அஸ்திவாரம்

Thursday, September 26, 2019

மம்தா பேனர்ஜி

மோடி தினமும் இந்தியாவிற்கு வெளியே எத்தனையோ பேர்களைச் சந்திக்கின்றார். உள்ளேயும் பலரையும் சந்தித்த புகைப்படங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. ஒவ்வொருவர் பார்வையிலும் அது வெவ்வேறு விதமாகப் பார்க்கப்படுகின்றது. விமர்சிக்கப்படுகின்றது, பாராட்டப்படுகின்றது. ஆனால் நான் நேற்று இந்தப் படங்களைப் பார்த்தவுடன் ஆன்மீகத்தையும் (நம்பிக்கைகள்)அரசியலையும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்த்தேன்.

சிலருக்கு வெற்றி அவரின் திறமையினால், உழைத்த உழைப்பினால் தொடக்கத்தில் அல்லது இறுதியில் கிடைக்கின்றது. ஆனால் அதனைத் தக்கவைப்பதில் தான் சூட்சமம் உள்ளது. பெரும்பாலோனோர் இதில் தோற்றுப் போய் விடுகின்றனர். அந்த சமயங்களில் தான் மனிதர்கள் ஆன்மீகத்தைத் துணைக்கு அழைக்கின்றார்கள்.

ஜோதிடம், யாகம், பிரார்த்தனைகள் இன்னும் பல செய்தாலும் ஜெ போல எப்படிச் செத்தார்? என்பது தெரியாமல் போய்ச் சேர்ந்து விடுகின்றார்கள்.
ஆனால் நான் ஆறாண்டுகளாகக் கவனித்த வரையிலும் மோடி அவர்களின் வெற்றியும், அவர் தன்னை தக்க வைத்தலும் என்பதும் அவரின் எதிரிகளின் துரதிஷ்டத்தின் மூலமே கிடைப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.

உங்களுக்கு குழப்பமாக அல்லது கிண்டலாகத் தெரியலாம்.

அட போப்பா... மொத்த ஊடகத்தையும் வாயை அடைத்து வைத்துள்ளார்கள். அப்புறம் எங்கே உண்மைகள் வெளியே வரும் என்று நீங்கள் சொல்லவரலாம். ஆம். உண்மை தான். அதிகாரம் என்பது நீங்களும் நானும் நினைப்பது போலச் சாதாரணமானது அல்ல. ஆனால் அளவு கடந்த அதிகாரம் இருப்பதால் மட்டும் ஒருவர் எப்போதும் வெளிச்சத்திலேயே இருப்பார் என்பதும் சாத்தியமானதும் அல்ல. இந்த இடத்தில் தான் நம்ப மறுக்கும் அப்பாற்பட்ட சக்திகள் குறித்து யோசிக்க வைக்கின்றது.

மேற்கு வங்கத்தின் கோட்டை கதவை இந்தியாவின் ஆண்ட எந்த கட்சியாலும் தட்டக் கூட முடியவில்லை என்ற கதை நம் அனைவருக்கும் தெரிந்தது தான். கம்யூனிஸ்ட் கட்சி என்பது அந்த மாநிலத்தில் என்ன செய்தார்கள்? எப்படி மாநில வளர்ச்சியை வைத்திருந்தார்கள் என்பதைப் பற்றிப் பேசுவதை விட அவர்கள் தங்களை அங்கே தக்க வைத்திருந்தார்கள். ஆனால் மம்தா பேனர்ஜி அடித்த அடி என்பது கொஞ்சநஞ்சமல்ல. சண்ட மாருதம் என்பார்களே? அப்படித்தான் அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இருந்தது.

பெண் அரசியல்வாதியாக இருந்த மாயாவாதியின் கிறுக்குத்தனங்களை விட மம்தாவின் கோமாளித்தனங்களை நான் ரசித்ததுண்டு. அரசியலில் எல்லாவித சித்து விளையாட்டுகளுக்கு இடமுண்டு. சூழல் பொறுத்து அது பாராட்டப்படும் அல்லது பரிகசிக்கப்படும். இறுதியில் வென்றார் மம்தா.

