்டங்கள் என்பது இந்த தேர்தல் தான் புரியவைக்கப் போகின்றது?.


காங்கிரஸ் பார்வையில் கருணாதிக்குப் பிறகு திமுக என்பது திசையற்று முட்டிக் கொண்ட கழகமாக மாறிவிட வேண்டும் என்பதில் தான் இன்றைய பிடிவாதம் உருவாகியுள்ளது. அதற்கு முதல் களப்பலி ராசா.

அடுத்த வரிசையில் கனிமொழி.

ஒரு தலித் ராசாவிற்கு கிடைத்த பெருமையை பொறுக்கமுடியாத ஆதிக்க மனப்பான்மையினர் செய்த கொடுமையை பார்த்தாயா உடன்பிறப்பே என்று அரற்றியவர் இப்போது மகளுக்கு உருவாகப்போகும் பிரச்சனைகளுக்கு என்ன வார்த்தைகள் வைத்துள்ளாரோ?  அல்லது எதையெல்லாம் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறாரோ?

78 comments:

  1. விமர்சனத்திறகு பஞ்சமில்லை. அது குறித்து நான் கவலைப்படுவதும் இல்லை. //
    Not Good.

    ReplyDelete
  2. பெண்கள் தின சிறப்புப் பதிவா ?
    :)

    ReplyDelete
  3. எல்லாம் அரசியல்சார்..

    ReplyDelete
  4. நேற்றைய தெஹல்கா கட்டுரையை படியுங்கள். நீங்கள் குறிப்பிடாத விஷயங்கள்தான் கூட்டணி முறிவு நாடகத்தின் அச்சாணி.

    ----
    திருப்பூர் மில்கள் ஒரு நாளைக்கு வழ்ங்கும் ஸ்பிண்டில் பங்கு எவ்வளவு? தயாநிதி காய் நகர்த்திய மர்மம் புரிகின்றதா?

    ReplyDelete
  5. அரசியல் உலகில் ஆண் அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கம் முக்கியமில்லை. ஆனால் பெண் என்கிறபோது கிசுகிசுகளுக்கு பஞ்சமிருப்பதில்லை.


    ........ம்ம்ம்ம்......

    ReplyDelete
  6. ஒருவர் - எல்லா நாளிலும் ராஜதந்திரியாகவே வாழ்ந்து விட முடியாது. அவரது ராஜதந்திரத்துக்கும் ஒரு நாள் விழ்ச்சி வரும். கலைஞரின் வீழ்ச்சி கனமொழியால் வருகிறதோ. ஒரு வில், ஒரு இல், ஒரு சொல் கொண்ட ராமனுக்கே ஆயிரம் சோதனைகள். மூன்று இல், முன்னூறு சொல் கொண்ட கலைஞருக்கு 1,73,000 கோடி சோதனைகள் வர தானே செய்யும்.

    ReplyDelete
  7. இதுக்கு ’தமிழகத்தின் விடிவெள்ளியே’ன்னு ஒரே வரில சொல்லி இருக்கலாமே தல!

    இப்ப என்ன சொல்லவர்றீங்க வலை உலகில் ஜோதிஜி எவ்வளவு நல்லவரோ அவ்வளவு நல்லவர் அரசியல் உலகில் கனிமொழி அதானே?

    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!!

    ஒரு வகையில் பெரம்பலூர் ராசா பரிதாபத்துக்குரியவர். எடுத்த தேனில் நகத்தில் ஓட்டியதை நக்கியத்திற்கே திகார் ஜெயில் என்றால்//

    இதை எப்படி பரிதாபமா பார்க்கறீங்க?

    சிபிஐ என்றால் அதற்கு மற்றொரு பெயர் ஒன்று உண்டு. அடக்குவது அல்லது முரண்டு பிடிப்பவர்களை வழிக்கு கொண்டு வருவது. இது தான் முக்கியப்பணி. ///

    சிபிஐ யே இப்படின்னா டான்ஸி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கப் போட்டது யாரு? அவங்களோட முக்கியப் பணி என்ன? அப்ப ஜெயலலிதா செய்த ஊழலின் அளவு உங்க பாஷைல நகத்தில் ஒட்டிய தேனா? இல்லை நக நுனியா? அப்ப ஜெ எந்த அளவுக்கு பரிதாபத்துக்கு உரியவர்?


    அத்தனைக்கும் பின்னாலும் ப.சிதம்பரத்திற்கு நீண்ட காலத் திட்டம் இருக்கிறது. மகன் உடையான படைக்கு அஞ்சான் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.//

    ஒரே ஒரு மகன வெச்சிட்டு இருக்கவர் மேலயே இவ்ளோ காண்டுன்னா? :))

    காரணம் இன்று இந்தியாவில் ஊழல், லஞ்சம் என்பது இன்று வெகுஜன மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயல்பான விசயமாக மாறிவிட்ட ஒன்று. ஆனால் இன்று பாராளுமன்ற ( ராஜ்ய சபா) உறுப்பினராக இருக்கும் கனிமொழிக்கும் இந்த மெகா ஊழலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது//

    உசாரா வோல்டாஸ் நில விவகாரத்த டீல்ல விட்டுட்டீங்க :))



















    கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.//

    ஒன்னேமுக்கா லச்சம் கோடி!!
    ஏய் டன்னனக்கா ஏய் டனுக்குனக்கா!

    ReplyDelete
  8. கருணாநிதி திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு. காங்கிரசின் இன்றைய ஆட்டத்தை பாருங்கள்.

    --
    மாலையில் திமுக அமைச்சர்கள் சென்னை திரும்புகின்றனர். அதன்பிறகு நாளை அரங்கேறும் நிகழ்வுகள் .... ஹா ஹா ஹா

    ReplyDelete
  9. மாலையில் திமுக அமைச்சர்கள் சென்னை திரும்புகின்றனர். அதன்பிறகு நாளை அரங்கேறும் நிகழ்வுகள் .... ஹா ஹா ஹா ///

    காயமே இது பொய்யடா வெறும்

    காசடைத்த

    பையடா!!!

    ReplyDelete
  10. கலைஞருக்கு இப்போது 1,73,000 கோடி, எதிர்காலத்தில் ஆட்சி இல்லைன வழக்கு / ஜெயில்.

    காங்கிரசுக்கு, 1,73,000 வழக்கை திமுக பக்கம் திருப்பி திமுக வை பலி கொடுத்தா அவங்க தேத்தின கோடிகள் பத்திரம். மேலும் திமுக இல்லைன இனி தமிழகத்தில் ஆளும் கட்சியாமும் வாய்ப்பு.

    ஆதிமுக விற்கு ஆளும் கட்சி இல்லைன எதிர் கட்சி பதவி..

    மக்களுக்கு...???

    சேக்ஸ்பியர் சொன்ன மாதிரி...

    அரசியல்வாதிகள் இல்லைன நாட்டில் சிரிப்பதற்கு புதிய விஷயங்களே இல்லாது போகும் என்பதற்கேற்ப..
    தினமும் புத்தம்புதிய காமெடி...

