அஸ்திவாரம்

Saturday, June 29, 2019

அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் :

அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் :

1. திருநெல்வேலி ஏ.ஆர். காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4937

2. ஈரோடு ஐஸ்வர்யா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2332

3. வேலூர், அன்னை மீரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1137

4. சென்னை அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1133

5. கன்னியாகுமரி, அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4999

6. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி TNEA code 1201

7. திருவண்ணாமலை அருள்மிகு மீனாட்சி அம்மன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1503

8. திருவள்ளூர் பஜரங் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1102

9. கோவை , கேப்பிடல் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2370

10. திருச்சி, கேர் குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 3841

11. தூத்துக்குடி சாண்டி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4931

12. நாமக்கல் சிஎம்எஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2635

13. நாமக்கல், டாக்டர் நாகரத்தினம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2662

14. கோவை ஈசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2749

15. திருநெல்வேலி ஐன்ஸ்டீன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4980

16. நாமக்கல் எக்சல் பிசினஸ் ஸ்கூல்

17. நாமக்கல் எக்சல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2664

18. வேலூர் ஜி.ஜி.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1506

19. காஞ்சிபுரம் ஜிகேஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1407

20. ராமநாதபுரம் கணபதி செட்டியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5924

21. சேலம் கணேஷ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2341

22. தூத்துக்குடி ஹோலிகிராஸ் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 4934

23.கன்னியாகுமரி இமானுவேல் அரசர் ஜே ஜே காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4932

24. திருவள்ளூர் இந்திரா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1229

25. தூத்துக்குடி இன்பேன்ட் ஜீசஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4976

26. காஞ்சிபுரம் ஜே இஐ மாதாஜி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1235

27. கன்னியாகுமரி ஜேம்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4987

28. சென்னை ஜவஹர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1153

29. திருவள்ளூர் ஜெயா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1221

30. தர்மபுரி ஜெயலட்சுமி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 2640

31. விருதுநகர் காமராஜ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4959

32. காஞ்சிபுரம் காஞ்சி பல்லவன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1208

33. சிவகங்கை காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் TNEA code 5533

34. நாமக்கல் கிங் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2631

35. காஞ்சிபுரம் லார்ட் வெங்கடேஸ்வரா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1205

36. காஞ்சிபுரம் மாதா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1243

37. திருநெல்வேலி மகாகவி பாரதியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4998

38. வேலூர் எம்எம்இஎஸ் அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர்

39. ராமநாதபுரம் முகமமது சதக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5907

40. சென்னை முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1400

41. காஞ்சிபுரம் முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1301

42. புதுக்கோட்டை மதர் தெரசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3846

43. கோவை என் ஆர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2351

44. கன்னியாகுமரி நாராயணகுரு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4977

45. அரியலூர் நெல்லியாண்டவர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 3466

46. காஞ்சிபுரம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1431

47. திருவண்ணாமலை ஆக்ஸ்போர்டு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1529

48. மதுரை பிடிஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5911

49. காஞ்சிபுரம் பல்லவன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1209

50. தஞ்சை, பரிசுத்தம் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் TNEA code 3833

51. கோவை , பார்க் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2716

52. கோவை, பார்க் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2768

53. திருச்சி, பாவேந்தர் பாரதிதாசன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3815

54. காஞ்சிபுரம் பெரி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1452

55. திருச்சி, பிரைம் நெஸ்ட் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் TNEA code 3446

56. திருச்சி ஆர்விஎஸ் கேவிகே ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2778

57. கோவை ஆர்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2731

58. திண்டுக்கல் ஆர்விஎஸ் எஜூகேசனல் டிரஸ்ட் TNEA code 5862

59. வேலூர் ராணிப்பேட்டை இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1511

60. திண்டுக்கல் ரத்னவேல் சுப்பிரமணியம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5913

61. கோவை எஸ்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2654

62. காஞ்சிபுரம் சக்திமாரியம்மன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1214

