அஸ்திவாரம்

Friday, June 19, 2020

கருமுத்து தியாகராஜன் செட்டியார்

கருமுத்து #தியாகராஜன்_செட்டியார், 

June  16, 1893 -July  29, 1974)

கருமுத்து தியாகராஜன் செட்டியார் கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர்.

வித்தகத்தால், வியத்தகு செயலால் ,
மேன்மை தரும் அறிவால்,
மேதினியில் நின் பெயர் நிலைத்திட்டது.



அயராத உழைப்பால்,அனுதினமும் சிந்தித்த தொழிலால்,
ஆலை அரசர் என்று பெயர் பெற்றீர்.
கவின் மிகு கட்டிடங்கள், கண்ணில் நிற்கும் கலைப் பொருட்கள்,
கண்டவர் வியக்கும் ஓவியங்கள், அத்தனையும் போற்றி காத்ததால்,
கலைத் தந்தை என்று பெயர் பெற்றீர்.

சேர்த்து, படித்து, காத்த நூல்கள் ஆயிரமாயிரம்!
கல்விப் பணியென்று, பள்ளி முதல் உயர் கல்விக் கல்லூரி வரை,
செய்து வைத்த தர்மம் எத்தனை, எத்தனையோ!
தொட்டுச் சிறக்காத தொழில் இல்லை.

வாழ்ந்த நகர் பெயர் கொண்டு ,
மதுரை வங்கியும்,காப்பீட்டு நிறுவனமும் கண்டு,
பலர் வாழ்வில் ஒளி ஏற்றிய உண்மை வள்ளல்.

ஏற்றி வைத்த தீபம், அணையாத சோதியாய்
அன்றும், இன்றும், என்றும் காத்து வளர்ந்தோங்கும்
வளம் யாவும் மலரும் உன்னால் பயன் பெற்றவர் வாழ்வு.

ஆத்திக்காடு தெக்கூரில் கருங்குளத்தார் வீடு எனப் புகழ் பெற்ற குடும்பத்தில் முத்துக்கருப்பன் செட்டியார் -

வினைதீர்த்தாள் ஆச்சியின் பத்தாவது மகனாகத் தோன்றினார்.இவர் இளமையில் இலங்கையில் கல்வி பயின்று வர, அங்கேயே "Morning Leader" என்னும் ஆங்கில இதழில் செய்தியாளராகவும், பின்னர் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர். தமிழகம் வந்த பிறகு குஜராத்தைச் சேர்ந்த கல்யாணம் ராம்ஜி என்பவரோடு இணைந்து மதுரையில் மீனாட்சி ஆலையைத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பின் மதுரையில் தங்க விரும்பாத ராம்ஜி, ஆலையின் முழுப்பொறுப்பையும் தியாகராசரிடம் ஒப்படைத்துவிட்டு, 1921-ல் குஜராத்திற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு இந்த
ஆலையை வளர்த்ததோடு தமிழகமெங்கும் பல்வேறு ஆலைகளைத் தொடங்கி ஒரு கட்டத்தில் 16 ஆலைகளை நிர்வாகித்து, "ஆலை அரசர்"என அழைக்கப்பட்டார்.

தொடக்கத்தைல் தமது ஊரில் தம் வாழ்க்கைத் துணைவியாரின் பெயரில் "டஸ்ரீ விசாலாட்சி கலாசாலை" என்னும் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கினார். தொடர்ந்து தியாகராசர் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிக்
கல்லூரி, பொறியியர் கல்லூரி, என்று கல்வி நிறுவனங்களை மதுரையிலும், பல்தொழில் பயிற்சிக் கல்லூரி ஒன்றை சேலத்திலும் தொடங்கினார். இவ்வாறு தியாகராசர் தொடங்கிய கல்வி நிறுவானங்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆகும். இவர் கல்வி நிறுவனங்களுக்காக கொடுத்த நன்கொடையின் மதிப்பு ஏறத்தாழ 3கோடியாகும்.