    இன்றைய ஸ்பெஷல்.. திமுக 63 இடம் தர ஒப்புகொண்டது.

    ReplyDelete
  11. நானும் எங்கடா பெரியவர் தான் செய்த செய்கின்ற தவறுகளுக்கு வருந்தாமல் சென்று விடுவாரோ என்று எண்ணி இருந்தேன். விதி வழியது இல்லைங்களா?

    ReplyDelete
  12. திமுக முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது போல் தெரிகிறது ஆனால் அதற்கான துவக்க புள்ளியும் அவர்களிடமிருந்தே துவங்குகிறது

    ReplyDelete
  13. சிறப்பான அலசல்...

    பெண்கள் தினத்தில் அரசியல் பதிவில் அசத்தீட்டீங்க..

    கனிமொழியை மட்டும் வட்டம் இட்டால் அண்ணன் தம்பி, பேரன்கள் கழட்டிவிட்டுவிடுவார்கள். இதை காங்கிரசு நன்கு கணித்து வைத்திருக்கிறது. அதனால் தான் கனிமொழியோடு தயாளு அம்மாளையும் சேர்த்து வட்டம் போட்டுள்ளனர்.

    அம்மாவை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க அண்ணன் தம்பி தயாராகுவார்களா என்ன? அதனால் தான் காங்கிரசின் கை இந்த நிமிடம் வரையும் ஓங்கியே இருக்கிறது.

    ReplyDelete
  14. நல்ல எழுத்து நடை கணிமொழி கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு

    ReplyDelete
  15. எல்லாம் அரசியல்... வேறென்ன சொல்ல... இங்கு தப்பு செய்யும் போது மட்டும் ஜாதியை இழுப்பது ஏன்? எந்த சாதிக்காரனாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊழல் செய்யும் போது சாதி என்ன வேண்டிக் கெடக்கு... ராசா கைதின் போது திருமாவும்தான் கொதித்தார்... இப்ப என்ன செய்கிறார்...
    தனிப்பட்ட வாழ்க்கையில் கனிமொழி எப்படியாகினும் பொது வாழ்க்கை என்று வரும் போது சற்று மாறுதல் காட்ட வேண்டியது அவசியமே... இங்கு ஆணாதிக்கம் பெண்ணடிமை என்பதெல்லாம் வீண் வாதமே...

    ReplyDelete
  16. ராஜாத்தி ஏற்கனவே மணம் ஆனவர் என்றும் பிறகு கலைஞருடன் வந்துவிட்டார் என்றும்
    கேள்வி....
    :) :)

    கனிமொழிக்கு SUPPORTIVE ஆக அதிகமாக பண்ணியபடியான எழுத்துக்கள்...
    :) :)
    என்ன சொல்ல வர்றீங்க???
    CHENNAI VOLTAS COMPANY விவகாரத்தில் அன்பின் கனிமொழி ஒண்ணுமே செய்யவில்லை அப்டின்னு சொல்றீங்களா???
    :) :)

    ReplyDelete
  17. ஒரு சாதி சார்பான பார்வைக்கும் இந்த கட்டுரைக்கும் எந்த வேறுபாடும் இல்லை..!
    நாடார்களின் அங்கீகாரம் பெற்ற வலைபதிவா இது ???
    :) :)
    தனித்தன்மையை இழந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பா..!

    ReplyDelete
  18. kokkarakko ...

    நல்ல நீண்ட அலசல் தான். ஆனால் அழகிரி, ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டதை விட அதிகமான வாய்ப்புகளை கருணாநிதி, கனிமொழிக்கு வழங்கியிருக்கிறார், வழங்கிக்கொண்டுமிருக்கிறார் என்பது தான் உண்மை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப் பெரிய மக்கள் நலத் திட்டங்க்ளை நிறைவேற்றியிருந்தும், இன்று தி.மு.க எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கும் நிலையை கொண்டு வந்திருக்கும் கனிமொழி & கோ வுக்க்காகத் தான் இன்னமும் கருணாநிதி போராடிக் கொண்டிருக்கிறார். கோடிக்கணக்கான தொண்டர்களின் எதிர்பார்ப்பை தன்மானத்தை காங்கிரஸிடம் அடகு வைத்து தி.மு.க வை மீளமுடியாத படுகுழியில் தள்ள தயாராகிக் கொண்டிருக்கிறார். அதோடு சேர்ந்து மூழ்கப் போவது அழகிரியும், ஸ்டாலினும் தான். வழக்கு வியாஜியங்களில் இருந்து காப்பாற்றப் படப்போவது கனிமொழி தான். உங்கள் பாணியில் கனிமொழி மேல் சொல்லப்படும் குற்றங்கள் சந்தேகத்திற்குறியனவாக இருந்தாலும், கருணாநிதி பாணியில் தேர்தல் கமிஷனுக்கு சென்ற வாரம் சொன்னதையே தான் இதற்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே வரத்துடிக்கும் கனிமொழி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகத் தான் இருந்திருக்க வேண்டும். இதே அழகிரி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்தியதற்காக, சில வருடங்கள் கட்சியிலிருந்தே கட்டம் கட்டப்பட்டார். ஆனால் நீராராடியாவிடம் கருணாநிதியையே கிண்டலடித்தும், இன்னும் பிற பேரங்களைப் பேசி கட்சிக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது ஆதாரப்பூர்வமாக வெட்டவெளிச்சமான பின்பும் இது வரை ஒரு சிறு கண்டன அறிக்கை கூட கனிமொழிக்கு எதிராக கருணாநிதியிடமிருந்து வரவில்லை.

    ஆகவே தங்களது கருத்தை (இந்த விஷயத்தில் மட்டும்) முற்றிலுமாக நிராகரிக்கின்றேன்

    ReplyDelete
  19. இன்னும் ஒரு வார காலத்துக்குள் சூறாவளி எப்படிப்பட்டது என தெரிந்துவிடும்....நேர்மையா இருந்தா எந்த சூறாவளியும் நம்மை நெருங்காது

    ReplyDelete
  20. கனிமொழி தன் தந்தையை போல தந்திர அர்சியலை இவ்வளவு விரைவாக கற்று தேர்வார் என எதிரொபார்க்கவில்லை...கவிதை எழுதுபவர்கள் அனைவரும் பாரதி அல்ல என புரிந்துகொண்டேன்..பகிர்வுக்கு நன்றி..அருமையான அலசல்

    ReplyDelete
  21. நேர்மையான அரசியல்வாதியாக முயற்சித்திருக்கலாம் .தந்தைக்கு பிறகான சகோதர யுத்தத்திற்கு அனைவருக்கும் பணம் அளவுக்கதிகமாக தேவைப்படுகிறது .இதை சேர்ப்பதிலும் பங்கு .
    காங்கிரசுக்கு அறுபத்து மூன்று சீட்டு ,கனிமொழிக்கு சம்மன் ரத்து என்பது கலைஞரின் பேரம் என்று ஜெயா டிவி நேற்று செய்தி வெளியிட்டது .வரும் நாட்களில் தெரிய வரும்

    ReplyDelete
  22. மக்கள் நலத்திட்டங்களின் பின்ணனியையும், அதனால் தமிழகமே ஜப்தி செய்யப்படும் நிலை உருவாக இருக்கிற உண்மையையும் யார் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். நடக்கும் போது புரியும்.

