அஸ்திவாரம்

Sunday, February 27, 2011

வலையை கழட்டிவிட வாங்க?

நாடார் மக்கள் கோவிலுக்குள் நுழைவோம் என்று உரிமைப் போராட்டம் நடத்த தொடங்கும் இந்த நேரத்தில் வேறு சில விசயங்களையும் பார்த்து விடுவோம்.  வர்ணாசிரம வர்க்க பேதங்களை உருவாக்கியவர்கள் ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோடு வைத்திருந்தனர். அதை தாண்டி வர முடியாத அளவிற்கு தந்திரமாக அது சார்ந்த பல விசயங்களையும் உருவாக்கி வைத்து இருந்தனர். இதற்கு மேலும் அவ்ரவர் செய்து கொண்டிருந்த தொழில்களை அடிப்படையாக வைத்து இதை முன்னெடுத்துச் சென்றனர். தொழிலை அடிப்படையாக வைத்து அடுத்தடுத்த தலைமுறைக்கும் கட்டமைப்பு மாறிவிடாதபடி கடத்தவும் செய்தனர். ஆனால் இது போன்று உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்பு மாறி விடாதபடி இந்த ஆலயங்கள் தான் பெருமளவில் ஒவ்வொரு சமயத்திலும் உதவிபுரிந்தன. 

உருவாக்கப்பட்ட கோவில்கள் மூலம் நம்முடைய முன்னார்கள் வாழ்ந்து கொண்டிருந்த சமூக கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டது என்பது ஆச்சரியமான விடயமே ஆகும். இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என்று ஏன் இத்தனை மதங்கள்? ஏன் இத்தனை தெய்வங்கள்?  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வழிமுறைகள். சடங்குகள், சம்பிரதாயங்கள். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து அதிலிருந்து மற்றொருன்று பிரிந்து அவரவர்களுக்கு தோன்றிய வகையில் சுயநலமாய் பொதுநலமாய் இந்த வலைபின்னல் உருவாகி இன்று வரையிலும் மிகப் பெரிய மாயவலை உருவாகி மனித மனங்களுக்குள் நீக்கமற நிறைந்து உள்ளது. இதற்கு மேலும் தொடர்ச்சியாக அது தவறு இது சரி என்பது போல பல கிளைநதிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக இந்த வலை பின்னல்கள் தனி மனிதர்களின் கழுத்தை நெறிக்கவும் தொடங்கியது. 

கோவில் என்பது தமிழர்களின் வரலாற்றில் ஏன் இத்தனை முக்கியமாக மாறியது?

நம்முடைய வரலாற்றுப் பக்கங்களில் இந்த கோவில்கள் உருவாக காரணம் என்று வேறு சில அவஸ்யமும் இருந்தது என்று சொல்கின்றது.  மக்கள் அணைவரும் மொத்தமாக ஒரே இடத்தில் கூடுவதற்கு மற்றும் போர்க்காலங்களில் மக்கள் அடைக்கலம் புக என்று சமூக நோக்கில்  உருவாக்கப்பட்டதாகவும் சொல்கின்றது. ஆனால் இந்த கோவில்களை உருவாக்க பாடுபட்டவர்கள் அத்தனை பேர்களும் சமூகத்தில் இருந்த அடித்தட்டு மக்களே ஆவர்ர்கள். இவர்களே முக்கிய உழைப்பாளர்களாக இருந்துள்ளனர். 

