பள்ளி விட்டு வந்ததும், படிக்க எழுத வேண்டிய அடிப்படை கடமைகளை முடித்த குழந்தைகள் அமைதியாக தொலைக்காட்சியில் கார்டூன் பார்த்துக் கொண்டுருப்பார்கள். . நான் கணினியில் கவனமாய் இருப்பேன். ஏதோ ஒரு யோசனையில் குழந்தைகளை நிமிர்ந்து பார்க்கும் போது ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொருவிதமான பாவனைகள் மாறி மாறி வந்து கொண்டுருக்கும். சுட்டி, கார்டூடன் நெட்வொர்க்,போகோ இதில் ஏதோ ஒன்று பஞ்சாயத்து முடிவுக்கு வந்து ஓடிக் கொண்டுருக்கும்.
ஒருவர் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க மற்றொருவர் ஆர்ப்பாட்டமாய் அதிர மற்றொருவர் உதட்டுக்கும் தெரியாத சிரிப்பு வெளியே வந்து கொண்டுருக்கும்.
எனக்கு ஒன்றும் புரியாது. திரையில் தெரியும் எலி பூனைகளின் கோடுகள் உருவமாக ஓடிக் கொண்டுருக்கும். அல்லது டோராவும் புஜ்ஜிம்மாவும் காட்டுக்கு செல்ல வழி தேடிக் கொண்டுருப்பார்கள். மொத்தத்தில் ஏதோ ஒன்று அவர்களை அந்த அரை மணி நேரத்தில் உற்சாகமாய் வைத்து வைத்திருக்கும். சில சமயம் தமிழ் குரல்கள் அந்த சித்திரங்களுக்கு உயிர் கொடுத்து சுவராஸ்மாய் மாற்றி வைத்து இருக்கும்.
குழந்தைகளை தொடக்கத்தில் நன்றாக பேசிப் பழக வேண்டும் என்பதற்காக அன்று அவர்கள் பார்த்த இந்த கார்டூன் படங்களின் கதைகளை அவர்களை விட்டே பேச வைப்பேன். இப்படித்தான் பேசகற்றுக் கொண்டு இன்று என்னை பேசவே முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளார்கள். குறிப்பாக நகர்புறங்களில் வாழும் குழந்தைகள் அணைவருக்கும் இந்த தொலைக்காட்சி ஊடகங்கள் மிகப்பெரிய வரப்பிரசாதம். ஒவ்வொரு முறையும் கணினியை என்னிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டு போக்கு காட்டும் திறமைகளை வியந்து கொண்டுருக்கும் போது இந்த நூலின் ஆசிரியரின் வீட்டில் வளர்ந்து கொண்டுருப்பவர் எதிர்கால பில்கேட்ஸ் போல் வந்து கொண்டுருப்பது மிகுந்த ஆச்சரியம்.
அத்தனையுமே நாம் அளிக்கும் சுதந்திரம் பொறுத்தே குழந்தைகள் உன்னத இடத்தை அடைகிறார்கள்.
தமிழில் உள்ள அத்தனை சேனல்களிலும் இந்த கார்டூன் ஏதோவொரு சமயத்தில் வந்து கொண்டே தான் இருக்கிறது. இது போக தமிழ் ஆங்கில சேனலில் தனியான 24 மணி நேர சேவைகள்.
இயற்கையான கிராம வளர்ப்பு இல்லாமல் இன்று கில்லி கிட்டி, புள்ளியங்கொட்டை மங்கத்தா தாயக்கட்டை சரட்டுமுத்து, கோலிக்குண்டு என்று அத்தனையும் மறந்து 90 சதவிகித குழந்தைகள் இன்று தொல்லைக் காட்சிக்கு அடிமையாய் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமே பெற்றோர்கள் தான். கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்றாலும் அங்கும் நடுநாயகமாக இந்த தொல்லைக்காட்சி தான் முன்னால் அமர்ந்து இருக்கும் பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் தின கூட்டத்தில் முக்கியமான குற்றச்சாட்டாக வெளியே வருவது இந்த தொலைக்காட்சி தொந்தரவு தான். ஆத்தா அப்பன் ஒரு பக்கம். மாமியார் மகன் மகள் மற்றொரு பக்கம்.
