சில தினங்களுக்கு முன் ஒருவர் கதை எழுதித் தொடங்கி வைத்திருந்தார். அதாவது "வந்தே பாரத் ரயில் என்பதனை நான் கண்டு கொண்டதில்லை. அது ஏழைகளின் எதிரி".
வாசித்தவுடன் புளகாங்கிதமடைந்தேன்.
அடுத்து நேற்று மற்றொரு பக்கத்திடமிருந்து மற்றொரு அறிக்கை திரைக்கதை போல அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. அதில்
"வந்தே பாரத் ரயில் கட்டணங்களைக் குறைக்கப்பட வேண்டும். மற்ற ரயில்களின் வேகத்தைக் குறைப்பது தவறு".
பாராளுமன்றத் தேர்தல் வருவதற்குள் அந்த ஈகோ சிஸ்டம் இன்னமும் உக்கிரம் எடுத்து ஆடும். அடுத்தடுத்து வசனம் மாறி படங்களுடன் இனி வரும். நாம் காத்திருக்க வேண்டும்.
ஏன் இவர்களுக்கு வந்தே பாரத் கட்டணம் குறித்து திடீர் அக்கறை?? வருவதை நிறுத்தினால் புலம்பல் வரத்தானே செய்யும்? . அந்தப் புகை தான் இப்போது வந்து கொண்டு இருக்கின்றது.
நண்பர்களுடன் உரையாடும் போது நான் வந்தே பாரத் ரயில் குறித்து என் அதிருப்தியைத் தெரிவித்ததுண்டு. காரணம் திருப்பூரிலிருந்து திருச்சி. திருச்சியிலிருந்து காரைக்குடி என ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த சாதாரண ரயில்களை விரைவுவண்டிகள் என்று மாற்றி, விலைகளை அதிகப்படுத்தி இவர்கள் வேறு விதமாக நர்த்தனம் ஆடுகின்றார்கள். நான் மேலே குறிப்பிட்ட தடத்தில் ஏற்கனவே நான் பார்த்த அந்தந்த பகுதி மக்களின் மோர், தயிர், வெண்ணெய், நெய், வாழைப்பழம், வெள்ளரிக்காய். இது போன்ற பல எளிய வியாபாரங்கள் முற்றிலும் துடைத்து ஒழிக்கப்பட்டு விட்டது என்பதனை பார்த்தேன். இருக்கின்றது. ஆனால் முன்பு இருந்த அளவுக்கு வேக ரயிலில் ஈடு கொடுக்க முடியாமல் ஒதுங்கி விட்டனர். கூடவே விரைவுவண்டிகள் என்று பெயருக்குப் போட்டு விலையைக் கூட்டி ஆனால் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வது அக்மார்க் ஏமாற்றுத்தனம். இன்று வரையிலும் அப்படித்தான் நடந்து வருகின்றது. கேட்க ஆளில்லை. போராடிப் பார்த்து ஒதுங்கி விட்டேன். முட்டாள் தனமாகப் பாராளுமன்ற உறுப்பினர் வழியாகத்தான் வர வேண்டும் என்று ஒரு சட்டாம்பிள்ளைத்தனத்தைத் தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இங்கே ஒவ்வொருவனும் பணத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றிக் கொடுப்பது முதல் பலான காரியங்கள் செய்ய உறுதுணையாக இருப்பது வரைக்கும் செய்து பிசியாக இருக்க நாம் எப்படி அவர்களைப் போய் தொந்தரவு செய்வது?
ஆனால் ஈகோ சிஸ்டம் அலறுவதன் காரணம் வேறு. அதுவும் நெல்லையிலிருந்து சென்னை வரைக்கும் வந்தே பாரத் என்ற அறிவிப்பும், அது இன்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க இப்போது மெதுமெதுவாக முக்கல் முனங்கல் வருவதற்கு ஒரே காரணம் ஓர் இடத்தில் அடி வாங்கவில்லை. தமிழகம் முழுக்க ஒவ்வொரு இடத்திலும் அடி வாங்குவதே காரணம். யாரிடமிருந்து? ஆம்னி பேருந்து முதலாளிகளிடமிருந்து வந்து கொண்டு தொடர் தொந்தரவு தான் இவர்களுக்கு தூக்கமில்லா இரவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
நெல்லை முதல் சென்னை வரைக்கும் வந்தே பாரத் ரயில் ஓடுவதால் யாருக்குப் பாதிப்பு? கன்யாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், மதுரை, திருச்சி என்று பல முக்கிய நகரங்களில் ஆம்னி பேருந்து வியாபாரத்தில் அடி வாங்கும். அருகே உள்ள நகரங்களில் உள்ளவர்கள் எந்த இடத்தில் வந்தே பாரத் ரயில் நிற்கின்றதோ அங்கு சென்று தங்கள் சேருமிடத்திற்குப் பயணிக்கின்றனர். மதுரை மற்றும் திருச்சி மிக மிக முக்கியமானது. மிகப் பெரிய அடி.