63. தர்மபுரி சப்தகிரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2616

64. வேலூர் சரஸ்வதி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1515

65. திருநெல்வேலி சர்தார் ராஜா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5968

66.கோவை சசூரி அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2738

67. திருப்பூர் சசூரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2717

68. திண்டுக்கல் எஸ்பிஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5930

69. சென்னை ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் செயின்ட் பீ்ட்டர்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1127

70. சேலம் ஸ்ரீசத்யம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2346

71. ஈரோடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2747

72. காஞ்சிபுரம் ஸ்ரீ ஆண்டாள் அழகர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1417

73. காஞ்சிபுரம் எஸ்எம்கே போர்மா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1313

74. தஞ்சாவூர், எஸ்எம்ஆர் ஈஸ்ட் கோஸ்ட் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3451

75. மதுரை சோலையம்மாள் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5914

76. வேலூர் ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1438

77. வேலூர் ஸ்ரீ நந்தனம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1514

78. சிவகங்கை ஸ்ரீராஜராஜன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5502

79. சிவகங்கை செயின்ட் மிக்கேல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5919

80. ஈரோடு சூர்யா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2748

81. விழுப்புரம் சூர்யா குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 1434

82. கோவை, தமிழ்நாடு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2721

83. கோவை தமிழ்நாடு ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2728

84. திருச்சி, திருச்சி இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 3820

85. மதுரை அல்ட்ரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பார் உமன் TNEA code 5942

86. விருதுநகர் விபிஎம்எம் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் பார் உமன் TNEA code 4679

87. விருதுநகர் விபி முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் பார் உமன் TNEA code 4979

88. விழுப்புரம் வேதாந்தா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1136

89 திண்டுக்கல் வீரம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5851

தரமற்ற கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட இந்த 89 பொறியியல் கல்லூரிகளில் 12 கல்லூரிகள் காஞ்சிபுரத்திலும், 7 கல்லூரிகள் கோவையிலும் உள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்லூரிகளை கவுன்சிலிங்கின் போது தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தத் தரமற்ற கல்லூரிகள் மீது 25 முதல் 100 சதவீத மாணவர் சேர்க்கையை நிறுத்தும் அளவிலான நடவடிக்கைகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15 comments:

  1. இதில் முதல் ஊரே அல்வா கொடுத்த ஊராகத்தானே இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. கிரஷர் தொழில் மூலம் சம்பாரித்த பணத்தை விஜயபாஸ்கர் புதுக்கோட்டை சுற்றியுள்ள மொத்த அரசு நிலத்தையும் எடுத்து கல்லூரி கட்டினார். மதர் தெரசா அவர் கல்லூரி. பத்து கல்லூரிகள் வைத்துள்ளார்கள். அதுவும் இந்த பட்டியலில் உள்ளது.

      Delete
  2. இக்கல்லூரிகள் லிஸ்ட் போனவருடமே தெரிந்து விட்டன ஜோதிஜி. என் நெருங்கிய உறவினர் கல்வித் துறையில் இருப்பதால். இன்னும் சில ஏன் சொல்லப்படவில்லை என்று தெரியவில்லை.

    அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பாஸ் செய்வதற்கு அரியர்ஸ் பேப்பர்ஸ் திருத்தம் போன்றவைகளுக்கு எத்தனை பண விளையாடல்கள் நடந்தன என்றும் வந்தது ஆனால் அதன் பிறகு ஏன் அது பற்றி அதிகம் பேசப்படவில்லை என்றும் தெரியவில்லை. பிஹெச்டி பற்றி நான் இங்கு எதுவும் சொல்ல முடியாது. அத்தனை நடக்கிறது. நம்மூர் பிஹெச்டிக்கள் ஆய்வுப் பேப்பர்கள் பெரும்பாலும் ப்ளெக்கேரிசம்தான்...உலக அளவில் தரமற்றதாக இருக்கின்றன என்றும் பேசப்படுகிறது.

