@ சிலருக்கு உள்ளரங்கில் நடந்த பல விபரங்கள் தெரியும். ஆனால் அவர்கள் எழுதுவதில்லை. பலரும் எதுவும் தெரியாமல் தொடர்ந்து எழுதுகின்றனர்.
@ வார இதழ்கள், தினசரிகள் எவரும் படிப்பதில்லை. அதிக பட்சம் பேஸ்புக் கூடுதலாக டிவிட்டர் இதற்குள் தான் உலகம் இருக்கின்றது என்று நம்புகின்றார்கள்.
@ இன்றைய சூழலில் நான்கு தமிழ் தினசரிகள் இரண்டு ஆங்கில தினசரிகள் வாரம் நாலைந்து வார இதழ்கள் இத்துடன் சமூக வலைதளங்களில் காணொளி வடிவில் வரக்கூடிய பல்வேறு பேட்டிகள், காட்சிகள், பேச்சுகள் என்று மொத்தமாக (உங்கள் நேரம் இருக்குமா? என்று எனக்குத் தெரியாது) ஒரு சட்டியில் போட்டு அவித்தால் உங்களுக்கு மிஞ்சுவது ஐந்து சதவிகித உண்மை மட்டுமே.
@ காரணம் பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லக்கூடிய அத்தனை பேர்களும் அந்த பெயரை வைத்துக் கொண்டு வீட்டுக்குள் இருந்து கொண்டு மூத்த பத்திரிக்கையாளர் என்ற பெயரை வைத்துக் கொண்டு யாரை ஆதரித்தால் எத்தனை லட்சம் கிடைக்கும்?
எங்கு பேச அழைப்பார்கள்?
எந்த குழுவில் இடம் வாங்க முடியும்?
எந்த மந்திரி மூலம் வேலை வாங்கிக் கொடுக்க முடியும்?
பத்திரிக்கையாளர் கோட்டா மூலம் எந்த குடியிருப்பு பெற முடியும்?
எந்த பல்கலைக்கழகத்தில் சீட் பெற முடியும்?
இப்படி யோசிக்கும் பலரும் சமஸ் போன்ற பெயரில் செயல்படுகின்றார்கள்.
காரணம் சமஸ் பக்கவாட்டில் ஆதரித்து கல்லா கட்ட நினைத்த டபுள்வாட்ச் நபரைக்கூடி ஓரமாகக் கொண்டு போய் நிறுத்தி சுயமரியாதையாவது புண்ணாக்காவது என்று ஆளுநர் மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படமே நமக்குச் சாட்சியாக உள்ளது.
யாருக்கும் வெட்கமில்லை.
யாரும் அதனை எதிர்பார்ப்பதும் இல்லை.
சம்பாதிப்பது எப்படி?
தேர்தல் வருவதற்கு முன்பு இணையத்தில் பலரும் அதிமுக வேண்டாம். திமுக வேண்டும் என்று டிபி மாற்றியவர்கள், எழுதியவர்கள் என்று அத்தனை பேர்களும் இன்று இவர்களின் செயல்பாடுகள் பார்த்து நொந்து போய் பின்வாங்க மனம் இன்றி வெறுத்துப் போய் உள்ளனர். பாஜக குறித்து என்ன தான் பட்டப் பெயர் வைத்து அழைத்தாலும் இவர்கள் இங்கே செய்யும் ஒவ்வொரு காரியமும் படுபயங்காரமாக இருப்பதை அவர்கள் உணர்ந்தே மன இறுக்கமாக உள்ளனர் என்பதனை நீங்கள் கவனித்தால் புரியும்.
ஆதரிக்க மனமின்றி அமைதியாக இருந்தால் கட்சியில் உள்ள எவரையும் நாம் பகைத்துக் கொள்ள அவசியம் இல்லை. அப்படி இருந்தால் காரியம் சாதிக்க நினைக்கும் போது இணையத்தில் செயல்படும் பலரையும் அழைத்துப் பேச முடியும் என்றே பலரும் கருதுகின்றார்கள்.
நான் கவனித்துக் கொண்டே தான் வருகின்றேன்.
