அஸ்திவாரம்

Tuesday, October 26, 2010

தப்புத்தாளங்கள்


முக்கால் அல்லது முழு நிர்வாணமாக திரையில் தெரியும் நடிகைகளை ரசிக்கும்   மனோபாவம் என்பது நிஜ வாழ்க்கை என்று வரும் போது கற்பு, கலாச்சாரம், குறித்து அதிகமாக நாம் அலட்டிக் கொள்வது ஏன்?  


அந்த நடிகையே ஊருக்கு வருகிறார் என்றால் அத்தனை முக்கிய வேலைகளையையும் ஒதுக்கி விட்டு முண்டியத்துக் கொண்டு முன்னால் போய் நிற்கிறோமே?


அரசியலில் ஊழல் செய்தவர்களை, செய்து கொண்டுருப்பவர்களை பக்கம் பக்கமாக படித்தாலும் படித்தவர்கள் கூட ஒவ்வொரு முறையும் கட்சி சார்பாகவே யோசித்து மறுபடியும் ஒரு திருடனையே தேர்ந்தெடுக்க உதவுகிறோமே? 


முதல் நாள் வாங்கி அடித்த டாஸ்மார்க் சரக்கு போலி என்றாலும் அடுத்த முறை செல்லும் போது பவ்யமாக நம்பிக்கையோடு வாங்கிக்கொள்கிறோமே ?


ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், ஓட்டுப் போடும் நாளில் கிடைத்த விடுமுறையில் உல்லாசமாய் ஓய்வில் இருந்து விட்டு தேர்தல் முடிவு வந்ததும் "இவன் அடித்த கொள்ளையென்று?" தெருவோர கடையில் கிடைத்த செய்தித்தாளில் பார்த்து விட்டு (படித்துவிட்டு அல்ல) அடுத்த வேலைக்கு சென்று விடுகிறோமே??


ஊரெல்லாம் அசிங்கம்.  ஒவ்வொருத்தனும் திருடனுங்க என்று புலம்பிக் கொண்டு தன் வீட்டுக்கு முன்னால் ஓடும் சாக்கடையை நடைபாதையில் திருப்பி விடுவது?  ஆளில்லாத போது நடுப்பாதையில் தூக்கி நின்று கொண்டு அசிங்கம் செய்வதும்??


என் குழந்தை ஆங்கிலத்தில் பேசி கலக்க வேண்டுமென்று நினைக்கின்ற எந்த பெற்றோர்களும் முடிந்த அளவுக்காகவது அந்த ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இல்லாமல் இருப்பது? பேச தெரிந்தவர்கள் கூட குழந்தைகளுடன் தெளிவான ஆங்கிலத்தில் பேச மறுப்பது?  நான் படிக்காத தற்குறி. பிள்ளைங்களாவது படித்து முன்னேற வேண்டும் என்று சொல்பவர்கள் கூட பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்கள் என்பதை உணர மறுப்பது?


சிபாரிசி கடிதம் வாங்கி சாமிக்கு அருகே சென்று தரிசிக்கும் ஆசாமியைப் பார்த்து நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால்கடுக்க நிற்கும் பொதுஜன பார்வையில் எப்படித் தெரிவார்கள்?  உள்ளே கைபேசியில் பேசிக் கொண்டே மந்திரம் சொல்லும் கடவுளின் சார்பாளர்களைப் பார்த்து சாமி என்ன நினைக்கும்?


நான் இந்த நடிகரின் ரசிகன் என்பதை கூச்சப்படாமல் சொல்லிக் கொள்கிறவர்கள்,   நான் வாழும் வாழ்க்கை இந்த கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதை காட்டிக் கொள்ள விரும்புவதில்லையே?

இந்த பத்திரிக்கை மோசம்? அவன் எழுதுவது தப்பு? அந்தாளு பயங்கர திருடன்? இவர் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நாடு உருப்படாது?. விக்கிற விலை வாசியில திருடனாத்தான் போகனும் போலிருக்கு?
என்று புலம்பிக்கொண்டே பணிபுரியும் நிறுவனத்திற்குள் இருந்து கொண்டே பதிவுலகத்தை படித்துக் கொண்டுருப்பது ஏன்? ஏன்?

