மோடி கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு குறித்து இங்குள்ள புத்திசாலிகள் அவ்வப்போது புலம்பல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதை நீங்கள் போகிற போக்கில் வாசித்து இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அதன் மூலம் எத்தனை விதமான பொந்துகள் கண்டு பிடிக்கப்பட்டது? எத்தனை ஆயிரம் எலிகள் வேட்டையாடப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பது போன்ற விசயங்கள் நம் ஊடகங்கள் பதிவு செய்வது இல்லை.
வடமாநிலத் தொழில் அதிபர்களை மோடி வளர்க்கின்றார் என்பது பொதுவாக பாஜக அரசின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. விபரங்கள் முழுமையாக தெரிந்தால் மட்டுமே அதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பதனை வாசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு சின்ன உதாரணத்தைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு வட மாநிலங்கள் முழுக்க ஆலமரம் போல விழுதுகள் பரப்பி 24 வருடம் பாரம்பரியம் கொண்ட நிறுவனத்தின் பெயர் சக்தி பாக் புட்ஸ். கோதுமை மாவு, அரிசி, நொறுக்குத்தீனிகள் வகையிலான பலவித தின்பண்டங்கள் விற்பனை செய்து இந்த நிறுவனத்தின் முக்கிய செயல்படாக இருந்தது. இந்த நிறுவனத்தின் முறைகேடுகளைக் கண்டு சிபிஐ வழக்குப் பதிந்தது. வங்கிகளை ஏமாற்றிய வகையில் 3269 கோடியே 42 லட்சம் சூறையாடி உள்ளனர்.
அனூப் குப்தா இந்தியா கேட் என்ற பிராண்ட் பெயரில் பாஸ்மதி அரிசியை விற்கும் கே.ஆர்.பி.எல் குழுமத்தின் செயல்பாடுகள் தற்போது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வசம் கண்காணிப்பு பட்டியலில் உள்ளது. இதில் தொடர்புடைய பலரும் வெளிநாடுகளுக்குத் தப்பிப் போய் விட்டனர்.
வங்கிகளுக்கு ஸ்வாகா கொடுத்துள்ள நிறுவனங்களின் பட்டியல் இது.
அமிரா உணவுகள் 1200 CRORES
சக்தி போக் - 3000 CRORES
புஷ் உணவுகள் 900 CRORES
DUNAR FOODS - NSEL SCAM 5000 CRORES
REI AGRO - 7000 CRORES
KRBL - ஆகஸ்டா வெஸ்ட்லேண்ட் பண மோசடி ரூ. 5000 கோடி.
படத்தின் இடைவேளை இப்போது வந்துள்ளது. இந்தச் சமயத்தில் தான் நம் கதாநாயகன் நுழைவு கொடுக்கின்றார்.
ஆம்.
காங்கிரஸ் தொடக்கம் முதலே விவசாயம், விவசாயிகள், கூட்டுறவுச் சங்கங்கள், உணவு வழங்கல் துறை (நியாயவிலைக்கடைகள்) இவற்றை ஒரே கண்ணியில் இணைத்து வைத்துப் பல லட்சம் கோடிகளை வருடந்தோறும் சூறையாடிக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் மிகப் பெரிய வலைபின்னல் இருந்தது. பல நூறு முதலாளிகள் இருந்தார்கள். வங்கியில் பணம் கொடுக்க உத்தரவு வரும். கொடுத்தவர் மாற்றலாகிப் போய் விடுவார். தனக்குத் தொடர்பு இல்லாதது போல அவர் பணி ஓய்வு பெற்று விடுவார். கடன் வாங்கிய நிறுவனங்கள் திவால் ஆகி விடும். இந்திய நொடிப்பு சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டு முதலாளி காப்பாற்றப்படுவார். வாங்கிய வங்கித் தொகைகள் வராக்கடன்களாக மாறிவிடும்.
இதில் ஆச்சரியப்படத்தக்க உண்மை என்னவெனில் இப்போது பொறியில் சிக்கியுள்ள நிறுவனங்கள் அனைத்தும் 2008 முதல் 2015 வரை உள்ள நிதியாண்டில் நிறுவன வளர்ச்சி என்பதனை 20 சதவிகிதம் ப்ள்ஸ் என்பதாக கணக்குக் காட்டி உள்ளனர். அப்புறம் எப்படித் திவால் அறிக்கைகள் வழங்க முடியும்?
இப்போது தான் துணை கதாநாயகர்கள் உள்ளே வருகின்றார்கள்.