இன்றைய நவீன வசதிகள் ஏதுமில்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான தஞ்சை பெரிய கோவில் முதல் நாம் இன்று வரையிலும் கண்டு கொண்டுருக்கின்ற ஒவ்வொரு கோவில்களுக்குப் பினனாலும் முழுக்க முழுக்க மனித சக்தியே முக்கிய காரணமாக இருந்துள்ளது.  ஆதிக்க சாதியினர்களும், பிராமணர்களுமா இந்த கோவில் நிர்மாண பணிகளுக்காக தங்கள் உடலை உழைப்பை கொடுத்துருக்க முடியுமா?  உழைத்த அத்தனை பேர்களும் கோவிலுக்கு வெளியே நின்றனர்.  உழைப்பை வாங்கியவர்கள் உள்ளே நுழைந்து சாமியுடன் உறவாடிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த இடத்தில் தான் தென்னிந்தியாவிற்குள் சமஸ்கிருதம் உருவாக்கிய மாற்றங்களும் பிராமணர்களின் புத்தியும் நமக்கு பல விசயங்களை புரியவைக்கின்றது.  உலகில் அன்று முதல் இன்று வரையிலும் புத்தியை மூலதனமாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.  மீன்களும், மான்களும் கூட வலையில் இருந்து தப்பிவிடக்கூடிய வாய்ப்புண்டு.  ஆனால் இந்த மதம், சாதி, சடங்குகள் போன்ற வலைக்குள் விழுந்தவர்கள் தான் விழுவதோடு தன்னுடைய அடுத்து வரும் தலைமுறைகளையும் சேர்த்து விழ வைத்து விட்டு சென்று விடக்கூடிய சக்தி படைத்தது. இதைத்தான் நம்முடைய மன்னர்களின் வரலாறு மற்றும் அவர்களால் ஆளப்பட்ட மக்களின் சமூக வாழ்க்கையும் இதைத்தான் உணர்த்துகின்றது. மன்னர்களாக வாழ்ந்தவர்கள் இந்த கோவில்களுக்கு கொடுத்த முக்கியவத்தை அடுத்த மன்னர்களுக்கு கொடுக்காத காரணமும், ஒற்றுமையை விரும்பாத காரணங்களும் தான் பல சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போக காரணமாக இருந்தது.  இதன் காரணமாக உருவான பிரச்சனைகள் தான் மக்களின் நல வாழ்வு என்பதை விட அடுத்தவனை ஜெயிப்பது எப்படி? என்று ஆள்பவர்களின் புத்தியும் மாறத் தொடங்கியது. வஞ்சமும் சூழ்ச்சியும் முன்னேறிச் செல்ல கடைநிலை மனிதன் வரைக்கு நாகரிகம் மறைந்து நரிக்குணம் மேலோங்கத் தொடங்கியது.


ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சி அதிகாரத்திலும் வந்தமர்ந்த பிராமணர்கள் மொத்த போக்கையும் மாற்றத் தொடங்கினர். முத்தாய்ப்பாக மன்னர்களுக்கு புனைப்பெயர் முதல் புழுகுணி கதைகள் வரைக்கும் சூட்டி அழகு பார்த்தனர்.  அவரவர் வம்சத்தையும் தெய்வ வம்சத்துடன் சேர்த்துக்கூறி அவரவருக்கு குலப்பெருமை என்றொரு வட்டத்தைக் கொண்டு வந்தனர். இம்மை, மறுமை, புண்ணியம், பாவம், முன் ஜென்ம பலன் என்று ஒவ்வொன்றும் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது.  நாடார்களின் தொடக்க பாரம்பரிய தொழிலான இந்த பனைமரத்திற்கு ஒரு புருடா கதை ஒன்று இந்த சரித்திரத்தில் உள்ளது.   

பனைமரச்சாறு தேவர்களின் தேவாமிர்தமாக பூமியில் கொட்டிக் கொண்டிருந்தது. புனித மந்திரங்களைத் தொடர்ந்து ஜெபித்ததால் அப்புனிதச் சாறு அடங்கிய மரத்தின் தலைப்பாகம் பூமிக்கு நேராக விருப்பம்போல வளைந்து கீழே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பானைகளில் தாரளமாக வடியத் தொடங்கியது. ஆனால் ஷத்திரியன் ஒருவன் தெய்வங்களை அவமதித்து விட்டான். அதாவது பிராமணார்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை அவன் உச்சரித்த காரணத்தால் தெய்வ நிந்தனை ஆகிப் போனது. அன்று முதல் பூமிக்கு நேராகத் தலைவணங்கி அமுத்தத்தை தந்த வந்த மரங்கள் பிடிவாதகமாகச் செங்குத்தான் நிற்கத் தொடங்கின.  எனவே தான் அவைகளில் ஏறிச் சாறு எடுக்க வேண்டிய நிலை உருவானது.

