அஸ்திவாரம்

Thursday, September 23, 2010

குழந்தைகள் உலகம் (ஹாலிவுட் பாலா மின் நூல் பிக்ஸார் விமர்சனம்)

நம்மில பலரும் பார்த்த பழைய தமிழ் திரைப்படமான இரு கோடுகள் போலத் தான் இதுவும் கோடுகளால் ஆன உலகம்.  கால்புள்ளி, அரைப்புள்ளி என்று தொடங்கி கண்டுபிடித்த இந்த கோடுகள் தான் மில்லியனர் பில்லியனர் அளவுக்கு இதற்கு பின்னால் உழைத்த ஒவ்வொருவரையும் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. 


ஒவ்வொரு நிலையிலும் பல கோடுகளை ஒன்றாக சேர்க்க, பிரிக்க, மாட்ட என்று பல கட்டங்கள் தாண்டி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிலையில் இதற்கான உருவகங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கிறது. 

பெயர் தான் கார்டூன் அல்லது கேலிச்சித்திர உலகம்.  ஆனால் நம்மைப் பார்த்து கேள்விகள் கேட்கும் உலகம் போலத்தான் இருக்கிறது?

உயிரற்ற ஓடும் கார் முதல் தாவும் மிருகங்கள் வரைக்கும் எல்லாவிதமான உருவங்களையும் அதன் இயல்பான தன்மையுடன் உருவாக்க முடியும்.  ஆடலாம் படலாம் ஏன் அவசர ஆத்திரம் என்றால் குதியாட்ட நடனம் கூட போட்டுக் காட்டும். இன்று மூச்சா போகும் சத்தத்தையும் நாம் உணரும் அளவிற்கு காட்டி கப்பு வாடையை கடத்த வைக்கலாம்.  அத்தனையும் இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானத்தின் வளச்சி. 

அழுகை,சிரிப்பு,கேலி, கிண்டல்,துரத்தல்,வேகம் என்று நாம் எதிர்பார்க்கும் அத்தனை மனித உணர்ச்சிகளையும் நம்ப முடியாத வகையில் தந்து விட வேண்டும் என்று ஒரு பெரிய உலகமே இதற்குப் பின் இயங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு சிறிய கணினி திரையின் முன்னால் அமர்ந்து கொண்டு எதற்காகவும் நகர வேண்டிய அவஸ்யம் இல்லாமல் விதவிதமாக உருவாக்கி குழந்தைகளின் உலகத்தை தங்களது மாயக் கரத்திற்குள் வைத்துருககிறார்கள்.  இவர்கள் அத்தனை பேர்களும் இந்த விஞ்ஞான உலகில் நவீன பிரம்மாக்கள்.

பிராந்திய மொழிகள் வரைக்கும் வந்து சேர்ந்துள்ள இந்த உலகம் குழந்தை களுக்கு அளிக்கும் மகிழ்ச்சி ஆச்சரியமாக இருக்கிறது. 

வீட்டில் குழந்தைகளுடன் சேர்ந்து பார்த்த சிந்துபாத் கதையில் வரும் தமிழ் குரல்கள் தமிழ் திரைப்படங்களில் வந்த அத்தனை நகைச்சுவை வசனங்களை யும் ஒன்றாக போட்டு குலுக்கி அதை சரியாக சேர்க்க வேண்டிய இடங்களில் பொருத்தி, அடேங்கப்பா.......... வேகமாக ஓடிக்கொண்டுருக்கும் ப்ரேம் வரிசை களை மறந்து ஒவ்வொரு குழந்தைகளையும் பைத்தியம் பிடிக்க வைத்துக் கொண்டுருக்கும் விந்தை உலகம் இது.  

இந்த உலகத்தைப்பற்றி நூலாசிரியர் வார்த்தைகளில்

" காமிக்ஸ் படிப்பவர்களையும் கார்டூன் படங்களை பார்ப்பவர்களையும் குழந்தைதனமானவர்கள் போல இந்தியாவில் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இந்த கார்டூன் படங்கள் உருவாக்க ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் உழைப்பும் பயன்படுத்தும் விஞ்ஞான அறிவும் எவரும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று.  

நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் உலகம் எப்படி உருவானது?  பரிணாமம் என்பது என்ன? விஞ்ஞான வளர்ச்சி?  இது போன்ற மண்டையை உடைத்துக் கொள்ள வைக்கும் கேள்விகளை நாம் என்றைக்காவது நமக்குள் கேட்டுக் கொண்டு இருப்போமா? 
நிச்சயமாக வரக்கூடிய பதில் மாட்டோம் என்ற சொல்லாகத் தான் இருக்கும்.  