    ReplyDelete
  23. //இதுக்கு ’தமிழகத்தின் விடிவெள்ளியே’ன்னு ஒரே வரில சொல்லி இருக்கலாமே தல!
    //
    ஹா ஹா ஹா பதிவு படிச்சவுடன் இதை தான் சொல்ல வந்தேன் அதுக்கு முன்னாலயே நீங்க சொல்லிட்டிங்க :-)

    ReplyDelete
  24. ஷங்கர், லெமூரியன் இரவு வந்து பதில் அளிக்கின்றேன். ஆனா இரண்டு பேரும் குத்துன குத்துல ரத்தம் வடியுது. அதிலும் லெமூரியன் நான் சரத்குமார் பாசம் போல நாடார் மக்கள் மேல் இருப்பதாக சொன்னதும் சிரித்து விட்டேன். அட பாவி மக்கா?

    அடுத்து கள்ளர் மறவர் அகமுடையார், அப்புறம் ஓடுக்கப்படட இனத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதியினரும் என்று வரும் போது என்னை அதற்காக முத்திரை குத்துவியா நண்பா?

    கும்மி, கல்வெட்டு இப்ப திருப்தி தானே?

    ReplyDelete
  25. நீங்கள் என்ன? சொல்லவருகிறீர்கள் ;கனிமொழி புனிதமானவரெனவா?
    அவர், தப்புக் கணக்குப் போட்டு விட்டார். அப்பா..நிரந்தர முதல்வர் என எண்ணிக் கொஞ்சம் நிமிர்ந்து
    நடந்து விட்டார்; அனுபவிக்கிறார்.
    இவர் அரசியல் கற்றது அப்பாவின் துணையும்; அரசாங்கப் பணமும். இவற்றைக் கொடுத்தால் எத்தனையோ கோடி பெண்கள் தமிழ்நாட்டில் வென்று காட்டுவார்கள்.
    ஆனால் இது அப்பா போல் விஞ்ஞான முறையில் கொள்ளை அடித்து விட்டு முழிக்கிறது.
    கட்டாயம் கனிமொழி; ராஜாத்தி அம்மாள் ஒரு நாளாவது உள்ளே இருக்க வேண்டியோர்.
    இதே வேளை ஜெயும் குறைந்தவரல்ல! மறந்து விடக்கூடாது.
    தமிழ்நாடு பரிதாபத்துக்குரியது.

    ReplyDelete
  26. //கலைஞர் ஜெயலலிதா மேல் வீசிய இது போன்ற அம்புகள் இன்று தன் மகள் மேல் வந்து விழுந்து கொண்டிருப்பதை பார்க்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.//
    இது தான் கலைஞர் நம்பவில்லை என்று வெளியே சொல்லிக் கொண்டு உள்ளே மஞ்சள் நிறத்தொரு துண்டு போட்டுப் பணிந்து கொண்டிருக்கும் விதியோ???

    ReplyDelete
  27. கனிமொழி நல்லவரா கெட்டவரா உங்களின் நிலைப்பாடு புரியவில்லை அண்ணா

    லெமூரியன்... said...
    ஒரு சாதி சார்பான பார்வைக்கும் இந்த கட்டுரைக்கும் எந்த வேறுபாடும் இல்லை..!
    நாடார்களின் அங்கீகாரம் பெற்ற வலைபதிவா இது ???
    :) :)
    தனித்தன்மையை இழந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பா..!

    March 8, 2011 12:55 PM

    வழி மொழிகிறேன் அண்ணா


    மற்றபடி எப்பவும் போல ஒளி வீசட்டும்

    நன்றி

    ReplyDelete
  28. கனிமொழியைப் பற்றி குறிப்புகள் எழுத என்ன தேவை? ஒன்றும் புரியவில்லை.

    சர்ச்ப்பார்க்கில் படித்தவர்கள்
    வணிகவியலில் மேற்படிப்புபடித்தவர்கள்
    கிந்துவில் வேலைபார்த்தவர்கள்
    நாடாராய்ப்பிறந்தவர்கள்
    கவிதை எழுதுபவர்கள்
    என்று பல பெண்கள் உள்ளார்கள்.

    இவர் இப்படி இருந்துள்ளார் என்பதனால் யாருக்கு என்ன பயன் அவரின் குடும்பத்தைத் தவிர?

    எதனால் உங்களுக்கு இவரைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது?

    ReplyDelete
  29. .
    அண்ணன்களை மீறி ஸ்பெக்ட்ரம் வாய்ப்புகளை சரியாகப்பயன்படுத்திக்கொண்டவர் என்பதைத்தைத் த‌விர ஒன்றும் இல்லை. சீமான்,பிரபாகரன் வழியில் கனிமொழிக்கும் இரசிகராய் ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    வழிபாடு இருக்கும் இடத்தில் வழிகாட்டுதல் இருக்காது.

    .

    ReplyDelete
  30. வழிபாடு இருக்கும் இடத்தில் வழிகாட்டுதல் இருக்காது.

    அடேங்கப்பா இன்றைக்கு என்ன எல்லோரும் ஓரே மாதிரியா ரவுண்டு கட்டி அடிப்பீங்க போலிருக்கே?

    கல்வெட்டு வெளிப்படையாகச் சொல்லப்போனால் திமுகவில் நான் எப்போதும் அழகிரியின் அதகளத்தை ரசிப்பவன். தமிழ்நாட்டு அரசியில் ஆமாப்பா... நான் இப்படித்தான்.... உன்னால என்ன பண்ண முடியும்.... என்று அவர் நிற்கும் தொனிக்காக.

    மற்றபடி நீங்க சொன்னபடி பிரபாகரன் சீமான் ரசிகன் என்பதை விட வேறு ஏதாவது ஒரு வார்த்தையை போட்டு இருக்கலாம். நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு ரசிகன் என்பதைவிட இவர்களுக்கு என்று .............ஏற்றுக் கொளவ்தை தவிர வேறு வழியில்லை. இவர்களையும் விமர்சித்து தான் எழுதியிருக்கின்றேன். உணர்ந்தவர்கள் பாக்யவான்கள்.


    எதனால் உங்களுக்கு இவரைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது?

    ஒரு பெண் என்பவள் அரசியல் உலகில் நுழைவது மிக கடினம். தன்னை நிலைநிறுத்திக் கொள்வது அதை விட கடினம். வந்து கொண்டேயிருக்கும் மொத்த விமர்சனங்களையும் தைரியாமாக எதிர்கொண்டே முன்னேறிக் கொண்டிருப்பது சாதாரண விசயமா என்ன? அந்த வகையில் கனிமொழி குறித்து எழுது வேண்டும் என்ற எண்ணம் இன்று நிறைவேறியது. இவரைப்பற்றி அங்கங்கே துண்டு துக்கடாவாக இருக்கும் விசயங்களை கோர்வையாக்கி பார்க்கும் ஒரு முயற்சியே இது.

