அஸ்திவாரம்

Saturday, June 21, 2014

யோசித்ததும் சாதித்ததும்

எழுதிய தொடர் பதிவு பாதியில் நிற்கின்றது. அரசியல் ரீதியான பதிவுகள் எழுதும் போது அதன் ஆயுசு மிகவும் குறைவு. காரணம் அடுத்த ஒரு மணி நேரத்தில் மொத்தமாக மாறிவிடும் ஆபத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் கூட அப்படித்தான் தேசத்தையே திருப்பிப் போட்டுள்ளது. எவருமே யூகிக்க முடியாத அளவுக்கு வித்தியாசமான புதிய பாதையை உருவாக்கியுள்ளது. இன்னும் எழுத வேண்டிய சில பதிவுகளுக்காக எழுதி வைத்துள்ள குறிப்புகளைக் கோர்க்க முடியாத நேரத்தில், நான் பணிபுரியும் தொழிற்சாலையில் நடந்த சில நிகழ்வுகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். 

"எல்லோரும் மாற்றம் வேண்டும்" என்று விரும்புகின்றார்கள். ஆனால் எங்கிருந்து அந்த மாற்றம் தொடங்க வேண்டும்? என்பதில் தான் பிரச்சனை உருவாகின்றது. படித்தவர், படிக்காதவர், பாமரன் தொடங்கி இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான முகமூடி. எவரும் எதையும் கழட்டி வைக்க விரும்பவில்லை. ஆனால் தன்னுடைய கொள்கை, விருப்பங்கள் என்று முழங்கிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். 

கடைசியாக அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் ஊழல்வாதிகள், அயோக்கியர்கள் என்று பொத்தாம் பொதுவாக முடித்து விட்டு அடுத்தக் கேளிக்கை விசயத்தில் ஈடுபட்டு முதலில் நடந்ததை மறந்து விடுகின்றோம். 

நாம் விரும்பும் மாற்றம் என்னில் இருந்து தொடங்க வேண்டும். என் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். நான் பணிபுரியும் இடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். 

அது சிறியதோ பெரியதோ, பாதிப்பை உருவாக்குமோ உருவாக்காதோ? எது குறித்தும் நான் கவலைப்பட்டதில்லை. அதற்கு ஆதரவு கிடைக்குமோ? என்று நான் அச்சப்பட்டதில்லை. மற்றவர்களின் பார்வையில் அது எப்படித் தெரியுமோ? என்பது குறித்தும் அலட்டிக் கொள்வதில்லை. முதல் அடியை எடுத்து வைக்காமல் எந்தப் பாதையின் பயணமும் தொடங்குவதில்லை. 

தேர்தல் பார்வையாளர்? 

வருடந்தோறும் நடத்தப்பட வேண்டிய ஒவ்வொரு அமைப்பிற்கும் உரிய தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று மனிதவளத் துறை மேலாளர் என்னிடம் வந்து கோரிக்கை வைத்த போது மனதிற்குள் அந்த விபரித ஆசை வந்தது. விட்டுக்கொடுத்தல் மூலம் தகுதியானவர்களை ஆதரிப்பார்களா? என்ற எண்ணம் உருவானது. 

கூடவே அச்சமும் உருவானது. காரணம் நான் தான் தேர்தல் பார்வையாளர். 

என்னவொரு ஆச்சரியம்? 

நடந்த ஏழு அமைப்பு ரீதியான தேர்தலிலும் ஓட்டுச்சீட்டு முறை ஒழிக்கப்பட்டுக் கை தூக்கி ஆதரவு முறை உருவாக்க முடிந்தது. கூடவே கூச்சல் குழப்பமின்றி, கையூட்டு இல்லாமல், 144 தடையுத்தரவு போட்டுப் பணம் கடத்த ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லாமல் அத்தனை பதவிகளுக்கும் போட்டியின்றி ஒவ்வொரு தொழிலாளர்களும் அவர்களாகவே விட்டுக் கொடுத்தல் மூலம் தலா மூன்று பதவிகள் ஒவ்வொரு அமைப்புக்கும் தேர்ந்தெடுத்தல் இன்று நடந்து முடிந்தது. 

#விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே கெட்டுப் போனதில்லை. 

############### 

மனதிற்குள் வைத்திருந்த மற்றொரு விசயத்தையும் இன்று சாதிக்க முடிந்தது. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி மற்றும் இரத்தப் பரிசோதனை முகாம் நடத்தி தொழிலாளர்களுக்குப் புதிய பாதையை உருவாக்க முடிந்தது. பரிசோதனை செய்த எல்லோருமே நெகடிவ் தான் என்று பரிசோதித்தவர் ரகசியமாக (என்னிடம் மட்டும்) வந்து சொல்லிவிட்டுச் சென்ற போது உருவான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒவ்வொருவரும் தயக்கத்துடன் தடுமாறி தவித்த போது நானே முதல் ஆளாகச் சென்று ரத்த மாதிரி கொடுத்த பிறகே ஒவ்வொருவரும் வரிசையாக வரத் தொடங்கினர். 

#தவறான பாதை தொடக்கத்தில் இனிக்கும். பிறகு வாழ்க்கை நம்மைப் பார்த்து சிரிக்கும். 








