அஸ்திவாரம்

Monday, April 05, 2021

உருட்டாதீர்கள். மிரட்டாதீர்கள். அசிங்கமாக மாறாதீர்கள்

என் இனிய தமிழ்ப்பிள்ளைகளே

கட்டளை ஒன்று

நான் விருப்பக்குறியீடு போட்டேன். பகிர்ந்தேன். பலருக்கும் கொண்டு சேர்த்தேன் என்பது முக்கியமல்ல. ஓட்டளிக்கும் நாள் அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று அவசியம் ஓட்டளியுங்கள். உங்கள் விமர்சனங்களை நான் பொருட்படுத்த மாட்டேன். உங்கள் திட்டுகளை கடந்து சென்று கொண்டேயிருப்பேன். உங்கள் ஆத்திரமும் கோபமும் வருத்தமும் உங்களுக்கு வளரும்படி தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருப்பேன். விவாதிக்க கற்று இருக்க வேண்டும். வாசிப்பை தவம் போல செய்தல் வேண்டும். 

விபச்சாரி கண்களுக்குத் தான் பார்ப்பவர்கள் அனைவரும் விபச்சாரிகளாகவே தெரிவார்கள். நீங்கள் விமர்சனம் செய்ய அனைத்து வாய்ப்புகளையும் திறந்தே வைத்திருப்பேன். காரணம் உங்கள் முகத்தை மற்றவர்கள் அறிய. என் நிதானத்தை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள. 

என் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.


Thursday, April 01, 2021

திமுகவினர் ஏன் பொதுமக்களின் நிலத்தை அபகரிக்கின்றார்கள்? நடந்த சம்பவங்கள்?

 நில அபகரிப்பு புகார்

2006-ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சிக்காலத்தில்தான் அக்கட்சியைக் குறித்த மக்களின் மதிப்பீடு அதலபாதாளத்தில் வீழ்ந்தது. நிலத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்த காலத்தில், அக்கட்சியைச் சேர்ந்த பலரும் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். பெரும்பாலும் எல்லா மாவட்டத்திலும் நில அபகரிப்பு வழக்கில் சிக்காத திமுககாரர்களே இல்லை என்ற அளவுக்கு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.