அஸ்திவாரம்

Saturday, August 21, 2010

காமம் கடத்த ஆட்கள் தேவை

குளிரூட்டப்பட்ட அறையில் கூட்டம் முடிந்தும் மூவர் மட்டுமே அமர்ந்து இருந்தோம். ஒவ்வொரு துறையில் சார்பாக வரவழைக்கப்பட்டவர்கள் சென்று விட நாங்கள் மூவர் மட்டுமே உள்ளே இருந்தோம்.  பொது மேலாளர், நிறுவன நிர்வாகியின் உறவினர் இருவரும் என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது.  பாரபட்சம் இல்லாமல் பேச வேண்டும்.  எனக்கு முன்னால் இருவரும் முடிவுகள் எடுத்து இருக்கக்கூடும். 

ஆனால் சில விசயங்கள் என்னிடம் வந்து தான் வெளியே போகும்.  ஏதோ ஒரு நம்பிக்கை.  என்னுடைய துறைக்கும் அவர்கள் எதிர்பார்க்கும் மனித வளம் சம்மந்தப்பட்ட விசயங்களுக்கும் சம்மந்தம் இல்லாத போது கூட என்னை அழைத்து உட்கார வைத்து விடுவார்கள். 

நிறுவன முதலாளி பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்.  அவர் சார்பாக உள்ளே இருந்த உறவினரிடம் நிறுவனத்தின் மொத்த உற்பத்திப் பிரிவும் இருக்கிறது. பணியாளர்களின் நலன், சம்பளம், அரசாங்க சட்ட திட்டங்கள், உணவு விடுதி, பணியாளர்கள் தங்கியுள்ள அறைகள் போன்ற அத்தனை சமாச்சாரமும் அவரின் பொறுப்பில் தான் இருந்தது.  முக்கிய காரணம் தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழுடன் ஹிந்தியும் நன்றாக பேச எழுதக் கூடியவர்.

இப்போது இருவரும் சேர்ந்து பந்தை என் பக்கம் தள்ளி விட்டு உள்ளே இருந்த நெருக்கடியான சூழ்நிலையை மறந்து என்னை நையாண்டி செய்து கொண்டு இருந்தனர். மூவரும் சேர்ந்து விட்டால் இதுவொரு இயல்பான நிலைமை.  காரணம் ஒவ்வொரு நாளின் 12 மணி நேரமும் பிரச்சனைகளுடனே வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு என்னுடைய எதார்த்த பேச்சு நகைச்சுவைப் பக்கம் நகர்த்தி விடும்.

வேறுவழி இல்லாமல் என் பதிலைச் சொன்னபோது இருவரும் கையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

" நாங்களும் இதையே தான் நினைத்தோம்.  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எதிர்பார்த்தோம்?" என்றனர்.

காலையில் நிறுவனத்திற்குள் நுழையும் போது வரவேற்பறையில் நாலைந்து புதிய முகங்கள் தென்பட்டது.  சம்மந்தம் இல்லாதவர்கள்.  முகமெங்கும் கலவர ரேகைகள்.  அத்தனை பேர்களும் 50 வயதைக் கடந்தவர்கள்.  கவனித்துக் கொண்டே என் அறைக்கு வந்து விட்டேன்.  ஆனால் அதுவொரு பூகம்பத்தின் தொடக்கம் என்பது அப்போது புரியவில்லை.

நிறுவனத்தின் தணிக்கையாளர் சிபாரிசு செய்த பெண். எவருக்குமே சிபாரிசு செய் யாதவர். ஏதோ ஒரு பழக்கத்தில் அந்த குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை பார்த்து உதவி செய்து அனுப்பி வைத்தார். சிபாரிசு கடிதத்துடன் பக்கத்து மாநிலத்தில் இருந்து உற்பத்தி பிரிவில் வந்து சேர்ந்தார்.  பள்ளி இறுதி வரைக்கும் படித்து இருக்க, அதுவே மேய்ப்பர் வேலைக்கு தகுதியாய் இருந்தது.

தினசரி கணக்கு ஒப்படைப்பு போன்றவைகளுடன் மொத்த பெண்களுக்கும் தலைவியாக போட்டு விட நாலைந்து மாதங்கள் அமைதியாகத் தான் சென்றது. நிறுவனத்தின் உள்ளே இருந்த தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். குடும்ப விசேடம் என்று விடுமுறை கேட்டு சென்றவர் திரும்பி வரவில்லை.  கூட்டம் நிறைந்த பணியாளர்கள் வரிசையில் அந்த பெண் குறித்து எவரும் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.  ஒரு வேளை பிடிக்காமல் வராமல் இருக்கலாம் என்று இயல்பாக எடுத்துக் கொண்டு மறந்து போயிருந்தனர்.  விடுதியில் பெட்டி படுக்கைகள் இருக்க எப்படியும் வந்து விடக்கூடும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணமாக இருந்தது.  ஆனால் ஊரில் இருந்து மொத்த குடும்பமும் வந்து  சொன்ன போது கதை வேறு விதமாக திரும்பத் தொடங்கியது.

விசேடம் முடித்து இரண்டாவது நாள் ஊரில் இருந்து கிளம்பி வந்தவர் நிறு வனத்திற்கு வந்து சேரவில்லை. நான் போய்ச் சேர்ந்ததும் பேசுகின்றேன் என்றவரின் அழைப்பு வராமல் போகவே நான்கு நாட்கள் காத்திருந்து குடும்பத்தினர் நிறுவனத்திற்கே வந்து விட்டனர்.  