" இன்றைக்கு உள்ள பொழப்பே பார்க்க முடியல. இதில் எங்கே போய் நாமத்தையும் ஞானத்தையும் பார்ப்பது " என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டு நகர்ந்து கொண்டுருக்கிறோம்.

எவரோ எப்பொழுதோ எங்கேயோ இருந்து கொண்டு உழைத்த உழைப்பின் பலனை தான் நாம் அணைவரும் இன்று அனுபவித்துக் கொண்டுருக்கிறோம்.  மனிதர்களின் உடலுறவுக்கு மட்டும் இன்னும் மாற்று ஏற்பாடு கண்டுபிடிக்க வில்லை. அதுவும் வந்து விட்டால்?

அது தான் பாலா சொல்லும் தொடக்க கதையும் கூட.  

வால்ட் டிஸ்னி, பிக்ஸார் இதற்குப் பிறகு வந்த இமேஜ் ஓர்க்ஸ் உருவான தலபுராணத்தை தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். மனிதர்களை வைத்து வேலைவாங்கி ரெடி ஸ்டார்ட் கட் என்று தொண்டை தண்ணீர் வற்றி வேலை வாங்கியவர்களை விட இந்த உலகத்தில் இவர்கள் உழைத்துக் கொண்டு இருக்கும் உழைப்பு நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 

இதை டாய் ஸ்டோரி என்ற பதிவில் நண்பர் ஜெய் தான் எழுதிக் கொண்டுருக்கும் வலைப் பூவில் வெகு அற்புதமாக சொல்லி இருக்கிறார்.

பிறமொழிபடங்கள் தமிழில்

" ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்க, தனியா ரூம் போட்டு யோசிப்பாங்க போல... கண்ணைத் தனியா கழட்டி வேவு பார்க்கிற Potatohead பொம்மை, ஸ்பானிஷ் பேசி டான்ஸ் ஆடும் Buzz Light Year, அடியாள் பொம்மைகளோட வர்ற கரடி பொம்மை அப்படின்னு ஒவ்வொண்ணுக்கும் தனி ஸ்டைல், பழக்க வழக்கம், ஸ்பெஷல் திறமை, பிடிச்சது, பிடிக்காததுன்னு... அது ஒரு தனி உலகம்... பார்க்க ஆரம்பிச்சா அப்படியே உங்களை உள்ள இழுத்துடும்... அதுதான் பிக்ஸார் ஸ்பெஷல்... 

பொம்மைகளைப் பார்க்கறப்போ ஏதோ பழைய நண்பர்களை திரும்ப பார்க்கிற மாதிரி இருக்கு. புள்ளக்குட்டிகளோட இந்த வருஷம் ஒரு படத்துக்கு போகணும்னு நினைச்சீங்கன்னா, இந்த படத்துக்குப் போங்க..

 படம் முடியும்போது குழந்தைகளுக்கும், உங்களுக்குமான வயசு வித்தியாசம் அதிகம் இருக்காது.."

காரணம் அத்தனையும் தனி மனிதர்களின் உழைப்பு தான் இன்றுள்ள குழந்தை களை குதுகலமாய் வைத்துள்ளது. சும்மா வரவில்லை சுதந்திரம் என்பது போல் ஒவ்வொரு மனிதரின் ந்யூரான்கள் உருவாக்கிய மாய உலகம் இது.

நூலாசிரியர் கொடுத்துள்ள முக்கியமான குறிப்புகளில் சிறப்பான விசயங்கள் பல உண்டு. 

ஒவ்வொரு கோடுகளும் எப்படி உருவமாக மாறுகிறது. ஒரு வரி கதை உருவாக்கம் முதல் கடைசியாக பின்னால் ஒலிக்கும் குரல் வரைக்கும்  வரிசைப்படுத்தி சுட்டிக் காட்டுகிறார். 

எப்படி இந்த உலகத்தை சிருஷ்டிக்கிறார்கள் என்பதை வரிசைக்கிரமமாக எண்கள் போட்டு கொடுத்த விதம் படிக்கும் எவருக்கும் புரியக்கூடியது..

" சோர்ந்து விடாதே " என்ற தராக மந்திரம் தான் பிக்ஸார் நிறுவனத்தின் தொடக்க கால வளர்ச்சி.  அது தான் இறுதியில் "அனிமேட் கார்டூன்" என்ற மாய உலகத்தை உருவாக்க உதவியது. 