கமல்நாத், சரத்பவார், அகமது பட்டேல், முலாயம்சிங் யாதவ் பலரும் இருக்கின்றார்கள். தோண்டத் தோண்ட இந்தப் பொந்து ஆழம் அறிய முடியாத அளவிற்குப் போய்க் கொண்டே இருக்கின்றது. பின்னர் மோசடி செய்யப்பட்ட பணம் இந்தியாவில் நிலங்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோல்ட்மேன், யுபிஎஸ், சுவிஸ் வங்கி முதலியன போன்ற பெரிய வங்கிகளில் கொண்டு போய் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்றைய சூழலில் சிக்கலில் மாட்டியுள்ள நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் வாங்கிய பணத்தை வங்கிகளில் செலுத்திய ஆக வேண்டும் என்பதற்காகப் பல சட்ட ஓட்டைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இன்று விவசாயிகள் போராட்டம் என்று கண்ணீர் விட்டு அனுதாபம் தேடும் மக்களிடம் விவசாயம் என்ற பெயரில் எத்தனை லட்சம் கோடிகள் மன்மோகன்சிங் அரசாங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது?என்பதனைக் கேட்டுப் பாருங்கள். அத்தனை பேர்களும் அமைதியாக இருப்பார்கள்.
நமக்கு பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு அவர்களிடம் வாங்கப்படும் தானிய வித்துக்களுக்கு நேரிடையாக வங்கி வழியாக தொகை வழங்குவது என்பது தான் தெரியும். இந்தச் சட்டம் மட்டும் தான் இப்போது பொதுவெளியில் பேசப்படுகின்றது. ஆனால் இந்தச் சட்டம் உருவாவதற்கு முன் எத்தனை படிகள் கடந்து வந்துள்ளார்கள் என்பது தெரியுமா?
இந்தியாவில் மோடி அரசு சட்டங்களை அமல்படுத்திய வரிசையைக் கவனியுங்கள்.
DEMONITISATION 2016
GST 2017
IBC (Insolvency) 2016
BENAMI PROPERTY 2016
TAX AMNESTY 2016
FUGITIVE OFFENDERS 2017
WILFUL DEFAULTERS 2016
RERA (Real estate regulation) 2016
FARM LAWS 2020
Collective investment schemes 2016 (Sahara/Rose Valley /Sarada Scams) (மேற்கு வங்க அரசியல்வாதிகள் கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தி)
DIRECTORS KYC (Companies Act) ( ஷெல் நிறுவனம் போலத் தொடங்கி பண பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்த முடியாது. யார்? எவர்? பின்புலம் என்ன? போன்ற அனைத்தும் வழங்கினால் மட்டுமே அனுமதி கிடைக்கும்.
500,000 நிறுவனங்கள் செயலிழந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர்கள் பலர் 2016-2017-2018 ஆம் ஆண்டில் KYC ஐ ஒருபோதும் திருத்தவில்லை.
மேலும் அவர்கள் எந்த நிறுவனத்திலும் இயக்குநர்களாக இருக்க தகுதியற்றவர்கள். கடன் தடைகள், வங்கிகளில் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் அரசியல் எஜமானர்களுக்கான பணமோசடி ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.)
மோடிக்குத் தனிப்பட்ட முறையில் பலன் இல்லை. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க புதுப்புது எதிரிகள் தான் நாள் தோறும் உருவாகிக் கொண்டு இருக்கின்றார்கள். கடந்த 70 ஆண்டுகளாக இவற்றைச் செய்ய எவருக்கும் தைரியம் இல்லை. இந்திய நிர்வாக அமைப்பில் மோடி பதவிக்கு வந்த பின்பு மட்டுமே சுத்திகரிப்பு நடைபெற்றுள்ளது.
அனைவருக்கும் நீதி. அனைவருக்கும் வாய்ப்பு. பாரபட்சமில்லாத அணுகுமுறை. வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகத்தை நாம் ஆதரிக்காமல் போனால் நம் தலைமுறைகளுக்கு நாம் பாவம் செய்தவர்களாகவே மாறுவோம்.
ரகுராம் ராஜன் போன்றவர்கள் இன்று ட்விட்டரில் மோடியின் தேநீர்க்கடை பற்றிப் பேசும் அளவிற்குத் தரம் தாழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? அவரின் சொந்த நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளதே முக்கியக் காரணம். இதன் காரணமாகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போலப் பாசி போன்ற பலரும் ட்விட்டரில் பினாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் மோடி இந்திய நிர்வாக சீர்திருத்தத்தில் காற்பங்கு கூட இன்னமும் முடிக்கவில்லை என்பதனையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.