பாஜக வில் வந்து சேர்ந்த திருச்சி சூர்யா மெதுவாக ஆரம்பித்தார். ஆம்னி பேருந்துக்குப் பின்னால் உள்ள கொள்ளை, பர்மிட் இல்லாமல் தமிழகம் ஓடிக் கொண்டு இருக்கும் ஆம்னி பேருந்துகள், எவருக்கெல்லாம் பினாமி பெயரில் இங்கே பேருந்து உள்ளது? பர்மிட் உள்ளது போன்ற விபரங்கள் பாதியில் நின்று விட்டது. அவர் கட்சியில் நடந்த குளறுபடியால் தன் பேச்சை நிறுத்தி விட்டார்.
சில கணக்கீடுகளைப் பார்த்து விடலாம்.
காங்கிரஸ் ஆண்ட காலம் முழுக்க ரயில்வே துறை என்பது சவலைப்பிள்ளை போலவே இருந்தது. அதாவது அப்படித்தான் வைத்திருந்தார்கள். பராமரிப்பு முதல் புதிய திட்டங்கள் வரை எதுவுமில்லை என்பதோடு சங்கம் சார்ந்த நாய்கள் மட்டுமே ஓநாய் போலவே உண்டு கொளுத்து வாழ்ந்து வந்தது.
மின் மயமாக்கல், அகல ரயில் பாதை, புதிய ரயில் தடம், சுகாதாரப் பணிகள், மென்பொருள் சேவைகள், ஆராய்ச்சி சார்ந்த வேலைகள், புதுப் புதுத் திட்டங்கள் சார்ந்த முன்னெடுப்புகள், ரயில் பெட்டிகள் உற்பத்தி, ரயில் தடங்கள் இல்லாத தொலை தூரப் பகுதிகள், சவாலான இடங்களுக்கு ரயில்வே தடங்களைக் கொண்டு சேர்ப்பது ( காஷ்மீர் லே பகுதிகள் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் ) இத்தனை விசயங்களுக்கும் பணம் தேவை. காங்கிரஸ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ரயில்வே நிலையங்களையும் கழிவுத் தொட்டியாகவே வைத்திருந்தனர். ஒவ்வொரு ரயில் பெட்டியையும் கழிவறைகள் போலவே வைத்திருந்தார்கள். பணம் இருந்தாலும் அனுபவிக்க முடியாத அக்கிரமங்களை ரயில்வே துறை செய்து வைத்திருந்தது. இது தான் வாழ்க்கை என்றே இந்தியர்கள் நம்பி அமைதியாகவே வாழ்ந்தனர். இன்று மோடி அனைத்தையும் மாற்றி விட்டார். அலறுகின்றார்கள்.
நடுத்தர வர்க்கத்தின் அண்ணன் உயர் நடுத்தரவர்க்கம். தம்பி கீழ் நடுத்தரவர்க்கம் இந்த மூன்று பேர்களை மட்டும் நம்பியே இந்திய அரசின் அச்சாணி செயல்பட்டு வருகின்றது. மொத்த ஜனத் தொகையில் ஐந்து சதவிகித மக்கள் கூட வரி கட்டக்கூடியவர்கள் அல்ல. ஒரு நாடு பொருளாதார ரீதியாக வளர பணம் புழங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். மக்கள் பயணத்தை ஆர்வத்துடன் செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் வசதிகளை அளிக்க வேண்டும். ஆன்மீகம் ஒரு பக்கம், சுற்றுலா மறு பக்கம். இரண்டும் அரசுக்கு அதிக அளவு வருவாய் தரக்கூடியது. இது தவிர தொழிற்சாலைகளும் முறை சாரா தொழில் உள்ளவர்கள் தங்கள் விற்பனைக்காகச் செய்ய வேண்டிய பயணங்கள்.
சாலை வழியே பயணம், ரயில் வழியே, தண்ணீர் வழியே மற்றும் விமானம் மூலம் பொருட்கள் விரைவாகச் செல்லச் செல்ல விலைகளில் பெரிய மாறுதல் உருவாகும். சீனா இப்படித்தான் சாதித்தது. உலகிலேயே இன்று வரையிலும் பயணச் செலவு குறைவாக உள்ள நாடு சீனா மட்டுமே. அவர்களால் போட்டி போட முடிகின்றது. ஒரு முறை மற்றொரு முனையோடு எந்த வகையிலும் இணைக்க முடியும்.
