நம் அன்றாடக் கடமைகளைச் செய்யத் தொடங்குவதை விட "நன்றி செலுத்துவது" முதல் கடமை என்பதால் இதனை வெளியிட்டு மகிழ்கின்றேன்.
இன்று அம்மையாருக்குப் பிறந்த நாள். பிப்ரவரி 24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்புத் தினம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்னமும் பாமர, படிப்பறிவு இல்லாத பெண்களை விட இவரைப் படித்த பெண்கள் அதிகம் விரும்புகின்றவர்கள் அதிகம் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
மிகவும் தெரிந்தவர்கள் சசிகலா இல்லாவிட்டால் இவர் ராஜராஜசோழன் போலப் புகழ்பெற்று விளங்கியிருப்பார் என்று சிரிக்காமல் சொல்கின்றார்கள். காரணம் கேட்டால் ஒரு தரப்பு எனக்கு ரெட்டை இலை பிடிக்கும் என்பதாகவும் மற்றொரு தரப்பு "இரும்பு மனுசி" என்றும் சொல்கின்றார்கள். ஆனால் மொத்தத்தில் அய்யய்யோ "அவர் மட்டும்" வந்திடக்கூடாது என்பதில் தான் முடிகின்றது.
காலையில் நான் நடந்து வந்த ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பெரியார் காலணி அருகே ஒருவர் மட்டும் 6வது வட்டம் சார்பாக என்று படம் வைத்து மரியாதை செலுத்தியிருந்தார். வேறெந்த இடத்திலும் இல்லை. நேருவுக்குப் பிறகு அப்துல்கலாம். இவர்களைத் தவிர மாணவர்களிடம் வேறு எவரும் நெருங்கவே இல்லை.
இன்று மதியம் 1.30 மணி இலவசமாக வாசிக்க, உங்கள் சேமிப்பில் இருக்க வேண்டிய மின்னூலை வெளியிடுகிறேன். கிண்டில் அன் லிமிட் ல் உள்ளவர்கள் இப்போதே வாசிக்கத் துவங்கலாம். காரணம் தமிழ்கூறும் நல்லுலகம் அவசியம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய புனித நூல் இது. ஏற்கனவே வெளியிட்டு பலருக்கும் சென்று சேர்ந்த நூல்தான். இவர் பெருமைகளை அருமைகளை எங்கிருந்து தொடங்குவது?
இவரின் சமூகப் பணியை, தமிழகத்திற்கு ஆற்றிய தொண்டை முதல் மனித வெடிகுண்டு குயிலி என்ற பெண்மணியிலிருந்து தான் தொடங்க வேண்டும். அவர் ஆங்கிலேயர் வைத்திருந்த ஆயுதத் தளவாடங்களை சில்லு சில்லாக பெயர்க்கத் தன்னை ஆயுதமாக மாற்றியவர். இவரும் தமிழகத்தின் சமூக விதிகளை சில்லு சில்லாக பெயர்த்து எடுத்து புதுப்பாதையைக் காட்டியவர்.
ஆனால் வேலு நாச்சியார், ஜான்சிராசி லக்குமிபாய், தில்லையாடி வள்ளியம்மை, சரோஜினி நாயுடு, முதல் பெண் மருத்துவர் முத்து லஷ்மி அம்மையார், அன்னை மதர் தெரசா, இந்திரா காந்தி பிரியதர்ஷிணி போன்றோர்களின் சாதனைகளை விட இவர் வாழ்ந்த காலத்தில் செய்த சாதனைகள் அதிகம்.
இன்று திருப்பூர் தொழிலாளர்கள் காலை எழுந்தவுடன் "குடித்து வாழ வேண்டும்" என்று நல்லாசி அருளியவர். எவரும் அலையக்கூடாது என்பதற்காகச் சந்துக்குச் சந்து தொலை "நோக்குப் பார்வையில்" கடைகளை அமைத்துக் கொடுத்து தாகம் தீர்த்த தயாள குணவதி. சாராயம் விற்ற காசு நாறாது என்று புதிய புனித அரசியல் சாசனத்தைப் படைத்தவர்.
தொடங்கி வைத்தவர்.
தொடர்கின்றார்கள்.
30 ஆயிரம் கோடி என்ற இலக்கு எட்டியதற்குத் தமிழர்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.