புத்திசாலிகள் எங்கேயாவது சீக்கிரம் ஜெயித்த கதை உண்டா?  காரணம் வால்ட் டிஸ்னி மூடி சூடா சக்ரவர்த்தியாக கோலோச்சிக் கொண்டுருக்க ரஜினி கிரில் கேட்டை திறந்து தமிழ் திரைப்பட உலகத்திற்கு வந்த கதையை போலத் தான் பிக்ஸார் வளர்ந்த விதம் நமக்கு நினைவு படுத்துகிறது.  1993 வரைக்கும் இந்த உலகம் இப்படித்தான் இருந்தது. ஆனால் இன்றைய வளர்ச்சி என்பது எந்திரன் வரைக்கும் எங்கங்கோ பறந்து போய்க்கொண்டுருக்கிறது.

குறிப்பாக இந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு கையால் தொடர்ச்சியாக கோடுகளை நகர்த்திக் கொண்டுருப்பவர்களுக்கு வரும் நோய்கள் முதல் கார்டூன் உலகத்தை வைத்துக் கொண்டு மில்லியன் பில்லியன் சாம்பாரித்துக் கொண்டுருப்பவர்களைப் பற்றி படித்துக் கொண்டே வரும் போது இதன் மொத்த விஸ்தாரம் நம்ப முடியாத ஆச்சரியமாக இருக்கிறது. 

இந்த உலகத்தில் சவாலான பல வேலைகளை கணினியே எடுத்துக் கொண்டாலும் பெயர் என்னவோ பணிபுரிபவர்களின் பெயர் தான் வருகின்றது, ராயல்டி ரைட்ஸ் எதுவும் கேட்காத கணினிகள் நமக்கு பலப்பல ஆச்சரியங்களை தந்து கொண்டுருப்பதைப் போல, ஏற்கனவே வந்த 3டி போல எதிர்காலத்தில இன்னும் எத்தனை அதிசயங்களை உருவாக்கப் போகின்றதோ?

" காறித்துப்பினாலும் நான் விடமாட்டேன் " என்று உழைத்த பிக்ஸாரின் டாய் ஸ்டோரி உழைப்பை டிஸ்னி அங்கீகாரத்தை எப்போது கொடுத்தார்கள்?   தொலைக் காட்சியில் ப்ரைம் டைம் அலலது பண்டிகை தினம் போல உள்ள கிறிஸ்துமஸ் தின பண்டிகை கொண்டாட்டத்தின் போது,

டிஸ்னி பிக்ஸாருக்கு கொடுத்த அங்கீகாரம் வேறு எவருக்குமே கொடுக்காத ஒன்று.

உழைத்தால் ஒரு நாள் முன்னேறறம் உண்டு என்பது உண்மை தானே?

                                          படம் முடியல. கொஞ்சம் உட்காருங்க


அதகள புகழுக்கு பெயர் பெற்ற நூலாசிரியருக்கு அவர் பாணியில்

உங்கள் சொந்தப் பெயர்
ஏன் சொன்னா இந்தியாவின் கடனை தள்ளுபடி செய்துடுவாங்களா?

வலைதள பெயர் 
வலையே சிக்கி சின்னபின்னமாச்சு.  இதுல நீங்க வேற வந்துக்கிட்டு.

ஆசிரியரின் மிகச் சிறந்த பொன்மொழி
போய் புள்ளகுட்டிய படிக்க வச்சு உருப்புடுற வழிய பாருங்க பாஸ்

ஆசிரியர் விரும்பும் பாடல்  
அக்கரைச்சீமை அழகினிலே மனம் ஆட்டம் கண்டேனே.

ஆசிரியரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது?
பதிவுலகத்தை சுத்தம் செய்வது எப்பூடி?

திரட்டிகளின் மறுபெயர்
ச்சும்மா எரிச்சலை கௌப்பாதீங்க தல

எப்போது மறுபடியும் எழுதுவீங்க
வான்புகழ் கொண்ட வள்ளூவர் குறளுக்கு எழுத அதிகாரம் கொடுக்கும் போது

தெரிந்த மொழிகள்
கொஞ்சூண்டு தமிழ், கொறச்சு மலையாளம். ஸ்பானீஷ் தோழியை டாவடிக்க
கலந்து கட்டும் இங்கீலுபீசு

எதிர்கால லட்சியம்


1 பீன்நவீனத்துவ கதை எழுதி பலாப்படறை ஓனருக்கு டெடிகேட் செய்யனும்,  நேற்று பாலபாரதி இந்த மேட்டர படிக்க வச்ச பழி எடுத்துட்டாரு.