1947 காலகட்டத்தில் இந்தியா இருந்ததைப் போலத் தான் மேற்கு வங்கம் இருந்தது. நிச்சயம் அந்த மாநிலத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கி விடுவார் என்றே நம்பினேன். ஆனால் கடைசியில் சாராத சிட்பண்ட் கேஸ் ல் சந்துக்குள் சிக்கி புலி பூனையாகி இன்று டெல்லிக்குச் சென்று மியாவ் மியாவ் என்று கத்துகிறது.

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு சாரதா சிட்பண்ட் நிறுவனம் 17 லட்சம் பேரிடம் சுமார் பத்து ஆயிரம்கோடி ரூபாய் வசூலித்து ஏப்பம் விட்டனர். எப்போது நம் மக்களாட்சி தத்துவத்தின்படி மேற்கு வங்க காவல்துறை தான் இதனை விசாரித்தனர். பல திசைகளிலும் எதிர்ப்பு உருவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சிபிஐ க்கு வழக்கு மாற்றப்பட்டது. மம்தாவின் இறங்கு முகம் அந்த நிமிடத்தில் தொடங்கியது.

அவருக்கு இதில் தொடர்பு இருக்கின்றதா? இல்லையா? என்பதனை விட அவரின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ல் உள்ள நண்டு சிண்டு முதல் பெருச்சாளி வரைக்கும் இதில் தொடர்பு உடையவர்களாக இருப்பது மம்தாவிற்கு பெரிய தலைவலியாக உள்ளது. ஆனால் மேற்கு வங்க காவல் துறை இந்த வழக்கைக் கையாண்ட போது காவல்துறையில் மூத்த அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார் முக்கியமான ஆவணங்களை எல்லாம் காணாமல் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டுப் பரபரப்பு தீயைப் பற்ற வைத்தது. இவர் இப்போது மேற்கு வங்க காவல்துறையில் சிஐடி பிரிவின் தலைவராக உள்ளார். ஏற்கனவே இவரைக் கைது செய்ய சிபிஐ சென்ற போது மம்தா கொல்கத்தா காளியாட்டம் ஆடி களேபரத்தையே உருவாக்கிவிட்டார். சிபிஐ பின்வாங்கிச் சென்று விட்டது. இனி என்னைக் கேட்காமல் எவனும் உள்ளே வரக்கூடாது என்று உச்சக்கட்டமாய் ரணகளபடுத்தி விட்டார்.

ஆனால் இப்போது நிலைமை?

ராஜீவ் குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய உளவுத்துறை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு இஞ்ச் இஞ்சாக தேடிக் கொண்டு இருப்பதாக அவர்கள் ஒரு பக்கம் கதையளக்கின்றார்கள். அதாவது நீயாக வந்து காலில் விழுகின்றாயா? இல்லை கெண்டைக்கால் நரம்பைப் பெயர்த்து எடுக்கட்டுமா? என்று தடாலடி நடவடிக்கை காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல்வாதிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அதிகாரியாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அவரை "தொங்க" விடுவது வாடிக்கை தான். ஆனால் அதற்கு முன் கடைசி முயற்சியாக கொல்கத்தா காளி டெல்லியில் உற்சவரைப் பார்த்து மூலவரையும் பார்த்துள்ளார்.



மோடியின் தயவு மட்டுமே தன் அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றும் என்று மம்தா நம்புகிறார். அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார் போலும். டெல்லிக்குச் செல்ல கொல்கத்தா விமான நிலையத்தில் மம்தா காத்திருந்த போது மற்றொரு பக்கம் குஜராத் செல்வதற்காக மோடியின் மனைவி நின்று கொண்டிருப்பதை அதிகாரிகள் மம்தாவிடம் சொல்லி உள்ளனர்.