நேற்று இவரின் மூன்று பாதுகாவலர்கள் பேட்டி கொடுத்து இருந்தார்கள். கார்த்திகை செல்வன் எப்படி வண்டியை ஓட்டுவது என்றே தெரியாமல் தடுமாறினார். பேசிக் கொண்டிருந்த மூன்று புனித ஆத்மாக்களும் நாங்கள் சிரிக்காமல் பேசுவோம் என்று வார்த்தைகளைச் சிந்திக் கொண்டிருந்தார்கள்.
மதியம் இலவசமாகப் பெற்று வாசித்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கிண்டில் அன் லிமிட் இருந்தால் அந்தப் புனிதப் பணியை இப்போதே தொடங்கலாம். நல்ல காரியத்தைத் தொடங்க நேரம் காலம் பார்க்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
இன்று தமிழகத்தில் நடக்கும், நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் எங்கிருந்து தொடங்கியது? எப்படித் தொடங்கியது? நதி மூலம்? ரிஷி மூலம்? போன்ற அனைத்தும் நுணுக்கமான விபரங்கள் அதில் உள்ளது.
24.02.2020 மதியம் 1.30 முதல் இலவசமாக வாசிக்க முடியும்.
இது கடந்த 25 ஆண்டுகளில் தமிழக சமூக அரசியல் களத்தில் உருவான உருவாக்கப்பட்ட மாற்றங்கள் மாறுதல்கள் அடங்கிய நுணுக்கமான பார்வையிது. சேமித்து வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அடுத்த பத்து வருடங்களில் உங்கள் வாரிசு இதனைப் படிக்கும் போது அவர்களுக்கு நடந்த பல விசயங்களைப் பற்றி புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
தரவிறக்கம் செய்து அவசியம் வாசிப்பேன் ஐயா
ReplyDeleteநன்றி
இறந்து போனவர்களுக்கு பிறந்தநாள் விழா எடுப்பது, இனிப்பு வழங்குவது, வாழ்த்துகிறேன் என்று சுவரொட்டி ஒட்டுவது அறிவுக்கு ஒப்பானதா ?
ReplyDeleteஇதில் கவிதையொரு கேடு
இவள் என்னதான் புரட்சி செய்து விட்டாள் ?
ReplyDeleteகொலவெறியாக இருப்பீங்க போல.
Deleteகொஞ்சம் ஜியின் மீசையை நினைத்து பாருங்கள்...~!
Deleteவாசிப்பேன்.
ReplyDeleteவாசித்தேன். ஜெயலலிதாவைப் பற்றிய பறவைப்பார்வையைக் கொண்ட சிறப்பான நூல். அவரது அரசியல் வாழ்விற்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டு பேசும்போது வழக்கு உட்பட அவர் எதிர்கொண்ட சூழலை விவாதித்துள்ளவிதம் சிறப்பாக உள்ளது. சிறை சென்ற சீமாட்டி என்ற தலைப்பில் மட்டுமே அதிகமான செய்திகள் உள்ளன. பொதுவாழ்வில் சறுக்கல் என்பது இயல்பே. இருந்தாலும் அவருடைய சாதனைகள், மன உறுதித்தன்மை என்பன குறித்து விடுபட்டுள்ளனவோ என்றும், எதிர்மறையான கருத்துகளே அதிகமாக இருப்பதுபோலவும் தோன்றுகிறது. எப்படியாயினும் செய்திகளை அதிகமாகத் தருகின்ற, அதுவும் துணிவோடு தருகின்ற உங்களின் பாணியில் சிறப்பாக அமைந்த நூல். அவர் பட்ட காயங்களே அவருக்கு அனுபவமாக இருந்துள்ளதோ என்பதை உணரமுடிகிறது. மாறிய மக்களின் நாடித்துடிப்பினை அவர் அறிந்திருந்தார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. (அத்தியாய வரிசையில் 4க்குப் பிறகு மற்றொரு 4 வந்துள்ளது போலுள்ளது)
ReplyDeleteமிக்க நன்றி
Deleteசெல்விஜெயலலிய்ஜாவுக்கு என்று ஒருமடல் எழுதி இருந்தே நென் அபிப்ப்ராயங்கள் சிலதை தாங்கியது அது இப்போடு தோன்றுகிஅது அவருக்கே நேரடியாய் அனுப்பி இருக்கலாம் இருந்தால் என்ன நிலைமை அதேதானே இப்போடும் அமல் படுத்தலாம்
ReplyDeletehttps://gmbat1649.blogspot.com/2016/05/blog-post_30.html#comment-form
வாசித்தேன்.
