அஸ்திவாரம்

Sunday, October 13, 2019

மாமல்லபுரத்தில் வேட்டி சட்டை அணிந்து சீன அதிபருடன் வலம் வந்த மோடி


சக்தி வாய்ந்த தலைவர்கள் வருகையின் போது உடனிருக்கும் அதிகாரிகள், அவர்களின் செயல்பாடுகள், ஒவ்வொரு நொடியிலும் அவர்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் சிறப்புப் படை வீரர்களின் செயல்பாடுகளை மட்டும் அதிக கவனம் எடுத்துப் பார்ப்பதுண்டு. சீன அதிபர் சென்னை விமான நிலையத்தில் இறங்கி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டது முதல் அவர் அடுத்தடுத்து நகர்ந்து தமிழக பராம்பரிய நடனங்களைக் கண்டு கழித்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு வீரரும் 360 பாகை கோணத்தில் சொல்லி வைத்தாற் போல அவரவர்களும் அந்தந்த கோணத்திற்குள் தங்கள் தலையைச் சுற்றிலும் நகர்த்திக் கொண்டே வருகின்றார்கள்.

அதிபரை வாகனத்தில் ஏற்றி கதவைத் சாத்திய பின்பு குறிப்பிட்ட அதிகாரி மற்றொரு புறம் பாய்ந்தோடுகின்றார்.

இது போன்ற செயல்பாடுகள் இருக்கும் என்று நம்பித்தான் காப்பான் படத்தை பார்க்கச் சென்றேன். இதைத் தவிர மற்ற அனைத்தும் இருந்தது.

குறிப்பிட்ட இடங்களுக்குச் சீன அதிபரும் மோடியும் பயணிக்கும் போது உடனிருக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் மனதில் என்ன இருக்கும்? இது போன்ற துறையில் இருப்பவர்கள் தங்கள் பணி ஓய்வுக்குப் பின்னால் புத்தகம் எழுதி உள்ளார்களா? எழுத விடுவார்களா?

இவர்கள் நடக்கும் இடமெல்லாம் சிவப்பு கம்பளம் விரித்தவர்கள், அது சார்ந்த பணியில் இரவு பகலாக பணிபுரிந்தவர்கள் மனதில் என்ன ஓடியிருக்கும்? அவர்களே மாமல்லபுர சிற்பங்களை என்றாவது முழுமையாக கலைரசனையுடன் பார்த்திருப்பார்களா?

தமிழக அரசின் அத்தனை துறைகளும் கடந்த ஒரு மாதமாக மாமல்லபுரத்தை மொத்தமாகப் புரட்டிப் போட்டு புத்தம் புதுசாக மாற்றி உள்ளனர். அடுத்த வாரம் சென்று பாருங்கள்? பார்ப்பவர்களுக்கு அழுகையே வந்துவிடும்.

அவரவர் பணி அவரவருக்கு,
















ஈழம் - படிக்க மறந்த வரலாற்றுக் குறிப்புகள்: ஈழ வரலாற்றில் இதுவரையிலும் வெளிவராத சர்வதேச அரசியல்

5 முதல் 50 வரை: ஐம்பது என்பது வயதல்ல

டாலர் நகரம் (DOLLAR NAGARAM): A Tamil book about the history of Tirupur city and auto biography

அந்தரங்கக் கதைகள்: பாலியல் தொழிலாளியின் பாசப் போராட்டம்

பஞ்சு முதல் பனியன் வரை: ஒரு தொழில் நகரின் வரலாறு

ஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி!: அஞ்சலிக் கடிதங்களின் தொகுப்பு

3 comments:

  1. மனங்களை வென்ற மோடி-ஜின்பிங் சந்திப்பு ஒரு பார்வை

    https://www.youtube.com/watch?v=UVjqIMKenxQ

    ReplyDelete
  2. அதிகாரத்தில் இருப்பவர் எது செய்தாலும் கவனிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படும்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வதும் உண்மை தான். ஆனால் ஜெ அதிகாரத்தில் தான் இருந்தார். அதுவும் வானாளாவிய அதிகாரம். இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி. இன்று என்ன ஆச்சு? இவரைப் பற்றிய ஞாபகார்த்தங்கள் இன்று எவரால் பேசப்படுகின்றது? முன்னெடுக்கப்படுகின்றது?

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.