இந்தப் புகைப்படம் என்பது மற்றவர்கள் குற்றம் சொல்ல முடியாத அளவுக்குத் தமிழக பாஜகவிற்கு கூடிய கூட்டம். மோடி அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து நடத்தி வருகின்றார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து முழுமையாக தமிழ்ப்பிள்ளைகளுக்கு புரியக்கூடும்.
முதலில் டெல்டா மண்டலத்தில் இங்குள்ள மாநிலக் கட்சிகள் மிரட்சியாகப் பார்க்கும் கூட்டத்தைக் கூட்டி பாஜகவினர் பயமுறுத்தினார்கள். அதுவே இப்போது படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக வந்து கொண்டே இருக்கின்றது. செல்லும் இடமெல்லாம் சிறப்பு. வரவேற்பு பலமாக உள்ளது. கூட்டம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. எதிரிகள் அவர்களை அறியாமல் உளறும் அளவுக்குத் தமிழக அரசியல் களம் மாறியுள்ளது. அண்ணாத்துரை அவர்கள் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டினார். அண்ணாமலை அவர்கள் இனி நாம் தேசியப் பிள்ளைகள் என்பதனை உருவாக்கி வருகின்றார்.
40 வருடங்களில் தமிழக அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் கூட்டிய கூட்டங்கள், கூடிய மனித தலைகள் என்று சொல்வதற்கு ஏராளமான கதைகள் உண்டு. ஓட்டாக மாறுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
ஆனால் எனக்கு மகிழ்ச்சியான விசயம் என்னவெனில்?
நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் வருவதற்குள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகர்ப்புறங்களுக்குள் பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து மக்களுக்குத் தெரிய வந்து இருக்கும்.
பாஜக குறித்து திருட்டுப் பங்காளிகள் உருவாக்கி உள்ள மாயைகளைப் பாதிக்குப் பாதியேனும் அண்ணாமலை அவர்களின் மேடைப் பேச்சு மாற்றியிருக்கும்.
அலங்காரப் பேச்சு, கவர்ச்சியான பேச்சு, எளிய மக்களுக்குப் பிடித்த பேச்சு என்கிற பட்டியலில் அண்ணாமலை அவர்களின் தனித்துவமான தற்போதைய மேடைப் பேச்சும் இடம் பெற்று இருப்பது திமுக மற்றும் அதிமுகவிற்கு அதிர்ச்சிகரமான ஒன்றாகவே இருக்கும். ஆடம்பரம் இல்லாத, தரவுகளுடன், தரமான பேச்சு என்பது தமிழக மக்களுக்கு இப்போது தான் அறிமுகம் ஆகியுள்ளது. அதாவது மக்களை புத்திசாலிகளாக அண்ணாமலை மாற்றிக் கொண்டு இருக்கின்றார் என்பதே இதற்குப் பின்னால் உள்ள அரசியல்.
மோடி அளித்த திட்டங்கள் தமிழகத்திற்கு எத்தனை வந்துள்ளது என்பது இப்போது ஓரளவுக்கேனும் பரவலாகப் பலரின் பார்வைக்குச் சென்று கொண்டு இருக்கின்றது. இது ஆளுங்கட்சி மட்டுமல்ல எதிர்க்கட்சிக்குப் பயத்தை உருவாக்குகின்றது.
ஜிஎஸ்டி குறித்து இனி எவரும் பேச முடியாது. வட மாநிலங்களுக்குத் தான் எல்லாமே போகின்றது என்பதும் உடைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. தமிழர்கள் வேலைக்கு லாயக்கே இல்லை என்பதும் குடியை மாநில அரசு விடாமல் வைத்திருப்பதால் நம் தொழிலுக்கு வட மாநிலத்தவர்கள் மட்டுமே தேவை என்கிற நிலைக்கு ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கு நினைப்பதால் இனி வட இந்தியர்கள் குறித்து இவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது.
இது நாள் வரைக்கும் மாநில அரசு தங்கள் பெயரை வைத்து ஒப்பேற்றிக் கொண்டு இருந்ததை மத்திய அரசிலிருந்த அனைவரும் பொருத்துக் கொண்டு தான் இருந்தனர். ஆனால் இப்போது அண்ணாமலை இந்த விசயத்தில் படு தீவிரமாக இருக்கின்றார். எத்தனை சதவிகித மத்திய அரசு நிதி என்பது வரைக்கும் மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றார். மோடி அவர்களின் புகைப்படம் இடம் பெற்றே ஆக வேண்டும் என்பதனை நிறைவேற்றி வருகின்றார்கள். அங்கங்கே ரத்தக்களறி உருவாக்கினாலும் இடம் பெறச் செய்வதில் அந்தந்த பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மாநில அரசு ஓரளவுக்கு மேல் இதில் பிடிவாதம் காட்ட முடியாத அளவுக்கு ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையில் தான் உள்ளது.
