அஸ்திவாரம்

Sunday, April 26, 2020

வைரஸ் தந்த பாடங்கள்.


அந்த 42 நாட்கள் -  16
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

சாதி, மதம், இனம், மொழி, கடவுள், எல்லைகள், நாடுகள் போன்ற அனைத்தையும் அழிக்க முடியும். மாற்ற முடியும்.

வளர்ச்சி என்று நாம் நம்பிக்கை வைத்திருந்த அனைத்தையும் ஒரே நாளில் அதலபாதாளத்திற்குத் தள்ளி மண் போட்டு மூட முடியும்.



புத்திசாலித்தனம், திறமை, சமயோசிதம்,அறிவாற்றல் அனைத்தும் ஒன்றுமே இல்லை என்ற நிலையும் வாழும் போதே நம்மால் பார்க்க முடியும்.

எவையெல்லாம் அங்கீகாரம் என்று நாம் கருதியிருந்தோமோ? அவற்றையெல்லாம் விட உயிர்பிழைத்திருப்பதே மிகப் பெரிய அங்கீகாரம் என்பதாகவும் மாறும் நிலையை உணர்வோம்.

சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரவர்க்கத்தினரை சாமானியன் போல அலற வைக்க முடியும். உயிர் பயமென்பது பொதுவானது என்பதனை உணர வைக்க முடியும்.

"நமக்குத் திறமை போதாதோ" "நமக்கு அதிர்ஷ்டம் இல்லையோ?" என்று நமக்குள் புலம்பிக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து வெற்றியைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள் செயல்படாத சூழலில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழலைப் பார்க்க முடியும்.

உலகப் பணக்காரர் முதல் உள்ளூர் பணக்காரர் வரைக்கும் சடசடவென சரியும் கோரத்தையும் பார்க்க முடியும்.

ஏழை, பரம ஏழை, அன்றாடங்காய்ச்சி போன்ற மூன்றும் சேர்ந்த கலவை தான் நடுத்தரவர்க்கம் என்பதனையும் உணர்ந்து கொள்ள முடியும்.

உலகமே சூழ்நிலை சரியில்லை. செயல்பட வாய்ப்பில்லை. இயல்பான வாழ்க்கை கூட வாழ முடியாது என்ற நிலைக்கு வந்த சேரும் போதும் நாம் எதற்காக இத்தனை நாளும் புலம்பிக் கொண்டிருந்தோம் என்ற எண்ணத்தையும் உருவாக்கும்.

இவற்றை வாங்க முடியுமா? என்பது மாறி இருப்பதையாவது தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்று நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

எல்லாவிதமான திட்டமிடல்களுக்கும் *Conditions Apply என்பதனையும் புரிந்து கொள்ள முடியும்.








வாய்ப்புகள் வரும்.
வாய்ப்புகள் மாறும்.
வாய்ப்புகள் உருவாகும்.
ஆரோக்கியம் (மட்டுமே) முக்கியம்.




1 comment:

  1. அனைத்தையும் உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறது இந்த கோவிட்-19. விரைவில் சூழல் சரியாக வேண்டும். நிறைய பதிவுகள் படிக்க முடிவதில்லை - தொடர்ந்து அலுவலக வேலைகள் - நீண்ட பணி நேரம் என இருக்கிறது சூழல். பதிவுகளை முடிந்த அளவு படித்து விடுகிறேன் - பின்னூட்டம் எழுதா விட்டாலும்! தொடரட்டும் உங்களது பதிவுகள்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.