சிலரின் எழுத்தை வாசிக்கும் போது, சிலரின் தொடர் அணுகுமுறையைப் பற்றி யோசிக்கும் போது மனதில் இடைவிடாத சப்தம் உருவாக்கிக் கொண்டேயிருக்கும். எழுதி முடித்து விட்டால் அந்த இரைச்சல் அடங்கி விடும் அல்லவா? அதன் பொருட்டு இந்தப் பதிவு.
சமீபத்தில் நெருங்கிய நண்பர் என்னிடம் கேட்ட கேள்வியிது.
"பாஜக நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவுக்குப் பணம் தருகின்றார்கள் என்று கேள்விப்பட்டேன். உண்மையா?" என்றார்.
நான் உடனே யோசிக்காமல் "அப்படி என் எழுத்து விலைபோகும் அளவிற்கு உள்ளது என்றால் நான் உச்சத்தை அடைந்து விட்டேன் என்று தானே அர்த்தம்?" என்றேன்.
தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டார்.
இப்படித்தான் திடீர் "ஆர்வலர்கள்" செயல்பாடுகள் இருக்கும்.
இவர்களை எளிதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பரம்பரை கட்சிக்காரர்களை விட இவர்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள். காரணம் ஏதோவொரு பெரிய ஆதாயத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் என்று அர்த்தம்.
இணையத்தில் நாள் தோறும் நேர்மறை வைப்ரேசனை பரப்பிக் கொண்டு இருக்கும் பலரையும் கவனித்து உள்ளேன். அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வியிது.
"ஏன் திட்டிக் கொண்டே இருக்குறீங்க?" என்றார்.
அவர் அமெரிக்காவிலிருந்து வந்து இங்கே என்ன செய்கின்றார் என்று விசாரித்த போது அதிகாரத் தரகு வேலைகளில் அள்ளிக் குவித்துக் கொண்டு இருக்கின்றார் என்று தகவல் வந்தது.
விபரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர், செய்கின்றவர், உதவி செய்கின்றவர் என்ற பாகுபாடு உண்டா?
என்னைத் தொந்தரவு செய்யாத வரைக்கும் அவர்களை நான் கண்டு கொள்வதில்லை. அவரவர் வினைவழி அவரவர்க்கு?
நெருங்கிய நண்பர்களுக்கு என்னை நன்றாகவே தெரியும். தனிப்பட்ட உரையாடல்களில் என் அரசியல் விருப்பங்களைக் காட்டிக் கொண்டதில்லை. திணித்ததும் இல்லை. அது போன்ற சமயங்களில் உரையாடல் வேறு விதமாக இருக்கும். ஒரு வேளை மறுமுனையில் பேசுகின்றவர் எல்லை மீறிச் சிக்கினால் சிதைத்து விட்டுத் தான் மறுவேலை.
பெரும்பாலும் இது போன்ற மனித குல விரோதிகளை என் வட்டத்திற்கு வெளியே தான் வைத்துள்ளேன். இணையத்திலும் சரி. தனிப்பட்ட பழக்கவழக்கத்திலும் சரி.
ஒரு கட்சி, கொள்கை, அதன் சிந்தாந்தம், அதன் பிம்பங்கள் எவரையும் எனக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று நான் எழுத வேண்டும். காரணங்களை அடுக்க வேண்டும். எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எழுதத் தெரியாமல் எழுதக்கூடியவர்களிடம் சென்று வம்பு இழுத்துக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? மன நோயாளிகளாக மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். அதன் முதல் படியில் இருக்கின்றார்கள் என்று மனதில் நினைத்துக் கொள்வதைத் தவிர வேறு நம்மால் என்ன செய்ய முடியும்?
மனதளவில் கொத்தடிமையாக வாழ்பவர்களின் குணங்கள் நான் அறிந்தே வைத்துள்ளேன்.