ரிமோட் என்பது கில்லி போல சுழன்று சூறாவளியாய் பல குடும்பத்தை படுத்தி எடுத்துக் கொண்டுருக்கிறது. அதனால் அடிதடி வரைக்கும் உச்சகட்டமாக சமீபத்தில் ஒரு கொலை வரைக்கும் கொண்டு வந்து விட்டுருக்கிறது. எப்போதும் போல இந்த மீடியா சந்தையின் பங்குகள் மட்டும் மேட்டை நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கிறது.
ஓடியாடி வளர்ந்து திரிந்த குழந்தைகள் இன்று தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்து தின்று கொண்டே இருக்கும் நொறுக்குத் தீனிகள் உடம்பை பெருக்க வைத்து விட்டது. நாம் அவர்களைத் தூக்கினால் நம் எலும்புகளை நொறுக்கி விடும் போல் கனமாக பொதி மூட்டை போல் ஆகிப்போனார்கள். .
பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் நெடுந்தொடர்கள் பார்க்க உட்காரும் போது குழந்தைகளும் அருகில் அமர இதுவே இன்று போதை போல் மாறிவிட்டது. என்றாலும் இந்த காட்சி ஊடகங்கள் இல்லாவிட்டால் குழந்தைகளின் அறிவு உலகம் நிச்சயம் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்குமா என்பது சந்தேகமே?
ஹாலிவுட் பாலா எழுதியுள்ள, மென் நூலாக (E BOOK) வெளிவந்துள்ள பிக்ஸார் படித்தீர்களா? முழுக்க முழுக்க இந்த கார்டூன் உலகத்தைப் பற்றி அதன் தொழில் நுட்ப ஜம்பவான்களைப் பற்றி அவர் சொல்லியுள்ள விசயங்களை ஒரு முறை தரவிறக்கம் செய்து எழுத்துக்களை சற்று பெரிதாக்கி படித்துப் பாருங்கள்.
கார்டூன் என்பது குழந்தைகளுக்கான படம் தானே? என்ற எண்ணம் இருந்தால் முதலில் ஒரு அழி ரப்பரை வைத்து அதை அழித்து விடுங்கள். கமஸ்ஹாசன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். தமிழ் திரைப்படங்களை விட நான் அதிகமாக பார்ப்பது டிஸ்கவரி சேனல். திரைப்படங்களில் உள்ள சண்டை, ஊடல், காதல் போட்டிகளை விட உண்மையான சமாச்சாரங்களை அதில் தான் த்தரூபமாக பார்க்க முடியும் என்றார். உங்கள் ரசனை பொதுவானதாக இருந்தால் எதையும் இயல்பாக ரசிக்க முடியும்.
இல்லை என்னை யோசிக்க வைக்கக்கூடாது என்றால் உங்களின் சிந்தனைகள் ஒரு வட்டத்திற்குள் இருக்க எப்போது போல ஒரு புள்ளி கோலமாய் வாழ்ந்து தொலைக்க வேண்டியது தான்.. .இயல்பாகவே வாழப் பழகி விட்டால் ஒன்றும் குடி முழுகி விடாது. என்னவொன்று குறிப்பிட்ட காலத்தில் குழந்தைகளுக்கும் உங்களுக்கு உள்ள இடைவெளி படுபாதாளம் போலத்தான் மாறும். பார்த்துக் கொண்டுருப்பதால் தைரியமாக எழுத முடிகின்றது.
கமலின் மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் கூட ஆறடிக்கு மேல் உள்ள ஆஜானு பீம்பாய் விரும்பிப் பார்த்தது இந்த கார்டூன் படங்களைத் தான், காரணம் 3 வயது குழந்தைகள் முதல் 60 வயது பெரியவர் முதல் அத்தனை பேர்களாலும் ரசிக்க முடிகின்ற ஒரே விசயம் இந்த கார்டூன் படங்களே.
ப்பூபூ..... இது தானா? என்று சொல்லிவிட்டு எச்சில் வடிய அடுத்த சேனலில் நகர்ந்து கவனிக்க முயற்சிப்பதற்குள் ஒரு முறை இந்த மென் நூலை வாய்ப்பு இருக்கும் போது படித்துப் பாருங்கள்.
உழைப்பு என்பதன் முழு அர்த்தத்தையும் இந்த கார்டூன் உலக ஜாம்பவான்கள் தான் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அர்பணிப்பு, கற்பனைத்திறன், விடாமுயற்சி, கிரியேட்டிவிட்டி என்று சொல்லக்கூடிய அத்தனை ஆளுமைத்திறனுக்கும் இந்த கார்டூன் உலக மககளைத் தான் உதாரணம் காட்ட முடியும் போலிருக்கிறது. எனக்கு இந்த துறை பற்றி பத்து சதவிதிகம் கூட தெரியாது. ஆனால் இந்த புத்தகத்தை படிக்க ஆச்சரியமாய் இருக்கிறது.
