அஸ்திவாரம்

Tuesday, November 26, 2019

கிருஷ்ணா பார்வையில் 5 முதலாளிகளின் கதை.

Krishna Dvaipayana

5 November at 15:01 · 

முதலாளி/நண்பர் ஜோதிஜி திருப்பூர் எழுதிய "ஐந்து முதலாளிகளின் கதை" படித்தேன். எளிமையான மொழியில் நல்ல பொதிந்த கருத்துக்கள் சொந்த அனுபவங்களுடன் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். திருப்பூர் நகரில் தன் வேலையை ஆரம்பித்ததிலிருந்து தொழில்முனைவராக ஆனது வரை தான் சந்தித்த முதலாளிகளில் ஐந்து முதலாளிகளின் கதையை எழுதியிருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமாக விதமாக இருப்பதை எந்த ஒரு மனதீர்ப்பும் இல்லாது தன் நம்பிக்கை விழுமியங்களை கொண்டு கடந்து சென்றதை சிறப்பாக சொல்லியிருக்கிறார். 





எழுதிய மனிதர்களின் குணவார்ப்புகள் நம்மை நமக்கு தெரிந்த சிலரோடு பொருத்தி பார்க்கும் அளவிற்கு இயல்பான சித்திரம் அளிக்கிறார். இலக்கியம் படைக்க எண்ணுபவர்கள் சென்று சிக்கிக்கொள்ளும் வார்த்தை ஈபொறியில் மாட்டிக்கொள்ளாமல் தன்னுடைய வலையை திருப்பூரின் துணி கம்பெனிகளின் பின்னணியில் சாதாரண திறம்பட எழுதியிருக்கிறார். கதையில் நடுவில் வரும் monologue கள் எந்த ஒரு இடக்கரக்கடலையும் உருவாக்குவதில்லை. அவர் தொழில் முனைவாராகியிருக்கும் சூழ்நிலை நம்மை வியக்க வைக்கிறது. சில இடங்களில் வார்த்தை வலிய திணிக்காமல் சொல்லிச்செல்லும் நறுக் தன்மை கைகூடியிருக்கிறது (எ-கா) முதல் முதலாளி குமார் பற்றி டைலர் சொல்வது. அவர் உருவாக்கும் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக மனதில் தங்கி புத்தக இறுதியில் எனக்கு 80களில் விடினைட் ஷிபிட் முடிந்து பெண்களும் டைலர்களும் சாப்பாட்டு கடை தாண்டி அலுப்பில் நடந்து செல்லும் சித்திரம் வரவைத்தது அவர் பதிவு செய்த சூழ்நிலையின் சான்று.இறுதியாக வரும் முதலாளியின் கதை இன்னமும் பெரிதாக வந்திருக்கலாம் , 

குப்பை மனிதர்கள் பற்றிய அவரது கருத்துக்கள் ஏனோ முழுக்க இல்லாமல் போய்விட்டது. பணம் கிடைத்தால் வகைவகையாய் பானை வாங்கி கூத்தாடும் மனிதர்களின் அந்தரங்கத்தை சிறப்பாக சொல்லியிருக்கிறது.

கிண்டிலில் இது போன்ற அனுபவஸ்தர்கள் எழுதும் புனைவுகள்/அபுனைவுகள் நிறைய வருமாயின் அதுவே இந்த போட்டியின் அந்த இ-புத்தக சந்தையின் தனிப்பட்ட சிறப்பு என்பேன்.

4 comments:

  1. புத்தகத்துக்கு நல்ல விமரிசனங்கள் வந்துகொண்டிருப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள் ஜோதி ஜி!

    ReplyDelete
    Replies
    1. இந்த போட்டியில் தரம் என்பது இரண்டாம் கட்ட தேர்வுக்குள் வந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். முதலில் விற்பனை விமர்சனம் படித்த பக்கங்கள் அடிப்படையில் தான் முதல் ஐந்து புத்தகங்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். அனைவரும் புத்தக வடிவில் தான் எதிர்பார்க்கின்றார்கள். அமேசான் பல வித தடைகளை உருவாக்கி வைத்து உள்ளார்கள். 1. 1500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியிருந்தால் மட்டுமே விமர்சனம் வெளியாகும். 2. ஆங்கிலத்தில் எழுதினால் மட்டும் வெளியிடப்படும். 3. இந்தியாவில் உள்ளவர்கள் .இன் மூலமாக வாங்க வேண்டும். 4. வெளிநாட்டில் .காம் மூலம் வாங்க வேண்டும். 5. குறிப்பிட்ட நாடுகளில் தடை இது போன்ற பல பஞ்சாயத்துக்கள் உள்ளது. பலருக்கும் சென்று சேர்ந்துள்ளது. இதன் மூலம் சில நல்லது நடந்துள்ளது. அதனைப் பற்றி தனியாக எழுதுகிறேன்.

      Delete
  2. அகத்திற்கு புத்துணர்வு தருவதால் அது புத்தகம் ஆனது ( புத்துணர்வு + அகம் = புத்தகம்)... தரமான விமர்சனம் .... தொடரட்டும் !!!

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.