    முனைவர் கோவிந்தராஜு அவர்கள் கூட இதைப் பற்றி, அதுவும் தன்னிடம் மதிப்பாய்வு பெற வேண்டி வந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார் தனது தளமான தமிழ்ப்பூ வில்.

    கீதா

    ReplyDelete
    Replies


    1. நண்பர்கள் அனைவரும் தற்போதைய மத்திய அரசாங்கம் கொண்டு வரும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பதில் குறியாக இருக்கின்றார்கள். குறிப்பாகத் தமிழகம் இந்த விசயத்தில் முழு மூச்சாக இருப்பதாகப் பிம்பம் உருவாக்கப்படுகின்றது. மோடி என்பவர் கொடூர வில்லனாகச் சித்தரிப்பதில் இங்குள்ள கட்சிகள் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கைகளும், ஊடகங்களும் இதையே வெவ்வேறு விதமாக மக்கள் மனதில் நஞ்சை விதைப்பதில் முழு மூச்சாக உள்ளது.
      சமூகநீதி, சம உரிமை, இட ஒதுக்கீடு என்ற மூன்று வார்த்தைகள் இப்போது உள்ளவர்கள் பாஜக அரசினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டு விடுமோ? என்று கவலைப்படுகின்றார்கள். அது சரியான வாதமாக எடுத்துக் கொண்டாலும் ஆனால் உருவாகி உள்ள கட்டமைப்புகள் இவர்களின் கொள்ளையடிக்கும் தன்மையாக முழுமையாகவே சிதைந்து விடும் ஆபத்து உள்ளதாகவே எனக்குத் தெரிகின்றது. எதில் கொள்ளையடிப்பது? எந்த அளவில் கொள்ளையடிப்பது? என்று எவ்வித வரைமுறையும் இல்லாமல் எல்லா இடங்களிலும் இவர்கள் கைவைத்து இன்று எல்லா துறைகளும் ஊழல் என்பது நாகரிகமான வார்த்தையாக மாறியுள்ளது.
      பொதுப்பணித்துறை என்பது மக்களின் பஞ்சம் பசி இல்லாமல் வாழ உதவும் ஆதாரங்களை உருவாக்குவது, மேம்படுத்துவது, மக்களின் சமூக வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது. அவரவர் தன் உழைப்பின் மூலம் வாழ முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதும், ஆரோக்கியமாக வாழ உதவுவதும் அங்கங்கே இருக்கும் நீர்நிலைகள் தான். ஆனால் கடந்த பத்து வருடமாக இந்தத் துறையில் ஒதுக்கப்பட்ட நிதி என்பது முழுமையாகக் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. இன்று எச்சரிக்கை மணியாகச் சென்னை நீர்ப் பஞ்சத்தில் தடுமாறுகின்றது. இது அலாரம் தான். இது அப்படியே தமிழ்நாடு முழுக்க படிப்படியாகத் தொடரப்போகின்றது.
      உடனடியாக செய்ய வேண்டியதைச் செய்ய (இப்போது கூட) விரும்பாமல் கடல்நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்தில் கொண்டு போய் பணத்தைக் கொண்டு போய் கொட்டுகின்றார்கள் என்றால் இவர்களின் பணவெறி எந்த அளவுக்கு உள்ளது என்பதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
      அடுத்து எதிர்கால வாழ்வினை அவரவரும் வளர்த்துக் கொள்ள, திட்டமிட்டுக் கொள்ளும் கல்வித்துறை கடந்த பத்தாண்டுகளில் முழுமையாக அதன் தரமே மாறிவிட்டது. பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை என்பது அறிவற்றவர்கள், கொள்ளையடிப்பவர்கள் மட்டுமே இங்கே அதிகாரிகளாக, அமைச்சர்களாக இருக்க முடியும் என்பதனையே நிரூபணம் ஆக்கியுள்ளது.
      ஒவ்வொரு நாடும் அடுத்த 25 ஆண்டுகளில் என்ன மாற்றங்கள் உருவாகப்போகின்றது? நாம் எப்படி நம்மை, நம் கல்வித்திட்டங்களை மாற்ற வேண்டும்? என்று திட்டமிடும் இந்த காலகட்டத்தில் கூட நாம் இன்னமும் பத்தாண்டுகள் பின்னால் இருப்பதைப் பெருமையாகவே சொல்லிக் கொள்ளப் பழகிவிட்டோம்.
      வெளிநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் என்பது சமூகத்தை, அறிவியலைப் பிரதிபலிப்பதாக இருக்கும். சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் எந்த காலத்திலும் எவர் வேண்டுமானாலும் படிக்கலாம். கருத்துச் சொல்ல முடியும். ஆனால் இங்கே? ஆய்வுக்கட்டுரை என்பது கட் அண்ட் பேஸ்ட் தான். பெயர் மட்டும் மாறிக் கொண்டேயிருக்கும்.
      துணைவேந்தர்கள் என்ற பதவி ஒரு காலத்தில் மிகப் பெரிய அந்தஸ்து உள்ள பதவியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ பத்து கோடி இருந்தால் வாங்க முடியும்? என்கிற நிலைக்கு வந்துள்ளது.
      யாருக்கும் இங்கே வெட்கமில்லை.
      மோடியைச் சுற்றியுள்ளவர்கள் அவர்கள் விரும்பும் பண்டைய இந்தியாவைப் படைக்க விரும்புகின்றார்கள். காரணம் அவர்களுக்கு அது தான் வசதியாக இருக்கும் என்பதால். அவர்கள் செய்வது கொள்கைகளின் மூலம்.
      நம்மவர்கள் இருக்கும் அமைப்பையே சிதைத்து கொள்ளையடித்து நம் மக்களை, மாணவர்களைத் தெருவில் திருவோடு ஏந்தும் நிலைக்குக் கொண்டு வரப் பாடுபடுகின்றார்கள். தங்கள் கொள்ளையின் மூலம்.