அதன் அடிப்படையில் இங்கே வந்தே பாரத் முதல் புல்லட் ரயில் வரை திட்டம் தீட்டப்பட்டுக் குறுகிய காலத்திற்குள் மக்களின் பேராதரவும் கிடைக்கத் தொடங்கியுள்ள இந்தச் சமயத்தில் நரிகளும் நாய்கள் தொடர்ந்து சப்தம் எழுப்பி வருவதைக் காண முடிகின்றது.
இந்தச் சமயத்தில் ஓர் இடத்தில் வரக்கூடிய அதிக வருமானம் இந்தியாவில் உள்ள மற்ற இடங்களுக்கு எப்படிக் கொண்டு சேர்க்கப்படுகின்றது என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வந்தே பாரத் (The specifications were also standardized by the RDSO. It was made for low-cost maintenance and operational optimization. The cost of a 16-coach Vande Bharat train is about ₹115 crore (US$14 million). ) ரயில் எட்டு பெட்டிகள் கொண்ட ரயிலுக்கு உற்பத்திச் செலவு என்பது ஐம்பத்து ஏழரைக் கோடி மட்டுமே.
மொத்தம் (The train had eight coaches, including one executive coach, and 530 seats in all.) எட்டு பெட்டிகளில் 530 இருக்கைகள்.
மொத்த வருமானம் (20644 Vande Bharat Express is ₹1215 for Chair Car and includes a catering charge of ₹157, while the Executive Class fare is ₹2310, which includes a catering charge of ₹190 ) என்பது அதிகபட்சம் முதல் 100 நாட்கள் மட்டுமே அனைத்து விதமான செலவினங்களையும் எடுத்து அதற்குப் பின்னால் வரக்கூடிய தொகை அனைத்தும் 100 சதவிகித லாபம் மட்டுமே. இப்போது இரண்டு மாதம் முன்பதிவில் தான் ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலும் சென்று கொண்டு இருக்கின்றது. வரக்கூடிய வருமானத்தில் ஒவ்வொரு பைசாவும் சரியான முறையில் தான் செலவு செய்யப்படுகின்றது என்பதனை அந்தத் துறை இயங்குவதைப் பார்த்தாலே நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
பயணிகள் யாராவது எனக்கு வந்தே பாரத் ரயில் பிடிக்கவில்லை? கட்டணம் மிக அதிகம் என்று யாராவது சொல்லியிருக்கின்றார்களா? வண்டிக்கடை வடை ஐந்து ரூபாய். உயர்ரக உணவக வடை நாற்பது ரூபாய். வடை ஒன்று தான். சமாச்சாரங்கள் வேறு. ருசி வேறு. பசி வேறு.
டாஸ்மாக் உள்ளே நுழைந்து நாம் அதிக காசு கொடுத்து வாங்கினாலும் தரமான சரக்கு இல்லை. சுகாதாரமான இட வசதிகளும் இருக்காது. அதே போல 3000 ரூபாய் கொடுத்து வந்தாலும் ஆம்னி பேருந்து முதலாளிகளின் ஆசை அடங்கவே அடங்காது. அவர்களின் கொள்ளையை எந்த அரசும் நிறுத்தாது.
விசேட தினங்கள் அவர்கள் செய்யும் அக்கிரமம் என்பது எழுதி மாளாது. அத்தனைக்குப் பின்னாலும் இவர்களுக்குப் பங்குண்டு.
ஜுனியர் விகடன் ல் பணியாற்றும் ஒரு தம்பி தனியார் ஆம்னி பேருந்தில் மனைவியுடன் பயணிக்க முன் பதிவு செய்து உள்ளார். ஆனால் கிளம்பு நாளுக்கு முந்தைய நாள் தானாகவே கேன்சல் என்று வரப் பதறிப் போய் கேட்கப் பதில் கிடைக்கவில்லை. ஆனால் அவர் இருக்கை அதிக விலைப் பட்டியலில் சென்று சேர்ந்துள்ளது. அவர் கதறி எழுதி இருந்தார். ஆனாலும் அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் சமூகநீதி கோஷ்டியாக இருப்பதில் பெருமிதம் என்பதாக எழுதியிருப்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டேன்.
இவர்கள் மனப்பிறழ்வில் வாழ்கின்றார்களே என்றே நினைக்கின்றேன்.
நண்பர் சொல்வது போல இவர்கள் இப்படியே கடைசி வரைக்கும் வாழ்வது நல்லது என்றே தோன்றுகின்றது. கையேந்தும் பிச்சைக்காரனாக வாழ்ந்தால் ஒரே நேரத்தில் நான்கு வீட்டுச் சோறும் விதம் விதமான குளம்பும் கிடைக்கும் அல்லவா?
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.