2, ஓட விடமா பிடிச்சு வச்சு இராமசாமி கண்ணன் கவிதைகளை படிக்க வைக்கோனும்

3, உண்மைத்தமிழன் அண்ணாவுக்கு பாசக்கார பயபுள்ள பாலா எழுதும் கடிதம்ன்னு நாலு பதிவு எழுதி டர் ஆக்கனும்., கூடவே க முதல் தொடர்ந்து தமிழில் உள்ள அத்தனை எழுத்துக்களையும் எழுதி தமிழன் தரும் பின்னூட்ட பதிலை கின்னஸ்க்கு அனுப்பனும்.

அப்புறம்................

சரி முடிஞ்சா ஆசிரியருக்கு உங்க கடிதத்தை தட்டுங்க.  ஓளிஞ்சுருந்து படிக்கிற மனுஷன் வெளியே வர வேண்டாமா?

ஹாலிவுட் பாலா மின் அஞ்சல் முகவரி hollywoodbala@gmail.com 

19 comments:

  1. அனிமேஷன் ஒரு அற்புதமான கலை. அதை தெளிவாக சொன்னார். அந்த மின்புத்தகம் பொதுவாக சொல்வது என்னவோ பிக்ஸார் நிறுவனத்தின் வளர்ச்சியைதான். ஆனால் அதை படித்து முடித்த பின் அனிமேஷனின் அருமை அதைப் பற்றி தெரியாத சாதாரண மனிதனுக்கு கூட புரியும்.

    பாலா சார் வெளியே வாங்க சார்!

    ReplyDelete
  2. குறிப்பாக இந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு கையால் தொடர்ச்சியாக கோடுகளை நகர்த்திக் கொண்டுருப்பவர்களுக்கு வரும் நோய்கள் முதல் கார்டூன் உலகத்தை வைத்துக் கொண்டு மில்லியன் பில்லியன் சாம்பாரித்துக் கொண்டுருப்பவர்களைப் பற்றி படித்துக் கொண்டே வரும் போது இதன் மொத்த விஸ்தாரம் நம்ப முடியாத ஆச்சரியமாக இருக்கிறது.


    ..........நிறைய தகவல்களை - சுவாரசியமாக தொகுத்து எழுதி இருக்கும் பாலா சாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  3. பாலா எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும் :)

    ReplyDelete
  4. குழந்தைகளுக்கான உலகம் அனிமேசனால் பரந்து விரிந்துள்ளது.

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம்,நானும் அந்த மென் நூலை படித்திருக்கிறேன். பாலா சார் தற்சமயம் ஏனோ ஒதுங்கி இருப்பது போல தெரிகிறது.அவரின் எழுத்துக்கள் பலரை எழுத தூண்டியது என்பது உண்மை. அவருக்காக காத்திருப்போம் கண்டிப்பாக தொடர்வார்...
    //எவரோ எப்பொழுதோ எங்கேயோ இருந்து கொண்டு உழைத்த உழைப்பின் பலனை தான் நாம் அணைவரும் இன்று அனுபவித்துக் கொண்டுருக்கிறோம்.//

    உண்மைதான் சார்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஜோதிஜி....எப்பிடியோ நீங்க வீட்ல 3-4 பேருகூட சேர்ந்துகிட்டு கார்ட்டூர்ன் பார்க்கிறமாதிரி எங்களையும் பார்க்க வச்சுடணும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கீங்கபோல.

    எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் கவனமாகவும் ஆழமாகவும் விமர்சிக்கத் தெரிகிறது உங்களுக்கு ஜோதிஜி.

    எங்களுக்கே உரித்தான ஒரு குணம்தானே.
    வாழைப்பழத்தைக் கையில் கொடுப்பதைவிட உரித்துக் கொடுத்தால் கொடுத்தவருக்குக்கூட ஒரு நன்றி சொல்லாமல் சாப்பிடுவோம் மறுபக்கம் திரும்பியபடி !

    ReplyDelete
  8. விமர்சனம் அருமை தோழா. அதுலயும் கடைசில போட்டிருக்கீங்க பாருங்க ஆசிரியரைப் பத்தி அது செம.

