அஸ்திவாரம்

Saturday, August 30, 2014

யோசிக்காதே? ஓடிக் கொண்டேயிரு!

4. து.மு  -  து.பி

என் அறையை விட்டு வெளியே வந்தேன். 25000  சதுர அடி கொண்ட பெரிய தொழிற்சாலையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட பகுதி வரைக்கும் எந்திரங்கள் நேர்த்தியாக வரிசைக்கிரமமாக  இருந்தன.  பல எந்திரங்களில் தொழிலாளர்கள்  (TAILORS)இல்லை. 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தவர்களிடத்தில் அதிக அளவு சுறுசுறுப்பு இல்லாமல் தைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.  

தொழிற்சாலையின் உள்ளே பரவியிருந்த  உஷ்ணக்காற்று என்னைத் தாக்கியது. எந்திரங்களின் சப்தமும்,  தொழிலாளர்களின் உழைப்பையும் கவனித்தப்படியே ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு இடத்திலும் பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது. 

STITCHING SECTION. CHECKING SECTION, FINAL CHECKING, AQL AREA, IRON SECTION, PACKING SECTION என்று தனியாக இருந்தது. 

மற்றொரு பகுதியில் LOT SECTION, CUTTING SECTION, STORE ROOM செயல்பட்டுக் கொண்டிருந்தன.  SAMPLES SECTION மற்றொருபுறம் இருந்தது. அங்கிருந்த சிலர் என்னை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தனர். 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த எவரும் என்னை கண்டு கொள்ளவில்லை.

ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பலதரப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையும் ஒரு உலகம். ஒவ்வொரு உலகமும் ஒரு நாடு போன்றது. அந்த நாட்டிற்கு ஒரு மன்னர், ஒரு மந்திரி, ஒரு சேனாதிபதி போன்ற படைபட்டாளங்கள் இருக்கும். அந்தந்த துறையில் பணிபுரியும் பெண்கள் பல சமயம் மகுடம் சூட்டாத ராணியாகவும் சிலரோ அந்தப்புற இளவரசியாக இருப்பார்கள். அவற்றை நாம் படிப்படியாக பார்க்கலாம்


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.......

அத்தியாயம் 5  யோசிக்காதே?  ஓடிக் கொண்டேயிரு!

அப்போது தான் நான் பணியாற்றி வந்த பல நிறுவனங்களைப் பற்றி, அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன்.


தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்,  குறுகிய காலத்திற்குள் நிறுவன பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள், தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிவளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது. 

காரணம் எல்லாநிலையிலும் எல்லோருக்கும் பணம் தான் பிரதானமாக இருந்தது. ஒருவர் பணத்தை முதலீடாக போட்டு விட்டு பெரிய லாபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றொருவர் குறுக்கு வழியில் பணத்தை துரத்திக் கொண்டிருக்கின்றார். மொத்ததில் இருவருக்குமே தூக்கம் தேவையில்லாமல் போய்விடுகின்றது. முதலீடு செய்தவர் முதலாளி. ஆனால் அவரின் லாபத்தை தவறான வழியில் அடையக் காத்திருப்பவர் பணியாளர். 

ஐம்பது ரூபாய் திருட்டு முதல் மாதம் ஐந்து லட்சம் திருட்டுத்தனம் வரைக்கும் அவரவர் பதவிக்கு தகுந்தாற் போல நடந்து கொண்டேயிருப்பதால் கடைசியாக பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சியே.  கடைசியில் ஒரு நாள் நிறுவனம் வங்கியில் போய் சிக்கிவிடுகின்றது.  

இப்படி சிக்கிய நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் கதையென்பது அவலத்தின் உச்சமாக இருக்கும். வெளிநாட்டுக் கார்களில் பவனி வந்த பல முதலாளிகள் இன்று வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 


21 comments:

  1. Replies
    1. உங்கள் பக்கம் வரமுடியவில்லை. வேலைப்பளூவில் அமுங்கிப் போய் கிடக்கின்றேன். வாசிப்புக்கு நன்றி.

      Delete
  2. வணக்கம்
    ஐயா.

