அஸ்திவாரம்

Friday, May 28, 2021

ஆங்கிலேயரின் அடிவருடியா PTR குடும்பம்.? திருமாறன் ஜி சிறப்பு பேட்டி..

அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்கள் என்ன செய்வார்கள்?

அதிகாரத்தில் இருப்பவர்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டேயிருப்பார்கள். கண்டது காணாதது என்று அனைத்தையும் மக்கள் நம்பும்படி பேசுவார்கள்.

ஊசி மோடியே போடவில்லை. அப்புறம் எப்படி மக்கள் நம்புவார்கள்? என்றவர்கள் இப்போது மக்கள் ஊசி போட வரமாட்டேன் என்ற பூமராங் போலத் தாக்கத் தொடங்கியதும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றார்கள்.

மே 2க்கு பிறகு ஊரடங்கு வர வாய்ப்பில்லை என்றவர்கள் இப்போது விழிபிதுங்கி டெட்பாடிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

கொரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறந்து மக்கள் உயிரோடு விளையாட வேண்டுமா? அறிவுரை சொன்னவர்கள் தினசரி மது விற்பனையைக் கண்காணிக்கின்றார்கள். விரைவில் மது விலைகளை உயர்த்த ஆலோசனை செய்து கொண்டு இருக்கின்றார்கள். 

இது அரசியலில் இயல்பு தான்.  இந்தியா போன்ற நாடுகளில் இது தான் அரசியல். காரணம் இங்கே 90 சதவிகிதம் பேர்களுக்கு அரசியல் அரசியலுக்குப் பின்னால் நடக்கும் சமாச்சாரங்கள் எதுவும் தெரியாது.  அவன் திருடினான். இவனும் திருடுவான். நாம் உழைத்தால் தான் வாழ முடியும் என்ற எளிய நம்பிக்கையுடன் கண்டும் காணாமல் கவனிக்காமல் கடந்து சென்று கொண்டேயிருப்பார்கள்.

இல்லாவிட்டால் தமிழக மக்கள் மனதில் பாஜக வந்துரும் என்பதனை ஆழமாக விதைத்து அதை வைத்து மட்டும் ஓட்டு வாங்கி வென்று வர முடியுமா?  முடிகின்றதே?

நான் கோடீஸ்வரன் ஆகி விட்டால் ஆக முடியாதவர்கள் அத்தனை பேர்களும் என் மேல் புழுதிவாரித் தூற்றத்தான் செய்வார்கள். அவன் எப்படிச் சம்பாதித்தான் தெரியுமா? என்று புனைவுகளை அள்ளித் தெளிக்கத்தான் செய்வார்கள்.  

சிறந்த அரசியல்வாதிகளும், சிறந்த தொழில் அதிபர்களும் என்ன செய்வார்கள்?

பேச்சைக் குறைப்பார்கள்.
பழகும் நபர்களைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்.
என்ன பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? 
அதனை எப்போது பேச வேண்டும்? 
என்பதில் கவனமாக இருப்பார்கள். 
காரியத்தில் மட்டும் கவனமாக இருப்பார்கள்.

தொடர்ந்து பிடிஆர் மகன் தப்பு மேல் தப்பு செய்து கொண்டே வருகின்றார். அவர் துறையை மற்றும் கல்வித்துறைதான் அதிகம் கவனித்து வருகிறேன். இரண்டின் செயல்பாடுகளும் இந்த நிமிடம் வரைக்கும் திருப்தி இல்லை. இன்னமும் காலம் உள்ளது. மாற்றம் வரும் என்றே இந்த நாள் வரைக்கும் நம்பிக் கொண்டேயிருக்கிறேன் என்பதனை தொடர்ந்து எழுதி வருகிறேன்.

ஆனால் பத்திரிக்கையாளர்களைப் பார்த்ததும் பிடிஆர் மகனுக்கு நியூரான்கள் அனைத்து புது வேகம் எடுத்து விடுவதால் வார்த்தைகள் தடித்து விழ கடைசியில் கீழே உள்ள வலையொளிக் காட்சி வரைக்கும் வந்து நிற்கின்றது.

மூன்று தலைமுறைகளை நோண்ட ஆரம்பித்து விட்டார்கள். 

இனிமேலாவது பத்திரிக்கையாளர்களைக் கண்டால் வாகனத்தை வேறு பக்கம் திருப்பிச் சென்று விட அய்யா தியாகராஜன் அவர்களுக்குக் கோரிக்கை வைக்கின்றேன்.

அடுத்த 12 மாதங்களுக்கு செயல்படுங்கள். பேசாதீர்கள். 

உங்களை நிரூபித்துக் காட்டுங்கள். 

செயல்பாடுகள் பேசட்டும்.

  

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.