இவரது வாழ்நாளின் மற்றொரு சிறந்த பணி "தமிழ்நாடு" நாளிதழைத் தொடங்கிப் பல ஆண்டுகள் தரமாகவும், தமிழ்ப் பற்றோடு நடத்தியமையாகும்."கலைத் தந்தை" எனப் பட்டம் பெற்ற தியாகராசர் அப்பட்டத்திற்குப் பொருத்த்மானவர் என்பதை அவரது கட்டிடங்களே உணர்த்தும். ஆலை, வளமனை, கல்லூரி எனக் கட்டிடம் எதுவாயினும் அவர் கட்டிய கட்டிடமாக இருந்தால் பார்த்தவர்கள், பார்த்தவுடன் இது தியாகராசர் கட்டியது! எனச் சொல்லக்கூடிய சிறப்புடன் கலைநயம் மிக்க தியாகராசர் முத்திரையைக் காட்டி நிற்கும்.

1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும் நெசவு ஆலையும அமைத்தார்.

தமிழ் பற்றில் இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இதன் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழைப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார். இந்து நாளிதழ் உரிமையாளர்கள் மதுரைப் பதிப்பு வெளியிட விரும்பி அதனோடு ,அந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் இந்தியைத் தேசிய மொழியாக ஏற்பாடமாக இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்த கொள்கைகளை எதிர்த்தவர்களுள் இவரும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். இதற்காக இளம் வயது முதல் தாம் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக் கொண்டார். சோமசுந்தர பாரதியாரும், பெரியார் ஈ.வெ.ராவும் இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இவர் இலங்கை கொழும்பு மாநகரிலிருந்து வந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியப் பிரிவில் இளமையில் பணிபுரிந்து வந்திருந்த போதிலும் ஆங்கிலம் கலவாது தமிழில் பேசியும் எழுதி வந்தார்.

இராம‌நாத‌புர‌ம் சேதுப‌தி,ப‌ண்டித‌ ம‌ணி,பேராசிரிய‌ர் இர‌த்தின‌ச‌பாப‌தி போன்ற‌ ப‌ல‌ருடைய‌ நூல் நிலைய‌ங‌க‌ளை விலைக்கு வாஙகிக் கொண்டார். ஏராள‌மான‌ புல‌வ‌ர்க‌ளுட‌ன் நெருஙகிய‌ தொட‌ர்பு கொண்டு அவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌வும் ஆத‌ர‌வாக‌வும் இருந்தார். அவ‌ர்க‌ளில் சிற்கைலாச‌ம்பிள்ளை, ப‌ண்டித‌ம‌ணி, நாவ‌ல‌ர் சோம‌சுந்த‌ர‌ பார‌தியார், வ‌ர‌த‌ந‌ஞ்ச‌ய‌ பிள்ளை, முனைவ‌ர் இல‌க்குவ‌னார், திருவாசக‌ம‌ணி பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம், க‌விய‌ர‌ச‌ர் க‌ம்ப‌ரை ஆத‌ரித்த‌ ச‌டைய‌ப்ப‌வ‌ள்ள‌ல் வ‌ழிவ‌ந்த‌ டி.ஏ.வி.நாத‌ன், ஒள‌வை துரைசாமிப் பிள்ளை, கி.ஆ.பெ.விசுவ‌நாத‌ம், ம‌.பொ.சி., அற‌நெறிய‌ண்ண‌ல் கி.ப‌ழ‌நிய‌ப்ப‌னார் ஆகியோர் குறிப்பிடத்த‌குந்த‌வ‌ர்க‌ள்.

