அஸ்திவாரம்

Wednesday, September 01, 2021

பாரத நாட்டின் சொல்லப்படாத வரலாறு பகுதி - 2

நான் அறிந்தவரையிலும் 1990 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குக்கூட அடிப்படையான இந்தியச் சுதந்திர வரலாறு குறித்த புரிதல் இல்லை. 

2000க்குப் பின்னால் பிறந்தவர்களுக்கு இது அவசியமில்லாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரு கதைக்குள் பல கதை. பல கதைக்குள் ஒரு விதை என்பது போல படிப்படியாக விளக்கிக் கொண்டே செல்கின்றார். 

ஒன்றோடு ஒன்று தொடர்புப் படுத்தி வாஸ்கோடகமா கேரளாவில் கால் வைத்தது (1498) தொடங்கி 1948 வெள்ளையர்கள் நிரந்தரமாக பாரத தேசம் விட்டு வெளியேறியது வரைக்கும் சிறந்த கதை சொல்லியாக இதில் பேசியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டம் என்பதில் இந்தியாவின் உள்ளே இந்தியாவின் வெளியே என்ற இரண்டு பிரிவுகளை முழுமையாக புரிய வைத்துள்ளார். இது எந்த பாடப் புத்தகங்களில் சொல்லப்படாத பல உண்மைகள் அடங்கிய தொகுப்பாகும். அவசியம் கேட்க வேண்டும். லாகூர் கொலை வழக்கு, இந்தியாவின் முதல் அரசியல் கொலை, மூன்று சகோதரர்கள் (வயது 19 முதல் 28 வரை) ஒட்டு மொத்தமாக தூக்கில் ஏற்றிய வரலாறு, அந்தமான் செல்லுலார் சிறையில் நடந்த கோரங்கள், இவரைக் கொல்வதே என் வாழ்நாள் நோக்கம் என்று வாழ்ந்து வெற்றி கொண்டவர் , 18 வயது குதிராம் போஸ் ( உங்களுக்கு கையெறி குண்டு செய்ய உங்களுக்கு கற்றுத் தரட்டுமா என்று நீதிபதியைப் பார்த்து கேட்டவர்) என்று கண்ணீர் சிந்தவைக்கும் தியாக தழும்புகளை, நிஜமான சுதந்திர போர் வீரர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். 

இந்திய அளவில் தேர்வுக்குக் கலந்து கொள்பவர்கள் முதல் பள்ளிக்கூட மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள் வரைக்கும் அனைவரும் கேட்க வேண்டிய உரையிது. பயணத்தின் போது, ஒரு வேலையைச் செய்து கொண்டே நிதானமாக இது போன்ற பேச்சுக்களைக் கேட்க வேண்டும்.
 (பாரத நாட்டின் சொல்லப்படாத வரலாறு பாகம் 2)

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.