நான் சொன்னபடியே பெண்கள் விடுதியில் ஒரு பெண்மணியை அனுப்பி குறிப்பிட்ட பெண்ணின் பெட்டியை துழாவிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.  வரவேற்பு அறையில் பெற்றோர்கள் பதை பதைப்பாய் காத்து இருந்தனர். பெட்டியை துழாவிய போது தான் மொத்தமும் புரிந்தது. நிறுவனத்திற்கு வரு வதற்கு முன்பு இருந்த தொடர்பு புரிந்தது.   பெட்டியில் கடிதங்களும் கலாச்சார சீரழிவுகளும் ஒன்று சேர்ந்து கிடைத்தது.  கொண்டு வந்த மேஜையில் கொட்டிய போது எங்கள் மூவருக்கும் வியப்பு மட்டுமல்ல அதிர்ச்சியும் கூட.  இந்தப் பெண்ணா?  இப்படியா?

கிளி இறக்கை முளைத்து பறந்து விட்டது.  எந்த திசை என்பதை இனிமேல் தான் கண்டு பிடிக்க வேண்டும்?

குடும்ப வளர்ப்பு, கற்ற கல்வி அத்தனையும் தாண்டி வரும் உணர்ச்சிகள் என்பது சூழ்நிலை உருவாக்குவது.  அதற்கு நாடு, மாநிலம், மொழி எதுவும் முக்கியமில்லை. காமம் என்பது பல சமயம் கண்களை மறைப்பது மட்டுமல்ல. கரைகளே இல்லாத பயணத்தைப் போன்றது. சிலருக்கு கரை தென்பட்டு விடும்.  பலர் சிதைந்து சின்னாபின்னமாகி சீரழிந்து செய்தித்தாளுக்கு பரபரப்புச் செய்திகளாக மாறிவிடுகிறார்கள்.

ஏற்றுமதி நிறுவன வாழ்க்கையின் தொடக்கத்தில் ஒரு சிறிய நிறுவனத்தில் அந்த நடு இரவு நேரத்தில் ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதை பார்க்க சுற்றி வந்த போது இருட்டுப் பகுதியில் இருந்த அந்த பெரிய மேஜை மட்டும் வினோதமாக ஆடிக் கொண்டுருந்தது. 

தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட ஆடைகள் மேஜையின் மேல் அடுக்கப்பட்டு இருக்கும்.  தரத்தை சோதிக்க வேண்டிய ஆடைகள் அதே மேஜையில் ஒவ்வொரு மூலைக்கும் கட்டப்பட்ட கயிற்றில் தொங்க விடப்பட்டுருக்கும். பல சமயம் நான்கு புறமும் தொங்கும் போது உள்ளே மறைவான இடம் கிடைத்து விடும்.  குறிப்பிட்ட பகுதிகளில் வேலையில்லாத போது மின்சார விளக்குகள் தேவையில்லாமல் இருட்டாக இருக்கும். இருட்டும் மறைவும் எளிதாக பயன்படுத்த அமைந்து விடும். உடம்பில் இருக்கும் உஷ்ணம் உருக்குலைத்து விடும். அதுவே பழக்கமாகி பாதை மாற வைத்து விடும். நெருங்கிப் பழகும் போது அத்தனையும் சுருங்கி விடும்.

முன்னும் பின்னும் ஆடிக்கொண்டுருந்த அந்த மேஜைக்கு அருகே சென்று விபரம் தெரியாமல் ஆடைகளை விலக்கி உள்ளே பார்க்க,  உள்ளே பொருந்தாக் காமம் அரங்கேறிக் கொண்டுருந்தது. நான் கவனித்ததைக் கூட காணாமல் அவர்கள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டுருந்தனர். 

மகன் தாய் வயதைக் கொண்டுருந்த அவர்களின் அவசர அலங்கோலம் இரண்டு நாட்கள் மனதை பாதிக்க குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல தவிர்த்து விடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.  

இது போன்ற விசயங்களில் எந்த இடத்தில் தொட்டாலும் நியூட்டன் விசை போலவே நம்மைத் தாக்கும். தைரியமாய கையாண்டால் கூட சில சமயம் கடைசியில் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை அசிங்கமாய் மாற்றி விடுவார்கள். 

திரைப்படத்துறையைப் போலவே இங்கு எல்லாமே எளிதாக இருக்கிறது. முதலாளி முதல் தொழிலாளி வரைக்கும் இஷ்டம் போல உணர்ச்சிகளை ஆட்டிப்படைத்துக் கொண்டுருக்கிறது. திரைப்படம் மற்றும் அரசியல் சார்ந்த ஒழுக்கம் கெட்ட செய்திகள் அத்தனையும் இன்று இயல்பான படிக்கும் செய்தியாக மாறி விட்டது. ஊடகத்தால் முக்கியமாக்கப்பட்டடு பாமரன் முதல் படித்தவர் வரைக்கும் எந்த குற்ற உணர்வும் தோன்றாத அளவிற்கு சராசரி சிந்தனைகளுடன் கலந்து விட்டது. 
பாலூணர்வு என்பது பண்டமாற்று முறை போல் ஆகிவிட்டது. இதனால் தான்? என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.  

தென் மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு குடும்பங்களும் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். தொடக்கத்தில் இருக்கும் அவர்களின்  ஒற்றுமையும்,புரிந்துணர்வுகளும்,ஆதரவும், காலப் போக்கில் மறைந்து போய் விடுகின்றது.   குடும்ப பராம்பர்யம் கட்டுப்பாடு, அக்கறை, கலாச்சாரம் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் காணாமல் போய் விடுகின்றது. 

சிலர் மட்டுமே எந்த பாதிப்பும் இன்றி கிராமத்து வாழ்க்கையாகவே கடைசி வரைக்கும் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  உருவாகும் தொடர்புகள், அறுந்து போய் விடுகின்ற உறவுகள், தகுதிக்கு மீறிய ஆசைகள் என்ற ஒவ்வொரு காரணங்களும் ஒரு குடும்ப பராம்பரிய சங்கிலியை வெட்டி எறிந்து விடுகின்றது.

பதினெட்டு வயதில் எதுவும் அறியாமல், உள்ளே வருகின்றவர்கள் தன்னை மாற்றிக் கொள்வதில் அதிக அக்கறையாய் செயல்படுகிறார்கள். உடம்புக்கு பொருந்த உடைகள் அணிவது முதல் கருத்த தேகத்தில் அப்பிக் கொள்ளும் கண் மை முதல் கண்றாவி கலாச்சாரம் அவர்களை கட்டுப்படுத்தி படாய் படுத்தி எடுக்கின்றது. 

அறிவுரைகளை கேட்க பொறுமை இல்லை.  குடும்பத்தினர் பொறுமையாய் உட்கார்ந்து பேச நேரமும் இருப்பதும் இல்லை.  கண்டதே காட்சி.  கொண்டே கோலம்.  கடைசியில் அலங்கோலத்தில் தான் போய் முடிகின்றது. 

நகர்புற வாழ்க்கையை அறியாத பெண்மணியாக அறிமுகமானவர் அடுத்த ஒரு வருடத்தில் அத்தனையும் அறிந்து அவசரமாய் முன்னேறிக் கொண்டு இருக்கிறார். பலசமயம் நமக்கே பாடம் நடத்துகிறார்கள்.  " இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஊருடன் ஒத்துப் போகாமல் வாழப் போகிறாய்?" என்கிறார். 

அந்தமான் தீவில் நிறுவனங்கள் தொடங்கலாம் என்று உருவான கலாச்சாரம் சிலரை வேறொரு கேடு கெட்ட கலாச்சாரத்தையும் வளர்க்க உதவ வைத்தது.  

பணத்தைக் கொண்டு போய் கொட்டினார்கள். கூட்டிக் கொண்டு சென்றார்கள். வளர்ந்தார்கள். அலுக்காத காமத்தை அங்குலம் அங்குலமாக சுவைத்தார்கள். வீழ்ந்தார்கள்.  கெட்டியாக பிடித்துக் கொண்ட பெண்மணிகள் கண்மணியாக மாறி சரிசமாக வளர்ந்து இன்னும் சவால் விடும் பிரபல தொழில் நிறுவனம்.  

இது அசிங்கமல்ல.  வளர்ந்த பிறகு அத்தனையும் சாதனைப் பெண்மணிகள் என்ற பட்டியலில் வந்து விடும்.  வேறென்ன வேண்டும்? 

வளர்ந்த நிறுவனங்களில் முறைப்படுத்தப்பட்டதாகவே இன்று பாலூணர்வு பல் இளித்துக் கொண்டு விகாரமாய் வெளியே தெரியாமல் இருக்கிறது. 

பத்து வருடங்களுக்கு முன்னால் பணிபுரிந்த பல பணியாளர்களை எங்குமே பார்க்க முடியவில்லை. இருக்கிறார்களா? இறந்தார்களா? யாருக்குத் தெரியும்?  பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். கேரளா தொடங்கி இன்று நேபாளம் வரைக்கும் சென்றடைந்து விட்டது.  பீகாரி என்றாலே பயப்படும் அளவிற்கு வருபவர்களின் கலாச்சாரம் பயமுறுத்தி விடுகின்றது. 

ஏதோ ஒரு காரணம்.

வேலைவாய்ப்பின்மை, கம்யூனிச தாக்கம், தொழிற் சாலைகள் இல்லாத குறை.  ஆள்பவர்களின் அக்கறையின்மை.  எத்தனை காரணங்கள் சொன் னாலும் வந்து இறங்கும் வரைக்கும் ஒவ்வொருவரின் அடிப்படை குடும்ப வளர்ப்பும் பாதுகாப்பாய் இருக்கிறது. 

ஆனால் துணியின் உஷ்ணமும், பழக்க வழக்கங்களும் சேர்ந்து குறுகிய காலத் திற்குள் கரையக்கூடியதாய் மாற்றி விடுகின்றது.  நாம் மாறி விட வேண்டும் என்ற கொள்கையே ஒவ்வொருவரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி தொலைத்து விடுகின்றது. 
நாம் நாகரிக வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறோம் என்ற இந்த எண்ணமே ஒவ்வொருவரையும் நாதாரித்தனமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறது.

வீழ்ந்த நிறுவனங்களின் கணக்குகளை பட்டியலிட்டுப் பார்த்தால் இந்த கப்பு வாடை தான் மூக்கைத் துளைக்கின்றது. 

