பணம் தான் ஒவ்வொருவரையும் இயக்குகின்றது. பணம் தான் வாழ வேண்டும்
என்ற ஆசையையும் வளர்க்கின்றது. பணம் இருந்தால் எல்லாமே கிடைத்து விடும் என்ற எண்ணத்திற்குச்
சமூகம் மாறி வெகு நாளாகிவிட்டது. மற்ற அனைத்தும் தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டது.
தொழில் சமூகம் என்பதன் கொடூரமான உலகத்தில் ரசனைகள் என்பதை நினைத்துப்
பார்க்க கூட முடியாது. அப்படி ரசனையுடன் வாழ விரும்புவர்களைத் தயவு தாட்சண்மின்றி எட்டி
உதைத்து வெளியே தள்ளி விடும் என்பதால் அவரவர் சுயபாதுகாப்பு கருதி முகமூடிகளைப் போட்டுக்
கொண்டு தான் வாழ விரும்புகின்றார்கள்.
இவனுடன் ஏன் பேச வேண்டும்? இவன் எதற்கு நம்மை அழைக்கின்றான்?
என்று அலைபேசியில் எண் வரும் பொழுதே பார்த்து எடுக்காமல் இருக்கும் பலரையும் எனக்குத்
தெரியும். "உனக்குப் பணம் என்பது தேவையில்லாமல் இருக்கலாம். எனக்கு அது
தான் முக்கியத் தேவையாக இருக்கின்றது. உன் எண்ணம் என்னிடம் வந்தாலும் அந்தப் பணம் வந்து
என்னிடம் சேராது" என்று முகத்திற்கு நேராகச்
சொன்னவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன்.
பணம் என்பதை வாசலில் மாக்கோலம் போட்டு பந்தல்
கட்டி வரவேற்க காத்திருப்பவர்கள் போலத்தான் இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ரொம்ப இன்ட்ரஸ்ட் டா இருக்கு தொடக்கம். சரி நான் அங்க போய் தொடர்கிறேன் அண்ணா!
ReplyDeleteதொடர்ந்து வாசிக்கிறேன் அண்ணா...
ReplyDeleteஅருமை. எல்லா தொழில்களும் இப்படித் தான் சீரழிகின்றன. உழைக்கும் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் தெருவுக்கு வந்து விடுகின்றனர். சுரண்டப் படுகிறார்கள்.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.
ஆரம்பமே அசத்தலாய் இருக்கிறது தொடர்கிறேன்..வாழ்த்துக்கள் ஜோதிஜி.
ReplyDeleteஅண்ணா! இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்:)
ReplyDeletehttp://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.html
நன்றி ஐயா
ReplyDeleteஇதோ முழுமையையும் வாசிக்கிறேன்
உங்களுக்காக ஒரு விருது என் தளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்
ReplyDeletenigalkalam.blogspot.com/2014/09/blog-post_18.html