ரஜினி மகளின் ஆக்கர் ஸ்டுடியோ செய்து கொண்டுருக்கும் கார்டூன் படங்கள் சார்ந்த ஒரு விசயங்களைப் பற்றி படிக்கும் போது லேசாக மனதிற்குள் வியந்தது உண்டு. ஆனால் பாலா சொல்லிக் கொண்டு வரும் இந்த கதைகள் அத்தனையும் சராசரி மக்களுக்கு குறிப்பாக படித்தவர்களுக்கே இவ்வளவு விசயங்கள் தெரியுமா? என்பது சந்தேகமே,
நக்கல், நையாண்டி, எகனைக்குமொகனை, எகத்தாளம் என்று இதற்குப் பின்னால் இன்னும் நீங்கள் எத்தனை வார்த்தைகளை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அது தான் தல ஹாலிவுட் பாலா. இவர் வால்ட் டிஸ்னி சொந்த மகனோ, பேரனோ அல்லது ஹாலிவுட்ல இருக்கும் தமிழர் அசோக் அமிர்தராஜ் போல இவரும் படங்கள் தயாரிப்பவரா? என்று நீங்கள் கேட்டால் அநியாயத்திற்கு பச்ச புள்ள அல்லது கைப்புள்ள என்று அர்த்தம்.
அவங்க படம் எடுத்து கொடுத்துக்கிட்டு இருப்பாங்க. இவரு அவங்க எடுத்த படமெல்லாம கிழிகிழி என்று கிழித்து தோரணம் கட்டி தன்னுடைய அக்கறைப் பச்சை வலைப்பூவில் எழுதிக் கொண்டுருப்பவர்.(எழுதிக் கொண்டுருந்தவர்), இவர் எழுதிய புகழ் பெற்ற தமிழ்பட விமர்சனமான கலைஞரின் பெண் சிங்கம், விஜய் நடித்த சுறா போன்ற படங்களின் விமர்சனத்தைப் பார்த்து கோடம்பாக்க மக்கள் தேடிப்பார்த்தார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரமான உண்மைத்தமிழன் அண்ணன் மட்டும் என்னிடம் சொன்னார், ஆனால் ப்ளைட்டு பிடிக்கிற செலவு பார்த்து அத்தனை பேர்களும் ஆர்வத்தை அடக்கிக் கொண்டார்கள், இல்லாவிட்டால் அன்றையே தல தக்காளியாய் ஆகியிருப்பார்.
அமெரிக்காவில் மென்பொருள் துறையில் அவர் சொல்ற மாதிரி கம்யூட்டர் கம்பெனியிலே தினமும் துடைக்கும் வேலை பார்த்து கொண்டுருப்பவர். இவரின் அதகளத்திற்கு அளவே இல்லை. உச்சகட்டமாய் தான் எழுதிக் கொண்டுருந்த அக்கறைப் பச்சை வலைதளத்தையே காணாமல் செய்து விட்டார். என்னவொரு தெனாவெட்டு?
சமீபத்தில் பதிவுலகத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த புனைவு பிரச்சனை ஓடிக் கொண்டுருந்தது. ஒவ்வொரு இடுகையாக இது குறித்து படித்துக்கொண்டுருந்த போது இந்தாளு ஒவ்வொரு இடுகையின் பின்னோட்டத்திலும் ஹாலிவுட் பாலா என்ற பெயருடன் ரணகளத்தை உருவாக்கி போய்க் கொண்டேயிருந்தார். எந்த இடுகையையும் விட்டு வைக்கவில்லை. செந்தழல் ரவி இவரை எப்படி விட்டு வைத்தார் என்பது ஆச்சரியம். ஆனால் எவருக்கும் கோபம் வராத அளவிற்கு கிழிப்பதில் கிழி மன்னன்.
நானும் யாருடா இந்தாளு? விடாம ஒவொரு இடுகையாக போய்ப் பார்த்தால் கடைசியில் சமீபத்தில் உண்மைத்தமிழனுக்கு கொடுத்த உலகப் புகழ் பெற்ற கும்மு வரைக்கும் படித்து விட்டு இன்னமும் இவரைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்.
