இன்றைய சூழ்நிலையில் எழுதவே வாய்ப்பில்லாத நிலை என்ற போதிலும் சென்ற பதிவில் நண்பர்கள் எழுதி வைத்த விமர்சனத்தைப் பார்த்தவுடன் மறுபடியும் எழுதியே ஆக வேண்டும் என்று இந்தப் பதிவை எழுதுகின்றேன். நடந்து முடிந்த தேர்தல் குறித்து இன்னும் சில வாரங்கள் கழித்து எழுதினால் அது பழங்கஞ்சி ஆகவிடும் ஆபத்துள்ளதால் சிலவற்றைச் சில பதிவுகள் மூலம் (இந்திய பாரளுமன்றத் தேர்தல் 2014) என் பார்வையை எழுதி வைக்க விரும்புகின்றேன்.
இப்போது எங்குப் பார்த்தாலும் மோடி புகழ் மட்டுமே எட்டுத்திசையிலும் சுடரொளி விட்டுப் பறக்கின்றது. மோடி ஜெயித்தது எப்படி? என்று தொடங்கிய ஜெயிக்கக் காரணமாக இருந்தவைகள் என்ன? என்பது வரைக்கும் எல்லா இடங்களிலும் அலசப்படுகின்றது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போன அத்தனை பேர்களும் வீணர்கள் என்றும் அதற்கான காரணங்கள் என்று ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்த கதை வசனத்தில் கட்டுரைகளாக எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள்.
வரலாறு எப்போதுமே கொஞ்சம் பிரச்சனையான சமாச்சாரம் தான். இல்லை என்பதை இருப்பதாகக் காட்டிவிடும். இருப்பதை இல்லையென்று வெளிப்படுத்திவிடும். அதனால் தான் வெற்றிபெற்றவனின் வாக்கு வேதவாக்காக மாறிவிடுகின்றது. தோற்றவர்களின் நியாயங்கள் கேலிக்கூத்தாக மாறிவிடுகின்றது.
கடந்த பத்தாண்டுகளில் சோனியா குடும்பக் கும்பல் இந்திய நாட்டைச் சுரண்டி சேர்த்த சொத்து வண்டவாளங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிவந்து விடும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறேன்.
நடந்து முடிந்த தேர்தலை நான் எப்படி உள்வாங்கினேன்? காங்கிரஸின் தோல்வி மற்றும் மோடியின் வெற்றியை எப்படி உணர்கின்றேன்? மாநில அரசியலில் ஜெயலலிதாவுக்கு எப்படி இப்படியொரு ஆதரவு கிடைத்தது? என்பதையும் இங்கே எழுதி வைத்து விட விரும்புகின்றேன்.
நாலைந்து பதிவுகளாக வெளியிடுகின்றேன். முழுமையாகப் படித்து விட்டு உங்கள் விமர்சனத்தைத் தெரிவிக்கலாம்.
சமூகத் தளங்கள் மற்றும் வலைதளங்களில் மதம்,சாதி,அரசியல் என்ற இந்த மூன்றையும் தொடாமல் இருந்தால் போதும் என்கிற அளவுக்குத் தான் பலரும் இருக்கின்றனர். படிப்பவர் எழுதுபவர் என இருவருக்கும் பாதிப்பை உருவாக்கக்கூடிய காரணக் காரியங்கள் இருப்பதால் பெரும்பாலோனோர் நாம் ஏன் இதைப் பற்றி விலாவாரியாக எழுத வேண்டும் என்று ஒதுங்கி விடுகின்றனர். சிலரோ எழுதிய பின்பு உருவாகும் எதிர்ப்பலைகள், கிடைக்கும் மோசமான விமர்சனங்கள், உருவாக்கப்படும் முத்திரைகள் காரணமாக நழுவலாகவும் நகர்ந்து விடுவதுண்டு.
நாம் தான் எப்போதும் வம்பை விலைகொடுத்து வாங்குகின்ற ஆளாச்சே?
இந்தச் சமயத்தில் தேர்தலுக்கு முன் மற்றும் தேர்தலுக்குப் பின் என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தின் வழியே நான் உணர்ந்து கொண்டே விதத்தை அப்படியே தந்து விடுகின்றேன்.
இந்த நிமிடம் வரைக்கும் குறிப்பிட்ட கட்சி அல்லது அவர்களது கொள்கைகள், தலைவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுகின்ற யோக்கியவான்கள் மேல் எவ்வித நல்ல அபிப்பராயமும் அற்றவன்.
எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு. அதேபோல எல்லாவற்றிலும் தீமைகளும் கலந்தே உள்ளது என்ற எதார்த்தத்தை உணர்ந்தே இருக்கின்றேன்.
சம காலச் சமூகத்தில் அதிக அளவு தாக்கத்தை உருவாக்கும் ஒவ்வொரு விசயத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டு அதன் ஒவ்வொரு நகர்தலையும் தனிப்பட்ட விருப்பத்துடன் கவனிப்பதுண்டு. ஆச்சரியங்களை மனதில் குறித்துக் கொள்வதுண்டு. ஒவ்வொன்றையும் துணுக்குத் தோரணங்களாக இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.
எழுதத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் என்பதால் சிறிய தொடர் போல அரசியல் சார்ந்த சிலவற்றை அனுபவப் பகிர்வாக எழுத விரும்புகின்றேன்.
எழுதத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் என்பதால் சிறிய தொடர் போல அரசியல் சார்ந்த சிலவற்றை அனுபவப் பகிர்வாக எழுத விரும்புகின்றேன்.
என்னதான் நடக்கப்போகிறது பொருத்திருந்து பார்ப்போம்.
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
வருகைக்கு நன்றி. ஆகா உங்கள் ஊர் தேவகோட்டையா?
Deleteஎன்னது வம்பை விலைகொடுத்தா..? இந்தக் கதை என்றிலிருந்து...? ஹிஹி...
ReplyDeleteதோரணங்களை ரசிக்க ஆவலுடன்...
முழுமையாக படித்தீர்களா தனபாலன்.
Deleteவேண்டுகோள் - மோடி என்று எழுதாமல் மோதி என்று எழுதவும்.
ReplyDeleteமோதி வெற்றி பெற்று விட்டார் சிறிது காலத்துக்கு அவர் புகழை தான் எல்லோரும் பாடுவார்கள். அப்புறம் அவர் பழைய கஞ்சி ஆகி விடுவார் என்பதால் அதை வரை பொறுக்க வேண்டியது தான் இருந்தாலும் சிலவற்றை படிக்கும் போது மாதவா ஏன்டா இப்படி இருக்காங்கன்னு நினைக்கத்தோணும் இஃகி இஃகி.
ஈழத்தமிழர்களுக்கு இவ்வாட்சியில் நன்மை விளையாது என்று தெரிந்த போதிலும் (தீமைகள் விளையாது என்று நினைத்தேன்) இராசபக்சேவின் ஆருயிர் தோழி சுசுமா வெளியுறுவு அமைச்சர் ஆகியிருப்பது மிக ஆபத்தானதாக தமிழர்களுக்கு முடியும். வடக்கத்திக்காரங்களுக்கு இலங்கை பிரச்சனை பற்றி எதுவும் தெரியாது அதை பயன்படுத்தி ஈழதமிழர்களுக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்கள் அக்கட்சியில் நிறைய உள்ளனர்.
மோதி என்று எழுதும் போதே இரண்டு அர்த்தங்கள் வருகின்றதே. சுஷ்மா ஒருவர் போதும். ராஜபக்ஷேவை காப்பாற்ற ஆதரவு அளிக்க.
Deleteஎழுதுங்கள் ஐயா
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி.
Deleteமீண்டும் எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள். தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteநன்றிங்க.
Deleteரைட்டு.
ReplyDeleteவாங்க ராஜசேகர்.
Deleteகாத்திருக்கேன்...
ReplyDeleteநன்றி குமார்
Deleteசுவையான அரசியல் உண்மைகளை அறிய காத்திருக்கிறேன்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteசிலரோ எழுதிய பின்பு உருவாகும் எதிர்ப்பலைகள், கிடைக்கும் மோசமான விமர்சனங்கள், உருவாக்கப்படும் முத்திரைகள் காரணமாக நழுவலாகவும் நகர்ந்து விடுவதுண்டு. = நிஜம் தான்.
ReplyDeleteவருகைக்கு நன்றி அய்யா.
Deleteவரவேற்கிறேன்.... இது ஒரு நல்ல தொடராக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமில்லை....
ReplyDeleteகிரி உங்களின் அமைதியான ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்களின் ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் தான் என்னைப் போன்றவர்களை இதில் இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
Deleteதொடருங்கள் ஐயா!
ReplyDeleteநன்றி
Deleteமீண்டும் வலைப்பக்கம் உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! அதிலும் , அரசியல் தொடர். சுவாரஸ்யத்திற்கு கேட்க வேண்டியதில்லை.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி தமிழ் இளங்கோ.
Delete