அஸ்திவாரம்

Thursday, April 23, 2020

டெல்லி - புலம் பெயர்ந்த கூட்டம்

அந்த 42 நாட்கள் -  10
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


1947 / 2020

73 ஆண்டுகள்.

இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிந்த போது ஒரு கோடியே 20 லட்சம் பேர்கள் அகதியானார்கள். இரண்டு பக்கமும் 5 முதல் பத்து லட்சம் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பெண்கள் கடத்தப்பட்டனர். வாசிக்க வாசிக்க நான்கு நாளைக்குத் தூக்கம் வராது.




இந்தப் படங்கள் (நன்றி தினமணி) கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்திய நிலையில் தில்லியிலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமான தொழிலாளர்கள் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.  (நாள்: சனிக்கிழமை 29, 2020.)  டெல்லி மற்றும் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பற்ற அவலத்தின் சாட்சியாக.





















இவர்கள் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற வட மாநிலங்களிலிருந்து வந்து டெல்லியில் வேலை செய்த தினக்கூலித் தொழிலாளர்கள். 

டெல்லியில் வாழும் காய்கறி விற்பவர்கள், ரிக்க்ஷா ஓட்டுபவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் எனப் பலரும் அருகில் உள்ள இந்த வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். பல ஆண்கள், சில பெண்கள் மற்றும் குழந்தைகள் மூட்டை முடிச்சுடன் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டு காசிபூர் வழியாக உத்தரப்பிரதேசத்தை நோக்கிச் சென்றனர். ஒரு நாளில் மட்டும் சுமார் 10,000 பேர் டெல்லி எல்லையைக் கடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. மேற்கு டெல்லியின் நஜப்கர் பகுதியிலிருந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஃபதேப்பூரில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்ல 570 கிலோ மீட்டர் பயணத்தைத் தொடங்கினார் 35 வயதான தன்ராஜ். கட்டுமான இடங்களில் இரும்புக் கம்பிகளைப் பொறுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த அவர், நாள் ஒன்றுக்கு 300- 400 ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்தார். 

"என்னிடம் பணம் இல்லை. என் வீட்டு உரிமையாளர் என்னிடம் வாடகை கேட்டார். என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை என்றால், வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறினார். நான் வேலை பார்த்த இடத்திலும் காசு இல்லை என்று கூறிவிட்டார்கள். எனவே நான் என் ஊருக்குப் போவதுதான் நல்லது. ஆனால், நடந்து செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை"

"நான் அகமதாபாத்திலிருந்து வருகிறேன். என் வீடு உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருக்கிறது. எனக்கு அகமதாபாத்தை விட்டு தற்போதைக்கு வர விருப்பம் இல்லை என்றாலும். என்னை வேலையில் வைத்திருந்த நபர் காசு கொடுக்க மறுத்துவிட்டார்.

கடந்த மூன்று நாட்களாகச் சரியாகச் சாப்பிடவில்லை" என்று கூறுகிறார் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் தற்போது இருக்கும் ஒருகூலித் தொழிலாளி. இந்நிலையில், வெளிநாடுகளில் இருக்கும் மக்களை விமானம் வைத்து இந்தியா அழைத்து வரத் தெரிந்த அரசிற்கு, கூலித் தொழிலாளிகளுக்கு எந்த அடிப்படை போக்குவரத்து வசதிகளும் இல்லை என்பது தெரியவில்லையா எனப் பலரும் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்தனர்.


"பஞ்சு முதல் பனியன் வரை" இலவசமாக - சொடுக்க



21 நாள் ஊரடங்கு - இந்தியா - முதல் நாள்




1 comment:

  1. அனைத்திற்கும் நேரு தான் காரணம்...!

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.