தங்களுக்கென்று ஓர் சொந்த வீடு என்பது வெறும் கனவல்ல. அது நடுத்தரவர்க்கத்தின் லட்சியம், சமூக அங்கீகாரம். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் மாட்டிக் கொண்டு அவஸ்த்தைப்படுபவர்கள் தான் அதிகம். அவஸ்த்தைப்பட்டு தடம் மாறியவரின் உண்மைக் கதையிது. மனைவியை இழந்து, தொழில் இழந்து, மொத்த வாழ்க்கையையும் இழந்த ஒரு மனிதனின் கதையிது.
இதில் சாயப்பட்டறை அதிகாரி, நிற அடர்த்தி, சாரல், அதனால் இழப்பு எனப் பலவற்றும், இதே துறையில் 25 வருடம் இருந்ததால் நன்றாகவே புரிகிறது அண்ணே...
ReplyDeleteஇதன்பின், முதலில் குடும்பத்தின் அகலக்கால் எண்ணம் தவறு என்பதா...? அல்லது முதலில் மனதின் தரம் குறைந்து, மூலப்பொருள் வாங்கும் தரத்தில் கை வைத்தது தப்பு என்பதா...?
துணைக்கு மேலும் மேலும் தப்பு செய்து இப்படியெல்லாம் ஆனது, மிகவும் வருத்தம் அளிக்கிறது...
பேச்சு முடிவதற்குச் சற்று முன்னே காலத்தைப் பற்றிச் சொல்லும் போது, காலமறிதல் குறள்கள் கண்முன்னே வந்தாலும், அதில் ஒன்று : பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு.(482)
ஆமா, 5 முதலாளிகளின் கதை போல, "50 மனிதர்களின் கதை" எனும் மின்னூலுக்கு எப்போது எனது தளத்தில் ஒரு பதிவு எழுத முடியும் அண்ணே...?
வேதனை
ReplyDelete