நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதற்கும் மேலை நாகரிகம் எப்படியுள்ளது என்பதற்கு சில உதாரணங்கள்.
இந்த நண்பர் உள்ளூரில் தான் இருக்கின்றார். சாதி அபிமானம் உள்ளவர். மோடி அரசினை எதிர்ப்பவர். ஆனால் நேரிடையாக எதிர்க்க மாட்டார். எதிர்ப்பு வரும் திசையில் இவர் கருத்து இருக்கும். என் பதிவுகளில் மோடி ஆதரவு வரும் பதிவுகளைப் பார்த்து மின் அஞ்சல் வழியே பெற்றுக் கொண்டிருந்தவர் நிறுத்திக் கொண்டு விட்டார். ஒருவர் வெளியேறும் போது மின் அஞ்சல் வைத்து யூகித்துக் கொள்வேன். ஒன்றும் பதில் அளிப்பதில்லை. ஏன் இவர் பாஜக எதிர்ப்பில் தீவிரமாக இருக்கின்றார்? என்று அவர் நண்பர்களிடம் கேட்ட போது அவர் செய்து கொண்டிருந்த தொழில் அனைத்தும் நசிந்து விட்டது. நிறுவனத்தை நிறுத்திவிட்டார் என்று சொன்னார். வளர்ந்த கதை எப்படி? என்று கேட்ட போது அனைத்தும் இரண்டாம் நிலை காரியங்கள் என்று விரிவாக எடுத்துரைத்தார்.
ஆனால் உரையாடல் முதல் அறிவுரை வரை ஈரெழு பதினான்கு உலகத்திற்கும் தேவைப்படும் அளவிற்கு இருக்கும். சொந்த வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலும் ஓரளவுக்கேனும் குறிப்பிட்ட கொள்கைகள் கடைப்பிடிக்காத பட்சத்தில் நம் எண்ணங்கள் அனாதையாகத்தான் இருக்கும். நான் யூ டியூப் ல் தொடர்ந்து செயல்படப் போகின்றேன் என்று தகவல் வந்ததும் மறக்காமல் விமர்சனம் ஒன்றைத் தந்தார்.
"அமேசான் வருமானம் குறைந்து விட்டதா? அடுத்து இதுவா"? என்றார்.
**********
மற்றொரு நண்பர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். ஆனால் என்னைத் தொடர்ந்து கவனித்து வருபவர். யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதித்தவர் என்று நண்பர் சொன்னார். அவர் எண் ஏற்கனவே நாம் சேமித்து வைத்திருந்தேன். ஒரு முறை அழைத்தார். எடுப்பதற்குள் கட் செய்து விட்டார். நான் அவர் தெரிந்தவர் தானே என்று நாலைந்து முறை அழைத்த போதும் எடுக்கவில்லை. மற்றொரு நண்பரிடம் சொல்லி அவர் என்னை அழைத்தார்? என்று கேட்டுச் சொல்லுங்கள் என்ற போது அதன் பிறகே அவர் சுதாரித்துக் கொண்டு மீண்டும் எதுவும் தெரியாதது போல அழைத்தார்.
"சும்மா தான் அழைத்தேன். நிறைய எழுதித் தள்ளிக் கொண்டே இருக்குறீங்க? எப்படி நேரம் கிடைக்கின்றது"? என்றார். "படிப்பீர்களா"? என்று கேட்டேன். "இல்லை. ச்சும்மா பார்ப்பேன்" என்றார். "அப்படியா? நீங்கள் தான் யூ டியூப் தளம் குறித்து அதிகம் கற்றவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆடியோ புக் மூலம் நிறைய சாதித்து உள்ளதாக கேள்விப்பட்டேன். அது குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்" என்றேன். போனவர் போனவர் தான். அவருக்குத் தெரிந்த நெருக்கமான நண்பர்களிடமும் அவர் இப்படித்தான் இருக்கின்றார் என்று கேட்டுத் தெரிந்த போது மனம் இயல்பான நிலைக்கு வந்தது.
*********
இவர் ஒரு பெண்மணி. கனடாவில் இருக்கின்றார். ஈழத்தமிழர். இவரைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு தமிழரின் வாழ்க்கையை சின்னாபின்னாபடுத்தியவர் என்பது வரைக்கும் நான் அறிந்து வைத்திருந்தேன். அவர் என் பேஸ்புக் பதிவுகளை முதன்மையாகப் படித்துக் கொண்டிருக்கின்றார் என்று நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டேன். ஆனால் ஒரு நாள் கூட ஒரு லைக் ஒரு விமர்சனம் ஒரு ஷேர் கூடச் செய்தது இல்லை. நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டே தான் வந்தேன். திடீரென்று அவரை நட்பு விலக்கம் செய்தேன். அடுத்த நாள் என் பதிவுகளையும் மின் அஞ்சல் வாயிலாகப் படித்துக் கொண்டிருப்பார் போல. அந்த வசதியையும் நீக்கியதாக எனக்கு தகவல் வந்தது. அதாவது எக்காரணம் கொண்டும் உனக்கு அங்கீகாரம் கொடுக்கவே மாட்டேன். ஆனால் நீ எனக்கு கற்றுத் தர வேண்டும் என்று புனித கொள்கை உடையவராக இருப்பவர் என்ற அவரின் நல்ல மனம் அப்போது தான் புரிந்தது. இப்போது கூட உள்ளே வந்து எட்டிப் பார்ப்பார். அவரும் இதனை வாசிப்பார் என்றே நம்புகிறேன்.
