அஸ்திவாரம்

Thursday, August 17, 2023

அண்ணாமலை பாதயாத்திரை - அலறல் சத்தம் கேட்கிறதா?

 அண்ணாமலை கடந்த 28ந் தேதி புண்ணிய பூமி இராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கினார். ஒரு வாரம் இன்னமும் முடியவில்லை. இராமநாதபுரம் மாவட்டம் முடிந்து தற்போது கன்யாகுமரி மாவட்டத்திற்குள் வந்து இருக்கின்றார். ஆனால் எதிர்க்கட்சிகள் அலறல் சத்தம் அதிகமாகவே கேட்க ஆரம்பித்துள்ளது.

 

அண்ணாமலையின் பாதயாத்திரை பேசு பொருளாக மாறக்கூடாது. எந்த ஊடகமும் இதனை முன்னிலை படுத்தக்கூடாது என்று திமுக ஆயிரத்தெட்டு கட்டளை கொடுத்து இருந்தாலும் ஒவ்வொரு சாமானியனும் ஓர் ஊடகமாகவே செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும் இஸ்லாமியர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளதை மோப்பம் பிடித்த உளவுத்துறை அடுத்து என்ன செய்வது என்று கோட்டையின் கட்டளைக்காகக் காத்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடவே மீனவர்களை சந்திக்க கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்கள், மீனவர்கள் மத்திய அரசை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள்.


 

நடப்பதே இல்லை. சின்ன சின்ன வீடியோக்களை வைத்து ஏமாற்றுகின்றார்கள் என்று எதிர்க்கட்சி ஊடகங்கள் வரிந்து கட்டி பரப்புரை செய்தால் அண்ணாமலை பாதயாத்திரையென்பது தமிழகத்தில் வேறொரு வகையில் முக்கிய திருப்பு முனையை உருவாக்கியிருப்பதாக உடன் நடந்து வரும் பாஜக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

 

காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டு, இது வரையிலும் இங்கு போட்டியிட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த அளவுக்கு இந்த மாவட்ட மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கியிருக்கின்றார்கள் என்பதனை சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழைந்து அண்ணாமலை பேசிய பேச்சு மக்களை யோசிக்க வைத்துள்ளதாக உளவுத்துறை நோட் போட்டிருப்பதாகச் சொல்கின்றார்கள்.

 

குறிப்பாக .சிதம்பரம் கடந்த 40 ஆண்டுகளில் செய்யாத வேலைகள், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் மேல் உள்ள வழக்கு விபரங்களை விரிவாகச் சொன்ன போது கூடியிருந்த அனைவரும் பாஜக பக்கம் திரும்ப வாய்ப்பதிகமாக உள்ளது என்கிறார்கள்

கூடவே சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மேல் உள்ள சாரதா சிட்பண்ட்ஸ் பற்றிப் பேசி முடித்து ஒரு குடும்பமே நீதிமன்ற வாசல் படிக்கட்டுகளில் வருடம் முழுக்க ஏறி இறங்கினால் உங்களுக்கு என்ன நடக்கும்? எப்படி இவர்கள் நல்லது செய்வார்கள் என்று நம்புகின்றீர்கள்? என்று மக்களை நோக்க கேட்ட கேள்வி அண்ணாமலையை நோக்கி கிராமத்து வெள்ளந்தி மக்கள் முண்டியடித்து வந்ததைப் பார்க்க முடிந்தது.

 

ஸ்டாலின் எந்த நேரத்தில் பாவ யாத்திரை என்று சொன்னாரோ இன்று அவர் ஆட்சி செய்வதே தமிழக மக்கள் அவசரப்பட்டு எடுத்த முடிவு என்கிற அளவுக்கு அண்ணாமலை அவர்களின் பேச்சு யோசிக்க வைத்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. இணைய உபிகள் பாதயாத்திரையை எப்போதும் போல அவர்களுக்குரிய பாணியில் நாகரிமற்ற விதம் விதமான வார்த்தைகளில் கலாய்த்துக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு வித்தியாசமான உபி ஒருவர் எழுதியது தான் ஹைலைட்.

 

"ஏம்பா நீங்க அவரை கலாய்க்கின்றேன் எழுதுறீங்க. அதை அவர் அட்வான்டேஜ் ஆக மாற்றி இதுவரையிலும் தெரியாத மக்களிடம் நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கின்றார். கொஞ்சம் உங்க ஆர்வக் கோளாறை நிப்பாட்டுங்கப்பா"

என்பது தான் உண்மையான நிலவரம். அண்ணாமலை இந்த பாத யாத்திரையின் மூலம் தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத அத்தனை கிராம மக்களுக்கும் அறிமுகமானவராக மாறிக் கொண்டு இருக்கின்றார். 