இவர்கள் சொல்லும் எழுதும் விமர்சனங்களைக் கண்டு கொள்வதில்லை. கவலைப்படுவதில்லை. இவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. காரணம் இவர்கள் வாழ்நாள் முழுக்க தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். மதம், சாதி, இன்னும் பல காரணிகள் இவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை உருவாக்கியிருக்க வாய்ப்புண்டு. அவற்றிலிருந்து மீள முடியாமல் தங்களை மாற்றிக் கொள்ள விரும்பாமல் இங்கிருக்கும் கோமாளிகளை உலக உத்தம தலைவர்களாக கற்பனை செய்து கொண்டு வாழ்பவர்கள்.
என்ன செய்ய முடியும்? நாம் மனதளவில் சிரித்துக் கொள்ளத்தான் வேண்டும். நான் எழுதி உள்ள 100 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 1957 முதல் 1967 வரை திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு கீழ் இறங்கி எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதனை நேரம் இருந்தால் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன் முடிவு இப்போது இன்று தினமும் தமிழகம் 150 கோடி வட்டி கட்டிக் கொண்டு இருக்கின்றது என்பதில் வந்து முடிந்துள்ளது.
இதற்கு யார் காரணம் என்று கேட்டுப் பாருங்கள்? அப்போது இவர்களின் உண்மையான முகம் தெரிய வரும்?
என்னப்பா இப்படி எழுதுறே? என்று யாராவது கேட்டால் அடுத்த நான்கு தலைப்பில் நிர்வாணம் எனக்கு ஏன் பிடிக்கும் என்பதனை கேட்டவர் வெறுக்கும் அளவிற்கு எழுத ஆசைப்படும் குணாதிசயம் கொண்டவன். காரணம் கேட்டவருக்கு எதைப் பற்றியும் அக்கறையிருக்காது, எதையும் நிதானமாக வாசிக்கும் பழக்கமும் இல்லாதவர் என்பதனையும் நான் நன்றாகவே அறிந்து வைத்திருப்பேன்.
"நீ என்னைக் குடும்பப் பெண் என்கிற ரீதியில் பார்த்தால் அப்படியே தெரிவேன். நீ வேறு விதமாகப் பார்த்தால் அதை விட மோசமாகத் தெரிவேன்" என்று என் நண்பரிடம் ஒரு முறை சொன்னேன். அன்று முதல் இன்று வரையிலும் அவர் பெரியார் புராணத்தை என்னிடம் காட்டுவதில்லை. இணையத்தில் இப்படித்தான் நடந்து கொள்ள விரும்புகிறேன்.
காரணம் இவர்கள் யாரும் பத்ம விபூஷன் பட்டம் வாங்கப் பரிந்துரை செய்யப் போவதில்லை.
இதை இப்போது இங்கே எழுதக் காரணம்?
தியாகராஜன் கெட்டிக்காரர். கம்பீரமாக முழுங்குகின்றார். உண்மையை மட்டும் தான் பேசுகின்றார் என்று நண்பர்கள் எழுதும் போது எனக்கு நேற்று நான் பார்த்த சட்டசபை காட்சி இப்போது என் நினைவிற்கு வந்து போகின்றது.
பாஜக அரசு செய்த சாதனைகள், ஒதுக்கிய நிதி, தமிழகம் பெற்ற பலன்கள், மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் எந்த அளவுக்குப் பலன் அடைந்தது போன்றவற்றைக் கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் Vanathi Srinivasan அவர்கள் பேசிய போது தியாகராஜன் எப்படி அதனைக் கையாண்டார் என்பதனை அவசியம் வாய்ப்பு இருந்தால் பாருங்கள். அதன் பிறகு அவரைப் பற்றி புகழ்மாலை தொடுங்கள். எனக்குக் கவலையில்லை.
சென்ற வாரத்தில் ஒரு நண்பருக்கு இப்படி ஆலோசனை சொன்னேன்.
"உங்களுக்கு அவர்களால் தனிப்பட்ட முறையில் நல்லது சில நடந்து இருக்க வாய்ப்புண்டு. மனதளவில் மரியாதை இருக்கலாம். தவறில்லை. ஆனால் இணையத்தில் அதனைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்றேன்.
