இந்த வருட தெற்கு ரயில்வேயில் தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி...(நன்றி தெற்கு ரயில்வேயின் பிங்க் புக்) (மிக முக்கியமானவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன்....சிறு பணிகள் & தொகை பற்றி இங்கு குறிப்பிடவில்லை....)
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி & மன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை திட்டம் - ரூ.100 கோடி
மதுரை போடி அகல ரயில் பாதை திட்டம் (இப்போது உசிலம்பட்டி வரை முடித்து விட்டு CRS சோதனை நடந்தும் விட்டது -
இந்த காணொளி பார்க்க https://www.youtube.com/watch?v=x3PkGrFKQsQ&t=481s) (அதாவது உசிலம்பட்டி - போடி வரை ) - ரூ.75 கோடி (இந்த திட்டமும் இந்த ஆண்டு முடிவடைய வாய்ப்பு மிக அதிகம்...)
சென்னை பீச் - அத்திப்பட்டு - 4 வது பாதை - ரூ.30 கோடி
ஓமலூர் - மேட்டுர் அணை - இரண்டாவது அகல ரயில் பாதை திட்டம் - ரூ.40 கோடி
தாம்பரம் - செங்கல்பட்டு - 3 வது அகல ரயில் பாதை - ரூ.145 கோடி (இப்போது சிங்கப்பெருமாள் கோவில் - கூடுவாஞ்சேரி வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளன - சென்ற ஆண்டு ஒதுக்கீடு - ரூ.70 கோடி) - அதாவது இந்த ஆண்டு இந்த திட்டம் முழுமை பெறும் என்று ஒதுக்கீடு மூலம் தெரிகிறது
மதுரை - நாகர்கோவில் - தூத்துக்குடி - திருவனந்தபுரம் - இரட்டை பாதை & மின்மயமாக்கல் திட்டம் (ரூ.840 கோடி)
மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி - ரூ.367 கோடி
மணியாச்சி - நாகர்கோவில் - ரூ.345 கோடி
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் - ரூ.128 கோடி
இதன் மூலம் இந்த திட்டத்திற்கு(MDU-TUTICORIN-KANIYAKUMARI) தெற்கு ரயில்வே (மத்திய அரசு) மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது படி 2022 க்குள் இந்த திட்டம் முடிக்கப்படும் என்று தெரிகிறது....
சென்ற ஆண்டு பணிகள் வேகம் பிடித்து இப்போது வரை இந்த வழித்தடத்தில் பாதி அளவு பணிகள் முடிந்துள்ளன....இந்த திட்டம் வாஜ்பாய் ஆட்சியில் பாமகவின் ஏ.கே.மூர்த்தி ரயில்வே இணை அமைச்சராக இருந்த போது உத்தேசிக்கப்பட்ட திட்டம்....
நடுவில் 15 ஆண்டுகள் கொர்....!!!
சரி போகட்டும்....சென்ற ஆண்டே மத்திய அரசு ரயில்வே பாதைகளை புணரமைப்பு செய்து ரயில்களின் வேகத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது என்று என்னுடைய நேரடி அனுபவ ஆதாரத்துடன் எழுதி இருந்தேன்....அதன்படி பல பாதைகளில் அதிகபட்ச வேகம் & சராசரி வேகம் இரண்டும் அதிகரித்து உள்ளது என்பதும், இப்போது போடப்படும் பாதைகள் மணிக்கு 120 முதல் 160 கி.மீ வேகத்தை தாங்கும் வகையிலும் அமைக்கப்பட்டு வருகின்றன....(மதுரை - போடி பாதை உதாரணம்)......
இது தவிர தனியார்கள் ரயில்களை இயக்க முடிவு எடுத்து சில உத்தேச பாதைகளை பரிந்துரை செய்துள்ளார்கள் அதில் தமிழகத்தில் இந்த பாதைகள் வருகின்றன....
தாம்பரம் - மதுரை (தினசரி ரயில்)
தாம்பரம் - தூத்துக்குடி (தினசரி ரயில்)
தாம்பரம் - திருநெல்வேலி (தினசரி ரயில்)
தாம்பரம் - திருச்சி (தினசரி ரயில்)
தாம்பரம் - கன்னியாகுமரி (தினசரி ரயில்)
சென்ட்ரல் - கோவை (தினசரி ரயில்)
சென்ட்ரல் - செகந்திராபாத் (தினசரி ரயில்)
எப்படியும் இவற்றை முடிவு செய்து ரயில்கள் இயங்க 2-3 ஆண்டுகள் ஆகலாம் (தனியார்கள் ரயில் பெட்டிகளை வெளிநாட்டில் இருந்தும் வாங்கி கொள்ளலாம் - ஆனால் அவை இந்திய ரயில்வே நிர்ணயம் செய்துள்ள அளவுப்படி இருக்க வேண்டும்....).....பார்க்கலாம்....எனக்கு இந்த திட்டம் பற்றி பெரிய நம்பிக்கை இல்லை..