    நன்றி கல்வெட்டு

    ReplyDelete
  31. மிக தெளிவான பதிவு .
    எதனையும் ஒரே கோணத்தில் பார்க்காத நடுநிலையான பதிவு .
    வாழ்த்துக்கள்
    --
    என்றென்றும் அன்புடன் ,
    சுகி ...

    ReplyDelete
  32. அருண் நம்பி

    முக அவர்கள் ஜாதக விரும்பி என்பதை ஆஃப் த ரிக்காடாக பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கும் தெரியாத விதியா? இன்று வரையிலும் பலரின் விதிகளை நிர்ணயிப்பவராக அல்லவா இருக்கிறார்?

    ReplyDelete
  33. யோகன்

    கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே என்று முடித்து உள்ளீர்கள். முத்தாய்ப்பாக கடைசி வரியிலும் சொல்ல வந்ததை சொல்லி உள்ளீர்கள்.

    குழலி

    இது நக்கல் வாரமா? அல்லது வாரி விடுபவர்களுடன் அமைக்க வேண்டிய கூட்டணி வாரமா?

    பின்னோக்கி

    நீங்க சொல்லியிருப்பதை பல சமயம் நானும் யோசித்துக் கொள்வதுண்டு. அந்த சமயத்தில் நாம் உயிரோடு இருப்போம் என்று நினைக்கிறீங்களா?

    ReplyDelete
  34. பூங்குழலி

    முன்பு போல் கலைஞர் இந்த முறை டீலா நோ டீலா என்ற வட்டத்திற்குள் இனி பல விசயங்களை கொண்டு வர முடியாது. காரணம் ஒரு புறம் எதையும் நம்பாத ராகுல்? எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கும் சோனியா? திண்ணை எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கும்................?

    பார்க்கலாம்?

    சதீஷ்

    நாகரிகமாக தாவாக்கட்டையில் ஒரு குத்து விட்டுட்டு நகர்ந்து போயிருக்கீங்க. ஒரு வாரம் தானே? பார்க்கலாம்?

    கொக்கரக்கோ

    உங்களின் ஆக்கபூர்வமான விசயத்தை விமர்சனத்தை கூகுள் பஸ்ஸில் இருந்து எடுத்து போட்டேன். நன்றி.

    ReplyDelete
  35. தனிப்பட்ட வாழ்க்கையில் கனிமொழி எப்படியாகினும் பொது வாழ்க்கை என்று வரும் போது சற்று மாறுதல் காட்ட வேண்டியது அவசியமே... இங்கு ஆணாதிக்கம் பெண்ணடிமை என்பதெல்லாம் வீண் வாதமே...

    குமார் யோசிக்க வைத்த விமர்சனம். நன்றிங்க.

    ReplyDelete
  36. கோவி கண்ணன்.

    நிஜமா இன்றைக்கு பெண்கள் தினம் போன்ற விசயங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. இது எதார்த்தமாக அமைந்த பதிவு. அதுவும் நண்பர் தொப்பி பதிவை பார்த்தவுடன் தான் இதன் வீர்யம் புரிந்தது. அவர் பதிவில் நீங்கள் சொன்ன ஒரு படத்தை உங்கள் பதிவில் பார்க்கும் ஆசையை நிறைவேற்றுங்க.

    ReplyDelete
  37. // அழகிரி //
    அரசியல் என்பது மக்களுக்காக. தொண்டர்களுக்காக அல்ல. தலைவனும் தொண்டனும் சேர்ந்து மக்களுக்கு உழைக்க "நேர்ந்துகொள‌வது" அரசியல்.

    இவர் அப்படி அல்ல.


    // பிரபாகரன் சீமான் ரசிகன்.....உணர்ந்தவர்கள் பாக்யவான்கள்.//
    ம்ம்..

    //எதனால் உங்களுக்கு இவரைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது?

    /// ஒரு பெண் என்பவள் அரசியல் உலகில் நுழைவது மிக கடினம். தன்னை நிலைநிறுத்திக் கொள்வது அதை விட கடினம். //


    அரசியல் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியவில்லை அல்லது இதுதான் அரசியல் என்று உங்களுக்கு என ஒரு விளக்கம் வைத்துள்ளீர்கள்.

    கனிமொழி செய்வது அரசியல் என்றால் ஆம் அது நல்ல அரசியலே. ரொம்ப தில் வேணும்.

    //மொத்த விமர்சனங்களையும் தைரியாமாக எதிர்கொண்டே முன்னேறிக் கொண்டிருப்பது சாதாரண விசயமா என்ன? //

    என்ன கொடுமை இது?

    ஊழல்/கொள்ளையில் விமர்சனம் வரும் என்று தெரிந்தேதான் அரசிலில் ஊழல்/கொள்ளை நடக்கிறது.ஏன் என்றால் இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் தண்டிக்கப்பட்டதில்லை.

    தண்டனை கிடைக்கலாம் என்று தெரிந்தே கொலைசெய்வது சாதரணவிசயமா என்று கேட்பீர்கள் போல.

    இவர் ஏதோ சமூகப்பிரச்சனைக்குபோராடி, அதனால் வந்த விமர்சன்ங்களை எதிர்த்து, தாக்குப்பிடிக்கிறார் என்பதுபோல எழுதியுள்ளீர்கள்.

    -இது சிம்பிளான குடும்பப்பிரச்சனை.
    -கழக பிரியாணிக்குஞ்சுகள் இதையும் கட்சிப்பிரச்சனையாகப் பார்க்கிறார்கள்.
    -நீங்கள் இதை ஏதோ உலகமகா விசயம்போல வியக்கிறீர்கள்.

    அப்படிப்பார்த்தால் மேனகாவை மீறி முன்னேறிய , சீதாம்ராகேசரியை டபாய்து வளர்ந்த சோனியாகூட சூப்பர் ஸ்டார்தான்.

    ஒருவன் என்ன செய்கிறான்? எதற்காகச் செய்கிறான்? என்று பார்த்தே ஆச்சரியப்படவேண்டும்.

    கஸ்டப்பட்டு பிக்பாட் அடிக்கிறான் என்பதற்காக "இந்த வருட சிறந்த தொழில்முனைவோர்" பட்டத்தை பிக்பாட் ராஜாவுக்கு கொடுக்கமுடியாது.


    என்னகொடுமை இது?

    நல்லாத்தான இருந்தீங்க?

    .

    ReplyDelete
  38. ஷங்கர் லெமூரீயன்

    இரண்டு பேரும் அடித்து அதகளப்படுத்தியிருக்கீங்க.

