அஸ்திவாரம்

Wednesday, April 29, 2020

ஏப்ரல் 5 - 9 மணி 9 நிமிடங்கள் விளக்கேற்றுங்கள்


அந்த 42 நாட்கள் -  23
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் 21நாட்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் கடந்த 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இன்று ஊரடங்கு உத்தரவில் 9-வது நாளை மக்கள் எட்டியுள்ளார்கள்.

இந்த சமயத்தில் பிரதமர் நாட்டு மக்களுக்கு காணொளி மூலம் பேசினார். 




"கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நாம் 9-வது நாளை எட்டியுள்ளோம். இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்கள் அனைவரும் எப்போதும் பார்த்திராத அளவு ஒழுக்கத்தையும், சேவையையும் வெளிப்படுத்தி வருகிறீர்கள்".

"மத்திய அரசு நிர்வாம், மாநில நிர்வாகங்கள், அனைவரும் சேர்ந்து கரோனா வைரஸுக்கு எதிரான போரில் சிறப்பாக பங்காற்றி வருகிறார்கள். கடந்த மாதம் 22-ம் தேதியிலிருந்து கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்கள் செயல்பட்டு வரும் விதம் அனைத்து நாடுகளுக்கும் உதாரணமாக இருந்து வருகிறது. பல நாடுகள் அதை பின்பற்றி வருகிறார்கள்.

மக்கள் ஊரடங்கு, மணி அடித்தல், கை தட்டுதல், அனைத்திலும் தேசத்தில் உள்ள மக்கள் சோதனையான நேரத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறீர்கள். கரோனாவுக்கு எதிரான போரில் இந்த தேசம் ஆழ்ந்த ஒற்றுமையுடன் இருப்பதை நம்பமுடிகிறது

இன்று கோடிக்கணக்கான மக்கள் ஊரடங்கை மதித்து வீ்ட்டுக்குள் இருக்கிறார்கள்.இந்த நாளில் கரோனாவுக்கு எதிராக எவ்வாறு போரிடப் போகிறோம், வீட்டுக்குள் இருப்பதால் என்ன செய்ய முடியும் என்பது இயல்பாக வரும் கேள்வி. இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே செலவழி்ப்பது என கவலைப்படுவார்கள்.

நாம் யாரும் தனியாக நாம் சொந்த வீட்டுக்குள் இல்லை. 130 கோடி இந்தியர்கள் ஒவ்வொருவரும் வீ்ட்டுக்குள் இருந்து நமது வலிமையைக் காட்டுகிறோம்.
.
கரோனாவால் உருவான இருளை நாம் நம்பிக்கை எனும் ஒளி மூலம் அகற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்து இந்தியர்களின் வலிமையை வெளிப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் வீட்டில் வாசலில் அல்லது பால்கணி பகுதியில் விளக்கு ஏற்றியோ, மெழுகு வர்த்தி ஏற்றியோ, டார்ச்லைட், செல்போன் லைட்டை ஒளிவர விட்டு, சக மக்கள் குறித்து சிந்திக்க வேண்டும்

விளக்கு ஏற்றும் போது மக்கள் அனைவரும் சமூக விலக்கலைக் கடைபிடிக்க வேண்டும். இதுநாள் வரை சமூக விலக்கலைக் கடைபிடித்து, ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்"









தப்லீக்கி மாநாடு

3 comments:

  1. தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்...
    சரித்திரத்தைச் சான்று சொல்வார்...
    தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத்
    தன்மான வீரரென்பார்...
    மர்மமாய்ச் சதிபுரிவார்... வாய்பேசா அபலைகளின்
    வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்...
    கர்மவினை யென்பார்... பிரம்மனெழுத் தென்பார்...
    கடவுள்மேல் குற்றமென்பார்...


    இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
    கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
    ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி...

    ஹலோ ஜோதி - ஜி...

    எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
    இல்லாத நன்னாளை உண்டாக்கணும்...

    பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
    போக்கினில் அனேக வித்தியாசம்...
    புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
    புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்
    பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
    நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்

    கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு...
    கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
    கருதவேண்டியதை மறந்தாச்சு - பழங்
    கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
    கையாலே முன்னேற்றம் கண்டாகணும்...

    நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க...
    நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்க...
    பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க...
    பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க...
    படிப்பவங்க வீடு புடிப்பவங்க...
    பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க...
    இன்னும் - பொம்பளைங்க ஆம்பளைங்க
    அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா...
    நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா...
    வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
    உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்...

    ReplyDelete
  2. ஜோதிஜியின் பதிவுகள் தனபாலன் அவர்களை கவிஞானக்கிவிட்டது அதுவும் பாரதி போல சினம் கொண்டு எழுந்து எழுதியது போல எனக்கு தோன்றுகிறது

    ReplyDelete
  3. தன்பாலன் கவிதை மிக அட்டகாசம் பாராட்டுக்கள்

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.