34 comments:

  1. நம்மால முடிஞ்சது அவ்ளோதாண்ணே..!

    ReplyDelete
  2. துணிவிருந்தால் போராளியாக மாறுங்கள் இல்லை அப்பாவியாக ஒதுங்கி கொள்ளுங்கள் இல்லை சும்மாச்சுக்குமாவது ரௌத்திரம் பழகு என்று கவிதை எழுதுங்கள் இல்லை நீலிக்கண்ணீர் விட்டு அரசியல்வாதி ஆகுங்கள். சாய்ஸ்கள் ரெம்ப உள்ளன. அவரவர் விருப்பம்.

    ReplyDelete
  3. ஜோதிஜி, மண்டை செமையா கொதிக்கிது போலவே! இப்படியெல்லாம் யோசிச்சு கேள்வி கேட்டா நீங்க யாருகிட்டயுமே ஒட்ட மாட்டீங்க, தனிமை படுத்தப்படுவீங்க, எல்லாத்துக்கும் மேலா நீங்க ஒரு ‘கலகக்காரன்.’ வயசில ரொம்ப சின்னப் புள்ளயா அல்லது வளரும் ஸ்டேஜ்ல இருப்பீங்க போல, அதான் இப்படியெல்லாம் எழுதுறீங்க, நீங்களும் வளர்ந்துட்டா சரியாகிடுவீங்க, சீக்கிரம் கூட்டத்தோட சேர்ந்திடுங்க அதான் உங்களுக்கு நல்லது :)).

    ஒரு கதை இருக்கு தெரியுமா, ஓஷோ சொல்லியிருப்பாரு. ஒரு ஊர்ல, இருக்கவன் எல்லாரும் ஒரு குறிப்பிட்ட கிணத்தில இருந்து தண்ணீர் குடிச்சாங்களாம் அவிங்க பூராவும் கிறுக்கனா ஆயிட்டாங்களாம். அந்த ஊரை ஆண்ட ராஜா மாத்திரம் ‘தெளிவா’ இருந்தாராம், அதுனாலே அந்தக் கூட்டத்தோட தப்புத்தாளங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சிச்சாம். இவரு அத சுட்டிக்காட்டியிருக்காரு அவிங்க எல்லாம் சேர்ந்து ‘மெஜாரிடியில்ல’ இவர, ராஜாவை பைத்தியம்னு முடிவு பண்ணி ஆளா இறக்கப் பார்த்திருக்காய்ங்க. சரி, இதுக்கு மேலே சரியா வராதுன்னு அவரும் விவரம் புரிஞ்சி அந்தக் கிணத்து தண்ணிய குடிச்சிட்டு அந்தக் கூட்டத்தோட ஐக்கியமாகிட்டாராம், அது மாதிரிதான் சமத்தா இருக்கணுமோய். சீக்கிரம், தண்ணியக் குடிங்க், தண்ணியக் குடிங்க... :)

    ReplyDelete
  4. உங்களோட எல்லா கேள்விகளுமே நியமாதான் படுது.

    ReplyDelete
  5. !!!!!ச?????!!!மூ****@@####!க!!@??ம்$$$$$

    ReplyDelete
  6. கைதி 1: டேய்! இந்த ஊர்லேயே ரொம்ப நல்லவன் நான்தான்! இதுவரை 20 இடத்தில மட்டும்தான் கொள்ளை அடிச்சிருக்கேன்!

    கைதி 2: ஏய்! நான் தாண்டா இந்த இந்த ஊர்லேயே ரொம்ப நல்லவன்! இதுவரை 10 வழிப்பறிதான் பண்ணியிருக்கேன்!

    கைதி 3: போங்கடா! இந்த இந்த ஊர்லேயே ரொம்ப நல்லவன் நான் மட்டும்தான் நான் ஒரே ஒரு கொலைதான் பண்ணியிருக்கேன்! அதுவும் என் பொண்டாட்டியைதான்!!