அடிப்படை தொழிலாள வர்க்கத்தின் அறிவற்ற தன்மையால் எய்ட்ஸ் வளர்க்கும் பெருநகரங்களில் கரூர், நாமக்கல் அடுத்து இன்று திருப்பூர் முன் னேறிக் கொண்டுருக்கிறது. ஆனால் நாம் நடிகை குஷ்பு சொன்ன எதார்த்த விசயத்திற்கு இதுவொரு கலாச்சார சீரழிவு என்று மல்லுக்கட்டி முண்டிக் கொண்டு முன்னால் நிற்கிறோம். 
தொழிற் நகரங்கள் வாழ்க்கையைத் தேடி வருபவர்களுக்கு காசு கொடுப்பதுடன் இந்த கலாச்சார கருமாந்திரங்களை தலைகீழ் விதிகளாக மாற்றிக் கொண்டு இருக்கிறது. 

என்ன சொன்னாலும் தொழிலாளர்களுக்கு அவசர நேரத்தில் புரியாது.  ஆனால் முதலாளிகளுக்கு எப்போதும் பணம் காட்டி பயமுறுத்தும் சமாச்சாரம்.

49 comments:

  1. இயந்திரமயமான இந்த உலகில் மனிதனும் இயந்திரம் போல மாறி வருகிறான். பலவித இயல்பான உணர்ச்சிகள் மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது :(

    ReplyDelete
  2. யதார்த்தத்தை தோல் உரித்து காட்டும் பதிவு. நல்லா பதிவு.

    ReplyDelete
  3. யதார்த்தத்தின் வடிவமே இந்த பதிவு, மிக அருமையான பதிவு

    ReplyDelete
  4. அண்ணே..

    ரொம்ப சின்சியரா எழுதியிருக்கீங்க..

    இன்னிக்கு சமூகம் போற போக்க பார்த்தா பயமாத்தான் இருக்கு..!

    நம்ம அம்மாவும், அப்பாவும் எதை, எதையெல்லாம் தப்புன்னு சொன்னாங்களோ.. அதையெல்லாம் மீறுவதுதான் தனி மனித சுதந்திரம்னு இப்போ எல்லாருமே சொல்ல ஆரம்பிச்சி்ட்டாங்க.. இனி இதற்குத் தடை போடுவது என்பது முடியாத காரியம்..!

    காலத்தின்போக்கிலேயே நாமும் போக வேண்டியதுதான்..!

    ReplyDelete
  5. திருப்பூரின் இன்னொரு முகம்...

    ReplyDelete
  6. காமம் கடத்த ஆட்கள் தேவை (அ)காமம் கடந்த ஆட்கள் தேவை!?

    ReplyDelete
  7. நல்ல அருமையான இடுகை... சொல்லவந்ததை எந்தவிதமான நெருடலும் இல்லாமல் சொன்ன விதம் அருமை...

    ReplyDelete
  8. வருத்தமாக இருக்கிறது... வியாபாரம் என்பது தெய்வீகம் ஆக இருந்தது போய் தெய்வீகமும் வியாபாரம் ஆக ...
    இம்மாதிரி கூத்தெல்லாம் அரங்கேறுகிறது ...

    ReplyDelete
  9. ஜோதிஜி ....இந்த படைப்பு ஒரு ஆவணம்.

    ReplyDelete
  10. தலைப்பு....ஒரு விளம்பரம்போல இருக்கு.பயந்தே போனேன்.மனதில் வந்ததை அப்படியே தொய்வில்லாமல் எழுதி முடிச்சு ஒரு பெருமூச்சு விட்டிருக்கிறீர்கள்.

    காமம் எங்களூர்களில் கலாசாரம் பண்பாடு என்று ஒருவனுக்கு ஒருத்தியாய் உடல் நலத்தோடு வாழ பக்குவப்படுத்ததினாலோ என்னவோ அதை அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள் !

    ReplyDelete
  11. ஹேமா ரொம்ப நன்றி. வெள்ளைக்காரங்க என்றாலே சிறுவயது முதல் கற்பனை தறிகெட்டு பறக்கும். தேடிப் போய் பார்த்த படமெல்லாம் அப்படித்தான் என்று எல்லோருமே எதிர்பார்த்து போயிருப்பாங்க. ஆனால் இன்றைக்கு நம்ம கலாச்சாரம் தான் படம் போலவே போயிட்டுருக்கு.

    உண்மை ஆசிரியரே. வனத்தில் தொடங்கிய இந்த மனித வாழ்க்கை இன்று ரொம்பவே மாறியுள்ளது. ஆனால் ஆடையில்லாமல் அன்று செய்த அத்தனை செயல்பாடுகளும் அப்பட்டமாய் நாகரிக உலகில். என்ன பெரிதான முன்னேற்றம்?

    செந்தில் நல்ல விமர்சனம்.
    வியாபாரம் என்பது தெய்வீகம் ஆக இருந்தது போய் தெய்வீகமும் வியாபாரம் ஆக ...

    ReplyDelete
  12. நன்றி தமிழ் உதயன்.

    சொல்லவந்ததை எந்தவிதமான நெருடலும் இல்லாமல்

    இல்லைங்க, ரொம்ப தடுமாறிப் போய்விட்டேன். இழுத்துக் கொண்டே போனது. இரண்டு பதிவுக்குரிய சமாச்சாரம். அதை சாமிநாதன் சரியாக கண்டு பிடித்து சொன்னார். அந்தமான் என்கிற இடத்தில் மாலத்தீவு என்று வர வேண்டும். உள்ளுர வாசிகளுக்குத் தெரியும் (?)

    நன்றி கண்ணகி. ஒப்பனை இல்லாத உண்மையான முகம்.


    காமம் கடத்த ஆட்கள் தேவை (அ)காமம் கடந்த ஆட்கள் தேவை!?

    அட நீங்க சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. கேள்வியும் பதிலுமாய் இருக்கிறது.