கதை, திரைக்கதை வசனம் நல்லாயிருக்கா?  

இது போலத்தான் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று ஒரு புதிய மூலக்கூற்றை உருவாக்கி மன்னர்களை சுதியேத்தி எப்போது தங்களைச்சுற்றி இருக்கும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டு வர காலப்போக்கில் பிராமணர்கள் உருவாக்கியது தான் சமூகச் சட்டம் என்ற நிலை வரைக்கும் வந்து சேரத் தொடங்கியது.  எல்லா மன்னர்களின் சபையிலும், ஆட்சி அதிகாரங்களிலும் இருந்தாலும் இவர்களுக்கென்று தனியான சட்டங்களும் சம்பிரதாயங்களும் இருந்த காரணத்தால் வேண்டும் போது உள்ளே வந்தனர். தேவையில்லாத போது அணைவரையும் விட்டு விலகி இருந்தனர்.  இவர்களே பல சமயம் மன்னர்களைக்கூட விலக்கி வைத்து இருந்தனர். 

இதுவே தான் தென்னிந்தியாவிற்குள் ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து போதும் முக்கிய பதவிகளில் இவர்களே இருந்தனர். எவரும் எதிரியுமல்ல அதே சமயத்தில் நண்பர்களும் அல்ல.  தங்கள் வாழ்க்கை முக்கியம்.  அதற்காக உருவாகும் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுதல் அதைவிட முக்கியமென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இதை அடிப்படையாக வைத்தே செயல்பட்டனர்.

நாடார்கள் என்பவர்கள் சேர, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்பதற்கு இன்று வரைக்கும் பல ஆதாரங்களை சரித்திரம் வைத்துள்ளது.  தென் தமிழ்நாட்டில் நாடார்கள் என்பவர்கள் அசல் குடிகளாக இருந்தவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவர்கள் இனத்தின் பரம்பரைக் கதைகளும் இதைத்தான் பல்வேறு விதமாகக் சொல்கின்றது.  ஆனால் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சியென்பது ஆண்டு கொண்டிருந்த மன்னர்களுக்கு மட்டும் பாதிப்பாக அமைந்துவிடவில்லை. ஒரு மிகப் பெரிய சமூக இன மக்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது.  

பாண்டிய மன்னர்களுக்கு இருந்த உரிமைகள், சலுகைகள், பட்டங்கள், சொத்துக்கள் யாவும் பறிக்கப்பட்டு மீதியிருந்தவர்களை நிர்கதியாக்கப் பட்டனர்.  மதுரைப் பகுதிகளில் இருந்து நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டனர்.  எல்லாவற்றையும் இழந்தவர்கள் நாடோடிகளாக தென் தமிழகத்தில் சுற்றி அலைய மொத்தத்தில் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  விவசாயம், பனைஏறுதல் போன்ற தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இதன் விளைவே மக்கள் வாழ முடியாத பகுதியாக இருந்த திருச்செந்தூர் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இவர்களால் மீண்டு வரமுடியாதபடி அடுத்து வந்த நாயக்கர்கள் பாண்டியர்களின் பெருமை மற்றும் அவர்கள் குறித்த அத்தனை தகவல்களையும் அழிக்க முற்பட்டனர். இலக்கியங்களில் உள்ள பல விசயங்களை மாற்றி திரிபு சேர்த்து திக்குமுக்காட வைத்தனர். இதன் தொடர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்கு வர வேண்டிய சூழ்நிலை உருவானது.

பிற்காலத்தில் பாண்டியர்களின் வழித்தோன்றல் என்று சொல்ப்படும் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதாக கொண்டு வரப்பட்டது. சரித்திர சான்றுகளின்படி நாடார்களின் முன்னோர்களான பாண்டியர்கள் கோவிலின் மேற்கு வாயில் வாயிலாக உள்நுழைந்த தான் தெய்வங்களை வழிபபட்டனர்.  இன்று வரை தென்மாவட்டங்களிலுள்ள கோவில்களின் மேலைக்கதவுகள் மூடிக் கிடக்கும் நிலையைப் பார்க்கலாம். மேற்கு வாயில் நிரந்தரமாக மூடப்பட்ட காரணத்தால் தங்கள் பெருமைக்கு உண்டான குறைவு என்பதாக கருதிக் கொண்ட நாடார்கள் கோயில்களின் ஏனைய வாயில்களின் வாயிலாக உள் நுழைய மறுத்தனர்.