    நான் இந்த பதிவில் எந்த இடத்திலும் அவரின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி எழுதி இருக்கின்றேனா? கனிமொழி, வளர்ச்சி, அவரை வைத்து உருவாகிக் கொண்டிருக்கும் பேரங்கள், அதற்கு காரணம், என்ன நடக்கும்? என்னவாகும், இத்துடன் இவர் கடந்து வந்த பாதை. இவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறு குறிப்புகள்.

    மற்றபடி வோல்டாஸ் போன்ற சமாச்சாரங்கள் உள்ளே எல்லாம் நான் போகவில்லை என்பது உண்மைதான்.

    கலைஞர் முதல் மற்ற அத்தனை தலைகளும் செய்துள்ள ஊழல்களை, லஞ்ச லாவண்ய்த்தை, ஜனநாயகம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கும் ஆடு புலி ஆட்டத்தை வாக்காளர்கள் எவராது பெரிதாக எடுத்துக் கொண்டு இவருக்கு ஓட்டுப் போடக்கூடாது. இவர்கள் நம் வரிப்பணத்தை திருடிக் கொண்டு இருப்பவர்கள் என்று முடிவு செய்து இருக்கிறார்களா? இது போன்ற ஊழல் விவகாரங்கள் எந்த தேர்தலிலாவது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதா
    என்பதை தெரியப்படுத்துங்கள்?

    நண்பர் சொன்னது தான் நினைவுக்கு வருகின்றது. ஸ்பெக்ட்ரம் ஈவுத்தொகை உங்களுக்கும் தேர்தல் சமயத்தில் வரும்படி செய்கின்றேன். உதயசூரியனை மறக்காதீங்க என்று கலாய்த்தார்.

    ReplyDelete
  39. கஸ்டப்பட்டு பிக்பாட் அடிக்கிறான் என்பதற்காக "இந்த வருட சிறந்த தொழில்முனைவோர்" பட்டத்தை பிக்பாட் ராஜாவுக்கு கொடுக்கமுடியாது.


    சிரிப்போடு நொந்துட்டேன். வேறென்ன சொல்லமுடியும்?

    ReplyDelete
  40. தமிழ்மலர்

    நீங்க விந்தை மனிதனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அரசியல் பதிவுகளுக்கு அவர் தான் எனக்கு ஆசான். அவர் கொடுத்த ஆலோசனையில் தான் இந்த கட்டுரை ஒரு வடிவமாக உருவாகியுள்ளது.

    ReplyDelete
  41. //கஸ்டப்பட்டு பிக்பாட் அடிக்கிறான் என்பதற்காக "இந்த வருட சிறந்த தொழில்முனைவோர்" பட்டத்தை பிக்பாட் ராஜாவுக்கு கொடுக்கமுடியாது.//
    சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் என் பையன் கேட்கிறேன் what so funny என...

    ReplyDelete
  42. பசுபதிMarch 8, 2011 at 9:10 PM

    படங்கள் எல்லாம் படு ஜோரு,எங்கேயிருந்து கிடைக்குது கணேசன் உங்களுக்கு,ஒரு ராயல் சல்யூட்

    ReplyDelete
  43. அரவிந்தன்March 8, 2011 at 9:13 PM

    கனிமொழி நான் சொல்லிகூட இளைக்கவில்லை,ராஜா சொன்னதும் தான் இளைத்து 10 கிலோ குறைந்தார். போகிறபோக்கைப்பார்த்தால் நான் வாழாவெட்டியாகிவிடுவேன் போல.நான் பதிவை மிகவும் இரசித்தேன்.வாழ்க தேவியர் இல்லம்.வாழ்க ஜோதிகணேசன்

    ReplyDelete
  44. நானும் எங்கடா பெரியவர் தான் செய்த செய்கின்ற தவறுகளுக்கு வருந்தாமல் சென்று விடுவாரோ என்று எண்ணி இருந்தேன். விதி வழியது இல்லைங்களா?


    நச்

    ReplyDelete
  45. குழலி

    நானும் உங்க நிலையிலதான் இருந்தேன். வீட்டுக்காரம்மா எட்டிப் பார்த்து முறைத்து விட்டு போகிறார். கல்வெடடு நடக்கட்டும் நடக்கட்டும்......

    பசுபதி

    கூகுளில் ஆங்கிலத்தில் கனிமொழி என்று அடித்துப் பாருங்கள். என்னன்ன கூத்துக்கள் உள்ள தலைப்புகள் வருதுன்னு பாருங்க........ கனிமொழி ராசா சாட்டிங் என்று கூட பல புனிதப் பணிகளை விவஸ்த்தை கெட்டு எழுதியுள்ளார்கள்.

    அரவிந்தன்

    வரிசையில் நீங்களா? ம் பேஸ்ஸில் மட்டும் அடிக்காம மத்த இடத்ல அடிங்க ப்ளீஸ்.......

    ReplyDelete
  46. கனிமொழி நல்லவரா கெட்டவரா உங்களின் நிலைப்பாடு புரியவில்லை அண்ணா


    நண்பா இதற்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்? நீங்கள் தான் தேவையானதை எடுத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாருங்கள் மற்ற நண்பர்கள் ரவுண்டு என்னை கடிப்பதை வைத்தே என்ன நிலையில் கனிமொழி விவகாரம் விகாரமாக மாறியுள்ளது என்பது புரிந்து கொள்ள வில்லையா?

    ReplyDelete
  47. இராஜராஜேஸ்வரி

    தொடங்கி வைத்தமைக்கு நன்றிங்க. என்னங்க நீங்களுமா? அரசியலில் கனிமொழியின் மற்ற விவகாரங்களை விட அவர் எதிர்கொண்டு நிற்பது கூட ஒரு தைரியமாக தெரியவில்லையா? கலைஞர் மகள் என்பதை மட்டும் அவர் மீது வந்து விழுந்து கொண்டிருக்கும் குற்றச்சாட்டுகள். அடுத்து நண்பர்கள் குறிப்பிட்டுள்ள பல திரை மறைவு ஊழல் சமாச்சாரங்கள் என்பதை வைத்து பலரும் ரவுண்டு கட்டி அடிப்பதை போல என்னால் குறுகிய மனப்பான்மையில் இதை பார்க்க முடியவில்லை. எல்லோரும் ஊழல் செய்தார்கள்.. செய்கிறார்கள்.. செய்யப்போகிறார்கள். ஆனால் கனிமொழி என்றதும் சற்று கூடுதல் வெளிச்சம் போல? அப்படியென்றால் அழகிரி ஸ்டாலின் தொடங்கி குடும்ப வாரிசுகள் அத்தனை பேர்களும்?

    இதற்கும் கல்வெட்டு தயாராக ஒரு பதில் வைத்திருக்கக்கூடும்.

    ReplyDelete
  48. ஜோதிஜி said...
    கனிமொழி நல்லவரா கெட்டவரா உங்களின் நிலைப்பாடு புரியவில்லை அண்ணா


    நண்பா இதற்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்? நீங்கள் தான் தேவையானதை எடுத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாருங்கள் மற்ற நண்பர்கள் ரவுண்டு என்னை கடிப்பதை வைத்தே என்ன நிலையில் கனிமொழி விவகாரம் விகாரமாக மாறியுள்ளது என்பது புரிந்து கொள்ள வில்லையா?