    ReplyDelete
  7. //பணிபுரியும் நிறுவனத்திற்குள் இருந்து கொண்டே பதிவுலகத்தை படித்துக் கொண்டுருப்பது ஏன்? ஏன்?//

    நான் ரிடைர்டு ஆனவன். அதனால வீட்டுல இருந்து என் சொந்த கம்ப்யூட்டர்ல பிளாக் எழுதி, பாத்து. கமென்ட் போட்டுக்கொண்டிருக்கிறேன்.

    ஆனா, ஆபீஸ் நேரத்துல, ஆபீஸ் கம்ப்யூட்டர்ல பதிவு எழுதி, பதிவு பாக்கறவங்க இருக்காங்கன்னு கேள்விப்படறப்போ மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்குங்க.

    ReplyDelete
  8. //புலம்பிக்கொண்டே பணிபுரியும் நிறுவனத்திற்குள் இருந்து கொண்டே பதிவுலகத்தை படித்துக் கொண்டுருப்பது ஏன்? ஏன்?//

    அது வேறை ஒண்டுமில்லை. வேலைக்கு போனால் cubicle coma. வேலை முடிஞ்சு வீடு திரும்பினா selective amnesia.

    சரி, சரி போன பதிவில் எதோ சொன்னேன் என்பதற்காக இப்படி சமூகம், சினிமா, அரசியல், ஆன்மீகம் எல்லாத்தையும் ஒண்ணாக்கலந்து மசாலாவா??? :)

    இருந்தாலும் சுருக்கென்றிருக்கிறது படங்களும் கருத்தும்.

    ReplyDelete
  9. கேட்பது தவறு.// கேள்விகள்..

    கொடுப்பது சிறப்பு.// பதில்கள்..

    :)

    ReplyDelete
  10. உங்கள் ஏன் ஏனுக்கு விடை தெரியல :) கிடைக்கல :)

    ம் சிலுக்கு படத்தைப் பார்க்கும் போது அப்பொழுது டிஜிட்டல் கேமராக்கள் இருந்திருந்தால் படம் நல்லா தெளிவாகக் கிடைத்திருக்குமே என்று தோன்றுகிறது. நான் சிலுக்கு ரசிகன்.

    ReplyDelete
  11. தினமும் 6 இலட்சம் வருசம் சுமாரா இருபது கோடி..

    சரிதான்...

    ReplyDelete
  12. ஏமாறுபவர்கள் இருப்பதால் ஏமாற்றுகாரர்கள் தோற்றம்.
    இதற்கு இடைப்பட்ட நிகழ்வு தான் நீங்கள் கேட்ட அத்துனை வினாக்களும் அன்பின் ஜோதிஜி

    ReplyDelete
  13. (அ)நீதிக்குப் பழக்கப்பட்ட மக்கள் எல்லோரும். அதுதான் தாளம் போடவேண்டி இருக்கு. அது தப்பாகவே இருந்தாலும்:(

    இதுக்குப் பெயர்தான் 'ஊரோடு ஒத்து வாழ்' என்பதோ!!!!

    ReplyDelete
  14. //புலம்பிக்கொண்டே பணிபுரியும் நிறுவனத்திற்குள் இருந்து கொண்டே பதிவுலகத்தை படித்துக் கொண்டுருப்பது ஏன்? ஏன்?//

    நெத்தியடி ஜோதி!உங்க கேள்விகளுக்கு பதில் இங்கு யாரிடமும் இல்லை!மேலே தெ.கா சொன்னது தான் நிதர்சனமான உண்மை ! வாங்க ..நாமளும் கிணத்து தண்ணிய குடிப்போம்

    ReplyDelete
  15. கூர்மையான கேள்வி கணைகள்!!!

    ReplyDelete
  16. நாங்க அப்படித்தான்? எங்களுக்குதான் எதுவுமே இல்லையே? என்னைக்கி திருந்த போறோம்னு எங்களுக்கே தெரியாது.

    ReplyDelete
  17. விடையில்லா கேள்விகள் சார்

    ReplyDelete
  18. என்ன தமிழா பொறமண்டையில நச்சுன்னு அடிக்கிற மாதிரி????

    தெளிவான பார்வை தமிழ்உதயம்.