ஒவ்வொரு தலைமுறையிலும் மனதில் பதிந்த போன இந்த கோவில் விவகாரம் தான் பின்னால் விகாரமான சமூக அமைப்பை உருவாக்கத் தொடங்கியது. இந்த கோவிலை வைத்து தான் பெரியவன், சிறியவன், தாழ்ந்தவன் போன்ற முரண்பாடுகள் உருவாகத் தொடங்கியது.  வெளியே நின்று வணங்க வேண்டும்.  பாதி அளவிற்கு உள்ளே வந்து வணங்கலாம்.  குறிப்பிட்ட மக்கள் அருகே வந்து வணங்கலாம்.  இதற்கு மேலே ஆகம விதிகள் என்ற போர்வையில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கருவறை வரைக்கும் வரலாம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்களை சங்கடப்படாமல் அள்ளித் தெளிக்க அவரவரும் அடித்துக் கொண்டு சாக ஆரம்பித்தனர்.


பிராமணர்களை நாம் குறைசொல்வதை விட இப்போது இன்னோருவிதயத்தை யோசித்துப் பார்க்கலாம்.  மறுஜென்மம் எப்படி இருக்கும் என்றே தெரியாத மக்களுக்கு ஏன் அடுத்த ஜென்மத்தில் மேல் ஆசை வந்தது.  இதன் காரணமாகத்தானே நாடார்கள் பூணூல் அணியத் தொடங்கினர்.  இதைச் செய்தால் இது நிவர்த்தியாககும் என்று சொன்னவுடன் இன்று வரைக்கும் அத்தனை பேர்களும் அட்சரம் பிறழாமல் கடைபிடிக்க நினைப்பது ஏன்?  இதைத்தான் ஆசை என்றொரு சொல்லும் இறுதியில் அவஸ்த்தை என்றொரு முடிவும் கிடைக்கின்றது. மன்னர்களுக்கு பிராமணர்கள் உருவாக்கி வைத்த குலப்பெருமை முக்கியம்.  மக்களுக்கு தாங்களும் சமூகத்தில் சரியான சம உரிமைகளில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதை நிலை நாட்ட வேண்டிய அவஸ்யமாக இருக்க ஒவ்வொருவருரின் தேவைகளும் அவரவரை உந்தித் தள்ளத் தொடங்கியது.

பிராமணர்கள் புள்ளி மட்டும் தான் வைத்தார்கள்.  அவரவர்களும் தங்களுக்கு பிடித்த வகையில் கோலம் போட்டுக்கொள்ளத் தொடங்கினர்.  சிலர் ஜெயித்து பெரும்புள்ளியாகத் தெரிந்தனர்.  ஜெயித்து வர முடியாதவர்கள் சிறு புள்ளியானதோடு வாழ்வில் கரும்புள்ளியாக மாறி தாழ்த்தப்பட்டோர் என்றொரு வரிசையில் இடம் பிடிக்கத் தொடங்கினர். கடைசிவரைக்கும் இநத மக்களை மேலே வரமுடியாத அளவிற்கு உருவாக்கிய சமூக முரண்பாடுகளின் காரணமாகவே தவிப்பான வாழ்க்கை வாழத் தொடங்கினர். 