    March 8, 2011 9:24 PM


    அண்ணா தங்களுடைய பதிலுக்காக இவ்வளவு நேரம் பொறுமையாக காத்திருந்தேன்

    நண்பா என்று அழைக்க தேவை இல்லை அண்ணா தங்களுடைய பஸ்ஸில் நானுமொரு முகம் தெரிய உங்கள் எழுத்துகளை ரசிக்கும் பயணி

    இந்த மாதிரி வெட்டி அரசியல்வாதிகளைப் பற்றி எழுதி தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டாம்

    நன்றி

    ReplyDelete
  49. திமுக முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது போல் தெரிகிறது ஆனால் அதற்கான துவக்க புள்ளியும் அவர்களிடமிருந்தே துவங்குகிறது


    இப்போது மட்டும் தானா திருநாவுக்கரசு?

    தமிழ்உதயம்

    சொல்ல வந்ததை நாகரிகமாக நச் என்று ம்ம்ம்.. வாழ்த்துகள் ரமேஷ்.

    ReplyDelete
  50. இந்த மாதிரி வெட்டி அரசியல்வாதிகளைப் பற்றி எழுதி தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டாம்


    அய்யோ என்ன இப்டி சொல்லிட்டீங்க. பொதுவா நம்ம மக்களிடம் படித்த மக்களிடம் கூட அரசியலைப் பற்றி பேசுவது எழுதுவது கேட்பது என்பது வேலையத்த வெட்டித்தனமாக ஆகியுள்ளது. நீங்க வேணாப் பாருங்க இப்போது தேர்தல் கமிஷன் தேர்தல் என்று நாள் குறித்த தேதி சரியாக விடுமுறை தினத்தில் ஒன்று சேர வருவதால் அத்தனை படித்த பணிபுரியும் பாக்யவான்களும் சுற்றுலா கௌம்பி விட்டு ஓட்டுப் போடாமல் மறுபடியும் நாடு கெட்டு விட்டது? எவராலும் திருத்த முடியாது என்று புலம்புவார்கள். பார்த்துக் கொண்டேயிருங்க-..

    உங்கள பெயரில் வந்து இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாய் இருந்து இருக்கும். மீள் வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  51. எதனையும் ஒரே கோணத்தில் பார்க்காத நடுநிலையான பதிவு .


    கிருஷ்ணமூர்த்தி மோசமான சமயத்தில் உள்ளே வந்து இருப்பீங்க போலிருக்கு. உங்களுக்கும் அடி விழப் போகுது. கொஞ்சம் ஆறுதலாயிருக்கு.

    அரசியல்வாதிகள் இல்லைன நாட்டில் சிரிப்பதற்கு புதிய விஷயங்களே இல்லாது போகும் என்பதற்கேற்ப.. தினமும் புத்தம்புதிய காமெடி...

    அதெல்லாம் சரி வினோத். இப்ப கூடுதலா ஒவ்வொருவர் அரசியல் வாழ்க்கையில் காமநெடியும் வந்து தொலையுதே?

    ReplyDelete
  52. கருணாநிதி திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு. காங்கிரசின் இன்றைய ஆட்டத்தை பாருங்கள்.


    கும்மியாரே? நானும் கலைஞரை 20 வருடமாக கவனித்துக் கொண்டு தான்வருகின்றேன். ஆனால் ஈழ விவகாரத்தில் சோனியாக எடுத்த ராஜதந்திரங்களை வைத்து இந்த முறை தான் சற்று கலவரமாக உள்ளது. அதே போல் கலைஞருக்கு ஏதோவொரு இடத்தில் கண்ணி வெடி இருக்கிறது என்று உள் மனம் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

    ReplyDelete
  53. வேடந்தாங்கல் வருகைக்கு நன்றி. சித்ரா நான் சொல்லியிருப்பது உண்மையா பொய்யா? அதையாவது சொல்லுங்க?

    ReplyDelete
  54. விடுமுறை தினத்தில் ஒன்று சேர வருவதால் அத்தனை படித்த பணிபுரியும் பாக்யவான்களும் சுற்றுலா கௌம்பி விட்டு ஓட்டுப் போடாமல் மறுபடியும் நாடு கெட்டு விட்டது? எவராலும் திருத்த முடியாது என்று புலம்புவார்கள். பார்த்துக் கொண்டேயிருங்க-.

    உண்மைதான் அண்ணா உங்களை மாதிரி எத்தனயோ பதிவர்கள் இதைத்தான் சுட்டிகாட்டுகின்றனர் அவர்களின் எழுத்துகளுக்கு ஒரு விடியல் இல்லாமலா போய்விடும் அன்று இந்த மாதிரி போலி அரசியல்வாதிகளும் அவர்களின் இலவசங்களும் காணமல் போய்விடும்.

    ReplyDelete
  55. ஜோ உங்கள் தைரியத்திற்கான கதவு எது என்று தெரியும் போது கனிமொழிக்காக திறந்த கதவுகள் எவை என்று புரியவரும்!

    //அரசியலில் கனிமொழியின் மற்ற விவகாரங்களை விட அவர் எதிர்கொண்டு நிற்பது கூட ஒரு தைரியமாக தெரியவில்லையா?//

    லீலாவதி என்ற கொலையான தோழரைப் பற்றி எதுனா படிச்சிருக்கீங்களா?

    நமக்கெல்லாம் கோல்கேட் பாதுகாப்பு வளையம் கொடுத்தா கேழ்வரகில் நெய் வடித்து மக்களுக்கு ரேஷனில் கொடுக்கலாம் ஓய்! :))

    அடுத்து அறுபத்து மூன்று சீட்கள் அள்ளிக் கொடுத்த ராஜ தந்திரின்னு எதுனா ட்ராப்ட்ல இருந்தா இப்பவே சொல்லிடுங்க நேக்கு பிபி ஸோ பீப்பி ஊதிடக்கூடாது பாருங்க! :))

    ReplyDelete
  56. அடுத்து அறுபத்து மூன்று சீட்கள் அள்ளிக் கொடுத்த ராஜ தந்திரின்னு எதுனா ட்ராப்ட்ல இருந்தா இப்பவே சொல்லிடுங்க நேக்கு பிபி ஸோ பீப்பி ஊதிடக்கூடாது பாருங்க! :))

    March 8, 2011 9:49 PM

    மிகவும் அருமை

    ReplyDelete
  57. ஜோ உங்கள் தைரியத்திற்கான கதவு எது என்று தெரியும் போது கனிமொழிக்காக திறந்த கதவுகள் எவை என்று புரியவரும்!

    அடேங்கப்பா கூர்ந்து கவனித்து படிப்பவர்களுக்கு வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் நினைவுக்கு வந்து போவார்கள்.

