ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணப் படுக்கையில் கூறிய இறுதி வார்த்தைகள்.
தொழில் உலகத்தில் வெற்றியின் உச்சத்தை நான் அடைந்திருந்தேன். பிறர் கண்களுக்கு, என் வாழ்வு வெற்றியின் மறுவடிவமாகத் தோன்றியது.
எனினும், வேலைக்கு அப்பாற்பட்டு நாண் கண்ட மகிழ்ச்சி மிகவும் குறைவே. முடிவில், செல்வம் என்பது எனக்குப் பழக்கமான வாழ்க்கையின் ஒரு உண்மை மட்டுமே.
இந்த நேரத்தில், என் வாழ்நாள் முழுவதையும் நினைவு கூர்ந்தால், வரவிருக்கும் மரணத்தை எதிர்கொள்வதில், நான் மிகவும் பெருமிதம் கொண்ட அனைத்து அங்கீகாரங்களும் செல்வங்களும் பலமடைந்து அர்த்தமற்றவை என்பதை நான் உணர்கிறேன்.
இருளில், நான் வாழ்க்கைத் துணை இயந்திரங்களிலிருந்து பச்சை விளக்குகளைப் பார்க்கிறேன், முணுமுணுக்கும் இயந்திர ஒலிகளைக் கேட்கிறேன், மரணத்தின் கடவுளின் சுவாசம் நெருங்கி வருவதை என்னால் உணர முடிகிறது.
நம் வாழ்நாள் முழுவதிற்க்கும் போதுமான சொத்துக்களைச் சேர்த்த பிறகு, செல்வம் சம்பந்தப்படாத பிற விஷயங்களை நாம் தொடங்க வேண்டும் என இப்பொழுது எனக்குப் புரிகிறது. ஒரு உறவாக இருக்கலாம், ஒரு கலையாக இருக்கலாம், சிறு வயதில் கண்ட ஒரு கனவாகக் கூட இருக்கலாம். அது மிக முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். செல்வத்தை இடைவிடாமல் பின்தொடர்வது என்னைப் போலவே ஒரு நபரை ஒரு விரும்பத்தகாத ஜீவனாக மாற்றிவிடும்.
எல்லோருடைய இதயத்திலும் உள்ள அன்பை உணரவே கடவுள் நமக்குப் புலன்களைக் கொடுத்தார், செல்வத்தால் ஏற்படும் மாயைகளை உணர்வதற்கு அல்ல. நான் சேர்த்த செல்வத்தை என்னால் கொண்டு செல்ல முடியாது. அன்பினால் விளைந்த நினைவுகளை மட்டுமே என்னால் கொண்டு செல்ல முடியும். இதுதான் உங்களைப் பின்தொடரும், உங்களுடன் வரும், தொடர்ந்து செல்வதற்கு உங்களுக்கு பலத்தைக் கொடுக்கும் உண்மையான செல்வம்.
அன்பு ஆயிரம் மைல்கள் பயணம் செய்யும். வாழ்க்கைக்கு எல்லையே இல்லை. நீங்கள் போக விரும்பும் இடத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் அடைய விரும்பும் உயரத்தை அடையுங்கள்.
உலகின் மிக விலையுயர்ந்த படுக்கை எது? - மரணப் படுக்கை.
உங்களுக்காகக் காரை ஓட்டுவதற்கு யாராவது வேலை செய்யலாம், உங்களுக்காகப் பணம் சம்பாதிக்கலாம், ஆனால் உங்களுக்காக வியாதியைத் தாங்க உங்களால் ஒருவரை நியமிக்க முடியாது.
இந்த உலக உடைமைகளை இழந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு முறை இழந்து விட்டால் திரும்பக் கிடைக்காத ஒன்று உண்டு, அதற்குப் பெயர் தான் - வாழ்க்கை. ஒரு நபர் அறுவை சிகிச்சைக்குச் செல்லும்போது, அவர் இன்னும் ஒரு புத்தகத்தை வாசிப்பதை முடிக்கவில்லை என்பதை உணருவார் - அது “ஆரோக்கியமான வாழ்க்கை புத்தகம்”.
இப்பொழுது வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், அதற்கான நேரம் வரும் போது, மரணத்தை நாம் சந்தித்தே ஆக வேண்டும். உங்கள் குடும்பத்தின் மீது அன்பு செலுத்துங்கள், உங்கள் துணைவரை காதலியுங்கள், உங்கள் நண்பர்களை நேசியுங்கள்.
உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். பிறரை நேசியுங்கள்.
•••••
இன்று முதல் இலவசமாக வாசிக்க முடியும்.
•••••
இன்று முதல் இலவசமாக வாசிக்க முடியும்.
அன்பு ஒன்றே நிலையானது.
ReplyDeleteஆனாலும் அந்த அன்பு உயிர்ப்புடன் இருக்க பணம் தேவைப்படுகிறதே...
இவர் செல்வந்தர் என்பதால் இவர் சொன்னது உண்மையான தத்துவம்போல் தெரிகிறது.
இதோ மறுவேளை உணவுக்கு வழியில்லாத பக்கத்து வீட்டு பரமசிவம் சொல்லும் வாழ்வியல் தத்துவத்தை கேட்க காதுகள் கிடையாது.
இதுதான் இன்றைய சமூகம்.
56 வயதில் இறந்து விட்டார் போல இருக்கு. மனிதர்கள் பலர் இதுபோல் இறூதி நிலையில் நெறய யோசிக்கிறாங்க. அது வரைக்கும் அவங்க வேற எதையும் யோசிக்க நேரம் இருப்பதில்லை. அவங்க சாதிக்க முயல்வதிலும், சாதித்ததை தக்க வைத்துக் கொள்வதிலுமே அவர்கள் நேரம் செவழிகிறது.