எப்போதுமே புத்திசாலிங்க செய்யுறது இரண்டு வேலைகள்.
ஒன்று படிக்கிறவங்களுக்கு புரிந்து விடக்கூடாது என்ற மேம்பட்ட ரசனையில் எழுதுவது. மற்றொன்று அத்தனையும் கலந்து கட்டி எழுதி தொடர் வாசிப்பில் இருந்து நம்மை தொலை தூரத்திற்கு விரட்டி அடிப்பது. ((?) ). பதிப்பகத்தில் போய் உட்கார வேண்டிய ஆள். எப்படித்தான் கடல் கடந்து போனாரோ?, ஆனால் கேபிள் சங்கர் எப்படி இவரை சாகடிக்காமல் விட்டார் என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி?
ரெண்டையும் இவர் மிகத் தெளிவாகவே செய்துள்ளார்.
காரணம் கார்டூன் படங்களை ரசிப்பது வேறு. அந்த துறைக்குள் இருக்கும் தொழில் நுடப சமாச்சராங்களைப் பற்றி நாம் தெரிந்து கொளள நினைப்பது வேறு. பொதுவாகவே தொழில்நுட்பம் என்றாலே பாலைவனம் போலத்தான் இருக்கிறது, அதிலும் இந்த கார்டூன் தொழில் நுட்ப துறை ரொம்பவே அக்கிரமம். ஒரு ப்ரேம்ல வரும் சித்திரத்தில் லேசாக இரத்தம் வரவேண்டும் என்பதற்காக எத்தனை மணிநேரம் உழைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? இந்த மின் நூலை படித்துப் பாருங்கள். கார்டூன் பார்க்கிற ஆசையே போய்விடும். ஆனால் இடையிடையே இவர் செய்துள்ள முக்கியமான காரியம் கொஞ்சம் நகைச்சுவை பாணியில் கொண்டு போயிருப்பதால் நிச்சயம் படிப்பவருக்கு சோர்வு வராது.
இதற்கு மேல் மென்நூல் வடிவத்தில் இருப்பதால் இடையே கொடுத்துருக்கும் வலை அறிமுகங்கள் உங்களுக்கு கார்டூன் உலக படங்களை நேரிடையாகவே அறிமுகப்படுத்தும். தொடக்கத்தில் இந்த கார்டூன் உலகம் எப்படி இருந்தது. எப்படி வளர்த்தார்கள். எவ்வாறு வளர்ந்தார்கள்? மூதலீடுகள் என்ன? அவர்கள் சந்தித்த சவால்கள் என்ன?
இதற்கு மேலாக நீங்க இந்த நூலை காசு கொடுதது வாங்கிப் படிக்க வேண்டிய அவஸ்யம் இல்லை. அவரே சொன்ன மாதிரி பதிப்பக மக்களையும் போண்டியாக்காது. காரணம் நமக்கு படமோ அல்லது பாடமோ படிக்கும் புத்தகமோ ஒரு சொறி சுகத்தை தரக்கூடிய அலங்கார நடை வேண்டும். இதில் பூதக்கண்ணாடி வச்சு நீங்க தேடிப்பார்த்தாலும் உங்களுக்கு கிடைக்காது.
நூலாசிரியர் பிரபல வசனமான இதை எப்படி தமிழ் படுத்த முடியும்? என்கிற தமிழ் ஆங்கில வார்த்தைகள் உங்கள் படுத்தி எடுக்கும். ஆனால் நிச்சயம் யோசிக்க வைக்கும்.
என்சைக்ளோபீடியா தொடங்கி விட்டகுறை தொட்டகுறையாக இந்த கார்டூடன் உலக ஜம்பவான்களைப் பற்றி அவர்களின் புகைப்படங்கள் வரைக்கும் ஆதியும் அந்தமும் அத்தனை விசயங்களையும் படம் வரைந்து பாகமாக உங்களுக்கு தெளிவாக புரியவைக்கும். இதுவொரு பாலாவின் கடின உழைப்பு என்று ஒரே வார்த்தையில் என்னால் சொல்லிவிட முடியும்.
ஆனால் தினமும் கம்யூட்டரை துடைக்கிற வேலை பார்க்கிற இவர்க்கிட்டே போய் நீங்க கேட்டுப் பாருங்க. இத்தனை மணியில் இதை உருவாக்கி முடித்தேன் என்று டர்ர்ர் ஆக்குவார். கெட்டாலும் மேன் மக்கள் மென்நூல் உருவாக்கும் மக்களே.