    ReplyDelete
  13. காலத்தின்போக்கிலேயே நாமும் போக வேண்டியதுதான்..!

    என்னன்ணே நீங்களே இப்படிச்சொல்லீட்டிங்க. அப்பன் முருகன் கடைசியிலே எய்ட்ஸ்க்கு மருந்து கொடுக்க வரமாட்டாருன்னே. ச்ச்ச்சும்மா தாமசு.

    நந்தா ராம்குமார் முணியாண்டி உங்கள் தொடர்வாசிப்புக்கு நன்றி

    டீச்சர் கோவிச்சுக்காதீங்க. பாரம் இறங்கியது போல் உள்ளது. இங்குள்ளவர்கள் இது போல ஏதோ ஒரு அடைப்புக்குறிக்குள் தான் இருக்கிறார்கள்.

    இன்றைய ஓய்வு முழுமையாக உங்கள் புத்தகம் இழுத்து விட்டது. ஆச்சரியம். அதிசயம். பாதி முடித்து விட்டேன்.

    ReplyDelete
  14. இது ஒன்னு தான் பாக்கி இருந்திச்சு , ( எழுத்தில் தான் ), அதையும் தொட்டுடீங்க ... என்ன செய்வது, எல்லாம் வயசு கோளாறு ... ஹார்மோன்களின் வேலை

    ReplyDelete
  15. சுந்தர் உங்கள் விமர்சனத்தை படித்தவுடன் சிரித்து விட்டேன்.

    என்னவொரு வில்லங்கமான பாராட்டு(?)

    ReplyDelete
  16. தொழிலாளர்கள் பலரும் ஒழுங்காக இருந்தாலும், அரிசியில் கல் கலந்து வருவது போல் சிலர் இப்படி நடந்து கொண்டு இருக்கின்றனர்.

    கை நிறைய காசு, கண்டுபிடிக்க உறவோ,நட்போ இல்லாத நிலை, கருக்கலைப்போ சாதரணம் என்கிற சூழ்நிலைகள் இந்த செயலை தைரியமாக செய்ய வைக்கின்றன ஜோதிஜி..

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. கை நிறைய காசு, கண்டுபிடிக்க உறவோ,நட்போ இல்லாத நிலை, கருக்கலைப்போ சாதரணம் என்கிற சூழ்நிலைகள்

    இதை விட மிகச் சிறந்த சரியான விமர்சனம் பார்வை வேறு எதுவும் இல்லை சிவா. நன்றி.

    ReplyDelete
  18. " நாம் நாகரிக வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறோம்
    என்ற இந்த எண்ணமே ஒவ்வொருவரையும்
    நாதாரித்தனமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறது.'

    நெற்றியில் அடித்தாற்போல சொல்லி இருக்கிறீர்கள்.
    சொல்லவந்ததை எதார்த்தமாக, ஒளிவு மறைவு
    இல்லாமல் தெளிவாக சில்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  19. சில சந்தர்ப்பங்களில் பெண்களின் முறைகேடான இச்சையையும் பின் நவீனத்துவமாக்கி "சாதனைப்பெண்மணி" என்று பெண்ணுக்கு முகமூடி கொடுக்கும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை தவிர வேறெதுவும் சொல்லத்தோன்றவில்லை. சாதனைப்பெண்மணி என்ற ஒற்றை வார்த்தைக்குள் சில பெண்களின் வலிகளும், இப்படியான பெண்களின் தனிமனித ஒழுக்கமும் அடிபட்டுப்போகிறது. இந்த சீரழிவுக்கான களங்களின் ஆரம்பமும் முடிவும் வேலைத்தளங்கள் மட்டுமல்ல, தற்கால மனிதனின் bare necessities மற்றும் தனிமனித சிந்தனையை மழுங்கடிக்கும் அத்தனை விடயங்களும் தான் என்பது என் கருத்து.

    ReplyDelete
  20. சாதனைப்பெண்மணி" என்று பெண்ணுக்கு முகமூடி கொடுக்கும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

    நன்றி ரதி. தமிழ்நாட்டு அரசியல் நினைவுக்கு வருகிறது.

    பெண்களின் வலிகளும், இப்படியான பெண்களின் தனிமனித ஒழுக்கமும் அடிபட்டுப்போகிறது

    சமீப திருச்சி மாநாட்டு உரை நீங்கள் கேட்டுருக்க வாய்ப்பு இருக்காது. பேசியவர் ஒரு பெண். தாக்கப்பட்டதும் ஒரு பெண். பிரியாணி ஊர்சுற்றி பார்க்கலாம் என்று செலவழித்து அழைத்துச் சென்றவர்களும் அதிக பெண்கள்.........

    தனிமனித சிந்தனையை மழுங்கடிக்கும் அத்தனை விடயங்களும் தான்

    அது தான் இதுவேதான் இங்கு அரசியல் நிலைப்பாடு. கடைசியில் சமூகம் எந்தப் பாதையில் செல்லும்?
    அந்த பாதைக்குத் தான் போய்க் கொண்டுருக்கிறது.

    ஆழ்ந்த கருத்துக்கு நன்றி.