    தெகா குடிக்கும் போது கொஞ்சம் விக்கலும் வந்து தொலைக்குதுங்க. ரொம்பவே ரசிக்க வைச்சிங்க.

    அன்பரசன் கார்த்திக்குமார் சொல்லியிருக்கிறத பார்த்தீங்களா? எப்படி தப்பித்து விட்டார்?

    எஸ்கே எழுதும் எழுத்துக்களைப் போல விமர்சனத்திலும் பூந்து விளையாட ஆரம்பிச்சிட்டிங்களா?

    கந்தசாமி ஐயா பட் உங்க நேர்மை புடிச்சுருக்கு. ஆனால் சனி ஞாயிறு எவரும் புதிய பதிவுகள் போட மாட்டாங்க. கவனித்துப் பாருங்க.

    ரசி இது மசாலா போண்டா? கோவி கண்ணன் சொன்ன மாதிரி என்க்கு புடுச்ச சிலுக்கை எப்படித்தான் என் தளத்தில் கொண்டு வர முடியும் சொல்லுங்க.
    கண்ணன் உங்களைப் போலவே நானும்.

    ReplyDelete
  19. ஷங்கர் ரொம்பவே இந்த இரண்டு வாசகத்தை வைத்துக் கொண்டு அடிக்கடி பயமுறுத்தி விடுறீங்க. நியாயமா?

    சிவா வடிவேல் இந்த மாதிரி சாம்பாரிப்போம்ன்னு நினைத்து பார்த்துருப்பாரா?

    ஆனால் இதைக்கூட உணராமல் இருப்பவர்கள் அநேகம் பேர்கள் உண்டு நண்பா. தவறு என்பதை தெரிந்தே தான் செய்கிறோம். சரிதானே தவறு?

    டீச்சர் ஒரு விமர்சனத்திற்குள் ஓராயிரம் பார்வைகள். அடேங்கப்பா?

    சித்ரா கூர்மை இப்போது மழுங்கிப் போய்க் கொண்டுருக்கிறது.

    நந்தா வாய்ப்பு இருக்குன்னு நம்புறீங்களா?

    ReplyDelete
  20. :) நல்லா கேக்கறீங்க டீட்ட்ய்லு..

    நானும் வீட்டுல இருக்கிறங்க.. ஆபிஸ் கணினியில் ப்ளாக் எழுதல :)

    மத்தபடி இதுல பல கேள்விய எல்லாருமே கேட்டுட்டு அப்பறம் மறந்துடறமே ஏன்..???

    ReplyDelete
  21. \\முக்கால் அல்லது முழு நிர்வாணமாக திரையில் தெரியும் நடிகைகளை ரசிக்கும் மனோபாவம் என்பது நிஜ வாழ்க்கை என்று வரும் போது கற்பு, கலாச்சாரம், குறித்து அதிகமாக நாம் அலட்டிக் கொள்வது ஏன்?//


    கற்பு பற்றியும் கலாசாரம் பற்றியும் என்னுடைய பார்வை வேறு.

    \\அந்த நடிகையே ஊருக்கு வருகிறார் என்றால் அத்தனை முக்கிய வேலைகளையையும் ஒதுக்கி விட்டு முண்டியத்துக் கொண்டு முன்னால் போய் நிற்கிறோமே? .//
    நான் வேறு ராகம்....
    நெருக்கமாக கடந்து போக சந்தர்ப்பம் அமைந்த பொழுதும் அலட்டிக் கொள்வதில்லை......


    \\அரசியலில் ஊழல் செய்தவர்களை, செய்து கொண்டுருப்பவர்களை பக்கம் பக்கமாக படித்தாலும் படித்தவர்கள் கூட ஒவ்வொரு முறையும் கட்சி சார்பாகவே யோசித்து மறுபடியும் ஒரு திருடனையே தேர்ந்தெடுக்க உதவுகிறோமே? //
    கண்டிப்பா. வேற வழியில்லையே...எல்லாம் ஒரே குட்டைல ஊரினதா இருக்கே :( :(