நீங்க சென்னையில் ஜெமினி மேம்பாலத்துக்கு கீழே உள்ள அமெரிக்க தூதரக அலுவகத்திற்கு போக வேண்டாம். ஏற்கனவே இடம் பிடித்து வைத்துக் கொண்டு வியாபாரம் போல் செய்து கொண்டுருப்பவர்களிடம் பேரம் பேச வேண்டாம். இப்ப நாம் நேரிடையாகவே வால்ட் டிஸ்ணி முதல் இந்த பிக்ஸார் வரைக்கும் அத்தனை இடங்களுக்கும் நாமே போய் பார்த்து விட்டு வந்து விடலாம்,
என்னவொன்று உங்களுக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும்.
செல்வோமா சென்னை சில்க்ஸ்க்கு
ஓ.............ஸாரி..............கேலிச்சித்திர உலகத்திற்கு ..............................
மென்நூல் குறித்த பார்வை அடுத்த பதிவில்................
முதல் இரண்டு வரிகள் படித்த உடனே உங்களுக்கு இந்த பின்னூட்டம் இடுகிறேன்...!
ReplyDeleteஉங்களுக்கு மணம் ஆகி விட்டதா????
குழந்தைகள் கூட உள்ளனரா???
:) :) :)
மிக்க மகிழ்ச்சி.!
என்னைப் போல் நீங்களும் மணமாகாதவர் என்று நினைத்திருந்தேன்.......!
:) :)
என்ன தலைவரே நக்கலா?
ReplyDeleteஅறிமுகம் ஆகாமல் நம்ம மேலே ரொம்ப விருப்பமா இருக்கிற ஜெரி கூட தொடக்கத்தில் ஒரு கிழட்டு வயசா இருக்குமோன்னு நாகா கிட்ட கேட்டது நீங்க கேட்டதும் ஞாபகத்திற்கு வருது.
மணமாகதவரா?
ஏஞ்சாமி கேட்குறீக்? அந்தக் கொடுமையை?
ஆமாம் விமர்சனம் செய்யாமல் இரண்டு வரிகளுக்குள்ளே சந்தேகம் வந்துடுச்சா?
விமர்சனம் எப்ப்டி எழுதறதுங்குற உங்ககிட்ட பாடம் படிக்கனும் போல இருக்குங்க... எப்படியோ ஆரம்பிச்சு நூல்பிடிச்ச மாதிரி எழுதி இருக்கீங்க!
ReplyDeleteநல்ல இடுகை.
ReplyDeleteஇடுகைக்கு வாழ்த்துக்கள்.
நல்ல விமர்சனம். இதுவரை அவரைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை, வலைத்தளமும் சென்றதில்லை. இன்று முயன்றேன், ஆனால் தளத்தையே காணவில்லை :(
ReplyDelete//கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு//
ReplyDeleteஇது பாலாவுக்கான கமெண்ட்!! :)
i am his(hollywood bala) fan.miss him.
ReplyDeleteLovely writing Jothiji
thanks
அருமையான விமர்சனம்.நானும் அந்த மென் நூலை படித்திருக்கிறேன்.ஹாலிவுட் பாலா தற்சமயம் ஒதுங்கி இருப்பது போல தெரிகிறது.அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது
ReplyDeleteஅவர் பதிவு அக்கறைப் பச்சை இல்லீங்க. அக்கரைச் சீமை.
ReplyDeleteஅவர் பதிவை அழிச்சதுல நொந்து போயிருக்கோம், இந்த நேரத்துல நீங்க விமர்சனம் போட்டதுனால், ஏன்டா அவர் பதிவ அழிச்சார்னு அவர் மேல இன்னும் கோவம் கூடுதுங்க.
உண்மைத் தமிழனுக்கு மட்டுமில்லங்க பலருக்கு அவர் கும்மியடிச்சிருக்காரு. பின்னூட்டங்கள்ள வந்து என் தளத்துக்கு வாங்கன்னு மொக்கைப் போடுற பலரை அவர் கும்மியெடுத்திருக்கார். ஸ்வேதான்னு ஒரு கொசுவை அழிக்க கவிதை எழுதி கலாய்ச்சார். உஜிலா தேவிக்கு குறிப்புகளைப் பகிர்ந்தமைக்கு நன்றின்னு அவர் அடிச்ச கும்மியை மறக்கவே முடியாது. ஆனா, அவர் பதிவை திரும்ப எழுத ஆரம்பிச்சதும் அவருக்கு கும்மி காத்திருக்கு(பதிவை அழிச்சதுக்காக)
ReplyDeleteஅவர் பதிவு அக்கறைப் பச்சை இல்லீங்க. அக்கரைச் சீமை.
