வருகின்ற 1ந் தேதி 10,11,12 மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கப்படும் என்பதற்கு முன் பின் நமது மறத்தமிழன் செங்க்ஸ் அவர்கள் பேசிய பேச்சின் தொகுப்பு.
1. 1ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
2. மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது.
3. சந்தேகம் கேட்க மாணவர்கள் வரலாம்.
4. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வர வேண்டும்.
5. கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்கலாம்.
6. பெற்றோர்கள் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்.
(பின்குறிப்பு - எனக்கு இன்னும் நாலைந்து மாதங்களைக் கடத்துவதற்குள் எத்தனை எலும்பிச்சைபழம் வாங்கி தலையில் தேய்த்துக் கொண்டேயிருப்பது என்று குழப்பமாக உள்ளது)
••••••••
1. திறமை இருக்கும் வரையில் கடைசி வரைக்கும் உழைப்பதில் தவறில்லை.
2. சந்தைக்கு தேவையாக இருக்கும் வரைக்கும் நாம் உழைப்பதில் தவறில்லை.
எப்போது ஓய்வெடுக்க வேண்டும்? எப்போது நாம் ஒதுங்க வேண்டும் என்பது இங்கே எவரும் யோசிப்பதே இல்லை. கடைசி நாள் வரைக்கும் ஒவ்வொருவரும் இங்கே ஓடிக் கொண்டே தான் இருக்கின்றார்கள். இருப்பவர்கள், இல்லாதவர்கள் பாரபட்சமின்றி.
50 வருடங்கள். நான்கு தலைமுறைகள் தொடர் ஓட்டம். தவிர்க்க முடியாத ஆளுமை. அனைவரும் விரும்பும் வண்ணம் வாழ்ந்த குழந்தை மனம். தான் பிறந்த ஊரில் சாதி வித்தியாசம் பார்க்காமல் இருதய அறுவை சிகிட்சைக்கு பெருந்தொகை வழங்கி உயிரைக் காப்பாற்றிய பெருந்தன்மை என்று பல நல்ல பக்கங்கள்.
ஒவ்வொரு இசைக்கச்சேரி முடிவிலும் நல்லுரைகள். துரோகம் செய்தவர்களையும் மன்னித்த பெருந்தன்மை வாழ்க்கை.
ஆனால் ஐந்து வருடத்திற்கு முன்பே அமைதியாக ஓய்வெடுக்கப் போகின்றேன் என்று இதே தாமரைப் பாக்கம் வந்து சேர்ந்திருப்பார் எனில் அடுத்த பத்து வருடங்கள் இன்னமும் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. இதே மண்ணில் பறவைகளுடன் மரங்களுடன் உரையாடி காலாற நடந்து இன்று வரையிலும் நம்முடன் வாழ்ந்திருப்பார்.
மருத்துவமனை ஐம்பது நாட்களுக்கு நிச்சயம் ஒரு கோடி அளவில் வசூலித்து இருப்பார்கள். இதற்காகத்தான் இத்தனை நாளும் விடாமல் உழைத்திருப்பார் போல.
•••••••
நம் ஆளுமையை வளர்க்க உதவும் விசயங்களில் நம்மால் கவனம் செலுத்த முடியாததும், உருவான கவனச் சிதறல்களும் சேர்ந்து நம் குணாதிசயங்களில் பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றது. ஆளுமைத் திறனுடன் வளர வேண்டிய நம் சிந்தனைகளும் மாறிவிடுகின்றது. என்பதனை உணரும் போது வாலிப பருவத்தைக் கடந்து இருப்போம்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.