    அடுத்து ட்ராப்டில் எதுவும் இல்லை. அதிமுக பற்றி சாதக பாதகங்களை பட்டியல் போடலாம் என்று நினைத்து இருந்தேன். அதுவும் நான் யோசித்த விசயங்களை நான் எப்படி எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேனோ அப்படியே சிரிப்பு போலிஸ் ரமேஷ் ஒரு பதிவாகவே போட்டு விட்டார். ஆச்சரியம்.

    நீங்க தான் இப்ப எனக்கு மானிட்டர். அடுத்து ராவா வேனுமா? நக்கலா வேணுமா?

    செல்லுங்க தல. கேட்பது தவறல்ல. கொடுப்பது சிறப்பு தானே?

    ReplyDelete
  58. நீங்க தான் இப்ப எனக்கு மானிட்டர். அடுத்து ராவா வேனுமா? நக்கலா வேணுமா?

    செல்லுங்க தல. கேட்பது தவறல்ல. கொடுப்பது சிறப்பு தானே?//

    ம்க்கும் அது தெரிஞ்சா நாங்க பதிவு போடமாட்டோமாக்கும்! :))

    முக்கி மொனகி 200 மொக்கையப் போட்டு 201 பார்சோப்பு எது கிடைக்கும்னு தேடிகிட்டு இருக்கேன்! :))

    வேணும்னா தர்மத்தின் வாழ்வுதனைக் கவ்விய சூதுன்னு செல்வியப் பத்தி புகழ்ந்து எழுதி பரிகாரம் தேடுங்களேன்

    ( யாராவது தீயவெச்சா என் கொம்பனி பொறுப்பல்ல) :)))

    ReplyDelete
  59. நல்ல விரிவான அலசல் ...

    ReplyDelete
  60. கலக்கிட்டே இருக்கீங்க ஜோதி....ஜீ !

    ReplyDelete
  61. // கலைஞர் ஜெயலலிதா மேல் வீசிய இது போன்ற அம்புகள் இன்று தன் மகள் மேல் வந்து விழுந்து கொண்டிருப்பதை பார்க்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.//

    good one


    கிளிஷேவான திமுக எதிர்ப்பு பதிவாக இல்லையென்றாலும்................

    கடைசியில் எதாவது பஞ்ச் லை வைச்சிருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்.......

    என்னதான் சொல்ல வர்றீங்க?............

    கனிமொழி, திறமையானவர், நல்லவர், மேல வர சிரமப்படுகிறார், வதந்தி கிளப்புகிறார்கள், etc......?

    நண்பரே தெளிவா இல்ல :)

    ReplyDelete
  62. பெரிய தலையைவைச்சு அரசியலுக்கு வத்தவங்க இவங்கெல்லாம் . மத்தப்படி சொல்லிகொள்கிற மாதிரியான நபர் கிடையாது.

    இந்த பதிவிற்கு பதில் மிக கஷ்டப்பட்டு கன்னியமாய் குடும்பம் நடத்தும் ஒரு ஏழையை அல்லது நடுத்தரமனிதனையோ தாங்கள் காட்டியிருந்தால் மிகுந்த சந்தோசம் அடைந்திருப்பேன் அன்பின் ஜோதிஜி.

    ReplyDelete
  63. அண்ணா இது ஞாயிறு கிழமை இந்தியன் எக்ஸ்ப்ரெஸில் வந்த கட்டுரைன்க்னா..என்னன்க்னா இதெல்லாம்?

    ReplyDelete
  64. தி மு கவும் கலைஞரும் இப்படி பட்ட இக்கட்டான நிலையில் இரண்டாவது முறையாக இருக்கிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க காரணம் கனிமொழி. காங்கிரஸ்க்கு சமீபத்தில் தி மு க விட்ட மிரட்டலுக்கு காரணமே இவள்தான். நிச்சயம் அடுத்து சி பி ஐ விசாரணை உண்டு, உள்ளே போகவேண்டியும் வரலாம். கலைஞரின் மிரட்டலுக்கு சோனியா அடி பணியவில்லை, தூக்கி எறிந்தார். பின் தி மு க சாஷ்டாங்கமாய் போய் விழுந்தது. கலைஞருக்கு அவமானத்தை கொண்டு வருவதற்கே இவளும் இவள் தாய் ராஜாத்தியும் . இந்த தேர்தல் முடிவுக்கு காரணமே இந்த குடும்ப விவகாரம் தான். அநேகமாக தி மு க சகாப்தம் முடிந்தது.

    ReplyDelete
  65. இந்த பதிவிற்கு பதில் மிக கஷ்டப்பட்டு கன்னியமாய் குடும்பம் நடத்தும் ஒரு ஏழையை அல்லது நடுத்தரமனிதனையோ தாங்கள் காட்டியிருந்தால் மிகுந்த சந்தோசம் அடைந்திருப்பேன் அன்பின் ஜோதிஜி.

    ஒரு வகையில் உண்மை தான். இது என் தனிப்பட்ட கருத்து என்பதாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் என் நோக்கமும் இப்படித்தான் இருக்கும். அரசியல் என்று வரும் போது இருப்பதை பார்த்து விமர்சிக்க இது போன்ற விசயங்களை எழுதித்தான் ஆக வேண்டும் நண்பா.

    நண்பரே என்ன இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையுடன் நிறுத்திவிட்டீங்க. அவுட் லுக் , தினமணி, இன்னும் கொஞ்சம் கூகுள் ஆண்டவர். நான் தான் மேலே சொல்லி உள்ளேனே? துண்டு துக்கடாவாக அங்கங்கே உள்ள விசயங்களை கோர்வையாக்கி பார்க்கும் முயற்சி என்று. உங்கள் புரிந்துண்ர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  66. யாசவி அதளகளத்தை பார்த்து விட்டும் கூட தெளிவாக இல்லை என்று எப்படி சொல்ல முடிந்தது. நான் சொல்லாததை, சொல்ல விரும்பாததை அத்தனையும் தான் நண்பர்கள் சொல்லி விட்டார்களே?

    ReplyDelete
  67. வேணும்னா தர்மத்தின் வாழ்வுதனைக் கவ்விய சூதுன்னு செல்வியப் பத்தி புகழ்ந்து எழுதி பரிகாரம் தேடுங்களேன்

    கலைஞரை திட்டி, விமர்சித்து, பாராட்டி, ஆச்சரியப்பட்டு இன்னும் எத்தனை விதமாக வேண்டுமானாலும் தோன்றியவர்களுக்கு எழுத நிறைய விசயங்கள் உண்டு. ஆனால் இவங்க இந்த முறை ஒரு வேளை ஆட்சியை பிடித்து மனம் மாறி சற்று இயல்பான அரசியல் தலைவராக மாறும் போது எழுதும் வாய்ப்பு இருக்கும் என்று நம்புகின்றேன் தல. நான் கேள்விப்பட்ட வரைக்கும் தமிழ் செய்திதாள்களைக்கூட படிப்பது கூட கேவலம் என்று கருதுபவர் என்று பலரும் சொல்கிறார்கள்? நீங்களாவது சொல்லுங்க தல?