குறிப்பிட்ட சாதி மக்களை தங்களுக்கு அடிமையாக வைத்திருக்கும் பட்சத்தில் ஆதிக்க சாதியினர்களுக்கு பல விதங்களிலும் நன்மை உருவானது.. இவர்களை வைத்தே தங்களின் பொருளாதார பலத்தை பெருக்கிக் கொள்ள முடியும். அதைக் கொண்டே மேன்மேலும் வளர்ந்து வருபவர்களை உயரவிடாமல் அழுத்தி வைத்திருக்கவும் முடியும். இலவசமாக வேலை வாங்கிக் கொள்ளலாம்.  எதிர்த்து பேச முடியாது.  பேசினால் தெய்வ குற்றம்.  அதற்கு மேலும் அரசாங்க எதிர்ப்பு என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து ராஜதுரோகியாக மாற்றி விட முடியும். 


உன்னை விட நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்று சொல்லியே அவனை மழுங்கடித்த சிந்தனைகளுடன் வைத்திருக்கலாம்.  கடைசி வரைக்கும் போட்டிக்கு ஆள் இல்லாத இடத்தில் வெற்றிக் கோப்பையை வாங்குவது எளிதாகத்தானே அமைந்து விடும்.  இப்படித்தான் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினர்களை சுரண்டல் மனப் பான்மையில் ஒவ்வொருவரும் அமுக்கி வைத்திருந்தனர்.  

ஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களை சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்க சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும்.

21 comments:

  1. // உலகில் அன்று முதல் இன்று வரையிலும் புத்தியை மூலதனமாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்//

    நன்று,ஜோதிஜி

    ReplyDelete
  2. தெளிவானச் சிந்தனை.... மொத்தத்தில் மற்றவரின்ச் சிந்தனையை மழுங்கடித்து அதில், தான் சிறப்பாக வாழும் மொன்னமாரித்த்னத்தாதான் அவுங்க செய்துருக்காங்க?

    ReplyDelete
  3. மன்னிக்கணும்.... நீங்க ஏன் வடமொழியை தவிர்க்க மாட்டீங்கிறிங்க?

    ஓசை சரியில்லை என்றாலும் தமிழ் எழுத்துகளை பயன் படுத்தலாமே?

    இதில் என்ன குறைபாடு வந்துவிட போகிறது.

    (உங்க பெயர் அப்படியே இருக்கட்டும்)

    முடிந்தவரை மற்ற இடங்களில் தவிர்க்கலாமே?

    நன்றி.

    ReplyDelete
  4. கருணாராசு

    என்றாவது ஒரு நாள் எவராவது ஒருவர் இது குறித்து கேட்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று நீங்க கேட்டு விட்டீங்க.

    சில விசயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். ஜோதி கணேசன் (JOTHI GANESAN) என்பதை ஜோதிஜி என்று சுருக்கமாக வைத்துக் கொள்ள காரணம் வலையுலகத்திற்காக அல்ல.

    இது தான் வெளிநாட்டு நபர்களுடன் உடைய வியாபாரத் தொடர்பில் அவர்களின் வாயில் எளிதாக உள்ளது. இல்லாவிட்டால் மொத்த பெயர்களும் நாஸ்தியாகி விடுகின்றது.

    நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும் என்னுடைய உரையாடல் எப்படி இருக்கும் என்று. வங்கி முதல் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் கூட நான் உரையாடி முடித்ததும் உங்கள் அப்பா தமிழாசிரியரா என்பார்கள். தமிழ் தெரிந்தவர்களிடம் முடிந்த வரைக்கும் தமிழில் உரையாடுவது என்னுடைய இயல்பான குணம். பிரச்சனைகள் உருவான போதிலும் மாற்றிக் கொள்வதில்லை.

    இயல்பாக உரையாடினால் கூட என்ன எழுத்து தமிழிலில் பேசுறீங்க என்பார்கள்.

    நம் மக்களிடம் நம் தாய் மொழி அத்தனை தூரம் அந்நியப்பட்டு இருப்பதை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொள்வதுண்டு. நான் மாற்றிக் கொள்வதும்
    இல்லை.

    மற்றபடி வடமொழி எழுத்து தவிர்க்கவேண்டும் என்பது போன்ற கொள்கைகள் என்னிடம் இல்லை. அந்த உச்சரிப்பு அழுத்தம் என்பதை வைத்துப் பார்க்கும் ஷத்திரியர் சத்தியர் என்ற வேறுபாட்டை நான் முறை யோசித்துக் கொண்டே தான் எழுதுகின்றேன்.

