அஸ்திவாரம்

Wednesday, August 25, 2010

பழைய செய்திதாள்கள்

மனைவி
அலுத்துக் கொண்டாள்.

படிக்காத ஒரு மாத
செய்திதாள்களை
எப்போது
படிக்கப் போகிறீர்கள்?

நீ படித்ததில்
முக்கியமானதைச் சொல்?

அதிர்ஷ்டக்குலுக்கல்.
ஜோஸ்கோ நான்குபக்க
நகை விளம்பரம்

சிறப்புத் தள்ளுபடி
முழுப்பக்க சென்னை சில்க்ஸ்

ஸ்ரீதேவி சிறப்புத்தள்ளுபடி

மூணு சென்ட் இடத்தில்
15 லட்சத்தில் வீடு கட்டித் தருகிறார்களாம்.
புதிய மளிகைக்கடை திறப்பு விழா,
பக்கத்தில் வேறொரு
செட்டிநாடு
ஹோட்டல் வரப்போகுது.

வேறெதும் முக்கியமான செய்திகள்?

கண்காட்சி
கடைசிநாள்.

படித்துவிட்டேன்.
கட்டி மேலேற்றிவிடு.

முதுகு உணர்ந்த உஷ்ணப் பார்வை
முகம் வரைக்கும் தாக்குது.

26 comments:

  1. உங்களுக்கு கவிதையில் சமூக தாக்கம் கைவருகிறது ... அடிக்கடி எழுதுங்கள்

    ReplyDelete
  2. கவிதை!!!!!

    நம்ம வீட்டில் ரோல் சேஞ்ச்:-)))))

    பட், த ஸ்டோரி ஈஸ் ஸேம்!

    ReplyDelete
  3. கவிதை!!!!!

    டீச்சர் குத்தீட்டி மாதிரி எழுத்துக்கு பின்னால் நிற்கின்ற வீரர்கள் கண்டபடி மிரட்டுறாங்க.

    ஏற்கனவே ரவி மற்றும் அவர் வீட்டுக்காரம்மாக்கிட்டே நானே கவிதையெல்லாம் பிழைத்துப் போகட்டும் சொன்ன ஆளு.

    இது கவிதையின்னு நான் தான் சொல்லிக்கனும். ஆனால் இதுக்குப் பின்னால் ஒரு சிறிய செய்தி இருப்பதாக பட்டது. செந்தில் புரிந்து கொண்டார்.

    செந்தில்

    ஓரேடியா படுத்தி எடுக்கக்கூடாது என்பதற்காக இது போன்ற விஷயங்கள் என்னுடைய சொந்த திருப்திகாக. மேலும் தொடரும் தொடரில் கூட கலந்து அடிப்பதைப் பொறுத்து நீங்க தான் எனக்கு குருஜீ.

    ReplyDelete
  4. நன்கு சொல்லி உள்ளிர்கள்....
    எழுதிய கவிதை உங்களுடைய வேலைபளுவையும் அதனால் நீங்கள் இழந்துவிட்ட உள்ளுர்/உலக தொடர்பையும் சொல்லுகிறது.

    தமிழ் உதயன்

    ReplyDelete
  5. தலைவரே,

    நல்லாயிருக்கு....

    சமூகத்த பார்த்து ரொம்ப கோபப்படுறீங்க... உடம்ப பார்த்துகுங்க:)

    நாலு வரிகளிகளில் நச்சு கவிதைன்னா பா.ரா அண்ணன்தான். நாமெல்லாம் இப்படித்தான் எழுதமுடிய்ம்:(

    அன்புடன்,
    -ரவிச்ச்ந்திரன்

    ReplyDelete
  6. உடம்ப பார்த்துகுங்க:)

    இழந்துவிட்ட உள்ளுர்/உலக தொடர்பையும் சொல்லுகிறது.

    ரெண்டும் உண்மை தான் நண்பர்களே.

    ReplyDelete
  7. உங்கள் இந்த பதிவை படித்து முடிக்கும்போது முகத்தில் மெல்லிய புன்னகையும் மனதில் ஒரு ஆழமான சிந்தனையும் ஏற்படுகிறது! உங்கள் எழுத்துக்கு என் வணக்கங்கள்!

    ReplyDelete
  8. இன்று செய்தித்தாள்கள் பெரும்பாலான விளம்பரங்களைத்தான் சுமந்து வருகின்றன தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சேர்த்து

    ReplyDelete
  9. எஸ் கே என்னை காப்பாத்திட்டீங்க. மக்கள் என்னமா நக்கல் செய்றாங்க பாத்தீங்களா?