மத்திய அரசின் சாலைத் திட்டங்களை விட ரயில்வே திட்டங்களைச் சிறு குறு நகரப் பகுதிகளை மறுமலர்ச்சி பாதையை நோக்க நகர வைத்துள்ளது. சாதிய கட்டுமானத்தை உடைக்கும் என்றே நம்புகிறேன். பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலிடும் என்று எதிர்பார்க்கின்றேன். சுற்றுலாத்துறை வளர எளிய மனிதர்களின் வாழ்க்கைத் தரம் மாறும் என்று உறுதியாக நம்புகின்றேன். பேருந்து லாபியை இங்கே உடைக்க முடியாது. மாற்ற முடியாது. கொள்ளைக் கட்டணத்தை நிறுத்த முடியாது. ரயில் பயணம் அதிகரிக்கும் என்றே நினைக்கின்றேன். ஒவ்வொரு திட்டத்திற்கும் இலக்கு வைத்து மிகச் சரியாக மத்திய அரசி நிறைவேற்றுவதாக மாநில அரசு கை பிசைந்து கொண்டே இருக்கும். காரணம் வறுமை இருந்தால் மட்டுமே குடும்ப ஆட்சி வசதியாக இருக்கும். மக்கள் புலம் பெயரத் தொடங்கி விட்டால் டைனஸ்டி சாம்ராஜ்யத்தில் சரிவு உருவாகியுள்ளது என்றே அர்த்தம்.
அடுத்த பத்தாண்டுகளுக்குள் நீங்கள் இதனைப் பார்க்கலாம்.
ஆளுங்கட்சியின் ஊழல் குறித்து வேறு எவரும் வாய் திறப்பதில்லை. காரணம் வாய்க்கரிசி பகிர்ந்து அளிக்கப்படுவது முக்கியக் காரணம் என்றாலும் கூட ஒவ்வொருவருக்கும் சேர்த்த சொத்துக்கள் பறிபோய் விடுமோ என்ற அச்சம் இருப்பது தான் முக்கியக் காரணம். பல ஒப்பந்தப்புள்ளி வேலைகளின் இருவரும் பங்குதாரராக இருப்பதும் மற்றொரு முக்கியக் காரணம். இந்த இடத்தில் அண்ணாமலை அவர்களுக்கு இறைவன் புதிய வரத்தை வழங்கி முடிந்தவரைக் களத்தில் கலக்கு என்று ஆசீர்வாதம் வழங்கியுள்ளதாகவே பார்க்கின்றேன்.
மாய்ந்து மாய்ந்து யூ டியுப் விபச்சாரிகள் தத்தமது வயிற்றுப்பாட்டுக்கு அண்ணாமலை குறித்துப் பேசிக் கொண்டேயிருந்தாலும் அத்தனையும் இறுதியில் பாஜக அண்ணாமலை என்ற இரண்டு வார்த்தையைப் பார்க்கும் ஒவ்வொரு மனிதர்களுக்குப் புக வைத்துக் கொண்டு இருக்கின்றது. எட்டு கோடி மக்கள் தொகையில் மூன்று கோடிக்குள் தான் ஓட்டளிக்க மக்கள் வருகின்றார்கள். அதில் ஒரு கோடிக்கு மேல் வாக்கு வாங்கக்கூடியவர்கள் தான் அதிகாரத்திற்கு அருகே வருகின்றார்கள். அதாவது 70 சதவிகித தமிழக மக்கள் விரும்பாத ஒருவர் (அவர்கள் வாக்கு அளிப்பதில்லை என்பது தனிக்கதை) முதல்வராக இருப்பது தான் இங்குள்ள ஜனநாயகம். அண்ணாமலையின் இலக்கு இந்த 70 சதவிகிதத்தில் பாதிக்குப் பாதி.
இன்னும் நாட்கள் செல்லச் செல்ல எப்படி மாறும்? ஆமாம்ப்பா அந்த ஐபிஎஸ் தம்பி தொடர்ந்து சொல்லிக் கொண்டே தானே இருந்துச்சு? என்று கள நிலவரம் மாறும்?
ஆனால் அண்ணாமலை அவர்களின் தினசரி 18 மணி உழைப்பு எந்த இடத்தில் தடுமாற்றம் வரும் என்றால் தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்களுக்குள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து இரண்டு பங்காளிகளும் மொத்த சூழலையும் மாற்றி விடுவார்களோ? என்ற அச்சம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது?
18 மணி உழைப்பு எந்த இடத்தில் தடுமாற்றம் வரும் என்றால் தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்களுக்குள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து இரண்டு பங்காளிகளும் மொத்த சூழலையும் மாற்றி விடுவார்களோ? என்ற அச்சம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது?//இது தான் திராவிட மாடல். இதிலிருந்து வெற்றி பெறுவது சிறப்பு
ReplyDeleteசோ தான் காமாராஜுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போனபோது வந்த கூட்டத்தைப் பார்த்து மகிழ்ந்து போனாராம். பின்னர்தான் தெரிந்ததாம், கூடும் தலை எண்ணிக்கை எல்லாம் வோட்டாக மாறாது என்று! பார்ப்போம், என்ன ஆகிறதென்று! ஆனால் இத்தனை நாள் காணாத இந்தக் கூட்டம் அதிசயம்தான்!
ReplyDelete