    \\முதல் நாள் வாங்கி அடித்த டாஸ்மார்க் சரக்கு போலி என்றாலும் அடுத்த முறை செல்லும் போது பவ்யமாக நம்பிக்கையோடு வாங்கிக்கொள்கிறோமே ?//
    :( :( :(
    நாம ரெண்டு பேரும் சந்திக்க நேரும்போது.கண்டிப்பா கள்ளு தான் குடிக்கிறோம் நண்பா.......இப்போவே சொல்லிட்டேன் :) :)

    அப்புறம் முக்கியமான விஷயம் நான் அலுவலகத்தில் பதிவேலுதுவதில்லை :) :)

    ReplyDelete
  22. \\முக்கால் அல்லது முழு நிர்வாணமாக திரையில் தெரியும் நடிகைகளை ரசிக்கும் மனோபாவம் என்பது நிஜ வாழ்க்கை என்று வரும் போது கற்பு, கலாச்சாரம், குறித்து அதிகமாக நாம் அலட்டிக் கொள்வது ஏன்?//


    கற்பு பற்றியும் கலாசாரம் பற்றியும் என்னுடைய பார்வை வேறு.

    \\அந்த நடிகையே ஊருக்கு வருகிறார் என்றால் அத்தனை முக்கிய வேலைகளையையும் ஒதுக்கி விட்டு முண்டியத்துக் கொண்டு முன்னால் போய் நிற்கிறோமே? .//
    நான் வேறு ராகம்....
    நெருக்கமாக கடந்து போக சந்தர்ப்பம் அமைந்த பொழுதும் அலட்டிக் கொள்வதில்லை......


    \\அரசியலில் ஊழல் செய்தவர்களை, செய்து கொண்டுருப்பவர்களை பக்கம் பக்கமாக படித்தாலும் படித்தவர்கள் கூட ஒவ்வொரு முறையும் கட்சி சார்பாகவே யோசித்து மறுபடியும் ஒரு திருடனையே தேர்ந்தெடுக்க உதவுகிறோமே? //
    கண்டிப்பா. வேற வழியில்லையே...எல்லாம் ஒரே குட்டைல ஊரினதா இருக்கே :( :(


    \\முதல் நாள் வாங்கி அடித்த டாஸ்மார்க் சரக்கு போலி என்றாலும் அடுத்த முறை செல்லும் போது பவ்யமாக நம்பிக்கையோடு வாங்கிக்கொள்கிறோமே ?//
    :( :( :(
    நாம ரெண்டு பேரும் சந்திக்க நேரும்போது.கண்டிப்பா கள்ளு தான் குடிக்கிறோம் நண்பா.......இப்போவே சொல்லிட்டேன் :) :)

    அப்புறம் முக்கியமான விஷயம் நான் அலுவலகத்தில் பதிவெளுதுவதில்லை :) :)

    ReplyDelete
  23. இங்கே அரசியல்வாதிகளையும்,சமூகத்தையும் நன்றாக் திட்டி பின்னூட்டம் போட்டு விட்டு, 'மானாட மயிலாட' பார்ப்போம்,

    கவர்மெண்ட் சரக்கை வாங்கி நண்பர்களுடன் குடித்து மகிழ்வோம்.காசு வாங்கி ஓட்டு போடுவோம் அப்பொதும் நம்ம சாதிகாரனான்னு

    பார்ப்போம்.நடிகர்,நடிகைக்கு சூடம் காட்டுவோம். கட்சியினர் கொடுக்கும் குவாட்ட்ரு,பிரியாணிக்காக கூட்டம் கூடுவோம்.தங்கலிஸில் பெருமையோடு பேசுவோம்.

    "we are typical tamilians, we wont change"

    ReplyDelete
  24. ஒரு பத்து பதினைஞ்சு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடியவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். இப்போது எண்ணிவிடக்கூடிய அளவில் இருக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் போனால் யாருமே இல்லாமல் ஆகிவிடலாம்.