    ReplyDelete
  9. உங்களின் விமர்சனத் திறன் என்னை வியக்க வைக்கிறது

    ReplyDelete
  10. சிறந்த விமர்சனம்.. அதிலும் கடைசியில் செய்திருக்கும் கிண்டலை வெகுவாக ரசித்தேன்.. பாலண்ணே மீண்டும் எழுத வாருங்கள்...

    ReplyDelete
  11. பாலா சார் வெளியே வாங்க சார்!

    பாலண்ணே மீண்டும் எழுத வாருங்கள்...

    அவரின் எழுத்துக்கள் பலரை எழுத தூண்டியது என்பது உண்மை.

    Forward to Bala

    பாலா சாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    பாருங்க ஆசிரியரைப் பத்தி அது செம.

    உரித்துக் கொடுத்தால் கொடுத்தவருக்குக்கூட ஒரு நன்றி சொல்லாமல் சாப்பிடுவோம்

    விமர்சனத் திறன் என்னை வியக்க வைக்கிறது

    பொதுவாக சொல்வது என்னவோ பிக்ஸார் நிறுவனத்தின் வளர்ச்சியைதான். ஆனால் அதை படித்து முடித்த பின் அனிமேஷனின் அருமை அதைப் பற்றி தெரியாத சாதாரண மனிதனுக்கு கூட புரியும்.

    Thanks to Bala

    ReplyDelete
  12. பாசக்கார அண்ணாச்சியா இருக்கார இந்த ஹாலி பாலி.. ஏன் பேர சொல்லாம இருக்க மாட்டாங்கிராரே....

    ReplyDelete
  13. வாங்க கண்ணன் ரொம்ப நாளா வலையை விரிச்சு வச்சுக்கிட்டு காத்துகிட்டுருந்தேன்.

    கீழே உள்ளதை குணா படத்தில் கமல் சொல்வது போல் வாசிக்கவும்.

    அது என்ன மாயமோ தெரியல. நான் கவித எழுதினா எனக்கென்றும் ஆவதில்ல. ஆனா இந்த பயபுள்ள பாலா மட்டும் உங்கள வச்சு பயமுறுத்தி விடுறாரு. இராமசாமி இராமசாமி.

    ஆனால் விட மாட்டேன் கண்ணன்.

    பத்து கவித வாய்ப்பு கொடுத்துருக்காரு. இன்னும் ஒம்போது (?) இருக்கு

    ReplyDelete
  14. இவ்ளோ வேலைப்பளுவுக்கு மத்தியிலயும் ரொம்ப நுணுக்கமா பாத்து பாத்து எழுதுறீங்க பாருங்க! அந்த டெடிகேஷனுக்காகவே ஒரு சல்யூட்!

    ReplyDelete
  15. ஆமா... அது என்னாத்துக்கு கமெண்ட் மாடரேஷன்லாம்?

    ReplyDelete
  16. ராசா இன்றைக்கு நான் பார்த்த பல மற்றும் படித்த செந்தில் தளம் கூட வைரஸ் பிரச்சனையின்னு காட்டுது. இல்ல நமக்குத்தான் அப்டியான்னு புரியல. இதனால செந்திலுக்கு கூட இன்னும் சொல்லம இருக்கேன்.

    அப்புறம் பின்னூட்டம் போடுறதுக்கும் போடுறதுக்கும் கூட பயம் வர ஆரம்பித்து விட்டது. பகிர்வுக்கு நன்றின்னு போட்டா போதும் போலிருக்கு. இல்லை என்றால் பல சமயம் புரியலன்னு புத்திசாலியா மாறிவிடுறாங்க. ஏதோ ஒரு கோவத்த இங்கே கொண்டு கொட்டி விடுவாங்கோள?

    எனக்கே இந்த மாடரேஷன் கஷ்டமாத்தான் இருக்கு.

    வீட்ட சாத்திக்கிட்டு உட்கார்ந்து இருப்பது போல.

    ReplyDelete
  17. //பகிர்வுக்கு நன்றின்னு போட்டா போதும் போலிருக்கு.//

    என் மனதிலும் இப்படித்தான் தோணுது. கருத்துமோதல்கள் ஆரோக்கியமில்லாவிடத்து தேவையா இதெல்லாம் என்றிருக்கிறது.

    ReplyDelete
  18. வாங்க ரதி.

    இது குறித்து இந்த நட்சத்திர வாரத்தின் கடைசியில் எழுதலாம் என்று மனதில் நினைத்து உள்ளேன்.

    ReplyDelete
  19. தமிழ் மண நட்சத்திர வார வாழ்த்துகள் ஜோதிஜி

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.