மனைவியுடன் மோடி இப்போது தொடர்பில் இருக்கின்றாரா? இல்லையா? என்பதனை விட அவர் நமக்குத் தேவை என்று மம்தா யோசித்திருப்பார் போல. மம்தா மோடியின் மனைவியின் இருந்த இடத்திற்கு அவரே சென்று "நீங்க எப்போது கொல்கத்தா வந்தாலும் என்னிடம் சொல்லுங்கள். இங்கு நீங்க பார்க்க வேண்டிய கோவில் அனைத்துக்கும் அழைத்துச் செல்ல வேண்டியது என் பொறுப்பு" என்று உரிமையுடன் பேசி பட்டுப் புடவை பரிசாக அளித்து (எப்படியாவது அவரிடம் சொல்ல முடியுமா?) அவரை சகோதரியாக்கி டெல்லி விமானத்தில் ஏறி அமர்ந்தாராம்.

இப்போது சொல்லுங்கள்?

இந்த ஆட்டத்தில் யாருக்கு அதிர்ஷ்டம்?

யாருடைய துரதிஷ்டம் மம்தா வை டெல்லிக்குப் பயணப்பட வைத்தது?

()()()()

வாசிக்க (கிண்டில்)






8 புத்தகங்களின் விமர்சனம்: வாசித்தே ஆக வேண்டிய புத்தகங்கள்


9 comments:

  1. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.

    ReplyDelete
    Replies
    1. பலசமயம் பணமே இறுதியில் வெல்லும். நீங்க சொல்ற மாதிரி இருந்தால் ஓபிஎஸ் எடப்பாடி 200 வருடத்திற்கு உள்ளே இருக்கனும். ஜெ எலும்புக்கூடு சசிகலா இன்னும் 500 வருடத்திற்கு உள்ளே இருக்கனும். வாய்ப்பு உள்ளதா?

      Delete
  2. இங்கே எல்லாமே அரசியல் தான் ஜி. பல விஷயங்கள் வெளியே தெரியாமல் நடந்தேறும். அவற்றை இரண்டு பக்கமும் வெளியே செல்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது தான் உண்மை. உனக்கு பாதி எனக்கு மீதி.

      Delete
  3. உங்களுக்கு தெரிந்த தகவல் தான் , மோடி நேரடியாக முதல்வர் ஆனவர் , தொடர்ந்து பிரதம மந்திரி ஆகும் வரை முதல்வராய் இருந்தவர் - பஸ்மேஸ்வரன் போல எதிரிகள் சாம்பலாகி விடுவார்கள் என்பது அவருடைய விதி ....அவருடைய நேர்மை , ஊழலற்ற ஆட்சி , மக்கள் நல திட்டங்கள் , வாழ்க்கை முறை எல்லாமே ஒரு திறந்த புத்தகம் . இருவர் மட்டுமே எதோ பிடித்து நிற்கிறார்கள், அந்த இருவர் தான் நிதீஷும் , மம்தாவும் . நிதீஷ் மாறிவிட்டார் ... நாமெல்லாம் அறியாதது அல்லது நம் தமிழ் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது, அரசியில் கொலைகள் சில மட்டுமே ....ஆனால் , மேற்கு வங்கத்தில் இது பல ஆயிரங்கள் ( 50+ ) , கேரளத்தில் சில நூறுகள்....

    மோடி கூட பணியில் இருந்தவர்கள் நிறைய தமிழர்கள் , ( குஜராத்தில்) , இந்த பத்ரிக்கைகளோ அல்லது டீவியிலோ , அவர்களை சந்தித்து, அவர்களின் பார்வையில் , ஆட்சி மற்றும் தனிப்பட்ட , நினைவுகள் பற்றி பேட்டி எடுக்கலாம் .