    வாங்க உழவன்.

    திருப்பூர் உள்ளுர் செய்திதாள்கள் பார்த்தால் இன்னமும் நீங்கள் நொந்து போயிடூவீங்க.

    இறப்பு என்றால் தொடர்ச்சியாக இறந்து பத்து ஆண்டுகள் என்றாலும் விடாமல் வந்தபடியே இருக்கும்.

    ReplyDelete
  10. ரசித்தேன்.....யதார்த்தமாய் ..இருக்கிறது..

    ReplyDelete
  11. குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  12. சமூகம், பொதுப்புத்தி பற்றிய வெளிப்பாடும், பெண்கள் பத்திரிகைகளில் இந்த செய்திகளைத் தவிர வேறெதை படிப்பார்கள் என்ற பொதுக்கருத்தா? :)

    பெண்ணையும் பத்திரிகையையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பது போலுள்ளது என்பது தான் என் புரிதல்.

    ReplyDelete
  13. ரதி கோவித்து கொள்ளாதீர்கள்.

    நான் பார்க்கும் சமூகத்தில் பணம் படைத்தவர் இல்லாதவர் என்கிற பாகுபாடு இருக்கிறதே தவிர முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய பெண்கள் அவர்கள் வட்டத்தை விட்டு வெளியே வர தயாராய் இல்லை.

    விதிவிலக்குகளைத் தவிர்த்து.

    பாலா நக்கல் ஜாஸ்தி.

    ஆசிரியரே எப்படியோ காப்பாற்றி விட்டீர்கள்.

    ReplyDelete
  14. இன்னொரு நடைமுறை உண்மைவியல் :). பெண்களுக்கு மட்டும் எப்படி அந்தச் செய்திகள் கண்ணில் படுகிறது என்பது அதிசயமான உண்மையே.

    ReplyDelete
  15. அது கோபம் இல்லை, ஜோதிஜி, ஆதங்கம், வருத்தம்.

    ///பெண்கள் அவர்கள் வட்டத்தை விட்டு வெளியே வர தயாராய் இல்லை.//

    இதைப்பற்றி ஏன் நீங்கள் விரிவாக எழுதக்கூடாது? உங்கள் ஆழ்ந்த, தீர்க்கமான எழுத்தில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  16. எங்கும் எதுவும் எல்லாமே வியாபாரம்தான் இப்போ !

    ReplyDelete
  17. நன்றி ரதி. கமெண்ட் அடிக்கும் போதே பயமாய் இருக்கிறது. எப்போது இந்த இணையத் தொடர்பு புட்டுக்கிட்டு போகும்ன்னு தெரியல. ஒவ்வொரு நாளும் பிஎஸ்என்எல் சேவை அந்த அளவுக்கு சாகடித்துக் கொண்டுருக்கிறார்கள்.

    ராம் குமார் ரொம்பவே ரசித்தேன் உங்கள் விமர்சனத்தை. உண்மையும் கூட. நானே இவங்க செய்திதாள்கள் படித்துவிட்டு எனக்கிட்ட பேசுற போற போது சொல்லும் விசயங்களை எத்தனை துழாவிப் பார்த்தாலும் என் கண்களுக்குத் தென்பட்டதே இல்லை. ரதி ஒரு வேலை கொடுத்துள்ளார். அதில் எழுத நீங்களே எடுத்து கொடுத்து இருக்கீங்க.

    வாங்க ஹேமா. வியபாரம் என்பது ஆடம்பர அவஸ்ய பாதைக்கு கொண்டு போய்க் கொண்டுருக்கிறது.

    ReplyDelete
  18. //பெண்களுக்கு மட்டும் எப்படி அந்தச் செய்திகள் கண்ணில் படுகிறது ...//

    We are from Venus and you guys from Mars.

    Thats why:-)))))))))))))))

    It is not safe at all in India to come out of the circle.

    Here 'most of the men' never come out of the box in thinking:(

    no hard feelings:-)

    ReplyDelete
  19. டீச்சர் ரொம்ப வலிக்குது. அடேங்கப்பா பொங்கி எழுந்து விட்டீர்கள் போல.

    உண்மையும் கூட.

    காலையில் ஒரு தோட்டத்தின் வழியே சென்ற போது கண்ட காட்சி நீங்கள் சொன்னது போல்

    Here 'most of the men' never come

    அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டுருந்தது.