ReplyDeleteஇதைவிட வேடிக்கை என்னனா, நாடுகள் இன்னொரு நாட்டை இன்வேட் செய்யும் நாடுகளீல் வாழ்ற கடவுள் பக்தர்கள் எல்லாம் எல்லா மனிதனையும் சம்மாகத்தான் பார்க்கனும்னு போதிக்கிறாங்க. தான் வாழும் நாட்டுக் கொள்கையும் அதில் வாழும் மனிதர்கள் கொள்கையும் வேற வேற. :)
இவர் வாழ்நாள் முழுக்க பழங்களைத்தான் அதிகம் சாப்பிட்டு வாழ்ந்தார். அது அவரின் உணவுக் கொள்கை. அது தான் அவரின் கணையத்தைத் தாக்கியது. மனநிலையில் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் குழப்பத்துடன் வாழ்ந்துள்ளார். திறமை ஒரு பக்கம். ஆனால் தன் வாழ்க்கை குறித்து புரிதல். இவை இரண்டும் ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இதை இங்கே வெளியிடத் தோன்றியது.
Deleteஇவருடைய பயலாஜிக்கல் பேரண்ஸ் கல்லூரியில் படிக்கும்போதே ஃப்ரீ செக்ஸ் வைத்துக்கொண்டு இவர் உருவாகி இருக்கிறார். இப்போ என்ன பண்றாங்கனா நம்ம ஊரில் கலைப்பதுபோல் கலைக்காமல், பெற்றூ எடுத்து பிள்ளயை அடாப்சனுக்கு கொடுக்கிறாங்க. ஜாப்ஸ் வளர்ப்பு தந்தைபோல் பலர் அதுபோல் குழந்தைகள எடுத்து வளர்த்து ஆளாக்குறாங்க. இதுபோல் அப்பா அம்மாவால் 'கர்ணானாக" விடப்பட்ட பலர் வளர்ந்து சாதிக்கிறாங்க. நம்ம ஊரில் இவர் உருவாகி இருந்தால் கருவிலேயே இவரை அழித்து இருப்பார்கள். அமெரிக்காவை ஆயிரம் வகையில் க்ரிட்டிசைஸ் செய்யலாம், ஆனால் இவர்கள் இடமிருந்து நாம் கத்துக் கொள்ள வேண்டியது இதுபோல் பல விச்யங்கள் இருக்கு. அபார்ஷன் தவறானதுனு பற சாற்றூம் ரைட் விங், இதுபோல் உதாரணங்கள் காட்டி பலம் சேர்க்கிறார்கள்.
Deleteபழம் சாப்பிட்டதுக்கும் பாங்க்ரியாட்டிக் கேன்சருக்கும் சம்மந்தம் இருக்கானு தெரியவில்லைங்க. இது ஒரு கோ இன்சிடென்ஸ் ஆக இருக்கலாம். பொதுவாக கேன்சருக்கு காரணம் ஜெனடிக் ரீசந்தான். பழம் அதிகமாக சாப்பிட்டதால் பான்க்ரியாஸ் பாதிக்கப் பட்டதென்பதெல்லாம் சும்மா கதைதான்.
கணையம் என்பது நம் உறுப்புகளில் மிக முக்கியமானது. சித்த வைத்தியத்தில் கழுதை போல சுமக்கும் கல்லீரல் என்று தான் இதனைக் குறிப்பிடுவார்கள். அதாவது எவ்வளவு பொதி வேண்டுமானாலும் சுமக்கும். ஆனால் படுத்து விட்டால் எழுந்திருக்காது. சோலி முடிந்தது என்று அர்த்தம். பழம் சாப்பிடுவது தவறில்லை. ஆனால் முறைப்படுத்தப்பட்ட மற்ற உணவுகளும் கலந்து உண்ண வேண்டும். இப்போது டயட் என்ற பெயரில் அவரவர்களும் தனக்குத் தோன்றும் வண்ணம் தங்கள் உறுப்புகளை தாங்களே சிதைத்துக் கொள்கிறார்கள். சசிகலா கணவர் கல்லீரல் மாற்று சிகிட்சை நடந்தது. சாகக் கிடந்த பையனை கொன்று இவர்கள் எடுத்து வந்து மாட்டினார்கள். ஆனால் வெற்றி பெறவில்லை. கணையம் மூளை ஆராய்ச்சி இன்னமும் வெற்றிபெற வில்லை. மற்றபடி அமெரிக்கா என்பது நான் பார்த்தவரைக்கும் உண்மையான ஜனநாயகக் கூறுகளை அந்த மக்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கும் நாடுகளில் முதன்மையான வரிசையில் உள்ளது. அதன் வெளிவிவகாரம் தான் விகாரம்.
Deleteதலைவரே,,, இந்த செய்தி வந்து பல மாதங்கள் ஆச்சி... இருந்தாலும் வந்தனம்...
ReplyDeleteஅனைவரிடத்திலும் அன்பு செய்வோம்.
ReplyDeleteசிறப்பான பகிர்வு ஜோதிஜி.
அருமை. என்னதான் உழைத்தாலும் நமக்கென ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க முடிவதில்லை இந்த வாழ்க்கையில். என்ன செய்வது? இயந்திரங்களோடு சேர்த்து நாமும் இயந்திரங்களாகிவிட்டோம்.
ReplyDeleteநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
அருமை
ReplyDeleteஎந்த பதிவு பார்த்தாலும் மார்க்கெட்டிங் இருக்கிறது
ReplyDeleteவாழ்வியல் பாடம்
ReplyDelete