    அவங்க நல்லவரா? கெட்டவரா?

    ReplyDelete
  68. தாரபுரத்தான் மனம் நினைத்ததை விட்டு விட்டு வாய் வார்த்தையாக சொல்லி விட்டு நகர்ந்து உள்ளீங்க. சரிதானே? வருக ஹேமா... டக்கால்ட்டி ( நல்ல பேருங்க?)

    ReplyDelete
  69. ஜோதிஜி உங்க கட்டுரைல அவர் அரசியல்ல பெண்ணா இருந்து தாக்குபிடித்ததை பாராட்டி எழுதி இருக்கறீங்க.. இவ்வளவு அப்பாவியா நீங்க இருக்கறது ஆச்சரியமா இருக்கு..

    சரிசரி எதுக்கு இவ்வளவு தாக்குபிடிச்சாங்க.. மக்கள் சேவை பண்ணனும்னா:))))

    நேரடி மக்கள் பிரச்சினைல, தலையிடாமலேயே இந்த அளவு தைரியமா அரசியல்ல இருக்கறாங்கன்னா அதுக்கு ஒரே காரணம் பணம், பணம், பணம், பணம்.

    இவ்வளவு கோடி கிடைக்கும்னா நம்ம வீட்டுப்பொம்பளைங்க கூட இதைவிட தைரியமா செயல்படுவாங்க, என்ன கலைஞருக்கு மகளாப் பொறக்காததுதான் குத்தம்.

    இன்றைய திமுக எதிர்ப்பு சூழ்நிலையில் இந்த கட்டுரை எதிர்கருத்துகளைப்பெறும் என்பது ஏன் உங்களுக்கு தோணவில்லை..

    சரிசரி பங்கு வந்திருந்தா எனக்கும் கொடுங்க

    ReplyDelete
  70. உலக பொதுமறை - இன்றைய காலகட்டத்தில் தலைவ/விகளின், நடிகர்/நடிகைகளின், அம்பானிகளின் வளர்ப்பு பிராணிகள் கூட அளவற்ற ஆச்சர்யத்தையும், புத்துசாலித்தனத்தையும், அவைகளின் அழகு, குரைக்கும் தொனி எல்லாம் வியந்து/பயந்து செய்தியாகி விடுகிறது. அதற்காக உலகிலேயே அதி புத்திசாலியான, அழகான பிராணி என்று கணக்கில் கொள்ள முடியுமா?

    இங்கே பிரச்சினையே பத்து பேருக்கு போய்ச் சேரும் பொதுச் சொத்தை இன்னுமொரு ஜீவன் மனிதப் பிறப்பெடுத்து சுரண்டுதே அதுக்கு எதுக்கு இத்தனை லைட்டடிக்கணும்ங்கிறதுதான்.

    நாமும்தான் கதை/கவிதை/கட்டுரைன்னு எழுதுறோம் யார் திரும்பி பார்க்கிறா ;-) - எல்லாம் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் ----- :D

    இருந்தாலும் கட்டுரையின் நோக்கம் புரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  71. தெகா கல்வெட்டுக்குப் பிறகு போட்டுத் தாக்கிய விமர்சனம் இதுவும் ஒன்றோ?


    இவ்வளவு கோடி கிடைக்கும்னா நம்ம வீட்டுப்பொம்பளைங்க கூட இதைவிட தைரியமா செயல்படுவாங்க, என்ன கலைஞருக்கு மகளாப் பொறக்காததுதான் குத்தம்.

    சிவா இம்புட்டு கோபம் ஆகாதுங்கோ. ஆனாலும் உண்மை சுடுகின்றது.

    ReplyDelete
  72. என்ன நோக்கத்துக்காக உலகத்தின் ஒரே கவிதாயினியை இப்படி புகழ்ந்து எழுதி இருக்கீங்கன்னு தெரியல...

    ஆனால், கல்வெட்டு, பலாபட்டரை, தெக்கிக்காட்டனின் மறுமொழிகளே எனது மொழிகளும்.

    ReplyDelete
  73. அறிவாலயத்தில் தஞ்சம் புகுந்த தயாளு அம்மாள். -- காங்கிரஸ் ஆடத் தொடங்கிவிட்டது. பாருங்கள் நடப்பவற்றை.

    ReplyDelete
  74. உங்களுக்காக...

    http://6.latest.shalinsmangar.appspot.com/view-video/kanimozhi-angry-speech-part-1jeyamohan-mentally-retarded/?v=NyzbWEWJu1Q


    என்னங்க இப்படி உளர்றா

    ReplyDelete
  75. ரோஸ்விக்

    காணொளி ரொம்பத் தெளிவாக இருக்கு. யூ டியுப் ல் கூட இந்த கிரிஸ்டல் கிளியர் இல்ல.

    கும்மி இடைவேளை கூட இன்னும் வரவில்லை. தேர்தல் முடிந்தவுடன் மீதியை காணலாம்.

    ReplyDelete
  76. //கும்மி இடைவேளை கூட இன்னும் வரவில்லை. தேர்தல் முடிந்தவுடன் மீதியை காணலாம்.///

    கருணாநிதியோட கண்ணுல வெரல விட்டு ஆட்டுராங்கல்ல. நான் அதை சொல்றேன். கருணாநிதி தன்னுடைய அரசியல் வாழ்வில் இது போன்ற நெருக்கடியை கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்.

    ReplyDelete
  77. உதயகுமார் திசையன்விளைMarch 13, 2011 at 5:08 PM

    இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் மணத்துக்கு பதிலாக நாற்றமே எடுக்கின்றது.அதில் ஒரே விதிவிலக்கு என்றால் உங்கள் பதிவு தான்.மனமார்ந்த வாழ்த்த்க்கள்.உங்களிடம் பிடித்ததே சுயபுராணம் பாடாமல்,எல்லாப்புகழும் தேவியருக்கே என விட்டுவிடுவது தான்.சாலபாகுந்தி.மேலும் உங்கள் இடுகைகளில் தகவல் பிழைகளோ அல்லது சொற்குற்றம் பொருட்குற்றமோ அறவே இல்ல,ஆக மொத்தம் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவுமே புத்தகமாக போடவேண்டியவைதான்.தமிழ்மணம்,இண்ட்லி போன்ற திரட்டிகள் உங்களால் பெருமை கொள்கின்றன.நான் ஒரு பிரபல பதிவர்,என் பெயரை போட்டால் தீர்ந்தது.சாதிக்காரர்கள் ஒன்றாகிவிட்டனர் என்னும் பெயர் வந்துவிடும்.உங்கள் நாடார்களைப்பற்றிய கட்டுரைக்கு மிக்க நன்றி.சாணார்களாய் இருந்தவர்கள் நாட்டார்களாய் நிமிர்ந்து நின்றதை நீங்கள் புத்தகமாக போட்டால் தன்யனாவேன்.அதற்கு பொருளுதவி செய்யக்காத்திருக்கிறேன்.
    மெயிலில் வருகிறேன்.நன்றி வணக்கம்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.