அஸ்திவாரம்

Sunday, December 20, 2020

இணைய உலகம் 2020

2020/5

என் 33 வயதில் கணினியும் இணையமும் அறிமுகமானது. 35 வயதில் சொந்தமான கணினி வாங்கி பயன்படுத்தும் நிலை உருவானது. அன்றைய விலை ரூபாய் 1,25,000. உறவினர்கள் முதல் நண்பர்கள் அனைவரும் சிரித்தனர். மகள்களுக்கு நகை சேர்க்காமல் எதை வாங்குகிறான்? என்றனர். என் ஆசை என் விருப்பம் இதுவாகவே இருந்தது. 40 வயதில் இணையம் குறித்த புரிதல் உருவானது. கடந்த 11 வருடமாக முழுமையாக உள்ளும் புறமும் பார்த்து விட்டேன்.



இந்த வருடம் மிக மிக அதிகமாகப் பயன்படுத்தி உள்ளேன். பயன்படுத்தும் விதங்களையும் மாற்றியுள்ளேன். பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களையும் கவனித்துள்ளேன். எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டேன். 

செங்கல் கட்டி அலைபேசி முதல் பல விதமான அலைபேசிகள் என்னிடம் வந்து சேர்ந்தாலும் என் மனைவி நோக்கியா என் 73 என்றொரு மாடல் அறிமுகமான போது மனைவி தன் சேமிப்பிலிருந்து அதனை வாங்கிக் கொடுத்தார். அப்போது அதன் விலை ரூபாய் 13,000.  அதனைத் தொலைத்து விட்டேன். எனக்கு நானே தண்டனைப் போலச் சாதாரண வகை அலைபேசிகளையே பயன்படுத்தி வந்தேன்.  சில வருடங்களுக்கு முன்பு சென்னை செம்பரம்பாக்கம் அணை தண்ணீர் சென்னைக்குள் பெருக்கெடுத்து ஓடி வந்து சென்னையைக் குளிப்பாட்டிய காலகட்டத்திற்கு முந்தைய ஒரு வாரத்தில் சென்னையில் நான் இருந்தேன். அப்போது இணையம் வழியாக ரூபாய் 8000 மதிப்புள்ள ஓர் அலைபேசி வாங்கினேன்.  அடுத்த ஐந்து வருடங்கள் எந்தப் பிரச்சனையுமில்லை. அவ்வளவு தரமாக இருந்தது.

நான் அலைபேசியை இணையத்திற்காகப் பயன்படுத்துவதில்லை. பேசுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறேன். இன்று வரையிலும் அப்படித்தான். அதன் மூலம் எழுதத் தெரியாது. பேச்சொலி மூலம் எழுத்தாக மாற்றும் வித்தைகள் தெரிந்தாலும் கணினி முன் அமரும் போது தான் தமிழில் எழுதுகிறேன். இதன் காரணமாகவே நான் பயன்படுத்துகின்ற அலைபேசியின் ஆயுள் காலம் அதிகமானது. 

ஆனால் அலைபேசிகள் என்பது ஆபத்தானது. பயன்படுத்தத் தெரியாதவர்களின் கையில் அது சிக்கினால் அவர்களின் சிந்தனைகளை சின்னாபின்னமாக்கிவிடும் என்பது நான் பார்த்த கவனித்த உண்மை. மகள்களிடம் "செயற்கை நுண்ணறிவு" குறித்து, அதன் செயல்பாடுகள் பற்றி பலமுறை செயல்முறை விளக்கமாகக் காட்டியுள்ளேன். தொழில் நுட்பம் என்பது நம்மை வளர்க்க உதவ வேண்டியது. அதன் பின்னால் சென்று அலைய நேர்ந்தால் உங்கள் தனித்தன்மை போய்விடும் என்பதனை புரிய வைத்துள்ளேன். 

இந்த வருடம் அதிகம் கவனித்தது, ஆச்சரியப்பட்டது, விரும்பியது ட்விட்டர் தளம். காரணம் உலகம் என்பது இங்கு தான் உள்ளது. சர்வதேச பிரபல்யங்கள், நிறுவனங்கள், அரசியல் செய்திகள் இவை மூன்றும் ஒரு பக்கம்.  இந்தியாவின் தேசிய அரசியல், அரசியல் வாதிகள், முழக்கங்கள் மற்றொருபுறம். இவற்றைக் கவனித்தால் போதும் உலகம் உருளும் திசையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இது தவிரப் பொறுக்கிகள், பொறம்போக்குகள், மொள்ளமாறிகள் என்ற கூட்டணி வகையினர் தனி ரகம்.  மேலோட்டமாக தொடர்ந்து கவனித்தால் அவர்கள் பணிபுரியும் இடம் வரைக்கும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். காரணம் அனைவரும் முகமூடி அணிந்து இந்தத் தளத்தில் செயல்படும் கூட்டம்.

மகள்களுக்கு இந்த வருடம் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளத்தை அறிமுகம் செய்து வைத்து எவரை பின் தொடர வேண்டும்? சாதகம் பாதகம் போன்றவற்றைப் புரியவைத்தேன். 

அலைபேசியில் மற்றொரு கொடுமை நோட்டிபிகேசன். உங்களுக்குத் தேவை உள்ளது? தேவை இல்லாதது? என் அனைத்தும் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். சீர் செய்து வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ளத் தெரியாவிட்டால் உங்கள் ஒவ்வொரு நாளும் அதோகதி தான். 

என் மகள்கள் அடிக்கடி என்னிடம் சொல்லும் வாசகமிது.

"விலை உயர்ந்த அலைபேசிகளும், இரண்டு சக்கர வாகனங்களும் பயன்படுத்த நினைக்காதீர்கள். நீங்கள் அதனைப் பயன்படுத்தினால், பயன்படுத்து விதத்தைக் கண்டுபிடித்தவர்கள்  பார்க்க நேர்ந்தால் அவர்கள் தூக்கில் தொங்கி விடுவார்கள்".

"சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்"

5 comments:

  1. இணையத்தோடு இரண்டறக் கலந்துவிட்டவர் தாங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இல்லை. கற்றுக் கொள்ள எழுத மட்டுமே இதனை பயன்படுத்துகிறேன்.

      Delete
  2. அலைப்பேசியும், இணையமும் இல்லாத உலகத்தை இனி காண முடியாது..நகர்புறத்தை விட கிராமங்களிலும் இவற்றின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டே போகிறது.. ஓவ்வொரு முறை விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது நான் கண்ட காட்சிகள் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.. எளிய மனிதனின் வாழ்வில் வெகு விரைவில் ஒன்றாக கலந்து விட்டது..இவைகளினால் பயன்பாட்டினால் நல்லதா?? கெட்டதா?? என ஆராய்ச்சி செய்ய முடியவில்லை..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நிர்வாக வசதிகளில் நன்மை பயக்கும். மக்கள் மனதில் ஒரு அழிவுக்குப் பின்னால் நிதானம் வரும்.

      Delete
  3. // விரும்பியது ட்விட்டர் தளம். காரணம் உலகம் என்பது இங்கு தான் உள்ளது...//

    ஹா... ஹா.... Welxome First std..

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.