    குறிப்பிட்ட இடங்களில் உள்ள குறைபாடுகளை தெரிவியுங்க. வலுக்கட்டாயமாக எதையும் நான் திணிப்பது இல்லை. உங்கள் நோக்கம் சில சமயம் என்னை மாற்ற உதவக்கூடும்.

    அந்த முறையிலும் முயற்சிக்க தயார்.

    ReplyDelete
  5. கடைசி வரைக்கும் போட்டிக்கு ஆள் இல்லாத இடத்தில் வெற்றிக் கோப்பையை வாங்குவது எளிதாகத்தானே அமைந்து விடும் //
    திறமைகள் வளராமல் முடங்குவதற்கு மூலகாரணம்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    தொடர்ந்து படித்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சிறு பருவத்தில் பதநீர் குடிக்கிரப்போ அன்னசிமாறு சொன்ன கதையும் ஞாபகம் வருது...
    பத்ரகாளியின் *அது தானே அவங்க குல தெய்வம்( சாபத்தால் மாற்று சமுதாய ஸ்திரீகள் தலை கீழாக நட பட்டு பனை மரம்மானதாய் சொன்னார்.
    நல்ல பதிவு... தொடர்ந்து வச்சிக்கிறேன்...அது சரி...எந்த காலத்திலகன்ற பாரதம் மாதிரி அகன்ற ராம்நாடு ஜில்லா இருந்தது. எனக்கு தெரிந்த வரையில் ராம்நாடு ஜில்லா மதுரை ஜில்லாவிலிருந்து பிரிக்கப்பட்டது. திருநெல்வேலி ஜில்லா ௧௭௦௦ களிலிருந்து உள்ளதாகவே அறிகிறேன்.

    ரியோ டி ஜெனிரோ விலிருந்து சாசீரோ

    ReplyDelete
  8. சே குமார், இராஜராஜேஸ்வரி, சண்முகவேல், ரத்னவேல் தொடர்ந்து வரும் உங்களுக்கு நன்றி.

    சாசீரோ ( இதற்கு ஏதாவது அர்த்தம் உண்டா நண்பா)

    உண்மைதான் பத்ரகாளி தான் குலதெய்வம். ஒவ்வொருவரும் வாசித்து பகிர்ந்து கொள்வதைப் பார்த்தால் இந்த பதிவின் நோக்கம் இராமநாதபுரத்தைப் பற்றிய தொடர்கதையை விட்டு விட்டு நாடார்கள் குறித்து கதையாக மாறிவிடப் போகிறது என்று பயமாய் உள்ளது. நண்பர் சீ பீரபாகரன் சொன்னது தமிழ்நாட்டின் வரலாற்றை பதிவுலகில் தொடராக இல்லாதது குறையே.

    சசீரோ சரியாக வந்து ஆஜர் (மன்னிக்க கருணாராசு) ஆயிட்டீங்க.

    ReplyDelete
  9. ஆஹா ஸ்வாரஸ்யமா இருக்கு

    ReplyDelete
  10. கயிற்று மேலே அழகா நடக்குறீர்கள்.

    ReplyDelete
  11. "கயிற்று மேலே அழகா நடக்குறீர்கள்"

    இல்லீங்க அய்யா குச்சி வைச்சுகி்ட்டே கயிற்று மேலே நடக்குறாங்க அன்பின் ஜோதிஜி.

    மேலே உயரமான இரண்டு கட்டிடங்களுக்கிடையே மிக சாமர்த்தியமாய் ,ஒரு வார்த்தை எழுதி பலதடவை யோசித்து எழுதும்பொழுதெ அவர் சற்றும் எதிர்பார்க்காத கருத்துகண்ணோட்டங்களில் அதிர்ந்து போயிருக்கிறாங்க...

    மிக சில பதிவுகளில் இப்பயணத்தை முடித்துவிட்டு அன்பின் ஜோதிஜி தமிழக தேர்தல் பற்றிய பதிவுகளில் கவனம் செலுத்தலாம் என்றிருப்பார்போலும் ..