ஏன் இதனை எழுதுகிறேன்?.
கடந்த இரண்டு வாரமாக ஒரு தளத்தில் தொழில் சிந்தனை குறித்து தொடர் எழுதிக் கொண்டு வருகிறேன். நான் ஒருவரை நம்பி இறங்கினால் நூறு சதவிகிதம் அர்ப்பணிப்பு உணர்வோடு இறங்கி காரியத்தை முழுமையாக முடித்துக் கொடுக்கும் வழக்கம் உள்ளவன். அது குறித்த லாப நட்டக் கணக்கு எதுவும் பார்ப்பதில்லை. சில வாரமாக நண்பர்கள் அந்த தளத்தில் எழுதுங்கள் என்றார்கள். நம்பிக்கையுடன் தொடங்கினேன். நம் வேலை சூழல் எப்படியிருக்குமோ? என்று ஐந்து அத்தியாயங்களை இரண்டு நாளில் எழுதியும் அனுப்பி விட்டேன். மிக அதிகமான நபர்களால் வாசிக்கப்பட்ட கட்டுரையாக இருந்தது. ஆனால் மனித மனம் எப்படிப்பட்டது? எண்ணிக்கையில் அதிகம். ஆனால் முன்னிலைப்படுத்துவதில் பின்னால் போய் (தொழில் நுட்பக்குழு செய்யும் கைங்கரியம்) நின்றது. அழைத்துச் சொன்னேன். காரியம் நடப்பதாகத் தெரியவில்லை. அவரவர் விருப்பங்கள் தான் இங்கே முன்னிலை வகிக்கின்றது என்பதனை புரிந்து கொண்டேன்.
இந்தியாவில் ஒரு பிரச்சனை என்னவெனில்
சாதி மதம் இரண்டும் தான் எல்லா இடங்களிலும் ஆட்சி செலுத்துகின்றது.
உங்கள் திறமை என்பது இவர்களுக்கு குப்பை.
அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், கைப்பற்றத் துடிப்பவர்கள் அனைவரும் இப்படித்தான் நம்மைக் கையாள நினைக்கின்றார்கள். இதன் காரணமாகவே திறமையுள்ளவர்கள் அனைவரும் வெளிநாட்டிற்கு ஓடவே நினைக்கின்றார்கள். இது போக ஒவ்வொரு மனிதர்களின் மனமும் இதற்கு மேல் வக்கிரமாக மாற வழியில்லை என்கிற அளவிற்கு மிக மிக மோசமாக மாறியுள்ளது. காலை முதல் இரவு வரை பொறாமை எண்ணத்தில் தான் உழல்கின்றார்கள். தன்னைத் தவிர வேறு எவரும் இங்கே வாழ்ந்து விடக்கூடாது என்பதில் தொடங்கி அடுத்தவரைக் கவனிப்பது கண்காணிப்பது வரைக்கும் அதையே தங்கள் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தெய்வ பக்திக்கு எந்தக்குறையுமில்லை. எந்தத் தெய்வங்கள் இவர்களை வந்து திருத்தப் போகின்றது.
வாழ்வின் கடைசிப்பகுதியில் இவர்களுக்கு இவர்களின் மனம் அளிக்கும் தண்டனை உடல் நலக்குறைபாடு. கவனித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும். அமைதியாக உங்கள் கடமைகளை, பணிகளை, விருப்பங்கள் எந்தத் தடை வந்தாலும் இறங்கி முழுமூச்சோடு செயல்படுத்த முடியும் என்றால் நிச்சயம் உங்கள் கதவுகளை எவராலும் மூட முடியாது.
மைக்ரோசாப்ட், கூகுள், ஃபேஸ்புக் மூன்று உலக அளவில் வென்றதற்கு முக்கியக் காரணம் அவர்களின் பொதுப் போட்டியை உருவாக்கியதும் அதில் அவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை உள்ளே நுழைக்காமலிருந்ததுமே முக்கியக் காரணம். யார் வேண்டுமானாலும் வரலாம். உனக்குத் திறமை இருந்தால் போதும் என்பதில் தான் அவர்களின் வெற்றியும் ட்ரில்லியன் டாலர் லாபம் என்ற இலக்கையும் அடைந்துள்ளார்கள்.
இன்று யூ டியூப் அனுப்பி உள்ள முதல் வாழ்த்து செய்தி.