காரணம் அவர்கள் "பத்து முகங்களுடன் நடமாடும் மனித குல விரோதிகள்" என்றேன்.
அவரும் புரிந்து கொண்டேன். உண்மை தான் என்றார்.
உங்கள் பொருளாதாரம், சித்தாந்தம், தனி மனித விருப்பம் போன்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது தமிழக அரசியல் களம். நீங்கள் ஒன்றை மட்டும் பார்த்து உங்கள் புகழ்மாலையை எழுதும் போது கூடுதலாக பத்து விருப்பக்குறியீடு கிடைக்க வாய்ப்புண்டு. ஆகா எப்படி நேர்மையாக எழுதுகின்றார்? என்று மற்றவர்கள் புளகாங்கிதப்படுவார்கள் என்று நினைக்காதீர்கள்.
பிராமணர்கள் என்ற வார்த்தை உங்களுக்கு வாழ்க்கை முறை. ஆனால் அவர்களுக்கு அது ஓட்டரசியல் சார்ந்தது. நீங்கள் மட்டும் தான் கடைசி வரைக்கும் உத்தமர் வேடம் போட வேண்டியிருக்கும். நாகரிக அரசியலை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியதாக இருக்கும். அவர்கள் உங்களைப் போன்றவர்களைப் புறங்கையால் தள்ளி விடமாட்டார்கள். கீழே போட்டு மதித்துக் காறித் துப்பிச் சென்று கொண்டே இருப்பார்கள். அப்படித்தான் அவர்கள் இணையத்தில் நடந்து கொண்டு இருக்கின்றார்கள்.
உங்களை ஒதுக்கி வைத்து, உங்களைத் திட்டி, உங்களை அவமானப்படுத்தி, உங்களை அசிங்கப்படுத்தி அதன் மூலம் தான் இன்று வரையிலும் ஓட்டு அறுவடை செய்து அவர்கள் பல லட்சம் கோடி சம்பாதித்து தகுதி இல்லாத அத்தனை நபர்களும் இங்கே அதிகாரத்தில் இருக்கின்றார்கள் என்பதனை நினைவில் வைத்து எழுதுங்கள்.
மற்றபடி அவர் மேல் எனக்கு மரியாதை உண்டு. அது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது என்பது போன்ற பிலாக்கணம் பாடுகின்றவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை.
(கற்றுக்கொள் களத்தில் இறங்கு)
திராவிட அரசியலின் மோசடி வரலாறு - 1
திராவிட அரசியலின் மோசடி வரலாறு - 2
முதல் இரவு என்பது அரங்கத்தில் நடப்பது அல்ல. இணையத்தில் பரஸ்பரம் புகழ்ந்து பாடுவது எழுதுவது நட்பல்ல. அது வேறொரு கணக்கீடு.
என் எழுத்து உங்களைத் தொந்தரவு செய்கின்றது என்றால் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்று அர்த்தம்.
849
ReplyDelete
Deleteஆயிரம் பாக்கள் எழுதிய கம்பர் முதல் தமிழகத்தில் பாரதி வரைக்கும் யாரும் தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டது இல்லை. பட்டம் சூட்டிக் கொள்ள விழா நடத்தியது இல்லை. அரை கவுன் போட்ட நடிகைகளை ஜட்டி தெரிய முன்னால் அமர வைத்து விழா என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டதும் இல்லை. மூன்று தமிழ் அறியாத ஒருவன் முத்தமிழ் அறிஞர் என்று போட்டுக் கொள்வது ஆரோக்கியம் இல்லாதவன் தன்னை ஆரோக்கியசாமி என்று அழைப்பதற்குச் சமம். இது போன்ற அறிவற்ற கூட்டத்தில் வாழ்பவர்களுக்கு யார் அறிவு உடையவர்கள் யார் மற்றவர்களின் அறிவை திருடி வாழ்ந்தவர்கள் என்று கண்டுபிடிப்பது கடினம்.