    அபுல்பசர் உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  21. காமம் இன்று அனைத்துவிதமான ஊடகங்களாலும் தூண்டி விடப்படுகிறது. தவறான உறவு குறித்த செய்தியில்லாமல் பத்திரிகை விற்காது என்ற நிலைக்கு பல முன்னணி பத்திரிகைகள் தள்ளப்பட்டிருக்கிறது. விளைவு இது போன்ற சங்கடங்கள் - ஆனாலும் பதிவை கழைக்கூத்தாடி கயிற்றின் மேல் நடப்பது போல் நடந்து பதிவு செய்திருக்கிறீர்கள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. வணக்கம் ஜோதிஜி
    அருமையா சொல்லிருக்கிங்க திருப்பூர் மட்டுமல்ல இன்னும் எத்துனை ஊர்கள் எத்துனை தொழிற்சாலைகள் கல்லூரிகள் அலுவலகங்கள் ஆஹா இந்த காமுகன் ஆடாத இடம் வேறென்ன இல்லை
    http://marumlogam.blogspot.com

    ReplyDelete
  23. உண்மைதானுங்க தம்பி..

    ReplyDelete
  24. காமம் என்பதும் வெறும் நுகர்வு என்ற மனநிலை இன்றைய இளம் தலைமுறையைப் பிடித்து ஆட்டுகிறது. திருப்பூர் மட்டுமல்ல, தமிழகத்தின் பல நகரங்களிலும் இதே கதைதான். சொல்லவும் வருந்தவும் நிறைய இருக்கிறது. எதைச் சொல்ல.. எதைத்தள்ள....?

    ReplyDelete
  25. கண்ணகி சொன்னது போல் இது திருப்பூரின் இன்னொரு முகம்தான்.. :((

    ReplyDelete
  26. உங்க ஊர் உண்மைகளைக் கொட்டியிருக்கீங்க!
    //அந்தமான் தீவில் நிறுவனங்கள் தொடங்கலாம் என்று உருவான கலாச்சாரம் சிலரை வேறொரு கேடு கெட்ட கலாச்சாரத்தையும் வளர்க்க உதவ வைத்தது//. அர்த்தம் புரியல. ஏன்னா இங்க ஒரு தொழிற்சாலையும் இல்லையே! ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முறையான வாழ்வு இல்லாதவர்கள் வாழ்க்கை குறித்த சரியான புரிதல் இல்லாதவர்களே! காலம் சீக்கிரமே இது போன்றவர்களை சக்கையாய் துப்பிவிட்டுப்போய் விடும்.சரியான விழிப்புணர்வு இல்லாததே காரணம்

    ReplyDelete
  27. ம்ம்ம்...!
    திருப்பூர் பற்றி கேள்வி பட்ட மீறிய விஷயங்கள் இந்த பதிவில் கண்டுகொண்டேன்...
    வேறு வழியில்லை என்ற அளவிற்கு ஆண்களுக்கு சரிக்கு சமமாக பெண்கள்...
    இரவின் இருட்டும்....மின் தேவைக்காக விளக்கனைப்பதும்...
    ஏதோ ஒன்றை தேட வைத்து விடுகிறது....
    சிலசமயங்களில் ஆறுதலாக...சமயங்களில் பணிந்து போவதின் வெளிப்பாடாக....
    ரத்தம் உறைய வைக்கும் அப்பெண்களின் வாழ்க்கை...ஆனால் அதன் வீரியத்தை கூட புரிந்து கொள்ள நேரம் அற்று ஓடும்
    அதே பெண்கள்.....
    மெக்சிகோவிலும் இதே கொடுமைதாநாமே???? கேள்வி பட்டிருக்கிறீர்களா?????

    ReplyDelete
  28. யதார்த்தத்தை தோல் உரித்து காட்டும் பதிவு.

    ReplyDelete
  29. சாந்தி லெஷ்மணன்

    இந்த பின்னோட்டத்தை படித்து இருக்க மாட்டீர்கள்


    இல்லைங்க, ரொம்ப தடுமாறிப் போய்விட்டேன். இழுத்துக் கொண்டே போனது. இரண்டு பதிவுக்குரிய சமாச்சாரம். அதை சாமிநாதன் சரியாக கண்டு பிடித்து சொன்னார். அந்தமான் என்கிற இடத்தில் மாலத்தீவு என்று வர வேண்டும். உள்ளுர வாசிகளுக்குத் தெரியும் (?)

    ReplyDelete
  30. சே. குமார் உங்கள் வாசிப்புக்கு நன்றி.

    லெமூரியன் மெக்ஸீகோ சுஜாதா சலவைக்காரி ஜோக் தவிர வேறெதும் தெரியாது (?)

    தேனம்மை நல்ல முகங்களும் இங்கு உண்டு.

    தாரபுரத்தான் ஐயா தங்கள் வருகைக்கு நன்றி.

    வருக விந்தை மனிதன். எதையும் தள்ளமுடியாமல் தடுமாற வைத்த பதிவு.

    உண்மை தினேஷ்குமார்.

    பதிவை கழைக்கூத்தாடி கயிற்றின் மேல் நடப்பது போல் நடந்து பதிவு செய்திருக்கிறீர்கள்

    சரியான பார்வை தோழரே.

    ReplyDelete
  31. ஏற்றுமதி நிறுவன வாழ்க்கையின் தொடக்கத்தில் ஒரு சிறிய நிறுவனத்தில் அந்த நடு இரவு நேரத்தில் ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதை பார்க்க சுற்றி வந்த போது இருட்டுப் பகுதியில் இருந்த அந்த பெரிய மேஜை மட்டும் வினோதமாக ஆடிக் கொண்டுருந்தது.

    தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட ஆடைகள் மேஜையின் மேல் அடுக்கப்பட்டு இருக்கும். தரத்தை சோதிக்க வேண்டிய ஆடைகள் அதே மேஜையில் ஒவ்வொரு மூலைக்கும் கட்டப்பட்ட கயிற்றில் தொங்க விடப்பட்டுருக்கும். பல சமயம் நான்கு புறமும் தொங்கும் போது உள்ளே மறைவான இடம் கிடைத்து விடும். குறிப்பிட்ட பகுதிகளில் வேலையில்லாத போது மின்சார விளக்குகள் தேவையில்லாமல் இருட்டாக இருக்கும். இருட்டும் மறைவும் எளிதாக பயன்படுத்த அமைந்து விடும். உடம்பில் இருக்கும் உஷ்ணம் உருக்குலைத்து விடும். அதுவே பழக்கமாகி பாதை மாற வைத்து விடும். நெருங்கிப் பழகும் போது அத்தனையும் சுருங்கி விடும்.

    முன்னும் பின்னும் ஆடிக்கொண்டுருந்த அந்த மேஜைக்கு அருகே சென்று விபரம் தெரியாமல் ஆடைகளை விலக்கி உள்ளே பார்க்க, உள்ளே பொருந்தாக் காமம் அரங்கேறிக் கொண்டுருந்தது. நான் கவனித்ததைக் கூட காணாமல் அவர்கள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டுருந்தனர்.

    மகன் தாய் வயதைக் கொண்டுருந்த அவர்களின் அவசர அலங்கோலம் இரண்டு நாட்கள் மனதை பாதிக்க குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல தவிர்த்து விடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

    இது போன்ற விசயங்களில் எந்த இடத்தில் தொட்டாலும் நியூட்டன் விசை போலவே நம்மைத் தாக்கும். தைரியமாய கையாண்டால் கூட சில சமயம் கடைசியில் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை அசிங்கமாய் மாற்றி விடுவார்கள்.

    True words ,,,,,,,,,,,

    ReplyDelete
  32. அப்பட்டமான உண்மை..! விரிவாக பிறகு விவாதிக்கிறேன்.

    ReplyDelete
  33. நமது பண்பாட்டில் திருமணத்துக்கு வெளியே காமம் எப்போதும் இருந்துள்ளது. இல்லையாயின் இத்தனை அனாதை இல்லங்கள் ஏன் வந்தது?

    கண்ணகி வாழ்ந்த அதே காலத்தில் தான் மாதவி வாழ்ந்த்தாள் இல்லையா?இப்போது இத்தகய உறவுகள் அல்லது நிகழ்விகள் வெளிப்படிஅய்ஆக தெரிவதால் சீரழிவு என்றூ எண்ணுகிறோம்.

    தனிமை ,ஏழ்மையும் இத்தக்ய நிகழ்வுகளூக்கு காரணம். காமமும் ஒரு விதமான விடுதலை.

    ஒரு சிகைஅலஙாரரிர்டம் பல வருடங்கள்உக்கு முன் பேசும்பொது அவரிடம் நான் எய்ட்ஸ் வராமல் இருக்க் அவர் அவரது கடையில் ஏதானும் தனியாக தற்க்காப்பு /கத்திகளை சுத்தம் செய்கிறார என்று கேட்டேன்.அவர் சொன்னார்"ஏழ்மையும் எய்ட்ஸ் ஒரு காரணம். வீட்டில் நிறாஈய பொறுப்பு இருக்கும் போது ஏழை இளைங்களுக்கு திருமணம் எப்ப்படி நடக்கும் அதனால் தான் அவர்கள் அந்த பாலியல் தொழிலாளிகளிடம் போகிறார்கள்.அப்புறம் எய்ட்ஸ் வராமல் என்ன செய்யும்.என்றூ.
    முந்தைய பதிவின் என் பின்னொட்டம் இத்தகய் ப்ரச்சினைகளையும் நினைத்து தான்.

    ReplyDelete
  34. தவறு செய்ய நேரமும், வாய்ப்பும் கிடைக்கிறது. செய்கிறார்கள். செய்தது தவறு என்று உணரும் போது மாறிக் கொள்வார்கள். ஏற்கனவே சில துறைகள் (பெயர் சொல்ல விரும்பவில்லை) எல்லாம் காமம் நிரம்பிய துறையாக சொல்லப்படும் போது, திருப்பூர் ஆடை உலகையும் நாமே காட்டி கொடுக்க வேண்டுமா... தவறு செய்யாதவர்கள் வருந்தக்கூடுமே.

    ReplyDelete
  35. ஓசை

    நீங்கள் பெயர் சொல்லி விருப்பம் இல்லாமல் நாகரிகமாய் நகர்ந்து சென்றாலும் நித்தியின் சக்தி அத்தனை பேர்களும் உணர்ந்ததே.

    காட்டிக் கொடுக்கவில்லை நண்பா, இந்த வரியும் படித்து வந்து இருப்பீர்கள்.


    சிலர் மட்டுமே எந்த பாதிப்பும் இன்றி கிராமத்து வாழ்க்கையாகவே கடைசி வரைக்கும் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். உருவாகும் தொடர்புகள், அறுந்து போய் விடுகின்ற உறவுகள், தகுதிக்கு மீறிய ஆசைகள் என்ற ஒவ்வொரு காரணங்களும் ஒரு குடும்ப பராம்பரிய சங்கிலியை வெட்டி எறிந்து விடுகின்றது.

    ReplyDelete
  36. திரு

    நல்ல புரிந்துணர்வுக்கு நன்றி.

    மணி என்னை விட உங்களுக்கு நேரிடி அனுபவம் அதிகம். எனக்குத் தெரியும். நன்றி.

