அஸ்திவாரம்

Friday, December 18, 2020

மீண்டும் தொடங்கவும்.

 




2020 / 3

நம்பமுடியாத பேரழிவு நடந்து முடிந்த நாட்டில் கவனித்துப் பாருங்கள். அதன் பிறகு அங்கு வாழ்ந்த மக்களின் மனோநிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் உருவாகும். நல்ல உதாரணம் ஜப்பான்.  கொரானா அதிகம் பாதிக்காத நாடுகளில் ஜப்பானும் ஒன்று. காரணம் மக்களின் மனோபாவம். அரசு அறிவிப்பதற்கு முன்பே தங்கள் கடமைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட்டார்கள்.  முதிர்ந்த எண்ணங்களை நாம் பக்குவம் என்று அழைக்கின்றோம்.




அந்தப் பக்குவத்தை இந்த வருடம் முழுக்க உணர்ந்தேன்.  முதல் மூன்று மாதங்கள் எங்கும் செல்ல வாய்ப்பில்லை. சைவ மிருகங்கள் போல உண்பது உறங்குவது என்பதற்குள் வாழ்க்கை சுருக்கியது. அடுத்த மூன்று மாதங்கள் கட்டுப்படுத்தப்பட்ட அளவீடுகள் என்றாலும் பயத்தின் அடிப்படையில் பயணத்தைக் குறைத்தேன்.  இதில் விளைந்த நன்மை என்னவெனில் இதுவரையிலும் செய்த பாவங்கள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்பட்டது. ருசி என்ற வார்த்தை மறந்து பசிக்கு உணவு என்ற கொள்கைக்குள் வாழ்க்கை வந்து நின்றது.

தேடித் தேடி வாங்கித் தின்ற பொரித்த உணவுகள், நமக்குச் சேராது என்று தெரிந்தும் ருசிக்காக வாங்கி உண்ட உணவுகள், தேவையில்லாத பழக்கங்கள் என்று ஒவ்வொன்றையும் மறு சீராய்வுக்கு உள்ளாக்கும் சூழலை 2020 அறிமுகப்படுத்தியது.  இறுதியில் உன் வயது, உன் வாழ்க்கை, உன் ஆரோக்கியம் என்பதற்கு எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தந்து 2020 விடைபெறத்  தயாராக உள்ளது.

ஆறு மாதங்களுக்குப் பின்னால் வந்த ஊடகச் செய்திகளில் நான் அதிகம் கவனித்த விசயம் என்னவெனில் குடும்ப வன்முறை. அதுவும் எளிய மனிதர்கள் தொடங்கி வசதி படைத்த மனிதர்கள் வரைக்கும் ஒரே வீட்டுக்குள் வாழ்ந்து வந்த போதிலும் கொரானா உருவாக்கிய தாக்கத்தால் ஒன்றாக, நாள் முழுக்க வீட்டுக்குள் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உருவாக்கிய காரணத்தால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணங்களும் வெளியே வர வர ஒவ்வொருவரின் மிருகக் குணங்களும் வெளியே வரத் துவங்கியது.  பாதிக்கப்பட்ட பலரின் பேட்டியைப் படித்துக் கொண்டே வந்த போது மனிதர்கள் அடிப்படையில் விலங்கினங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல. இன்னமும் அதே விலங்கின குணாதிசயங்களுடன் வாழ்பவர்கள் தான் என்பதனையும் புரிந்து கொண்டேன்.

வீட்டில் தொலைக்காட்சி இல்லை. நெட்ப்ளிக்ஸ் அறிமுகமாகி, அது மறைந்து அதற்குப் பின்னால் ஹாட்ஸ்டார் வந்து அத்துடன் அமேசான் ப்ரைம் வந்து சேர்ந்தது. மகள்கள் தினமும் ஒன்று என்று கங்கணம் கட்டிப் பார்த்தார்கள். பல மொழிகள் அறிமுகமானது. தமிழ்த் திரையில் கதாநாயக பிம்பம் சரிந்து தொழில்நுட்பத்துடன் கூடிய கதைகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பது? இந்த வருடம் எங்களுக்கு அறிமுகமானது.

புத்தகங்கள், தினமும் வரும் செய்தித்தாள்களுடன் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கியிருந்தாலும் தலைமுறை இடைவெளியில் முழுமையாக மின்னணு சார்ந்த தாக்கத்தை நாம் நினைத்தாலும் தடுக்கவே முடியாது. அது அணை போட முடியாத காட்டாறு என்பதனையும் உணர்ந்து கொண்டேன்.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உரையாடல் களம், உள்ளன்புடன் பரஸ்பரம் பகிர்தல் என்று எல்லாமே குறைவில்லாமல் நடந்து பணத்திற்கும் தினசரி வாழ்க்கைக்கும் எவ்விதத் தொடர்பில்லை. நம் வாழ்க்கை செயல்பாடுகள் என்பது நம் மனதோடு தொடர்புடையது என்று திகட்டத் திகட்ட மகிழ்ச்சியைத் தந்து 2020 ஆண்டை எந்தக் காலத்திலும் என்னாலும் மறக்கவே முடியாது.