    ReplyDelete
  25. //கட்சி சார்பாகவே யோசித்து மறுபடியும் ஒரு திருடனையே தேர்ந்தெடுக்க உதவுகிறோமே?//

    எல்லோருமே திருடனாக இருப்பதால்..இருப்பதில் "நல்ல" திருடன் :-)

    //என் குழந்தை ஆங்கிலத்தில் பேசி கலக்க வேண்டுமென்று நினைக்கின்ற எந்த பெற்றோர்களும் முடிந்த அளவுக்காகவது அந்த ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இல்லாமல் இருப்பது? பேச தெரிந்தவர்கள் கூட குழந்தைகளுடன் தெளிவான ஆங்கிலத்தில் பேச மறுப்பது? //

    ஒரு சிலருக்கு ஆர்வம் இருந்தும் பேச முடியவில்லை என்பதே உண்மை.

    ஒரு சிலர் ஆங்கிலம் பேசினால் தமிழில் பேசாமல் லண்டனில் இருந்து வந்தவன் மாதிரி ஆங்கிலத்திலேயே பேசுறானே! என்று கூறுவர். வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசும் ஊர்.

    //நான் இந்த நடிகரின் ரசிகன் என்பதை கூச்சப்படாமல் சொல்லிக் கொள்கிறவர்கள்,//

    ஏன் கூச்சப்பட வேண்டும்? நடிகனுக்கு ரசிகனாக இருப்பது அவ்வளவு இழிவான செயலா!

    // நான் வாழும் வாழ்க்கை இந்த கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதை காட்டிக் கொள்ள விரும்புவதில்லையே?//

    விரும்பவில்லை என்றால் என்ன? அதன் படி நடந்தால் போதாதா! நம் கொள்கையால் மற்றவர்களுக்கு பாதிப்பில்லாதவரை.

    //பணிபுரியும் நிறுவனத்திற்குள் இருந்து கொண்டே பதிவுலகத்தை படித்துக் கொண்டுருப்பது ஏன்? ஏன்//

    படிப்பது தவறில்லை தன்னுடைய வேலையை ஒழுங்காக செய்யும் வரை. வேலையை செய்யாமல் இதை மட்டுமே செய்தால் தான் தவறு என்பது என் கருத்து. நானும் படிக்கிறேன் ஆனால் என் வேலையில் கவனமாக இருப்பேன்.

    ஜோஜிஜி நல்லா தொகுத்து இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு! இதைப்போலவும் எழுத வேண்டுகிறேன்.. அரசியல் தவிர்த்து.

    தெகா கதை செம! :-)) ஏற்கனவே இது தெரிந்தாலும் கதையாக படிக்கும் போது நன்றாக உள்ளது.

    ReplyDelete
  26. கிரி ரொம்ப சிலாகிகியமா எழுதி தள்ளீட்டிங்க. என்ன கிரி இப்படி சொல்லிட்டீங். அரசியல் தானே நம் அத்தனை பேர்களின் வாழ்க்கையை நேரிடையாக மறைமுகமாக தீர்மானிக்கிறது(?????) நல்ல வேளை நீங்கள் ரஜினி ரசிகன் என்பதை எடுத்துக் கொண்டு தெளிவான முறையில் விமர்சித்த பாங்கு பாராட்டக்கூடியது. நன்றி கிரி.

    ஜெயந்தி வரிக்கு வரி வழிமொழிகின்றேன்.

    மொக்கராசா பின்னீட்டிங்க. அதென்ன பேரு இப்படி வச்சுகிட்டு முகத்துல அடிக்கிற மாதிரி கேட்டு விட்டீங்க.

    ReplyDelete
  27. லெமூரியா என்னுடைய அன்பு முத்தம். இன்று தான் நாம் சந்திக்கப் போகும் தினத்தில் தரப்போகும் கள் குறித்து எழுதி வைத்துள்ளேன். என்ன ஒரு முன் ஜென்ம பந்தம். ஆகா........ இன்று முழுவதும் இணையத் தொடர்பு படுத்தி எடுத்து விட்டது.

    நன்றி முத்துலெட்சுமி. முத்தான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  28. பதில் சொல்லக்கூடிய கேள்வியா இவைகளெல்லாம்...சாட்டைகொண்டு அடிக்கிறமாதிரில்ல இருக்கு.. வாங்கிகிட்டு கம்முன்னு போயிடவேண்டியதுதான்... (வேறவழி) நச்சென்ற பதிவு..படத்தேர்வும்...

    ReplyDelete
  29. உங்களோட கேள்விகள் நியாயமானவைதான்...