    நீங்கள் தென்னை மரம் பற்றி கேட்டீர்கள் , நான் பசு பற்றி எழுதி விட்டேன்.

    I did reply for the sanskrit according to my consciousness.

    ReplyDelete
    Replies
    1. மேற்கு வங்கத்தில் கடந்த 40 ஆண்டுகளுகாக நடந்த கலவரம், பின்னால் இருந்தவர்கள், மதம் மற்றும் மதம் சாரா மனிதர்கள் என்று கண்க்கு எடுத்து ஒரு புத்தகம் எழுதினால் ஆயிரம் பக்கம் என் ஐந்து புத்தகங்கள் எழுத வேண்டும். அந்த அளவுக்கு அளவு கடந்த அக்கிரமங்கள் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. ஆனால் இன்று அனைவரும் மறந்து போய் விட்டனர். கடந்து போய் விட்டனர்.

      Delete
    2. கல்லூரியில் அயய்ர் பொண்ணுக அதிகமாக இருக்கிறார்கள் என்று நானும் முதல் இரண்டாவது வருடம் நான்கு செமஸ்டர் சமஸ்கிருதம் தான் படித்தேன். ஆனால் ஆங்கிலத்தில் தான் பாடம் நடத்தினார். ஒப்பேத்தி வந்தாச்சு. இரண்டு பரிட்சி ஹிந்தி எழுதினேன். இன்று சொல்ற அளவுக்கு ஒன்னுமே இல்லை. தொடர்ந்து பேச எழுதஇருந்தால் மட்டுமே பழக்கத்தில் வரும். பத்து நாள் பொண்டாட்டியோட பேசாமல் இருந்தால் கூட பிரச்சனை தான் தலைவரே.

      Delete
    3. நன்றி , எனக்கு சுத்தமாக சமஸ்க்ரிதம் எழுத படிக்க தெரியாது , ஹிந்தி எழுத படிக்க தெரியாது , ஆனால் டெல்லி வாழ்க்கை நிறைய கத்து கொடுத்தது , அதில் ஹிந்தி பேசும் , மற்றவர் பேசினால் புரிந்து கொள்ளும் திறமையும் ஓன்று.

      ஆனால் , சிவானந்த குருஜி முதல் தொடங்கி , சின்மயானந்தர், தயானந்த சரஸ்வதி, மஹரிஷி மகேஷ் யோகி, இன்னும் மற்ற பலர் யாவரும், அந்த வேதம் எல்லாம் படித்து, அந்தம் வரை சென்று , நமக்கு நிறைய வேதாந்த கருத்துக்களை , முக்கியமாக ஆங்கிலத்தில் நிறைய புஸ்தகங்கள் மூலம், மற்றும் , நேர் உரை மூலம் ( you tube ) விட்டு சென்றுக்கிறார்கள் , நிறைய சீடர்களை தயார் செய்து , கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றார்கள் . எனக்கு தெரிந்து , அதில் ஒவ்வாத கருத்து , அல்லது வெறுப்பு என்பது துளியும் கிடையாது . Well to do and well educated people in thousands in foreign universities study this , research this and follow this. It appeals to them . அதே சமயத்தில் மிகவும் ஏழைகளுக்கு , ஒரு காலத்தில் வில்லு பாட்டு, நாடகம் , கதா காலட்ஷேபம் , போன்றவை பெரிய கருத்துக்களை கொண்டு சேர்த்தன, ..அது ஒரு காலம், இப்பொழுது, எல்லாம் சினிமா மாயம், சினிமா மூலம் எந்த கருத்துக்கள் /பொய் - போய் சேர்கின்றன என்பது உங்களுக்கே தெரியும்.

      உங்கள் கையில் தான் உள்ளது, நீங்கள் என்ன படிக்க வேண்டும் என்று . ( நான் கை ரேகையும் சேர்த்து சொல்கிறேன் )

      Delete
    4. நீங்க சொல்வது அனைத்தும் உண்மை. நன்றி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.