அஸ்திவாரம்

Monday, July 22, 2019

எழுதத் தேவையில்லாத படங்கள்

புகைப்படக்கலை எனக்கு மிகவும் பிடித்தமான துறை.  ஆனால் நான் செல்லுமிடங்களில் காட்சிகளை உள்வாங்குவதில் கவனம் செலுத்துவனே தவிர படம் எடுக்கத் தோன்றாது.  வந்த பிறகு அடாடா இதனை எடுத்து இருக்கலாமே என்று தோன்றும்.  

ஆனால் சமகாலத்தில் மீம்ஸ் என்ற படவரிசைகள் நம்மை சிரிக்க சிந்திக்க வைக்கின்றது.  தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்கள் இளையாறுதலின் பொருட்டு நான் சமீப காலமாக ரசித்த படங்களின் தொகுப்பிது.

2019 நிதி நிலை அறிக்கை மக்களுக்கு என்ன சொல்கின்றது?




ராகுல் காங்கிரஸ் என்றால் என்ன?


தமிழக பத்திரிக்கைத் துறை எப்படி செயல்படுகின்றது?


நெருக்கடி நிலையின் உச்சம் என்றால் என்ன?


மக்களின் ஆன்மீகமும் மடாதிபதிகளின் ஆன்மீகத்திற்கு உள்ள வித்தியாசம் என்ன?


இந்தியப் பிரதமர் பதவி ஒரு தரம் இரண்டு தரம் மூன்று தரம் என்று ஏலம் போட முடியுமா?


காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி.


அலைபேசி தாலாட்டு பாடும்.  தொலைக்காட்சி கதை சொல்லும் காலமிது.


வென்றோம் ஆனால் தோற்றோம்?  தோற்றோம் ஆனால் வென்றோம் என்றால் என்ன?


ஜனநாயகம் அல்லது மக்களாட்சி என்றால் என்ன?


புதிய இந்தியா வளர்ந்துள்ளது என்பதனை இனியாவது நம்புவீர்களா?


அம்மா பாசம் என்றால் என்ன?


உங்கள் வயது ஐம்பது என்றால் குனிந்து நிமிர்ந்து விரைவாக எழ முடிகின்றதா? மருத்துவமனை செல்லாமல் வாழ்க்கை அமைந்துள்ளதா?


தமிழக அரசியல்வாதிகளை குறை சொல்லும் நீங்கள் இத்தனை பேர்களுக்கு தேர்தல் சமயங்களில் பணம் கொடுக்க உங்களிடம் பணம் உள்ளதா?  முதலீடு செய்தவன் திரும்ப எடுக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?




தமிழக அதிமுக ஆட்சி எப்படி செயல்படுகின்றது?




13 comments:

  1. நெருக்கடி நிலையின் உச்சம் என்கிற படம் போட்டோஷாப்போ நிஜமோ... முதுகுத்தண்டு சில்லிடுகிறது. அது எப்படி அங்கு சென்றிருக்கும் என்கிற சந்தேகக்கேள்வியும்...


    தாத்தாஇறந்தபின் படம் நெகிழ்த்தியது. முதல் படத்தில் ஏதாவது நகைச்சுவை, உள்குத்து இருக்கிறதா, தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இது மலை முகட்டில் வாழும் ஆடுகள். இதன் குட்டிகளை பருந்து கவ்விச் செல்வதை நான் அனிமல் பிளானட்டில் பார்த்திருக்கிறேன். தவறுதலாக ஆடுகள் சரிந்து விழுவதும் உண்டு.

      இதுபோலவே பறவைகளும் மலை முகட்டில் (நீங்க நினைக்கும் பறவைகள் இல்லை. முதன் முதலா ரெக்கை வந்தபிறகு அதுவே பறந்து கீழே நிலத்துக்கு-நீருக்கு வரணும். அப்படி வரமுடியாமல், மலைக் கற்களில் பட்டு பல இறந்துவிடும், பறக்க முயலும்போது)

      Delete
    2. நானும் பார்த்துள்ளேன். ராஜாளி கழுகுகள் இது போன்ற இடத்தில் தான் முட்டை பொறித்து குஞ்சு பொறிக்கின்றது.

      Delete
    3. // இதன் குட்டிகளை பருந்து கவ்விச் செல்வதை நான் அனிமல் பிளானட்டில் பார்த்திருக்கிறேன். தவறுதலாக ஆடுகள் சரிந்து விழுவதும் உண்டு.//

      நானும் பார்த்திருக்கிறேன்.

      Delete
  2. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்கிறது.

    தேவர் மன்றத்தில் நடனம் அடடே...

    நாளை யார் எந்த நிலையோ...?

    ReplyDelete
  3. ஸ்விக்கி ஆர்டரும், எம்பிக்கள் கோரிக்கையும் ரசிக்க வைத்தன.

    இப்போல்லாம் பகல் சீரியல்கள் தாய்மார்களுக்கு குழந்தைகளைவிட முக்கியமாகப் போய்விட்டது. (காலையிலேயே செய்ய சோம்பேறித்தனம், 11 மணிக்குச் செய்து கொண்டுபோய் கொடுக்க மனதில்லை)

    ReplyDelete
    Replies
    1. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்போது தமிழகத்தில் நெடுந்தொடர் தான் அவர்களை மன அழுத்தமின்றி வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றது என்பதும் உண்மையே. நீங்க சொன்ன மாதிரி முப்பது வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு இதன் மூலம் தான் கணவனுடன் சண்டையும் குழந்தைகளின் படிப்பும் கெட்டுப் போகின்றது.

      Delete
  4. ஆட்டின் படம் பதறவைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அவைகளுக்கு இது இயல்பான ஒன்றாக இருக்கக்கூடும்.

      Delete
  5. அடுத்த ஐந்து ஆண்டுக்குள் Photoshop-ல் திறமையானவர்களின் எண்ணிக்கை இருமடங்கு ஆகும்... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தனபாலன். பலமுறை சிரித்து மாளமுடியல.

      Delete
  6. படங்களும் அவை சொல்லும் செய்திகளும்.... நன்று.

    மலைமுகட்டில் ஆடு - சில ஹிமாச்சல்/உத்திராகண்ட் மாநில கிராமங்களில் மனிதர்கள் ஆபத்தான மலைப் பாதைகளில் நடந்து செல்வதைப் பார்த்ததுண்டு. கரணம் தப்பினால் மரணம் நிலை - சமவெளிப் பகுதியில் வசிப்பதை அவர்கள் விரும்புவதில்லை என்பதும் ஒரு காரணம்.

    தாத்தாவுக்குப் பின் - கதைகள் சொல்லும் கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது வருத்தம் தரும் விஷயம்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.