ReplyDeleteதமிழினியன் பெயரே அற்புதமாயிருக்கு. எப்படி உங்கள பாலா விட்டுவச்சாரு. உங்க தளத்தில் அவரோ தளத்தின் இணைப்பு மட்டும் தான் எப்போதும் இருக்கும். அவரு எங்கேயிருந்து ஒளிஞ்சுகிட்டு படிக்கிறாரோ? தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பா.
நாகா நீங்க படிக்காம இருந்ததே ரொம்ப நல்லது. அவரோட உழைப்பை டெலிட் ங்ற பட்டன் கணநேரத்தில் கொத்திக் கொண்டு போய்விட்டது. என்னைவிட உங்களைப் போன்ற நபர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். காரணம் பதிவுலகம் உள்ளே இருக்கும் கலாச்சாரத்தை (இந்த வார்த்தைக்கு கூட நம்ம ஆளு கம்ப தூக்குவாரு) துச்சமா கிழிகிழின்னு கிழிச்ச மனுஷன்.
வாங்க சதீஷ்குமார். சாதிப்பார் என்று நம்புவோம்.
i am his(hollywood bala) fan.miss him
நண்பா அகில உலக தல சங்கத்தில் ஆயுள் சந்தா வசூலித்துக் கொண்டுருக்கிறோம். நம்ம ஷங்கருக்கு ஒரு கடுதாசிய தட்டி விடுங்க.
விந்தை மனிதா அப்ப தேறிடுவேன்னு சொல்றீங்க சரிதானே. அடுத்த கவித எப்ப எழுதப் போறீங்க. பாலா சொல்லிக்கொடுத்த கும்மி உங்களுக்கு காத்துருக்கு.
நன்றி குமார்.
ஷங்கர் உங்க டச்சிங் ரொம்பவே பிடிச்சிங்.
ReplyDeleteகார்ட்டூன் தனி உலகம் தான். இந்த சேனல்கள் வருவதற்கு முன், அத்தி பூத்தாற் போல் திரையரங்கிற்கு கார்ட்டூன் படங்களே பார்க்க எவ்வளவு கூட்டம் வரும். அனேகமாய் கார்ட்டூன் பார்க்கும் பெரியவர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.
ReplyDeleteஅருமையான விமர்சனம்.
ReplyDeleteவிமர்சனம் மிக நன்றாக உள்ளது. இதைப் படித்த பின் இன்னும் அவர் எழுதுவதை நிறுத்தியது இன்னும் வருத்தமளிக்கிறது. அவரின் எழுத்துக்கள் பலரை எழுத தூண்டியது என்பது உண்மை. அவருக்காக காத்திருப்போம்.
ReplyDeleteமென்நூல் விமர்சனம் அருமை.
ReplyDeleteஅவர் எழுதுவதை (தற்காலிகமாக) நிறுத்தியது வருந்தத்தக்கது.
நான் பாலாவின் எழுத்துக்களை ஏற்கனவே படித்து உள்ளேன். நீரோடை போன்ற அழகான அதேநேரத்தில் ஆழமான எழுத்துக்கள் அவருடையது.
ReplyDeleteஉங்களின் விமர்சன நடை அருமை. வாழ்த்துக்கள்.
பாலா,
ReplyDeleteஇஙக்யும் ஸ்வேதா வந்திருக்காங்க.
இதுக்காகவாவது நீங்க திரும்ப வாங்க. சீக்கிரம் கவிதை எழுதுங்க.
அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteஅருமைன்னு ஒரே சொல்லில் சொல்லிடலாம்.
கார்ட்டூன் பார்த்துட்டு மகள் ஒரு நாள் அழுதது நினைவுக்கு வந்துச்சு.
ஜெர்ரி செத்துப்போச்சுன்னாள்....... அடுத்த விநாடி ஜெர்ரி துள்ளி எழுந்து வந்ததும் முகத்தில் வந்த ஜோதியை மறக்கவே முடியாது என்னால்.
இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும் ஹாலிவுட் பாலாவுக்கு.