    ReplyDelete
  12. மிக சுவாரஸ்யமான பதிவு..! பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன் ஜோதிஜி..

    மிக்க நன்றி..!

    ReplyDelete
  13. ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

    http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

    ReplyDelete
  14. எதிர்த்து பேச முடியாது. பேசினால் தெய்வ குற்றம். அதற்கு மேலும் அரசாங்க எதிர்ப்பு என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து ராஜதுரோகியாக மாற்றி விட முடியும். //


    என்னென்ன தில்லுமுல்லு பண்ணணுமோ அத்தனையும் செய்திருக்காங்க..

    இப்பவும் நடக்குது வேறு விதங்களில்... ஆனால் இப்ப அவர்கள் மட்டுமல்ல மேலே வந்து முன்னேறியவர்களும் என்பதும் வேதனை...

    ReplyDelete
  15. இப்பவும் நடக்குது வேறு விதங்களில்... ஆனால் இப்ப அவர்கள் மட்டுமல்ல மேலே வந்து முன்னேறியவர்களும் என்பதும் வேதனை...


    இது தான் என்னுடைய கருத்தும் சாந்தி.

    தமிழா வருக.

    நிலவு, சதிஷகுமார், உங்கள் வருகையை குறித்துக் கொண்டேன்.

    தவறு

    தாராபுரத்தான் சொன்ன விமர்சனம் சரியானதாக இருந்தாலும் இன்னமும் கூட கிழித்து தொங்க விட வேண்டும் போல் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஆன்மீகம் என்பது வளம் கொழிக்கும் தொழில். அது சேவை மனப்பான்மை அல்ல. நீங்க சொன்ன மாதிரி நரேந்திர மோடி குறித்து எழுத வேண்டும் என்று தோன்றிக் கொண்டேயிருந்தது. இப்போது தான் அது குறித்து ஒரு சிறிய தகவல் வந்து சேர்ந்துள்ளது.

    சரியான எமகாதகன் நீங்க.

    ReplyDelete
  16. மனுஷ இனமே பூமியில் வாழத்தகுதியற்றது என்கிறேன் நான், உங்கள் கருத்தென்ன தலைவரே? :))

    ReplyDelete
  17. நம்ம கையில் தெகான்னு ஒரு பயபுள்ள இருக்காரு ஷங்கா?

    அவரு கொடுத்த ஒரு விமர்சனம்.

    பிரபஞ்சத்தில் எங்கு தேடினாலும் மனிதனைப் போல கோரமான ஒன்றை பார்க்க முடியாது?

    ReplyDelete
  18. இதெல்லாம் எந்த புத்தகத்தில் இருந்து எடுத்து எழுதுகிறீர்கள்?அதன் பெயரை கொடுத்தால் நாங்களும் வாங்கிப்படிப்போம் அல்லவா?இப்படி காத்திருக்கவேண்டாமே.உங்கள்பெயரில் ஜி எனமுடிவது உங்களுக்கு நீங்களே மரியாதை கொடுப்பது போல இருக்கிறது.உங்களுக்கு என்ன வயது?50ஆ?இது ஒரு குறுக்கு வழியாக தோன்றவில்லையா?

    ReplyDelete
  19. ஆகா நீங்க வந்து ரொம்ப நாளாச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன். புத்தக பட்டியல் தானே வேனும். என்னுடைய மின் அஞ்சல் முகவரி பக்கவாட்டில் இருக்கிறதே? தொடர்பு கொள்ளுங்களேன்.

    இதென்ன கொடுமையாக இருக்கிறது. ஜி என்பது மரியாதை என்பதாக ஏன் எடுத்துக்கிறீங்க. திருவாளர் ........... என்று போட்டுக் கொள்ளலாமா? அனானி என்ற பெயரை விட குறுக்கு வழி ஏதும் இருக்கா நண்பா?

    ReplyDelete
  20. சாதி என்பதோர் வியாதி
    http://koodalnanban.blogspot.com/2011/09/blog-post_03.html

    சாதி ஒழிந்தால் தான் மறுமலர்ச்சி

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.