பீகாரைப் பார்.
உபி யைப் பார்.
அப்படியே
இந்தப் படத்தையும் பார்.
இது தான் இன்றைய தமிழக அரசு மருத்துவமனைகளின் நிலைமை. இன்னும் சில படங்கள் உள்ளது. அவைகள் மனதைப் பிசைவதாக இருக்கும்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தற்போது களப்பணிகள் செய்து கொண்டு இருப்பதோடு தினம் ஒருவர் என்கிற ரீதியில் பேச ஏற்பாடு செய்து காணொளிக் காட்சி வாயிலாக பாஜக தொண்டர்களை ஒன்று சேர்க்கின்றார்கள். நேற்று மூன்றாவது நாள். விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் பேசினார்.
அவர் பேச்சின் மூலம் கிடைத்த புள்ளிவிவரங்கள் திகைக்க வைப்பதாக இருந்தது. ஊடக மாமாக்களின் அரசியல் முதல் மாறிய ஆட்சியின் இன்னமும் கவனிக்கப்படாமல் இருக்கும் பல நிர்வாகம் சார்ந்த விசயங்களை மேலோட்டமாகப் பேசினார்.
தமிழக மக்களுக்கு விடிவு காலம் என்பது இப்போதைய சூழலில் கானல் நீரே என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது.
எப்போதும் ஒரு கட்சி சார்ந்த கூட்டத்தில், உரையாடலில் அந்தந்த கட்சி சார்ந்த பெருமைகள் மட்டும் பேசப்படும். ஆனால் இந்தக் கூட்டத்தில் நான் கண்ட ஆச்சரியம் என்னவெனில் அண்ணாமலை முதல் கூட்டத்தை ஒருங்கிணைத்த வடக்கு மாவட்டச் செயலாளர் வரைக்கும் புழுதிவாரி தூற்றும் அரசியல் செய்யவே இல்லை. இந்தச் சூழலில் களப்பணிகள் செய்வது எப்படி என்றும் அதிகாரிகளை வேலை வாங்க ஒருங்கிணைந்து செயல்படுவது எப்படி? என்பதனை புரியவைத்தார்கள்.
அண்ணாமலை அவர்கள் பேசி முடித்தவுடன் பங்கெடுத்தவர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அவினாசி, மங்கலம், புஞ்சை புளியம்பட்டி, பெருமாநல்லூர் போன்ற பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் கட்சி உறுப்பினர்கள் இறுதியாக பேசிய பல விசயங்கள் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.
இவர்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மற்றும் திருப்பூரைச் சுற்றியுள்ள சிறிய, பெரிய ஊர்களில் தற்போது உண்மையிலேயே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அனைவரும் எளிய கிராமத்து பின்னணி கொண்ட மனிதர்கள். ஆண்கள், பெண்கள் என்று பாரபட்சமின்றி பல ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பல்வேறு ஊடகங்கள், புள்ளிவிவரங்கள், ஒப்பீடு, உண்மையான நிலவரங்கள், அரசியல் அழுத்தங்களுக்குப் பின்னால் உள்ள இருட்டுப் பக்கங்கள் போன்றவற்றை பல்வேறு விதங்களில் தினமும் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கே இவர்கள் பேசிய அனைத்தும் பயத்தை உருவாக்குவதாக இருந்தது.
1. பெரிய நகரங்களில் உள்ள தகவல்களைத் தவிர ஊடகங்கள் இரண்டாவது மூன்றாவது அடுக்கில் உள்ள ஊர் தகவல்களை வெளியே கொண்டு வருவதில்லை.
2. மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களில் இருக்கும் மயானங்கள், மின் மயானங்கள் அனைத்தும் 48 மணி நேரம் முழுமையாகி அடுத்து வருகின்ற பிணங்களை வைக்க முடியாத அளவுக்கு உள்ளது.
3. முதல் அலையில் ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் படாய் படுத்தி அடக்கி ஒடுக்கி உள்ளேயே வைத்திருந்தார்கள் என்று குமுறிய மக்கள் இப்போது உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கின்றார்கள். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பேர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப் பேர்கள் ஊசி போட்டுக் கொள்ளவில்லை. போடவும் விரும்பவில்லை. காய்ச்சல் வந்தாலும் மருந்துக்கடைகளில் மருந்து மாத்திரை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் இருந்து விடுகின்றனர். ஊசி போட்டால் மாரடைப்பு வரும் என்று உறுதியாக நம்புகின்றனர். மருத்துவமனைக்குச் சென்றால் உண்மையிலேயே தொற்று என்று உறுதிப்படுத்தப்பட்டால் நம்மை விலக்கி வைத்து விடுவார்கள் என்று மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். ஒருவர் பல பேர்களுக்கு தானம் வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். இது தான் கிராமப் பகுதியில் இப்போது நடந்து வருகின்றது.
4. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் இது குறித்து தகவல் அளித்தாலும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. காரணம் அவர்கள் கோவைக்குச் சென்று விடுங்கள் என்றே அறிவுறுத்துகின்றார்கள். எந்த வசதிகளும் இல்லாத போது நாங்கள் எப்படி பாரத்தைச் சுமப்பது என்றே சொல்கின்றார்கள்.
5. மருத்துவ சான்றிதழ்கள், மருந்துகள் வழங்குவதில் பெரிய குழப்பம் தொடர்ந்து நடந்து வருகின்றது. முக்கியமாக இப்போது தமிழகம் முழுக்க ஒருங்கிணைப்பு இல்லவே இல்லை. முன்பு நான்கைந்து துறைகள் ஒன்றாக செயல்பட்டது. தொடர்புடையவர்கள் வரைக்கும் துரத்திக் கண்காணிக்கப்பட்டது. அது இப்போது இல்லை. மாவட்டம் தோறும் தனித்தனியாக தனி நபர்கள் மூலம் பல்வேறு திட்டங்கள், உதவிகள் என்ற பெயரில் அரசியல் கூத்துக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
6. சென்னையிலிருந்து வரும் கட்டளைகளை மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளை மீறி உள்ளூர் அதிகாரிகள் ஓரளவுக்கு மேல் செயல்படுத்த முடிவதில்லை. எங்களுக்கு வேண்டும் என்று இந்த ஒற்றை வாக்கியத்தை ஒவ்வொருவரும் பேசிப் பேசி எல்லாமே சிதறிப் போய்க் கொண்டேயிருக்கிறது.
7. நேற்று முதல்வர் திருப்பூர் வெளியே உள்ள பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து விட்டு அப்படியே நகர்ந்து போய்விட்டார்.
8. காணொளிக் கூட்டத்தில் பேசியவர்களின் வார்த்தைகளை வைத்து திருப்பூர் மட்டும் எந்த நிலையில் உள்ளது? என்று சோதித்துப் பார்த்தேன்.
திருப்பூரைப் பொறுத்தவரை, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 900லிருந்து , இன்று அதிகபட்ச. மாக 1581 பேர் , சிகிச்சையில் இருப்போர் சுமார் , 6000லிருந்து இன்று சுமார் 9000 வரையில் உள்ளது.
காங்கிரஸ் கிருமிகள் உருவாக்கிய டூல்கிட்
இப்போது எப்படித் தளர்வு (மார்ச் மாதம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய போது மே 2 முதல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊரடங்கு என்பதே இருக்காது என்று சொன்னதை இங்கே நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். காரணம் ஊடகவாதிகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க உண்மையான நாட்டு வல்லாரைச் செடியை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்) மீண்டு அறிவிக்கப்பட்ட போகிறது என்று தகவல் வந்து கொண்டிருக்கிறது? என்ன செய்யப் போகிறார்கள் என்றே தெரியவில்லை.
Tiruppur Active cases further increases to 151% growth rate in 10 days.
Active cases at 8088 and daily new casea-case at 1573.
நிறுவனங்கள் இன்னமும் பேருந்து மூலம் பல்வேறு கிராமங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து வேலை செய்வதை நிறுத்தவில்லை. வர மாட்டோம் என்று சொன்னாலும் விடுவதில்லை.
24 மே முதல் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் திருப்பூர் நிறுவனங்கள் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலும் முதல் வாரத்திலிருந்தே பெரிய கம்பெனிகள் விசேஷ அனுமதி பெற்று தங்கள் தொழிற்கூடங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். முதல் இரண்டு வாரங்களும் இருந்தது ஊரடங்கே இல்லை என்பதுதான் உண்மை. இதன் பாதிப்பு அறியாத பொதுமக்கள் அரசு நம்மை ஒன்றும் சொல்லாததால் கொரோனா ஒன்றும் இல்லை போலிருக்கிறது என்கிற மனோபாவத்தில் இன்னும் சுதந்திரம் பெற்று அலைகிறார்கள்.
ReplyDelete