    ஆடைத் தொழிற்சாலை பற்றி அவற்றின்சந்தைப்படுத்தும் முறைமை பற்றியும் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் அடுத்த தொடருக்காக காத்திருக்கேன் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தொடர்கின்றேன்.

    ReplyDelete
  4. Dollar Nagaram puthagathil Thiruppoorai patriyum, athan tholil nunukkathaiyum patri vivaathithu iruntheergal...... intha murai ithu innum thrill kathaiyai pola payanikkirathu.... thodarnthu kondu irukkiren !!

    ReplyDelete
    Replies
    1. என் பார்வையில் தற்போதைக்கு வலைதளத்தில் நீங்க தான் நம்பர் 1. இன்னும் ஒரு வருடத்தில் நீங்க எழுதப் போகின்ற அனைத்து தலைப்புகளும் தமிழ் கூறும் நல் உலகுக்கு பொக்கிஷமாக அடுத்த 25 வருடங்களுக்கு இருக்கப் போவது உறுதி சுரேஷ் குமார். நல்வாழ்த்துகள்.

      Delete
  5. எங்கே வலைத்தளம் பக்கமே கொஞ்ச நாட்களாகக் காணோமே என்று பார்த்தால் வலைத்தமிழில் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். தமிழ் மொழியை என்றைக்கும் வசந்தமாக வைத்திருக்க வெறும் நாவல்களும் சிறுகதைகளும் கவிதைகளும் மட்டும் போதாது. துறை சார்ந்த அதுவும் நாள்தோறும் புதிது புதிதாக வளர்ந்துவரும் துறைசார்ந்த நுண்ணறிவுத் தகவல்கள் ஏராளமான புத்தகங்களாக இங்கு இருக்கவேண்டும் என்ற கருத்தியல் உடையவன் நான்.
    இதிலென்ன பிரச்சினை என்றால் பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் கொண்டவர்கள் அந்தத் துறைகளில் நிபுணத்துவம் உள்ளவர்களாக இருப்பார்களே அல்லாமல் தமிழில் அதனை எழுதிவைக்கும் அளவுக்கு மொழிப்புலமை உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். இந்தப் பிரச்சினை ஆங்கிலத்திற்கு இல்லை. அங்கே எந்தத் துறையை வேண்டுமானாலும் எழுதுவதற்கான ஆட்கள் இருப்பார்கள். தமிழில் அப்படி இல்லையே என்ற ஏக்கம் எப்போதும் இருந்தது. ஓரளவு கணிணித்துறையில் இதற்கான தீர்வு கிடைத்தது. வேறு சில குறிப்பிட்ட துறைகளிலும் அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்று எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள்.
    அந்த வரிசையில் 'இதோ ஒருவர்' என்று உங்களைப் பார்க்கத்தோன்றுகிறது. டெக்ஸ்டைல் துறையைப் பற்றி அற்புதமான தகவல்களுடன் ஒரு நூல். ஐந்து கட்டுரைகள்வரை படித்தேன்.மற்றவற்றையும் பிறகு படித்துவிடுவேன். நல்லதொரு முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சோர்ந்து போய் குழப்பத்துடன் இருந்த மனம் உங்கள் விமர்சனம் பார்த்து மீண்டு வந்தேன். நன்றிங்க.

      Delete
  6. அற்புதமான, அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! தொடர்கின்றோம்!

    ReplyDelete
  7. படிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தொடரும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      Delete
  8. அருமையான அறிவுசார்ந்த தொடர்கள்.
    நன்றியுடன்,

    ReplyDelete
  9. உங்கள் பதிவுகள் படிப்பதில் ஒரு ஸ்பெஷல் ஆர்வம் உண்டு. பல விஷயங்கைள, தெளிவான, எளிமையான நடையில் எங்கள் முன் கொண்டு வருவது, அருமை. நன்றிகள். மேலும் படிக்க தூண்டுகிறது.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.