இப்போது வாரிசு குறித்து பலரும் கதறுகின்றார்கள். சில பிராமண பெண்மணிகள் லபோ திபோ என்று குதித்துத் தொடர்ந்து கர்மா என்னவாயிற்று என்றெல்லாம் புலம்பியபடி எழுதுகின்றார்கள்.
சிரிப்பு வருகின்றது.
உண்மையும் நான் உணர்ந்ததும்......
கருணா இருந்த போது தன் பதவிக்கு மகன்கள் இருவரும் வந்து விடக்கூடாது என்று இருவரிடமும் மாறி மாறி கோள் மூட்டி தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டு வந்தார்.
செயல்படாமல் இருந்த போது கூட பதவியில் இல்லை. ஆனால் தன் கட்சிப் பதவியை மகனுக்கு கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாகவே இருந்தார். ஜெ இதனை இப்படி குறிப்பிட்டார். மூட்டையை அள்ளி வைப்பது போல வைக்கின்றார்கள் என்றார்.
மருமகள் பொறுமிக் கொண்டு இருந்தார்.
காரணம் தனக்கு வாச்சது ஒன்றுக்கும் உதவாத தண்டக் கருமாந்திரம் என்பது திருமணம் நடந்த அன்றே அவருக்குத் தெரிந்து விட்டது. பயிற்சி அளித்தாலும் கற்றுக் கொள்ள முடியாத விரும்பாத மூளை வளர்ச்சி இல்லாத அபூர்வ பிறவி என்பதனை உணர்ந்து அமைதியாக இருந்தார். பெரிசு எப்போது சாவார் என்பதற்காகவே காத்துக் கொண்டு இருந்தார்.
பேச்சு வராது. கோர்வையாகப் பேச முடியாது. உதடு ஒரு பக்கம் சைடு வாங்க எந்தப் பக்கம் பார்த்து பயங்கர வீக்.
நா. பார்த்தசாரதி எழுதி உலகப் புகழ் பெற்ற குறிஞ்சி மலர் பழைய தொலைக்காட்சி நெடுந்தொடர் நீங்கள் பார்த்து இருந்தால் எங்கேயாவது முட்டிக் கொண்டு இருப்பீங்க. நடிக்கத் தெரியாது. பேசத் தெரியாமல் அரவிந்தன் என்ற அற்புதமான கதாபாத்திரம் கலங்கிப் போய் நிற்க பார்த்தவர்கள் கதறினார்கள். அடப்பாவி உனக்குத்தான் எதுவும் வராது தானே? விட்டுத் தொலை என்று அந்த சமயத்தில் காரசாரமாக பத்திரிக்கைகளில் குமுறினார்கள். 80 வாக்கில் நடந்த கதையிது.
பேச்சு பயிற்சி முதல் உடல் நலனைக் காக்கக் கட்டாயப்படுத்தி பலவிதமான பயிற்சி வழங்கி ஒரு மனிதனாக மாற்றவே அந்த அம்மாவுக்கு பத்து வருடம் ஆகியுள்ளது. அதாவது களி மண் என்பதனை ஓரளவுக்குப் பேசும் பொம்மையாக மாற்ற மிகப் பெரிய உழைப்பை அந்த அம்மையார் கொட்டியுள்ளார்.
மேலே உட்கார வைத்தாகி விட்டது. ஆப்ரேசன் சக்சஸ். தினமும் கட்டுகளை எண்ணி வைக்க முடியாத அளவுக்குக் குவிந்து கொண்டேயிருக்கின்றது. இதுவொரு வழித்தடம்.
அடுத்த ரூட்
கதை விவாதம் என்ற பெயரில் சதை பின்னால் அலையும் குழந்தையைப் பேசி போராடி இப்போது உள்ளே கொண்டு வந்தாகிவிட்டது.
ஆனால் பயபுள்ள மாலை ஆறுமணிக்கு மேலே கால் நிலை கொள்ளுமா? என்பது இன்னும் சில வாரங்களில் தெரியும்.
நேரு இந்திரா செய்த பாவங்களை ராகுல் சுமக்கின்றார்.
கருணா செய்த பாவங்களை யார் சுமக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்டது தானே?
கூல்.
இணைப்பில் காத்திருப்போம்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.