Deleteஉங்கள் பின்னூட்டங்கள் பார்த்தேன் அவை பின்னூட்டமிட்டவர்களின் கருத்துக்காக இருக்கின்றன என்பதிவுக்கானதாக தோன்றவில்லைபதிவின் சாக்கில் சில கருத்துகள் வைத்திருக்கிறேன் நடை முறை படுத்தினால் ஏற்றடாக்ஷ்வுசள் மறையலாம்
Deleteநீங்கள் எழுதிய விதம் பாம்பும் சாகக்கூடாது கம்பும் உடையக்கூடாது என்பது போல இருந்தது. அதற்கு எப்படி பதில் அளிப்பது. ஆயிரம் கோடி ஊழல் என்பது இவர் ஆட்சியில் அறிமுகம் ஆனது. அதற்கு முன்னாலும் ஊழல் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு துறையிலும் உள்ள அமைச்சர்கள் தங்கள் வேலை என்பது வசூல் செய்து தோட்டத்தில் கொண்டு கொடுத்து விட்டு அதில் 30 சதவிகிதம் தனக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அடிமையாக வாழ்ந்த கதையை எந்த இடத்திலும் நீங்கள் எழுத வில்லை. தமிழகத்தில் எந்த திட்டமும் உருவாக்கப்படவில்லை. நீங்கள் என்னன்னா தடவிக் கொடுத்துக் கொண்டு இருக்கீங்க. தேவகோட்டை மீசைக்காரர் தான் இது போன்ற பதிவுகள் எழுத சரியான நபர்.
Deleteஅடடா...! முதல் கருத்துரை அப்படியே இருக்கட்டும்...
Deleteஜோதிஜி வணக்கம் என்பதிவை வாசித்தேன் என்கிறீர்கள் வாசித்தால்நீங்கள்புரிந்து கொள்ளாதது பதிவு ஒரு விமரிசனம் அல்ல என்பதை என் எண்ணங்கள்க்கு வரிவடிவம் கொடுத்டிருக்கிறேன் ஜயலலிதா ஆட்சியில் இருந்ததால் அவருக்கு எழுதியது நல்லது என்று எண்ணங்கள் ஒரு வேளை அவர் பார்த்தால் என் எண்ணங்களுக்கு செயல் வடிவம் தரலாம் என் அனுமானங்களை ஆங்காங்கே கூறி இருக்கிறேன்பதிவு எழுதும்போது வாசகர்களின் கருத்துகளை நான் மதிப்பதுண்டு அதனால் தான்ப்திவின் முக்கிய செய்திகள் எப்படி வரவேற்கப்படுகிற்து என்பது தெர்யும் அதை விட்டு எழுதாததை விமர்சனம் செய்வடு சரிஅல்ல என்பதே என்கருத்து
Deleteமகிழ்ச்சி. நன்றி.
Deleteஉங்களது இந்த நூல் வாசித்ததில்லை. தரவிறக்கம் செய்து வாசிக்க வேண்டும். ஏற்கெனவே தரவிறக்கம் செய்த நூல்கள் இன்னும் வாசிக்கக் காத்திருக்கின்றன. :(
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பதிவுகள்.
How to free reading, Amazon Kindle ask rs 169 every month,30 days free trial,only icci & citi bank card,how to sign up other card holder
ReplyDelete6382884938 pls any 1 reply
ReplyDeleteஉங்கள் அலைபேசியில் உள்ள ப்ளே ஸ்டோர் செல்லவும். அமேசான் கிண்டில் ஆஃப் என்ற செயலியை தரவிறக்கம் செய்யவும். உங்கள் பெயர் மின் அஞ்சல் முகவரி பாஸ்வேர்ட் போன்ற விசயங்களை முடிக்கவும். அதன் பிறகு இங்கு வெளியாகும் இலவச மின்னூல்களை தரவிறக்கம் செய்யவும். முடிந்தவுடன் ஒவ்வொரு பக்கமாக விரியும். தட்டிக் கொண்டே வந்தால் அடுத்த பக்கம் வரும். வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
Delete