    என்க்கு உங்களைப் போல ரமேஷ் போல இந்த ஸ்மைலி சிம்பல் எல்லாம் போடத் தெரிய வில்லை. கற்றுக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  20. அரசியல் அறிந்து கொள்ள
    ஆர்ப்பாட்ட செய்திகள் அறிய
    இந்தியா விற்பனைக்கு என்ற
    ஈர்க்கும் செய்தி தெரிய
    உலகச் செய்திகளோடு
    ஊர் செய்திகளும் தெரிந்திருந்தால்
    எதார்த்தத்தை உணர்ந்து
    ஏதாவது நாம் செய்ய வேண்டுமென
    ஐக்கியப் படுத்தும் முயற்சியாக
    ஒன்றுபடு தோழர்களே என
    ஓங்கிய குரலில் உரத்துச் சொல்ல
    ஒளடதமாய் செய்திகளை
    அனுதினமும் நான் படிப்பதினால்
    வசவு பெறுகிறேன்
    படிக்காமல் வசவு பெறும்
    என் நண்பன் ஜோதிஜி

    -சம்பத்-

    ReplyDelete
  21. பெண்கள் உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும்.
    ஜோதிஜி சொல்வதுபோல விதிவிலக்காகச் சில பெண்களைத் தவிர ...ஏன் படித்த பெண்கள்கூட ஆடம்பரம்,வேடிக்கை,சினிமா என்கிற மாதிரி அவர்கள் இயற்கையான குண இயல்புகளிலிருந்து இன்னும் வெளிவரவில்லை.எனவே கவிதையிலுள்ள சாதாரண பெண்கள் இந்தப் பகுதிகளை மட்டுமே பார்த்துக்கொள்கிறார்கள்.இது உண்மை.

    இங்கு எம் பெண்களில் கூடுதலானோர் இன்று நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே அழகு நிலையம் போய் வருகிறார்கள்.இது நான் நேரில் பார்க்கும் உண்மை.இலங்கைச் செய்திகள் தவிர்த்து தொடர் நாடகம் பார்க்கிறார்கள்.குழந்தைகள் நாட்டுப் பிரச்சனை பற்றி விளக்கம் கேட்டால் "அது அப்படித்தான்" என்று சொல்லி முடிக்கிறார்கள்.அப்பா சொல்லத் தொடங்கினாலும் "பிள்ளைக்கு படிக்க நிறைய இருக்கு.சொல்லியும் புரியாத விஷயத்தை ஏன் சொல்லப்போகிறீர்கள்" என்று வேறு...!
    இதையெல்லாம் இந்தக் கவிதைக்குள் அடக்கலாம்தானே !

    ஜோதிஜி....உங்க பக்கம்தான் நான் !

    ReplyDelete
  22. சம்பத் உங்கள் அ முதல் தொடங்கிய கவிதை பார்த்து விக்கித்து போய் விட்டேன். உடனே எழுதி இருப்பீங்க போல. ரவி டீச்சர் பார்த்தீர்களா? நாங்களும் ரெண்டு மூணு பேர உருவாக்கிட்டோம்ல

    எப்பூடி?

    ஹேமா ஈழத்திற்குப் பிறகு நீங்க கொடுத்த இந்த நீண்ட விமர்சனம் பொக்கிஷம். ரதி சொன்னது எத்தனை முக்கியமோ நீங்க சொன்னதும் அத்தனை இயல்பாகத்தான் இருக்கும். இரண்டுக்கும் நடுவில் வைத்து பார்த்த பெண்களை வைத்து எழுதிப் பார்க்கின்றேன்.

    இதையெல்லாம் இந்தக் கவிதைக்குள் அடக்கலாம்தானே !

    இதுக்கு புரட்சித்தலைவர்ன்னு இடுகையில் எழுதுபவர்களைப் பற்றி ஒரு குட்டி கவித (டீச்சர் திட்டப் போறாங்க) எழுதி வைத்துள்ளேன்.

    ReplyDelete
  23. அழகான,யதார்த்தமான, உண்மையான கவிதை. உலகில் முக்கால் வாசி பெண்கள் இந்த ரகம் தான். காசுக்கு ஏத்த தோசை மாதிரி அவரவர் நிலைக்கு ஏற்ப ஆசைகளின் வெளிப்பாடுகள் வெளிவரும்.

    ReplyDelete
  24. கீதா

    தெளிவான விமர்சனம். ஒரு பெண் பார்வையில் வந்தமை எனக்கு பலம்.

    ReplyDelete
  25. வணக்கம் தோழா..!
    எப்போலருந்து கவிஞர் ஜோதி கணேசனாநீங்க ???
    :-) :-)
    நல்ல இருக்கு...!

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.