 

அடுத்த வருடம் இதே ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாவது முறை பிரதமராக மோடி அவர்கள் தன் புதிய மாற்றப்பட்ட அமைச்சரவை சகாக்களுடன் தனக்குரிய பணியைத் தொடங்கியிருப்பார். ஆனால் நம்ம புள்ளிங்கோ இந்தியா கூட்டணி கட்சியினர் ஒவ்வொரு நாளும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வது போல ஒவ்வொரு நிகழ்ச்சியும் தரமான சம்பவமாகவே நடந்து வருகின்றது.

அதில் ஒன்று தான் கூட்டணியில் உள்ள முக்கியத் தலைவராகக் கருதப்படும் சரத்பவார் மோடி அவர்களுடன் ஒரே மேடையில் கலந்து கொண்டது. அத்துடன் நின்றால் பரவாயில்லை. மோடியும் சரத்பவாரும் நெருக்கமாக பேசிக் கொண்டதைப் பார்த்து எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொருவருக்கும் வயிறு எரிந்துருக்கும். இது தான்ய்யா மோடி அரசியல் என்பது போல இருந்தது

என்ன தான் அங்கே நடந்தது?

மகாராஷ்டிராவில் புனே வில் நடந்த லோக்மன்ய திலக் சமாரக் மந்திர் அறக்கட்டளை பிரதமர் மோடி அவர்களுக்கு விருது வழங்கியது.

பார்வையாளர்கள் முதல் பத்திரிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. காரணம் சில வாரங்களுக்கு முன்பு தான் சரத்பவார் கட்சியிலிருந்து அவர் அண்ணன் மகன் அஜீத்பவார் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களை உடைத்து பாஜக விற்கு ஆதரவு அளித்து துணை முதல்வரானார். ஏற்கனவே மகாராஷ்டிரத்தின் முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை உடைத்து தன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக தயவில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார். இதன் காரணமாகவே உத்தவ் தாக்ரே தன் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வில் ஒரு பாடு திட்டித் தீர்த்துள்ளார். சரத்பவாரை திட்டவும் முடியாமல் மாற்றவும் முடியாமல் தடுமாறிப் போய் இருக்கின்றார்.

மோடி அரசியல் என்பது இவர்களுக்குப் புரியாது. லெப்ட்ல கை காட்டி ரைட்ல இண்டிகேட்டர் போட்டு நேரா வண்டியோட்டுற ஸ்டைல். மோடியின் நிர்வாகத்திறமை என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். மோடியை எல்லோரும் எதிரியாக நினைக்கின்றார்கள். ஆனால் மோடி இவர்கள் யார் தன்னை சந்திக்க நேரம் கேட்டாலும் உடனே சந்தித்து விடுகின்றார். யாரையும் எதிரியாகப் பார்ப்பதும் இல்லை. பாவிப்பதும் இல்லை. முக்கிய உதாரணம் மம்தா பேனர்ஜி. காங்கிரஸ் ஆட்சியில் இருந்துருந்தால் அம்மையாரை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள். ஆனால் அவரையும் மோடி மென்மையாகவே கையாள்கின்றார்.

காரணம் மோடி எப்போதும் சொல்வது ஒன்றே ஒன்று தான். இது ஜனநாயக நாடு. உங்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்கட்டுமே என்பதனை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக இவர்களுக்கு புரிய வைத்துக் கொண்டு இருக்கின்றார்.

இதன் காரணமாக மோடியைச் சந்தித்து விட்டு வந்த எவரும் தங்கள் பாதி பலத்தை இழந்து விடுகின்றார்கள். இதனாலே மோடிக்கு முன்னால் உள்ள சீனியர் அரசியல்வாதிகள் கூடப் பட்டும் படாமல் மோடியைப் பகைத்துக் கொள்ளாமல் தானுண்டு தங்கள் வேலையுண்டு என்று இருக்கின்றார்கள்.

இருபத்தாறு எதிர்க்கட்சிகளை படிப்படியாக நெல்லிக்காய் உள்ள மூட்டையை அவிழ்த்து விட்டால் என்னவாகும் என்பதனை தேர்தல் நெருங்க நெருங்க மோடி நிகழ்த்தி காட்டுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம் மோடி ஒவ்வொரு முறையும் மக்களை நோக்கிப் பேசுகின்றார்

எதிர்க்கட்சிகள் ஊடகங்களை நம்பியே பேசுகின்றார்கள். இந்த முறையும் மக்கள் எதிர்க்கட்சிகளை ஏமாற்றப் போகின்றார்கள்.

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.