அந்த 42 நாட்கள் - 8
Corona Virus 2020
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 3 வரை)
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 24.03.2020 அன்று 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்து பின்வருமாறு பேசினார்.
"கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அந்த தொற்று சங்கிலியை நாம் அழிக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தனித்திருத்தல் என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.ஆனால் அது சரியல்ல. தனித்திருத்தல் என்பது ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும். சிலரின் பொறுப்பற்ற தன்மை உங்கள் குடும்பத்தைகளுக்கும், குழந்தைகளுக்கும், ஏன் இந்த நாட்டிற்கும் கஷ்டத்தை ஏற்படுத்தும்,"
"கடந்த இரு நாட்களாக நாட்டின் அநேக பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மாநில அரசின் இந்த நடவடிக்கையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் பிற நாடுகளிலிருந்து அனுபவத்தைக் கருத்தில் கொண்டு நாடு இன்று ஒரு முக்கிய முடிவை எடுக்கவுள்ளது. இது மக்கள் ஊரடங்கு உத்தரவைக் காட்டிலும் வலுவானது, கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் போராட இதை நாம் செய்தே ஆக வேண்டும் இது நிச்சயமாக நமது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் காப்பாற்றுவதே தற்போது முக்கியம். "நீங்கள் எங்கு உள்ளீர்களோ அங்கேயே இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.".
“தற்போதைய சூழலைக் கண்டு 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க குறைந்தது 21 நாட்கள் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள் இந்த 21 நாட்களை நாம் சமாளிக்கவில்லை எனில் 21 வருடங்கள் பின்னோக்கி சென்று விடுவோம்," என்று கூறினார்.
“நான் இதை பிரதமராக சொல்லவில்லை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக சொல்கிறேன். எனவே காரணம் எதுவாக இருந்தாலும் 21 நாட்கள் வெளியே செல்வதை மறந்துவிடுங்கள். நீங்கள் ஒரே ஒரு முறை வெளியே சென்றாலும் கொரோனா போன்ற பெருந்தொற்றை வீட்டிற்குள் அழைத்து வர நேரலாம். நீங்கள் தினசரி சந்திப்பவர்களில் யாருக்கு வேண்டுமென்றாலும் கொரோனா தொற்று பரப்புவார்களாக இருக்கலாம். எனவே வீட்டிலேயே இருங்கள்“.
“ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் வெளியே தெரியப் பல நாட்கள் ஆகலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர், இந்த சமயத்தில் தெரிந்து தெரியாமலோ அந்த நபருடன் தொடர்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் அது பரவும். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒருவரால் 10 நாட்களில் நூற்றுக்கணக்கனைக்கானவர்களுக்குப் பரவும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் பொருள் இது காட்டுத்தீயைப் போன்று பரவுகிறது“.
“67 நாட்களில் ஒரு லட்சம் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 11 நாட்களில் அது இரண்டு லட்சம் ஆனது நான்கு நாளில் மூன்று லட்சத்தைத் தொட்டது என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே எத்தனை வேகமாக இது பரவுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்“.
“இந்த தொற்று பரவ தொடங்கினால் அதை நிறுத்துவது கடினம் சீனா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ்,ஜெர்மனி, இரான் ஆகிய நாடுகளில் இதே நிலைமைதான் ஏற்பட்டது“.
“இத்தாலி மற்றும் அமெரிக்காவின் சுகாதார சேவைகள் உலகளவில் சிறப்பானது ஆனால் இந்த நாடுகளால் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை“.
“இந்த கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய நாடுகளிடமிருந்து ஒரு நம்பிக்கை கீற்று வருகிறது, அது என்னவென்றால் பல வாரங்களாக இந்த நாட்டின் மக்கள் வீட்டை வெளியே வரவில்லை. அந்நாட்டின் மக்கள் அரசின் விதிமுறையை 100 சதவீதம் கடைப்பிடித்தனர்“.
“இந்த நெருக்கடியைச் சமாளிக்க நம்மிடமும் ஒரு வழி உள்ளது. அது நாம் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது.”
“இந்த சமயத்தில் நமது நடவடிக்கைகள் தான் இந்த கொரோனா தொற்றை தடுக்கும் நமது திறனை நிர்ணயிக்கும். ஒவ்வொரு அடியிலும் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். வீட்டிலேயே இருங்கள் இந்த கொரோனா தொற்றிலிருந்து உங்களை காப்பாற்ற தங்களின் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் மருத்துவ பணியாளர்கள் குறித்துச் சிந்தியுங்கள் என உங்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்".
"இரவு பகலாக மருத்துவனமைகளில் பணிபுரிபவர்கள் குறித்து சிந்தியுங்கள். தூய்மை பணியாளர்கள் குறித்து யோசியுங்கள். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.உங்களுக்கு சரியான தகவலைத் தர 24 மணி நேரம் பணிபுரியும் ஊடகவியாளர்கள் குறித்தும் நீங்கள் யோசிக்க வேண்டும்"
“போலீஸார் குறித்து யோசியுங்கள் அவர்களின் குடும்பத்தை விட்டுவிட்டு உங்களை காப்பாற்ற அவர்கள் 24 மணி நேரமும் பணி செய்கின்றனர்“.
“மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவாக பணிபுரிகின்றனர்; உங்கள் தினசரி வாழ்க்கை பாதிக்காமல் இருக்க. அவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
"இந்த நெருக்கடி சூழல் ஏழை மக்களின் வாழ்வைக் கடினமான நேரத்தைக் கொண்டு வந்துள்ளது; எனவே மத்திய மாநில அரசுகள் சமூக அமைப்புகள் சேர்ந்து அவர்களின் கஷ்டத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பலர் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்கள் மட்டுமல்ல உயிரைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்"
"நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுவாக்க 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த சமயம் சுகாதார சேவைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் நான் வலியுறுத்தியுள்ளேன். இந்த சமயங்களில் பல வதந்திகள் பரவுகின்றன. எந்த வதந்திகளையும், மூடநம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்".
21நாட்கள் நீளமான காலம்தான் ஆனால் இதுதான் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பதற்கான வழி.”
// உங்கள் குடும்பத்தில் ஒருவனாக சொல்கிறேன். //
ReplyDeleteஆம் உண்மை... இருநாட்களுக்கு முந்தைய அவரின் கீச்சகம், ஒரு சான்றாக உள்ளது...
இந்த கொரோனா வரமால் இருந்தாலும், வந்த தொற்றை சமாளித்தாலும், சில மாதங்களில் அல்லது வருடங்களில் தொற்றே இல்லையென்றாலும், பல வருடங்கள் பின்னோக்கி செல்லப்போவது உறுதி...
நம் நாட்டின் விதி எனும் எனது அடுத்த பதிவில் விளக்கமாக...