அஸ்திவாரம்

Tuesday, December 13, 2022

மீன் சந்தை கூட ஆந்திராவை, கேரளாவை நாம் சார்ந்து இருக்கின்றோம்

இன்று காலையில் ஒருவர் பேச்சைக் கேட்டேன். அப்பனை விட மவன் திறமைசாலி என்கிற ரீதியில் உள்ளர்த்தம் கொண்டதாக இருந்தது. இன்னும் எவரும் அப்பனை விடப் பெரிய எழுத்தாளர் கவிஞர் கலா ரசிகர் என்று பாராட்டாமல் இருக்கின்றார்களே என்று வருத்தமாக உள்ளது.

பலவிதமான எண்ணங்கள் அலையடித்துக் கொண்டேயிருந்தது.

ஏன் ஒரு பெரிய கும்பல் அதிகாரத்தில் திமுக, அதிமுக மட்டும் இருந்தால் போதும் என்று எண்ணுகின்றார்கள்? அது சார்ந்த விசயங்களை நேரிடையாக மறைமுகமாக பேசுகின்றார்கள்? எழுதுகின்றார்கள்? எண்ணங்களை உருவாக்குகின்றார்கள்? என்பதனைப் பற்றி யோசித்து இருக்கின்றீர்களா?
அதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் தமிழக ஓட்டு வாங்கும் வித்தை அறிந்த கட்சிகள் முதல் தமிழக மக்களின் மனோபாவம் வரைக்கும் பலவற்றையும் எழுத வேண்டும்.
திரும்பத் திரும்ப நான் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் நான் கற்றுக் கொண்டேயிருப்பது ஒரு லட்சம் எதிரிகளை எப்போதும் நிரந்தரமாக அருகில் வைத்துக் கொண்டே மன அழுத்தம் இல்லாமல் இருப்பது என்பது எப்படி? என்பதனைத்தான் அவர் மூலம் புரிந்து கொள்வது ஏராளம்.
மேலும் தொடர்ந்து பார்த்து நான் என் அளவில் பலவற்றை கற்றுக் கொண்டு வருகின்றேன்.

பல மணி நேரம் மின்சாரம் இல்லை. பல மணி நேரம் யூபிஎஸ் செயல்பட்டுக் கொண்டு இருந்த காரணத்தால் பேட்டரி கதறக் கணினியை இயக்க பெண்கள் நலக்கூட்டணி தடா சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்து விட்டனர். இத்துடன் இணையத் தொடர்பு அருகே நடந்த தீ விபத்து காரணமாக துண்டிக்கப்பட்டு விட அதனைச் சரிசெய்யும் பணி நடந்து கொண்டு இருந்தது. அதாவது கடந்த நான்கு மணி நேரமாக அண்ணாமலை அவர்கள் பேசிய இந்தப் பேச்சைக் கேட்டு இதனை இன்றைக்குள் பதிவேற்றியே ஆக வேண்டும் என்ற வெறியில் வேறொரு வகையில் இதனைப் பதிவேற்றி உங்கள் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளேன்.
ஏற்கனவே கேட்டு இருந்தாலும் மீண்டும் ஒரு முறை கேட்கலாம். அந்த அளவுக்கு அறிவுப் பூர்வமான உரையாகும். மிரண்டு போனேன் என்று சொன்னால் முற்றிலும் உண்மையாகும்.
ஒரே ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன்.
திருப்பூர் தென்னம்பாளையும் சந்தையில் வந்து இறங்கும் காய்கறிகள் முதல் மீன் வரைக்கும் பருவநிலைக்குத் தகுந்தாற் போல வந்து இறங்கும் டன் அளவு எகிறும் அல்லது குறையும்.
மகளுக்கு இது போன்ற சமூக நிகழ்வுகளை, அடித்தட்டு மக்கள், ஏற்றத்தாழ்வுகள், தொழில் சார்ந்த நுணுக்கங்கள், ஒவ்வொரு தொழிலுக்கும் பின்னால் உள்ள வலைப்பின்னல் போன்றவற்றைப் புரிய வைக்க அதிகாலை ஐந்து மணிக்கு ஒவ்வொருவரையும் மாறி மாறி அழைத்துச் செல்வேன்.
பாறை மீன் ஒன்று உண்டு. ஒரு முறை மொத்தக் கொள்முதல் செய்து விற்பவரிடம் பவானி சாகர் டேம் இல் இருந்து தானே வருகின்றது என்று தெரியாத்தனமாகக் கேட்டு விட்டேன்.
காறித் துப்பி அரை மணி நேரம் என்னைக் கிழித்து விட்டார். அப்போது தான் மீன் சந்தை கூட ஆந்திராவை, கேரளாவை நாம் சார்ந்து இருக்கின்றோம் என்பதனை உணர்ந்து கொண்டேன். மற்றொரு சமயத்தில் இதனைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.
அண்ணாமலை அவர்கள் தமிழகத் தொழில் வளம் சார்ந்தது, ஏற்ற இறக்கம் சார்ந்து பேசிய இந்த பேச்சு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. பகுத்தறிவு உண்மையிலேயே இருந்தால் ஒரு திமுக காரன் இதனைப் பார்த்து விட்டு ஒரு லிட்டர் பாலிடாயில் குடித்து நாளை காலை தினத்தந்தியில் செய்தியாக வருவான்.
நிச்சயம் செருப்பைத் தூக்கி வெளியே போட்டு பாதையை உருவாக்கிக் கொடுக்கும் சுடுகாட்டைப் பாதுகாத்து அமைச்சர் பொறுப்பு வாங்கிய சேகர் பாபு போன்றவர்கள் இருக்கும் வரை வாய்ப்பே இல்லை.
அவசியம் முழுமையாகக் கேளுங்கள் முடிந்தவரை உங்கள் வட்டத்திற்குள் உள்ள அனைவரும் அறிமுகம் செய்து வைக்கவும்.

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.