இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகாலை நடைபயிற்சியின் போது சாலையில் நடந்து சென்ற போது அந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு மினிவேன். அதில் ஒருவர் சுத்தமான வெள்ளுடை அணிந்தவருடன் ஓர் ஒட்டுநர் ஓர் உதவியாளர் இரண்டு கூலியாட்கள். சாலை முழுக்க கொடிகள் ஊன்றிக் கொண்டிருந்தார்கள். தார்ச் சாலையின் ஓரத்தில் பத்தடிக்கு ஒரு கொடி ஊன்றப்பட்டு அவர்கள் நகர்ந்து கொண்டேயிருந்தார்கள்.
அப்போது தான் பின்பக்கம் திரும்பிப் பார்த்தேன். ஏறக்குறைய அவினாசி தொடங்கி ஏழு கிலோ மீட்டர் தொலைவு முழுக்க இந்தக் கொடியை நட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பதே புரிந்தது. ஒரு நீளமான கடப்பாறை. ஒரு ராடு போன்ற கொடிக்கம்பம். அதில் கொடி. அதில் ஒரு ப்ளெக்ஸ் போர்டு உருவம். ஒவ்வொன்றிலும் விவசாயியை விதமான படங்கள். வெவ்வேறு விதமான வாசகங்கள்.
எந்த இடத்திற்குச் சென்றாலும் கணக்கீடு போட்டுப் பார்ப்பது வாடிக்கை. ஆள் கூலி, வண்டி வாடகை, வண்டிக்குரிய எரிபொருள், ஒரு நாள் கூலியாள் செலவு, ப்ளெக்ஸ் போர்டு செலவு என்று எப்படிக் கணக்கிட்டாலும் ஒரு கொடிக்கு ரூபாய் 500 வந்தது.
இன்று மாலை எங்கள் ஊருக்கு வரும் வெசாயிக்கு வரவேற்பு கொடுக்க வடக்கு தொகுதி முழுக்க புனிதம்மா காலத்தில் பதவி பறிக்கப்பட்டவரும், இடையில் அணி மாறி போணியாகாததால் மீண்டும் வெவசாயி பக்கம் உள்ளே வந்த முன்னாள் சமஉ வும் பங்கிட்டு செலவு செய்து இருந்ததைக் கவனிக்க முடிந்தது. நான் நடந்த வந்த சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கொடிகளின் செலவுகளையும் அவினாசி முதல் கட்டப்பட்டு இருந்த கொடிக்கான செலவுகளும் பல பத்து லகரங்களைத் தின்று செரித்து இருக்கும். ஏற்கனவே இதில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டுப் பல பத்துக் கோடிகளை இழந்து நுரையீரலும் இதயமும் சத்தியாகிரகம் செய்து மீண்டு வந்து இப்போது மீண்டும் தனக்கான இடத்தை அடையப் போராடிக் கொண்டிருக்கின்றார்.
அத்துடன் இது போன்ற மக்கள் பணியில் ஈடுபட்டு சிறு தொழிலாளர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிக் கொண்டிருக்கின்றார். தாயம்மா ஆட்சிக்காலத்தில் வருகை என்றால் கக்கூஸ் கூட சந்தனத்தால் கழுவித் துடைக்க வேண்டும் என்பது எழுதப்படாத கொள்கையாகவே இருந்தது.
இப்போது வெவசாயி காலத்தில் அந்த அளவுக்கு மோசமில்லை என்பதே தமிழ்ப்பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி.😀
ஓஒ என குறளில் எங்கெல்லாம் வருகிறது...? ஏன் வருகிறது...? மோசம் என்பதை அறிவதில் ஒரு பகுதியாக இருக்குமோ...?
ReplyDeleteவிளக்கம் அறியத் தாருங்கள்.
Deleteஎப்படியோ, அடித்து வைத்திருக்கும் பணத்தில் கொஞ்சமாவது இப்படி வெளிவந்தால் சரி...!
ReplyDeleteசெலவளித்தவர்கள் ஆனந்தன் சிவசாமி. இருவரும் பல கோடிகளை இழந்து அடுத்த முறை சீட்டுக்காக அலைந்து கொண்டிருப்பவர்கள்.
Deleteலாபமில்லாத வியாபாரமா என்ன!
Deleteநன்றியை வெளிப்படுத்த தொண்டர்கள் செய்யும் நன்றிக்கடன்.
ReplyDeleteஇதற்குப் பெயர் தான் நேர்மறைப் பார்வை. அருமை.
Deleteஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண்
ReplyDeleteதாஅம் இதன்பட் டது
(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1176)
பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று.
('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)