என்ன வேண்டுமானாலும் பெறலாம். எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு வளர்ந்து விட்டது. மொத்தத்தில் முதலீடு செய்யப் பணம் இருந்தால் போதும். உலகளாவிய வணிக ஒப்பந்தத்தம் உருவாக்கிய செயல்பாட்டின் காரணமாக எந்த உயர் ரகத் தொழில் நுட்பத்தையும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் திருப்பூருக்குள் கொண்டு வந்து விடலாம்.
அந்நிய முதலீடு என்பது நம் நாட்டிற்குத் தேவையில்லை என்ற கருத்து முழுமையாகச் செல்லுபடியாகாத ஒரே ஊர் என்றால் அது திருப்பூர் மட்டுமே. காரணம் இங்குள்ள ஒவ்வொரு துறையிலும் உள்ள பல வித நவீன ரக எந்திரங்கள் அனைத்தும் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவையே. ஐந்து லட்சம் முதல் ஐந்து கோடி வரைக்கும் பலதரப்பட்ட எந்திரங்கள் தான் இங்கே ஆட்சி செய்கின்றது.
ஆனால் வருடந்தோறும் லட்சணக்கான பொறியாளர்களை இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இங்கே எந்தக் கண்டுபிடிப்பும் உருவாக்கப்பட வில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளின் தொடக்கம் கூட இங்கே உருவாக்கப் படவில்லை.
அது குறித்து இங்கே எந்த ஆட்சியாளர்களும் கவலைப்படவும் இல்லை என்பது தான் ஆச்சரியத்தின் உச்சம். நாம் 66 ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் யாருக்கோ அடிமையாகத் தான் இருந்து அடக்கமாக வாழ்ந்து பழகியிருந்தோம்.
இன்றும் பெரிய மாறுதல்கள் இல்லை.
சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு அங்கமாக இருக்கின்றோம். ஆனால் நம்மை ஏதோவொரு சர்வதேச நிறுவனம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதைத் தெரியாமலே பணம் துரத்தும் பறவையாக மாறி நாமும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.
வலைத் தமிழில் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.தொடர் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.
ReplyDeleteபதிவர் விழாவில் தங்களை சந்திக்க ஆவலாக இருந்தேன்.ஏமாற்றமடைந்தேன்.
பேரூந்துநிலையம் வரைக்கும் வந்தவனை இறங்கி அலுவலகம் வர வைத்தது விதியின் கொடூர கரங்கள். எனக்கும் வருத்தம் தான். தனபாலிடம் அங்கேயே இருந்து அழைத்து சொன்னேன்.
Deleteபதிவர் சந்திப்பிற்கத் தாங்கள் வருவீர்கள், சந்தித்து மகிழலாம் என்று எண்ணியிருந்தேன் ஐயா
ReplyDeleteதங்களைச் சந்திக்க இயலாமல் போய்விட்டது
நிச்சயம் உங்களை புதுக்கோட்டை விழாவில் சந்திப்பேன்.
Deleteஜோதிஜி உங்களின் இந்த பதிவை பார்த்தேன் ஆரம்பமே எனக்கு பிடித்தமாதிரி வந்டு இருந்தது அதை துண்டு துண்டாக படிக்க விருப்பம் இல்லாததால் அந்த தொடர் முடிந்ததும் சேர்த்து வைத்து ஒன்றாக படிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்
ReplyDeleteநன்றி நண்பா
Delete