37 comments:

  1. நீங்கள் வித்தியாசமானவர் உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும் என்பது நிச்சயம் பாராட்டுக்கள் ஜோதிஜிஜிஜிஜிஜிஜிஜிஜிஜிஜிஜிஜிஜிஜிஜிஜி

    ReplyDelete
    Replies
    1. ஜி எழுத்தைப் பார்ததவுன் ஓங்கி பெடலில் கால் வைத்து வண்டிய விரட்டுவது போல இருக்கின்றது நண்பா. மொத்த சமூகமும் வேறொரு பாதையில் போய்க் கொண்டிருக்க நான் மட்டும் மாட்டு வண்டித்தடத்தில் போவது போல இருக்கின்றது.

      அன்புக்கு நன்றி.

      Delete
  2. சிறந்த முன் முயற்சிகள். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள செயலைச் செய்து சாதித்திருக்கின்றீர்கள்
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. Replies
    1. நீண்ட நாளைக்குப் பிறகு? நலமா? மிக்க நன்றி.

      Delete
  5. எங்கேயோ போயிட்டீங்க...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எங்கே போறது? இங்கே நான்கு பெண்களும் விட மாட்டாங்களே தனபாலன்?

      Delete
  6. ''Be the change you want to bring in,'' said Mohandas Gandhi.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க கற்றுக் கொடுத்தது தான்.

      Delete
  7. Replies
    1. ஒடிஷா பயணக்கட்டுரை மிக மிக சிறப்பாக வந்து கொண்டிருக்கின்றது. தொடர்ந்து எழுதவும்.

      Delete
  8. பெண்களை உட்காரவைத்து ஆண்களை நிற்கவைத்து போட்டோ எடுத்துள்ளதற்க்கு சிறப்புப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொல்லியுள்ளிர்கள் . நானும் அதைத்தான் கவனித்தேன்

      Delete
    2. எனது நிர்வாகத்தில் முக்கியக் கொள்கையே பெண்களுக்கு முன்னுரிமை. ஒவ்வொரு சமயத்திலும் அவர்களிடமும் அதையே தான் சொல்வேன். ஆனால் கொடுக்கப்பட்ட சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தும் என் அணுகுமுறையும் வேறு விதமாகத்தான் இருக்கும். இதை புரிந்து கொண்ட ஒவ்வொரு திருமணமான திருமணமாகாத பெண்களும் உணர்ந்தே அடக்கி வாசிக்கின்றனர்.

      Delete
  9. உண்மையான முயற்சிகள் என்றும் வெல்லும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பாராட்டுக்கள் ஜி! தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்! முடிந்தால் வலைப்பக்கம் வரவும்!

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்குக்கூட தொடர்ந்து வர முடியாத அளவிற்கு தொடர் கதை போல ஓடிக் கொண்டே இருக்கின்றேன். வாய்ப்பு இருக்கும் போது முயற்சிக்கின்றேன். நன்றி சுரேஷ்

      Delete
  11. அருமையான பதிவு. அருமையான முயற்சி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

    ReplyDelete
  12. காற்றும், நதியும் , மேகமும் ஒரு நிமிடத்திற்கு முன் பார்த்தவற்றை மறுமுறை பார்க்கமுடியாது என்பது போல் அரசியல் காட்சிகளும். என்ன முன்னது தூய்மை அடைகிறது, பின்னது ????
    ரத்த பரிசோதனை. அருமையான முயற்சி அண்ணா! நீங்க நீங்க தான்னு மறுபடி நிருவி இருக்கீங்க:))கிரேட்!!
    http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post_8.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அக்கறைக்கு நன்றி மைதிலி

      Delete
  13. உண்மையான முயற்சிகள் என்றும் வெல்லும்... வாழ்த்துகள் அண்ணா.

    ReplyDelete
  14. முதல் அடியைப் பிரமாதமாக எடுத்துவைத்து ஆரம்பித்திருக்கிறீர்கள். இலக்கு என்னவென்பது உங்கள் மனதிற்குள் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் அது இந்த சமுதாயத்தின், மனித குலத்தின் மேம்பாட்டிற்காகத்தான் இருக்கும் என்பதும் புரிகிறது.
    உங்கள் இலக்கு சார்ந்த பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. இலக்கு என்றெல்லாம் மனதில் எப்போதும் திட்டமிட்டுக் கொள்வதில்லை. அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறை வைத்துக் கொண்டு செயல்படுகின்றேன். அடுத்த நாள் என்பது நம் கையில் இல்லை என்பதையும் புரிந்தே வைத்துள்ளேன். இந்தப் பதவியில் இருக்கும் வரையிலும் ஒரு முன் உதாரணமான உற்பத்திக்கூடம் என்பதையும் ஒற்றுமையான தொழிலாளர்களை உருவாக்கினேன் என்பதும் தான் இப்போதைய இலக்கு.

      Delete
  15. ''#தவறான பாதை தொடக்கத்தில் இனிக்கும். பிறகு வாழ்க்கை நம்மைப் பார்த்து சிரிக்கும்.".மிக்க சரி .முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மாற்றம் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று முன்னின்று வழிகாட்டும் உங்கள் சமூக அக்கறை வியக்க வைக்கிறது.நிர்வாகப் பொறுப்பில் இருந்தபோதும் தொழிலாளர்களின் நிலையையும் எண்ணிப் பார்த்து செயல்படுபவர் நீங்கள்.
    உங்கள் பாஹையும் பயணமும் நிச்சயம் நீங்கள் விரும்பும் மாற்றங்களை தர வல்லது என்பதில் ஐயமில்லை
    பாராட்டுக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரைக்கும் போராடிக் கொண்டே தான் இருக்கின்றேன். அது அத்தனை எளிது இல்லை என்ற போதிலும்.

      Delete
  17. வாழ்த்துக்கள் .....

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.