1917ஆம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்து தொழிலாளர் தலைவராகவும், சில முறை மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருநதார். நூற்பாலை தொடங்கிய போது ஆந்திரகேசரி டி.பிர‌காச‌ம் போன்ற‌ தேசிய‌த் த‌லைவ‌ர்க‌ள் மீனாட்சி ஆலையின் ஆர‌ம்ப‌ கால‌ இய‌க்குன‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்த போது அப்போது தியாகராசச் செட்டியார் வாழ்ந்த மேலமாசி வீதி வீட்டில் அவருடைய விருந்தாளியாகத் தங்கினார். அப்போது காந்தியடிகள் விரிவான உடைகளையும் தலைப்பாகையையும் சட்டையையும் கைவிட்டு ஆடைகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்தார்.தமிழ்நாடு நாடு அரசு கதர்க்கடை ஒன்றினை இப்பொழுது அவ்வீட்டில் நடத்தி வருகின்றது.அதன் மாடியில் பொதுமக்கள் காண ஒரு மகாத்மா காந்திஜி சிலையினை நிறுவி புகைப்படக் கண்காட்சியையும் நடத்தி வருகின்ரது.அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அரசாங்க அதிகாரிகள் அங்கு வருகின்றனர். 23.7.2008 தினமலர் மதுரை மலரில் புகைபடத்டுடன் செய்தி வெளியாகியுள்ளது. 28.7.2008 தியாகராசர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பாலாஜி அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள்.20.7.1976 இல்லஸ்ட்ரடெட் வீக்லி இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

இசையில் அவ‌ர் ஆர்வ‌ம் காட்டி வ‌ந்தார்.
ஓவிய‌த்திலும் அவ‌ருக்கு ஈடுபாடு இருந்த‌து.
குதிரை ச‌வாரியில் அவ‌ர் விருப்ப‌ம் காட்டினார்.
எப்பொதும் தூய‌ வெள்ளை உடை உடுத்தி வ‌ந்தார். கட்டிடக்கலையிலும் அவருக்குத் தனி ஆர்வம் இருந்தது. சென்னை, கோடைக்கானல், குற்றாலம், மதுரை, ஆ.தெக்கூர் போன்ற ஊரில் அவர் கட்டியுள்ள கட்டிடங்கள் சிறப்பு மிக்கவை.

கலைத்தந்தை சைவசமயத்தில் அழுத்தமான பற்றுக் கொண்டிருந்தார்.தம் மக்களுக்கு நாயன்மார்கள் பெயர்களை இட்டார். நாள்தோறும் திருவாசகத்தை ஓதி வந்தார். நகரக்கோயில் பிரிவுகளுள் கலைத்தந்தை மாத்தூர் கோயிலைச் சேர்ந்தவர். அக்கோயில் திருப்பணி 1972 ல் மிகவும் சிறப்பாக நிறைவேறக் காரணமாக இருந்தார். வள்ளலாருடைய கொள்கைகளிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. புலால் மறுத்தல், அவருடைய தலையாய பண்பாக இருந்தது. தியாகராசர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் புலால் உணவு வேண்டிக் கிளர்ச்சி செய்தனர். அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் சென்னையில் கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆதரவாக இருந்தனர். சமணர்கள் நடத்தும் கல்லூரிகளில் உங்களால் உயிரின இயல் போன்ற‌ பாடத்தைச் சொல்லிக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்த முடியுமா? என்று 7தியாகராசச்செட்டியார் கேட்டதும் அதிகாரிகள் வாயடைத்துப் போயினர். சைவ உணவின் பெருமையைப் பரப்ப நடைபெறும் மாநாடுகளில் ஆண்டுதோறும் இவர் கலந்து கொண்டார்.

இவருடைய குடும்பம் இலங்கையில் துணி வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது. இவருடைய அண்ணன் அருணாசலம் செட்டியார் துணியின் தரம் அறிவதில் ஆற்றல் பெற்றிருந்தார். இவருடைய மற்றொரு அண்ணன் இராமநாதன் செட்டியார் மான்செஸ்டர் ஆலைகளின் நடைமுறையை பற்றித் தெரிந்து கொள்வதற்காக 1907ல் இங்கிலாந்துக்குச் சென்றார். நகரத்தாருள் மேலைநாடுகளுக்கு முதலில் சென்றவர் அவரே ஆவார். இந்தப் பரம்பரையில் வந்த தியாகராசச் செட்டியார் நூல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளுள் ஒருவரானார்.

இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்தினார்.

தமது கல்விப் பணியாலும், தமிழ் ஆர்வத்தாலும் இதழியல் தொண்டுகளாலும் தமிழக வரலாற்றில் தனித்தடம் பதித்தவர் கலைத்தந்தை.இவரது மகன்கள் இருவர். மூத்தவர் கரு.முத்து.தி.சுந்தரம் செட்டியார். இவர் தந்தையின் தொழில்களைத் தொடர்ந்து கவனித்து வந்தார். இவரது மகன் சு.சொக்கலிங்கம் செட்டியார். இவர் தம் ஐயாவைப் போலவே ஆலை நிர்வாகத்தில் தனிச் சிறப்புடையவராக விளங்குகிறார். இவர் அறப்பணிச் செல்வராகவும் விளங்குகிறார்.

கலைத்தந்தையின் இரண்டாவது மகன் கரு,முத்து.தி.மாணிக்கவாசகம் செட்டியார். இவர் தமிழ்நாடு இதழின் நிர்வாகப் பொறுப்பை திறம்பட நடத்தியவர். இலக்கிய திறனாய்வு நூல்கள் பல எழுதியுள்ளார். இவரது மகன்

கே.எம்,தியாகராஜன். இவர் தன் ஐயா தோற்றுவித்த மதுரை வங்கியினுடைய தலைவராக இப்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கலைத் தந்தையின் இரண்டாவது மனைவி டாக்டர்.இராதா தியாகராசன்,

தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராகப் பொறுப்பேற்று, அப்பல்கலைக் கழகத்தின் செம்மையான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இவருக்கும் கலைத் தந்தைக்கும் பிறந்த மகன் கருமுத்து.தி.கண்ணன். கலைத் தந்தையின் கல்வி நிறுவனங்கள் பல இன்று இவராலயே நிருவாகிக்கப்படுகிறது. இன்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவராகச் செவ்வனே பணியாற்றி வருகின்றார்.

11 comments:

  1. போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete
    Replies
    1. வாழும் கடவுள் மற்றும் வாழ்ந்த கடவுள்கள் என்றும் கூட சொல்லலாம்.

      Delete
  2. கலைத்தந்தையின் சிறப்பான தகவல்கள்...

    ReplyDelete
    Replies
    1. மதுரை தியாகராய கல்லூரிகள் சிறப்பான 22 வது இடத்தை இந்திய அளவில் பெற்றுள்ளது.

      Delete
  3. பொதுவாக நகரத்தாரிடம் காணும் தமிழ்ப்பற்று இவரிடமும் இருந்திருக்கிறது தெரிகிறது அறியாத பல தகவல்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. இன்று மகன் கரு முத்து கண்ணன் அவர்கள் அவர் மகன் அமெரிக்காவில் படித்து வந்த போதிலும் தாத்தா அப்பா கொள்கைகளை அப்படியே கடைபிடித்து தூய கொள்கைகளோடு ஆன்மீகம் கல்வி தொழில் மூன்றையும் தெளிவான முறையில் நிர்வகித்து வருகின்றார்கள். மிகுந்த ஆச்சரியம்.

      Delete
  4. எவ்வளவு சிறந்த மனிதர்... வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, கல்விச்சாலைகள் நிறுவி...

    உயர்ந்தவர்.

    ReplyDelete
    Replies
    1. சிதம்பரம் அண்ணாமலை செட்டியார் காரைக்குடி அழகப்பச் செட்டியார் மதுரையில் இவர். இவர்கள் மூவரும் இல்லாதபட்சத்தில் தமிழகத்தை நினைத்துப் பாருங்க.

      Delete
  5. கருமுத்து தியாகராஜன் செட்டியார் - அருமையான பதிவு. எங்கள் அலுவலகத்தில் தமிழ் நாடு நாளிதழ் படித்திருக்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

    ReplyDelete
  6. சாதனையாளர் கருமுத்து தியாகராசர் நூலின் தலைப்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள நூல் நிலையங்களில் படிக்கலாம்

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.