'அமெரிக்கப் பயணம் ! வெற்றி நிச்சயம் !'
மனத்திடை அன்பும்...
மதிக்கும் ஒழுக்கமும்...
மாறாத உறுதியும்... நிலைபெற்று இருந்தால் நிச்சயம் வெற்றி.
நரேந்திர மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காதது ஏன்?
அமெரிக்கா நாட்டின் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
பாரதப் பிரதமர் மோடி அவர்கள் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் நடத்திய சந்திப்பு, முக்கியமானது, ஏனெனில் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஆன பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு, கொரோனா தாக்கத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாத பிரதமர் மோடி அவர்கள் தற்போது அமெரிக்கா சென்று நடத்திய ஆலோசனைகள் முக்கியமாக உலகத்தால் கவனிக்க படுகிறது.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.