    ஆனால் இங்கே யாருமே நியாயமான் இல்லையே.

    ReplyDelete
  30. ஒவ்வொரு கேள்வியும் மண்டையில பொட்டுபொட்டுன்னு அடிக்கிற மாதிரி இருந்தா எங்கிட்டு பதில் சொல்றது? எல்லா கேள்வியுமே செருப்படிண்ணே (எனக்குந்தான்).

    ReplyDelete
  31. இப்புடி எங்கையாவது பொங்கி நான் பதிவு எழுதுன புரட்சி பண்ணி நாட்டை திருத்த வந்துட்டாரு இந்த விளக்கெண்ணைன்னு, நாடு போற போக்கை பார்த்து பொலம்புற பொதுஜனமும் திட்டுதுண்ணே. மாற்றம் வரணுமாம். ஆனால், அது இப்புடி இப்புடியெல்லாம் பண்ணினா வரும்னு சொன்னா... பெருசா சொல்ல வந்துட்டாருன்னு கூவிட்டு... நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போகவேண்டியது தான்னு ஒரு அறிவுரை(?) வேற... :-(

    ReplyDelete
  32. ஒரு ஊர்லே ஒரு நல்லவன் இருந்தான். அப்படி யாராவது ரொம்பவே நல்லவனா இருந்தா நாட்டுக்கு ஆகுமா? அவனை எப்படியாவது கவுக்கணுமுன்னு திட்டம் போட்டாங்க சில பெரிய மனுசங்க.

    அவனைக்கூப்பிட்டு எங்களுக்காக ஒரே ஒரு காரியம் செய்யணுமுன்னு அன்பாக் கேட்டுக்கிட்டதால் சரின்னு வாக்கு கொடுத்துட்டான். உனக்கு மூணு சாய்ஸ் தர்றோம். இதுலே எதாவது ஒன்னு செய்யணுமுன்னு மூணு விஷயம் உள்ள ஒரு இடத்துக்குக் கூட்டிப்போனாங்க.

    அங்கே ஒரு குழந்தை, ஒரு பொண்ணு, ஒரு கலயம் மது இருந்துச்சு. குழந்தையைக் கொல்லணும், பொண்ணைக் கெடுக்கணும், மதுவைக் குடிக்கணும்.

    ஐயோ...குழந்தையைக் கொல்லமாட்டேன். அது பாவம்

    பொண்ணைக் கெடுக்கமாட்டேன் அது மகா பாவம்.

    என்னாலே யாரையும் இம்சிக்க முடியாது. எனக்கு மட்டுமே பாதகம் வந்தாப் பரவாயில்லை அந்த மதுவைக் குடிச்சுக்கறேன்னு அதை எடுத்து மாந்திட்டான்.

    கொஞ்ச நேரத்துலே போதை தலைக்கேறி அந்தப் பொண்ணுமேலே பாய்ஞ்சான். குறுக்கே வந்த குழந்தையைத் தூக்கி வீசி எறிஞ்சான். அதுபோய் சுவத்துலே இடிச்சு வீழ்ந்து தலையில் பலமான அடிபட்டு உயிரைவிட்டது. பொண்ணையும் கெடுத்துவச்சான்.

    மதுவோட கெடுதியைச் சொல்ல இதைவிட வேற நல்ல கதை எனக்குக் கிடைக்கலை.

    இப்ப நம்ம தமிழ்நாட்டுலே கண்ணை வித்து ஓவியம் வாங்கும் வேலை தான் ஜரூரா நடக்குது.

    ReplyDelete
  33. டீச்சர் எனக்குத் தெரிந்து நீங்கள் வலையுலகத்தில் கொடுத்த மிகப் பெரிய விமர்சனம் இது தான் என்று நினைக்கின்றேன். நச். நச். நச்..

    ரோஸ்விக் இன்றைய தினத்தில் என்னை ரொம்பவே திக்குமுக்காட வைத்திட்டீங்க. என்னுடைய கணக்குப்படி இல்லத்தில் குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் இருந்து இருப்பீர்களா?

    உண்மை தான் குமார்.

    நன்றி பாலாசி

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.