உலகத்தை மாற்றிய விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், சமூக ஆளுமைகள் அனைவரும் செய்த காரியங்களில் மிக முக்கியமானது, அவர்கள் அதுவரையிலும் செய்த காரியங்கள் அனைத்தையும் மறந்து, இழந்து போய் நின்ற சமயத்தில் அவர்களுக்குள் சொல்லிக் கொண்ட இரண்டு  வார்த்தை

மீண்டும் தொடங்கவும்.

2020

டார்லிங் மஞ்சுளா

20 comments:

  1. திகட்டத் திகட்ட மகிழ்ச்சி...வாழ்வின் தேவை இதுதான்.

    ReplyDelete
    Replies
    1. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

      Delete
  2. மகிழ்ச்சியே நிறைந்திருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நிறைந்து இருக்கட்டும்.

      Delete
  3. // நம்பமுடியாத பேரழிவு நடந்து முடிந்த நாட்டில் கவனித்துப் பாருங்கள். //

    ஒரு இவறல் ஐந்து எப்படியெல்லாம் சட்டம் இயற்றி உள்ளது என்று...?!

    மற்றவை பிறகு...

    ReplyDelete
    Replies
    1. சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும்?

      Delete
  4. ஐந்து என்றால்

    அதை ஒற்றாடல் செய்யும் (நீங்கள் முதன்மையாக) அனைவரும் யார்...?

    கேவலம்...

    ReplyDelete
    Replies
    1. மாற்றங்களை எதிர்கொள்ள பழக வேண்டும்.

      Delete
  5. ஒரு நாட்டின் சீரழிவுவிற்கு துணை போவதை விட...

    சை...

    // கேட்பது தவறு... கொடுப்பது சிறப்பு... //

    ReplyDelete
    Replies
    1. யாரு சித்தரே கொடுக்குறாங்க. நாம இரண்டு பேரும் தான் நேரம் காலம் பார்க்காமல் வள்ளல் போல கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். உண்மை தானே?

      Delete
  6. எங்கே செல்லும் இந்த பாதை (நிறுவனம்)
    என நான் !!!

    எப்போது தான் முழு மாத சம்பளம் அனுப்புவீங்க
    ஏக்கத்தில் மனைவி !!!

    அடுத்த முறை கொரனா வந்தாலும் விடுமுறை
    கிடைக்குமா எதிர்பார்ப்பில் மகன் !!!

    மாஸ்க் போட்ட மனிதர்களை கண்டவுடன்,
    விழுந்து விழுந்து சிரிக்கும் இளைய மகள்!!!

    என்ன ஆட்டம் ஆடுனீங்க!!! என புன்முறுவல்
    பூக்கும் இயற்கை!!!

    என ஒரு மறக்க முடியாத ஆண்டு 2020..
    இதுவும் கடந்து போகும்!!!

    ReplyDelete
    Replies
    1. கவிதை அல்லது வசனம் நன்றாக உள்ளது யாசின்.

      Delete

  7. ////நம்பமுடியாத பேரழிவு நடந்து முடிந்த நாட்டில் கவனித்துப் பாருங்கள். அதன் பிறகு அங்கு வாழ்ந்த மக்களின் மனோநிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் உருவாகும். நல்ல உதாரணம் ஜப்பான்.///

    பேரழிவால்தான் மக்கள் மனோநிலையில் மாற்றம் ஏற்படும் என்றால் சீக்கிரம் இந்தியாவில் பேரழிவு ஏற்படட்டும் அப்போதுதான் இந்திய மக்களின் முக்கியமாக சங்கிகளின் மனோ நிலையில் மாற்றம் ஏற்படும், இந்த பேரழிவிற்கு ஆரம்ப சுழி போட்டு ஆரம்பித்து வைத்தவர் மோடிஜியை பாராட்டுவோம் அவரால்தான் இந்த நாடு நல்ல நிலைக்கு வரும்

    ReplyDelete
    Replies
    1. 2020 நினைவுகள் இது. எந்த இடத்திலும் அரசியல் எழுதவே இல்லை. உங்களை அறியாமல் உங்கள் அடிப்படை குணாதிசியத்தை வெளிப்படுத்தி விடுறீங்க. மகிழ்ச்சி.

      Delete

  8. என்னை பொருத்தவரையில் "2000 ஆம் ஆண்டு ' ஆண்டு போல அல்லாமல் மாதம் போல மிக வேகமாக ஒடிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் தான் இங்கே அவஸ்த்தைப்பட்டோம். இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லை.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.