காரணம் நல்ல பெட்டிகள், பராமரிப்பு, சுத்தம் இவைகள் தவிர கட்டணம் & ஸ்லாட் எனப்படும் ரயில் இயக்கப்படும் நேரம் மிக முக்கிய காரணி...அதை எப்படி முடிவு செய்வார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்....ஆனால் இந்த திட்டம் வெற்றி கண்டால் வரவேற்கதக்க ஒன்றே....
இந்த வருட தெற்கு ரயில்வே pink book http://indianrailways.gov.in/.../Pink_Book_2020-21/SR.PDF
பொதுவாக தமிழக ஊடகங்களை நான் மதிப்பதில்லை...காரணம் ஒரு சார்பு என்பதை தவிர, எழுதும் ஆட்கள் இது குறித்த போதிய விவரம் இல்லாதவர்கள் என்பது என் கருத்து & சிலவற்றில் நான் கண்ட உண்மை....
நிதி ஒதுக்கீடு என்றால் அவற்றில் பல உள்ளன...உதாரணமாக இந்த ஆண்டு தமிழக திட்டங்களுக்கு ரூ.2600 கோடி அளவு....இதில் எல்லாமே திட்டங்களுக்கு செல்லாது....அவை கேப்பிடல் (மூலதன செலவு), பராமரிப்பு செலவு, புனரமைப்பு செலவு என்றெல்லாம் பிரியும்...உதாரணமாக இரட்டை பாதை & புதிய பாதை தவிர, இவற்றை புதுப்பிக்க ஆகும் செலவுகள், புணரமைப்பு செலவுகள், ஏற்கனவே உள்ள பாதைகளில் மின்மயமாக்கல் செய்ய ஆகும் செலவுகள், பயணிகள் வசதி மேம்பாடு, ரயில் நிலைய மேம்பாடுகள் செய்ய ஆகும் செலவு என்றுஎல்லாம் சேர்த்து தான் இந்த ரூ.2600 கோடி....மேற்சொன்ன ரூ.1000 கோடி என்பது பாதைக்கு ஆகும் மூலதனம்...இது தவிர Electrification தனி....அதையும் சேர்த்து தான் எழுத வேண்டும்...ஆனால் எழுத மாட்டார்கள்....சென்ற ஆண்டு இந்திய ரயில்வே மின்மயமாக்கல் செய்த பாதை 4700 கி.மீ (சில ஆண்டு முன்னர் வரை 1000-1400 கி.மீ தான்)...அடுத்த ஐந்து ஆண்டுகளில் முழுமையாக எல்லா பாதைகளையும் மின்மயமாக்கல் செய்து விடுவார்கள்....
தமிழகத்திலேயே கூட சேலம் - கரூர் - திருச்சி பாதை Electrification முடிந்து விட்டது....இப்போது திருச்சி - தஞ்சாவூர் - காரைக்கால் பணிகள் முடிவடையும் தருவாயில்...அடுத்த ஆறு மாதங்களில் தஞ்சாவூர் - விழுப்புரம் பணிகள் நிறைவடையும்.... ஏற்கனவே மதுரை - கன்னியாகுமரி பாதை திட்டத்துடன் சேர்ந்தே மின்மயமாக்கல் பணிகள் நடக்கினறன....மதுரை - ராமேஸ்வரம் மின்மயமாக்கல் பணிகள் துவங்கி உள்ளன.....
ரயில் பயணங்கள் எனக்கு அதிகம் வாய்ப்பிருந்ததில்லை. பெரும்பாலும் பஸ்தான்! இருந்தாலும் தென்னக ரயில்வேயில் ஏற்பட்டுவரும் வளர்ச்சி பற்றிய செய்தி வரவேற்கக்கூடியதாகவே இருக்கிறது
ReplyDeleteநான் தொடர்ந்து இரயில் பயணம் செய்து கொண்டேயிருக்கிறேன். ரயில்வே துறை வளர்ச்சி நிர்வாகம் பிரமிப்பாக உள்ளது. சிறப்பாக செயல்படுகின்றது.
Deleteமகிழ்ச்சி
ReplyDeleteநல்ல தகவல்கள். நிறைய மாற்றங்கள் இரயில் துறையில் வந்த வண்ணமே இருக்கிறது. சில மாநிலங்களீல் இப்போது தான் இரயில் வசதியே கிடைத்திருக்கிறது - குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில்!
ReplyDelete