அஸ்திவாரம்

Wednesday, March 17, 2021

வெளியுறவுத்துறையும் ரயில்வே துறையும்.

பிச்சுவா பக்கிரியும், பிளேடு பொறுக்கிகளும் உள்ள இந்திய அரசியல் களத்தில் இவர்களைப் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்து, சுதந்திரமாக பணியாற்ற அனுமதித்த பாரதப் பிரதமர் மோடிஜி Narendra Modiஅவர்களுக்கு ஒவ்வொரு விபரம் தெரிந்த  தமிழ்ப்பிள்ளைகளும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.



இந்தியா என்றால் ஏறெடுத்துப் பார்க்காத நாடுகள், ஏளனமாகப் பார்த்த நாடுகள், திறந்து வீட்டுக்குள் நுழைபவர்கள் இங்கே வந்து போய்க் கொண்டிருந்தவர்களை மாற்றிய மரியாதைக்குரிய திரு. ஜெய்சங்கர் S Jaishankar : The Pride of India அவர்களுக்கு நன்றி. 

ஈழம் என்றால் இங்குள்ளவர்கள் அரசியலுக்காகப் பயன்படுத்தி வந்த சூழலில் ஐந்து பேர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்தி அவர்களை உயிரோடு அழைத்து வந்த பெருமை பாஜக அரசுக்கே சேரும். எல்லை தாண்டும் மீனவர்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வண்ணம் சாதித்த சாதனை வீரர். நீண்ட காலமாக முறுக்கிக் கொண்டிருந்த அண்டை நாடுகளை நட்பு நாடுகளாக மாற்றிய பெருமையும் இவருக்குண்டு. கற்ற கல்வி, பெற்ற அனுபவம், மனத்தூய்மை, ஓய்வில்லா உழைப்பு என்று எல்லாம் சேர்ந்து இன்று இந்திய வெளியுறவுத்துறை இந்திய மக்களின் மனம் கவர்ந்த துறையாக மாறியுள்ளது. அனைத்து மாநில மக்களின் பொது நலத் துறையாகவும் மாறியுள்ளது.

நிலையான கோடீஸ்வர சூட்சும ரகசியத்தின் உண்மைக்கதை

அழுக்கடைந்து, காசநோயாளி போலவே 60 ஆண்டுகளுக்கு மேலாக இனி இந்தத் துறையில் மாற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை என்று இருந்த இந்திய ரயில்வே துறையை மிகக்குறுகிய காலத்தில் மாற்றியதோடு, நம்ப முடியாத சாதனைகளும், ஆச்சரியங்களுடன் உண்மையான லாபத்தோடு நடத்திக் கொண்டிருக்கும் திரு பியூஸ் கோயல்ஜி Piyush Goyalஅவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே என்னைப் பொறுத்தவரையிலும் பெருமை.


9 comments:

  1. அரசாங்கத்தில் காரியத்தை சாதிப்பததற்கு இம்மாதிரி கதைகளை எழுதவேண்டியது அவசியம்தான் . மோடி மாதிரி வேஷதாரி ஆட்களை என் போன்ற வெளி நாட்டு மனிதர்கள் நன்றாக புரிந்து வைத்துளோம் . லடாக்கின் சீன அதிரடிக்கு பிறகு இந்தியாவின் பெயர் நாறுகிறது

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அங்கே செக்கு எண்ணெணெய் கிடைத்தால் கோவணம் கட்டிக் கொண்டு உச்சந்தலையில் வைத்து அழுத்தமாக தேய்த்து சுடுதண்ணீர் (குளிர்காலம் என்பதால்) வைத்து குளித்தால் இப்படியெல்லாம் யோசிப்பதில் இருந்து வெளியே வர வாய்ப்புண்டு. முயற்சித்துப் பாருங்க.

      Delete
  2. Replies
    1. வேல் உருவாக்கிய தாக்கமிது.

      Delete
  3. இன்னமும் உங்களுக்கு சங்கி என்றோ மாட்டு மூத்திரம் குடிப்பவர் என்றோ பட்டம் ஏன் வரவில்லை .

    ReplyDelete
    Replies
    1. அதற்கு இன்று நான் பேஸ்புக்கில் எழுதிய பதிவு உங்களுக்கு பலன் உள்ளதாக இருக்கும் என்றே நம்புகிறேன். கீழே தருகிறேன்.

      Delete
    2. ஒருவர் சாக்கடையில் தடுமாறி விழுந்து விடுகின்றார். அருகில் இருப்பவர் வெள்ளைச் சட்டை அணிந்திருப்பவர் என்ன செய்வார். அட, இவர் நண்பராயிற்றே என்று கை கொடுத்துத் தூக்கி விட முயல்வார்.
      சாக்கடையில் விழுந்தவர் தான் எழுந்து மீண்டு வருவதை விட வெள்ளைச் சட்டை போட்டு இருப்பவரையும் அசிங்கமாக்குவதில் தான் அதிக ஆர்வம் காட்டுவார்.
      காரணம் என்ன?
      என் அசிங்கம் வெளியே தெரியும். ஆனால் நீயும் அசிங்கம் என்று தெரிந்து விட்டால் பொதுவாகத்தான் பேசுவார்கள். எனக்கு வாழ்நாள் முழுக்க அசிங்கம் என்பது ஒரு கலை. சிங்கம் போல அப்பன், ஆத்தா, ஆயி, மகன், பேரன் என்று எல்லோருக்கும் பிடித்துப் போன ஒன்று.
      ஆனால் அசிங்கத்தை வெறுக்கக்கூடியவர்கள் என்ன செய்வார்கள்?
      வெறுத்துப் போய் ஒதுங்கி விடுவார். அல்லது விக்கிற்று போய் இப்படியெல்லாம் இவர்கள் இருப்பார்களா? என்று நொந்து போய் ஒதுங்கிச் சென்று விடுவார்.
      இப்படித்தான் தமிழ்நாட்டில் #தில்லுமுல்லு கோஷ்டிகளின் அரசியல் வளர்ச்சி இருந்தது. இருக்கின்றது. இருக்கவும் போகின்றது.

      Delete
  4. தமிழர்களுக்கு மட்டுமல்ல மொத்த இந்தியர்களுக்கும் மார்வாடி மோசடி விரோதிதான் . உதாரணம் . பெட்ரோல் விலையேற்றம் . அதானி சொத்து உயர்வு . அரசாங்க சொத்துக்களை அடானிக்கு ஒப்படைத்தல் . சீனாவுக்கு தாரை வார்த்தல்

    ReplyDelete
    Replies
    1. வாழும் நாட்டில் உள்ள கலாச்சாரத்தை கற்றுக் கொண்டு உங்கள் பார்வையில் மோசமாக தெரிகின்ற இந்தியாவிற்கு வராமல் இருக்க என் வாழ்த்துகள். இதுவரையிலும் மனதிற்குள் இருக்கும் சாதிய இழிவுகள் கடந்து சாதித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படியே அறிவையும் விசாலமாக்க என் வாழ்த்துகள். அடுத்தடுத்து பாஜக என்ன சாதித்துள்ளது என்று தினமும் ஒரு பதிவு வரப் போகின்றது. படிக்காமல் உங்கள் உடல் மன நலத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.