ஆய்த்த ஆடைத் துறை மட்டுமல்ல நீங்கள் காணும் எந்தத் துறை என்றாலும் அலுவலக நடைமுறைகள் என்பதும் தொழிற்சாலை என்பதும் முற்றிலும் வேறாக இருக்கும். வெவ்வேறு முகங்கள் கொண்ட இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தேன். அதிகப் படியான மனஉளைச்சல் இருந்தது. ஒவ்வொன்றும் ஒன்றைக் கற்றுத் தந்தது. கற்றதன் வழியே பல பாடங்கள் புரியத் தொடங்கியது.
பணம் படைத்தவர்களின் திருவிளையாடல் ஒரு பக்கம். அன்றாடங் காய்ச்சிகளின் தினசரி வாழ்க்கை ஒரு பக்கம். இரண்டும் வெவ்வேறு கோணங்கள். ஒன்றில் மனிதாபிமானம் என்பதே இருக்காது. மற்றதில் மனிதாபிமானம் மட்டும் தான் மிச்சமாக இருக்கும். ஒன்றில் அந்தஸ்து என்பதற்காக எவ்வித கேவலத்தைப் பொருட்படுத்த தேவையிருக்காது. மற்றொன்றில் மானம் பெரிதென வாழும் கூட்டமாக இருக்கும்.
இந்த இரண்டு பிரிவைப் போல அலுவலக பணியாளர்களும் தொழிற் சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உலகமும் வெவ்வேறாக இருக்கும்.
அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்குப் பேசப் பழக நிறைய வாய்ப்புண்டு. பல சமயம் சிந்திக்க நேரம் இருப்பதுண்டு. ஆனால் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் இயந்திரங்களுடன் தான் தினந்தோறும் உறவாட வேண்டும். மனிதத் தொடர்பு என்பது குறுகிய நேரம் மட்டுமே. குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இருந்தாக வேண்டும். தங்களது எண்ணம், ஏக்கம், சோகம் அனைத்தையும் உள்ளுக்குள்ளே பூட்டி வைத்திருக்கப் பழகியிருக்க வேண்டும்.
எந்தவொரு தனியார் நிர்வாகத்திலும் அலுவலக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்தார்கள் என்ற செய்தியை நீங்கள் குறைந்த அளவில் தான் வாசித்திருக்க முடியும். ஆனால் செய்தித்தாளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் என்பது அன்றாட செய்தியாகவே வந்து கொண்டிருக்கும். காரணம் தொழிலாளர்களின் மன உளைச்சல் என்பது எழுத்தில் எழுதி புரிய வைக்க முடியாத ஒன்று. திடீரென வெடித்துக் கிளம்பும் போது அது அடங்க நேரம் காலமாகும்.
தங்களின் அனுபவப் புதையல் ஐயா இத் தொடர்
ReplyDeleteநிச்சயம் பலருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இத் தொடர் திகழும் என்பதில் ஐயமில்லை
நன்றி ஐயா
தொடர்கிறேன்
வருங்காலத்தில்...?
ReplyDeleteஎனக்கு தொழிலாளியாகவும், தொழிற்சங்கப் பிரதிநிதியாகவும் (செயலாளர்), தற்போது அலுவலக சம்பந்தப்பட்ட பணியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. அங்கு ஏற்படும் பிரச்னைகள், மன உளைச்சல்கள் ஏராளம். உங்கள் பதிவுகளில் இப்படி உண்மை வெளிப்படுவதே நீங்கள் அந்த மக்களில் ஒருவராக பழகுவதே காரணம். முதலாளி அல்லது நிர்வாகியாகவோ மட்டும் இருந்தால் போதாது தொழிலாளியின் மனதைப் படிக்க தொழிலாளியாகவும் இருந்திருக்க வேண்டும். கூடவே மனசாட்சியும் வேண்டும். உங்களின் இந்தக் கட்டுரையை புத்தகமாக்கி வரும் தலைமுறையினருக்கு பாடமாக வைக்க வேண்டும். சென்ற வாரக் கட்டுரையில்தான் ஒரு பெண்ணைப் பற்றிய புதிரோடு முடித்திருந்தீர்கள். இந்த வாரமும் அதன் முடிச்சை அவிழ்க்கவில்லையே. பெண் விஷயம் என்பதால் அனைவருக்கும் என்னதான் என்று அறிய ஆவலாய் இருக்கிறது.
ReplyDeleteநிசர்தனமான உண்மைகள்
ReplyDeleteதங்கள் இந்த அனுபவங்கள் காக்கப்படவேண்டியவை! எஹ்தனை இடர்கள் எத்தனை சவால்கள்! பல படிப்பினைகள்! சிறந்த முன்னோடியாக இருக்கும் இந்தத் தொடர். பல பாடங்களைப் புகட்டுவதால்1 நண்பரே! தொடர்கின்றோம்!
ReplyDeleteவணக்கம் அண்ணா...
ReplyDeleteதங்களை ஒரு தொடர்பதிவில் மாட்டி விட்டிருக்கேன்... கோபப்பட மாட்டீங்கன்னு நம்பிக்கை...
நேரம் இருக்கும் போது எழுதுங்க....
விவரம் அறிய...
http://vayalaan.blogspot.com/2014/11/blog-post_17.html
கனவில் வந்த காந்தி
ReplyDeleteமிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்கம்
திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து
புதுவைவேலு/யாதவன் நம்பி
http://www.kuzhalinnisai.blogspot.fr
("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)
ஹலோ! நண்பரே !
ReplyDeleteஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு