அஸ்திவாரம்

Monday, May 11, 2020

தமிழகத்தின் தலைப்புச் செய்தி- என் குரல் வழிப் பதிவு

10-05-2020

2020 ஜூன்/ஜூலையுடன் எழுதத் துவங்கி 11 ஆண்டுகள் முடியப் போகின்றது. 

கடந்து போன 11 ஆண்டுகளில் தொழில் நுட்ப ரீதியாகப் பல மாற்றங்கள் நடந்துள்ளது.  ஆனால் நான் எந்தப் பக்கமும் செல்லவில்லை. அமேசான் தளம் எனக்குப் போதுமானதாக இருந்தது.

நேற்றைய முன்தினம் திரு. மலைநாடன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது சின்னதாகப் பொறி ஒன்று உருவானது.  அதன் விளைவு தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

வாரந்தோறும் தமிழகத்தில் நடந்த, நடக்கும் முக்கிய நிகழ்வுகளை என் குரல்வழியே உலகத்திற்குத் தெரிவிக்கப் போகின்றேன்.  

4 தமிழ் மீடியா தளத்தில் தான் என் டாலர் நகரம் தொடர் வந்து பலத்த வரவேற்பைப் பெற்றது.  திரு. மலைநாடன் தான் இதனைப் புத்தகமாகக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்று சாதித்தும் காட்டினார்.

இப்போது வேறொரு பாதையில் கைபிடித்து அழைத்துச் செல்கின்றார்.  

ஆறு நிமிடப் பேச்சு.  

உங்கள் விமர்சனங்களை அறியத் தாருங்கள்.


12 comments:

  1. ஒலியின் அளவு மட்டும் சிறிது கூடுதலாக இருக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. இங்கே மூன்று பேர்களுக்கு என் வாழ்க்கை வாழ அனுமதித்தால் தானே தனபாலன். அவர்கள் விரும்பிய வாழ்க்கையைத்தான் வாழ வேண்டியதாக உள்ளது. பேசி முடிப்பதற்குள் இவர்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ஒவ்வொரு ஞாயிறும் வரப் போகின்றது. அடுத்த பேச்சில் நீங்க சொன்னதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

      Delete
  2. புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்...ஆவலுடன்.தொடர்கிறோம்...

    ReplyDelete
  3. ஒரு சீறிய ஆலோசனை கூடியமட்டும் கால அளவு மூன்று நிமிடங்களுக்குள் இருக்கட்டும் அதற்கு மேல் செய்திகள் அலுப்பூட்டும்செய்ஜி சான்ல்களே நிறைய உண்டு

    ReplyDelete
    Replies
    1. மூன்று நிமிடத்தில் எதையும் சொல்லிவிட முடியாதே. 5 முதல் பத்து நிமிடங்கள் சரியான வடிவம். இந்தப் பேச்சு ஆறு நிமிடங்கள் மட்டுமே.

      Delete
  4. speech to writer போன்ற மென்பொருள் உபயோகித்து அமேசான் audible நூல் போன்று எழுத்திலும் வெளியிட்டால் காது கேளாதவரும் பயன் அடைவர். (எனக்கு காது மந்தம்)
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க. இனிவரும் காலங்களில் நீங்க சொன்ன மாதிரி புதுப் புது விசயங்களில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று எண்ணி உள்ளேன். மிக்க நன்றி. நிச்சயம் முயன்று பார்க்கிறேன்.

      Delete
  5. நல்ல முயற்சி. பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.

    ReplyDelete
  6. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஜோதிஜி :-) .

    இனி காணொளி காலம் எனவே, காணொளிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் அதனால் எந்த யோசனையும் வேண்டாம்.

    ஒலி பிரச்சனை துவக்கத்தில் அனைவருக்குமே வரும் தொழில்நுட்ப பிரச்சனைகள் தான், தவிர்க்க முடியாதது. சில காணொளிகளுக்குப் பிறகு உங்களுக்குப் பிடிபட்டு விடும்.

    எனவே, இது பற்றிப் பிரச்சனையில்லை. அனைவருக்கும் நடப்பதே. எல்லோருமே தெரிந்து கொண்டா வருகிறார்கள்! அப்படியே தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது தான்.

    6 நிமிட காணொளி என்பது நீண்டதாகும். பெரும்பான்மையானவர்களுக்கு பார்க்க / கேட்க பொறுமையில்லை.

    படிப்பதில் மட்டுமல்ல, பார்ப்பதிலும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    குறிப்பாக WhatsApp status காணொளி (30 நொடிகள்) பார்த்துப் பழகி 1 நிமிடம் பார்த்தாலே, ரொம்ப பெரிய காணொளி என சொல்லும் அளவுக்கு மாறி விட்டது :-) .

    எனவே, அதிகபட்சம் 4 நிமிடங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆலோசனைக்கு நன்றி கிரி. நான்கு வரிகளில் எழுதுவது மூன்று நிமிடங்களில் பேசுவது இது போன்ற சமாச்சாரங்களில் நான் நுழைவதே இல்லை. நான் செய்யக்கூடிய காரியம் எனக்கு முதலில் திருப்தியாக இருக்க வேண்டும். வருகின்ற அத்தனை பேர்களும் கேட்பார்கள், கேட்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்தது இல்லை. ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரைக்கும் நான் பார்த்த எத்தனை காட்சி வடிவங்கள் நம் மனதில் நிற்கின்றது. எதுவும் இல்லை. ஆனால் சிலரின் பேச்சு நம் மனதில் தாக்கத்தை உருவாக்கி இருக்கும் அல்லவா? அப்படியான பாதையிது.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.