    ReplyDelete
  37. ஜெய்

    தாக்கம் புரிகிறது.

    ReplyDelete
  38. ஜோதிஜி,

    பொருமையாக, நிதானமாக படிக்க வேண்டும் என்று இப்போதுதான் படித்தேன்.

    திருப்பூரின் இன்னொரு முகத்தையும், இன்றைய கலாச்சார சீரழிவுகளையும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!

    What do say....? There's no morality in our society nowadays!!

    ReplyDelete
  39. "காமம் கடந்த ஆட்கள் தேவை " வாசித்தேன். என் கணினி பழுதடைந்திருப்பதால், பின்னூட்டமிட இயலவில்லை. மொபைலில் இருந்து தான் இந்த மெயிலை கூட அனுப்புகிறேன். "டேக் இட் ஈஸி - பாலிஸி"க்கு சகலரும் தயாராகி
    கொண்டிருக்கிறார்கள் என்பதையே நிகழ்வுகள் காட்டுகிறது.

    ஆண்களை விட பெண்கள் மாறுதல் எதையும் (நல்லது அல்லது கெட்டதென்று எப்படி
    இருந்தாலும்)பின் விளைவுகள் பார்க்காமல் ஏற்று கொள்ள கூடியவர்கள்.

    இதில் நிறைய விஷயங்கள் அடங்கி உள்ளன. இந்த பத்து வருட மாற்றங்களை அனுபவிக்க
    தயாராகிவிட்டனர்.

    "எங்க காலத்துல இதெல்லாம் இல்ல." என்று தங்கள் காலத்தில், தாங்கள் அனுபவிக்காத வாழ்க்கையை தங்கள் பிள்ளைகள்
    அனுபவிப்பதை பெருமையாக கருதுகின்றனர்.

    இந்த வாழ்க்கையே நிரந்தரம் என்கிற
    மனோபாவத்தில் -அதில் பாலோடு நீர் கலந்த கெட்டதை அறியாது. "இந்த வயசுல
    அனுபவிக்காம்ம எந்த வயசுல", என்று பலரின் வாழ்வு மாற தாய்மார்களே
    காரணங்களாகின்றனர்.

    கிடைத்த அற்புதமான சுதந்திரத்தை, வருமானத்தை - அதன் அருமை, பெருமை தெரியாமல் அழிக்கவே நாம் தயாராகிறோம். நாளை குறித்த
    பயமில்லாமல்.

    தமிழ் உதயம் ரமேஷ் உங்கள் தனிப்பட்ட மின் அஞ்சலுக்கும் அற்புதமான விமர்சனத்திற்கு என்னுடைய நன்றிகள்.

    ReplyDelete
  40. நன்றி ரவி.

    சமூகத்தில் இரண்டு பிரிவு.

    எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்வது.
    எதையும் கேள்விகளால் துளைப்பது.

    இதைப்போலவே வாய்ப்புகளை அனுபவித்து அமைதியாக போய்க் கொண்டுருப்பது.
    எதிர்பார்த்து காத்துக் கொண்டுருப்பது.

    ReplyDelete
  41. உங்களின் இன்னொரு தரமான இடுகை.

    ReplyDelete
  42. ஆகா ரமேஷ் ஏதோ உள்குத்து?

    அப்ப மற்றொன்று எதுன்னு சொல்லிடுங்க?

    (சும்மா தாமசு)

    ReplyDelete
  43. ஜோதிஜி! நண்பரே! மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்!

    மனிதன் குரங்கிலிருந்து வந்தான். உருவம் மாறி இருக்கிறது. ஆனால் மனசு?

    விலங்குகளுக்கு கட்டுபாடுகள் கிடையாது. விலங்கு நிலையில் மனிதன் இருந்தால் அவனிடமும் கட்டுப்பாட்டை எதிர்பார்க்க முடியாது. காமத்தில் இருந்து மெதுவாக் நகர்ந்து, கடவுள் தன்மையை அடைய வழி இருக்கிறது என்பதை அவனுக்கு புரியவைப்பது யார்?

    அவன் தினமும் உணவுக்காக போராடி சலித்து கொண்டு இருக்கையில் கட்டுபாடு ஆவது மண்ணாவது?

    அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கபடாத வரை காமம் கரையை உடைத்து கடந்து தான் பாயும். அதன் சக்தி அத்தகையது!

    ReplyDelete
  44. அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கபடாதஅல்லது புரிந்து கொள்ளாத வரை காமம் கரையை உடைத்து கடந்து தான் பாயும். அதன் சக்தி அத்தகையது!

    நன்றி நண்பா

    ReplyDelete
  45. இப்படி எழுதினாலும் , எப்படி எழுதினாலும் திருப்பூர் தலை எழுத்தை மாற்ற முடியாது.ஏன் எனில் திருப்பூர் சூடு அப்படி., அது துணியோ அல்லது கம்பெனியினாலோ அல்லது தன் வயது மீறிய பெரியவர்களுடன் ஏற்படும் பழக்கத்தினாலோ வரக்கூடிய ஒன்று. சில நேரங்களில் இதில் என்ன தவறு ? பிடிச்சிருந்தா பழகுவோம் இல்லைன்னா விலகுவோம் என்பதுதான் இங்குள்ள நடைமுறை.

    ReplyDelete
  46. நல்ல பதிவு.
    நிஜம் சுடுகிறது.

    ReplyDelete
  47. இதற்கும் நிதானமாக பதிலளிக்கணும். அப்புரம் வருவேன்..

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.