நண்பர்களுக்கு நன்றி.
எல்லாவற்றையும் விடச் செயல் முக்கியம். செயல்பட்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தோற்று இருக்கலாம்.
தங்கள் செயல்பாட்டைப் பல காரணங்களால் நிறுத்தியும் இருக்கலாம். ஆனால் நிச்சயம் அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார்கள்.
கவனித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
|
ஆம், நம் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் தான்... அவர்களின் வேகமான புரிதலும், அதே வேகத்துடன் செயலாக்கமும் திகைக்க வைக்கிறது...!
ReplyDeleteஅழகப்பர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற என் தட்டெழுத்து மாஸ்டர் ஒரு முறை சொன்ன வாசகம் இன்னமும் என் மனதில் உள்ளது. உன் காலத்தில் கல்வியில் 75 சதவிகிதம் தரம் இருந்தது. 25 சதவிகிதம் தொழில் நுட்பம் இருந்தது. இப்போது 25 சதம் தரம் உள்ளது. 75 சதவிகிதம் தொழில் நுட்பம் உள்ளது. நீ தான் புரிந்து கொள்ள வேண்டும். இது கால மாற்றம் என்றார்.
Delete"மைக்ரோசாப்ட், கூகுள், ஃபேஸ்புக் மூன்று உலக அளவில் வென்றதற்கு முக்கியக் காரணம் அவர்களின் பொதுப் போட்டியை உருவாக்கியதும்" முழு தவறு . முதலாளித்துவத்தின் முதன்மை தன்மையே அடுத்தவர்களை வளர விடாமல் தான் மட்டும் வளர்வது . மைக்ரோசாப்ட் மேல் உள்ள வழக்குகள் உங்களுக்கு தெரியாதா .
ReplyDeleteமோடியை ஆதரிக்கும் சங்கிகள் பெரும்பாலானவர்கள் ஜாதிய மனப்பான்மை உடையவர்களே . மோடியை நீங்கள் ஆதரிப்பதற்கும் அதுதான் காரணமா
எனக்கு தெரிந்து இந்தியா பிரதமர்களிலேயே கேவலமான பிரதமர் மோடி மட்டும்தான் . நாம் அடுத்தவர்களை அவர்களின் செயல்களை வைத்து மதிப்பிட வேண்டும் . வெற்று கோஷங்களை வைத்து அல்ல
இந்தியாவில் ரிலையன்ஸ் முதல் தமிழகத்தில் சன் டிவி வரைக்கும் அனைவர் மேலும் வழக்கு உள்ளது. என்ன செய்யலாம் ராமா. நீங்கள் கம்யூனிஸ்ட் ஆதரவாளர் தொனியில் எழுதியிருக்கீங்க என்று நினைக்கிறேன். மோடியை ஆதரிப்பவர்கள் உங்கள் வார்த்தையில் எழுதுவதைப் போல இங்குள்ள கட்சி யை ஆதரிப்பவர்கள் திருட்டுத்தனத்தை ஆதரிப்பவர்கள் என்பீர்களா? நானும் திருட துணை புரிவேன் என்பீர்களா ராமா?
Deleteதிருடர்களை தெரிந்தே ஆதரிப்பவன் ஊக்குவிப்பவன் எல்லோரும் குற்றவாளிகளே .
Deleteமுதலாளித்துவத்தில் போட்டியில்லாமல் செய்வது ஒரு பண்பு . அதை தவிர்க்க முடியாது . "அவர்களின் பொதுப் போட்டியை உருவாக்கியதும்" வார்த்தைகள் தவறு என்று சொன்னேன் . ரிலையன்ஸ் , சன் , அதானி போன்றவர்களை மைக்ரோசொப்ட்டுடன் ஒப்பீடு செய்வது தவறு . சன் அதானி போன்றவர்களிடம் எந்த எதிக்ஸ்சும் கிடையாது
நண்பா தொழில் என்றால் எதிக்ஸ் இல்லாமல் இருப்பவர்கள் தான் இப்போதைய சூழலில் வாழ முடியும். சம்பாரிக்க முடியும் என்கிற நிலையில் தான் ஒவ்வொரு தொழிலும் உள்ளது என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். மக்களும் விளம்பரம் ஒன்றே போதும். அதுவே தரம் என்றும் நம்புகின்றார்கள். யாரை குறை சொல்வது?
Deleteஉங்கள் அன்புக்கு பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதமக்குத் தெரிந்ததை அடுத்தவர்களுக்குச் சொல்லித் தருவதில் எந்த தவறும் இல்லை என்பதை நான் எப்போதும் சொல்வதுண்டு. ஆனால் பலரும் இப்படி இருப்பதில்லை. தெரிந்து கொள்வோம் எனக் கேட்டால் பதில் சொல்லாதவர்கள் பலரை பார்த்துவிட்டேன்.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்.
நன்றி
Delete