      Delete
  3. இதில் முக்கால்வாசிக் கல்லூரிகள் ஏதாவதுசெய்து மீண்டும் பட்டியலில் இடம்பெற்று விடும்!

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் கல்லூரி இப்போது வரைக்கும் அற்புதமான கல்லூரி என்று தொடர்ந்து விளம்பரம் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

      Delete
  4. தன்னிடம் மதிப்பாய்வு பெற வேண்டி வந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார் தனது தளமான தமிழ்ப்பூ வில்./////////// அதன் இணைப்பு இங்கே கொடுங்க. பலருக்கும் உதவியாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. http://iniangovindaraju.blogspot.com/2019/04/blog-post_17.html

      ஜோதிஜி தாமதத்திற்கு மன்னிக்கவும். இதோ தமிழ் முனைவர் கோவிந்தராஜு அவர்களின் வலைப்பூ.

      கீதா

      Delete
  5. Replies
    1. இங்கு படித்தவர்கள் தற்போது படித்துக் கொண்டிருப்பர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அரசு எந்த அளவுக்கு செயல்படுகின்றது என்பது புரியும்.

      Delete
  6. வேதனை...
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காரைக்குடி ரோட்டில் இருக்கும் இராஜராஜன் எஞ்சினியரிங் கல்லூரி, ஆரம்பித்த சில வருடத்தில் பெரிய வளர்ச்சி பெற்ற கல்லூரி...

    எங்க அண்ணன், அக்கா மகள்கள் அங்குதான் படித்தார்கள்.

    தரமான கல்லூரி என்றுதான் எல்லோரும் போகிறார்கள்...

    தரமற்ற வரிசையில் இத்தனை கல்லூரிகளா...




    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லித்தான் இப்படியொரு கல்லூரி இந்த இடத்தில் இருப்பதே தெரிகின்றது.

      Delete
  7. அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் :- எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். பொறியியல் படிக்க முயற்சிக்கும் மாணவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன். - நன்றி திரு ஜோதிஜி

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.