அஸ்திவாரம்

Saturday, March 01, 2014

வெயிலோடு உறவாடு

திருவாளர் வெயில்.

அவர்கள் உள்ளே வந்த போது இவர் தான் வரவேற்றார். வந்தவர்கள் திணறிப் போய்விட்டனராம். அவர்கள் இது போன்ற வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. உண்மை தான். 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவிற்குள் உள்ளே வந்த ஆங்கிலயேர்களை வரவேற்றதும், ஆங்கிலேயர்களை மிரள வைத்து வேர்க்க விறுவிறுக்க வைத்ததும் நம்ம பங்காளி திருவாளர் வெயில் தான்.  

o0o

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தான் வெயிலின் தாக்கம் அதிகம் என்று நினைத்துக் கொண்டு திருவண்ணாமலை, வேலூர் மாவட்டம் பகுதிகளுக்கு ஒரு முறை சென்ற போது எல்லாவற்றையும் கழட்டி வைத்து விட்டு நிர்வாணமாக திரியலாமா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு வெயிலின் தாக்கம் படு பயங்கரமாக இருந்தது.    

o0o

ன்று வரையிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் ரசிக்கும் பாடல் இது. ஜீ.வி.பிரகாஷ் ன் முதல் படமிது. நா.முத்துக்குமார் பாடல் வரிகளில் அசாத்திய அச்சு அசலான காட்சியமைப்பில் கொடுத்த இயக்குநர் வசந்தபாலன் பாராட்டுக்குரியவர். இந்த பாடலை பார்க்கும் போது, கேட்கும் போது பாடல் காட்சிகளில் பெரும்பாலான இடங்களில் நானும் இதே போல வாழ்ந்துள்ளேன் என்ற நினைப்பு வந்து கொண்டே இருக்கும். 1980/84 பள்ளிக்கூட மாணவராக இருந்தால் நீங்களும் இந்த பாடலில் வாழ்ந்திருப்பீர்கள்.



o0o

மூன்றாவது மின் நூல் நேற்று வெளியாகி உள்ளது.  

வெயில் மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தின்  ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வரலாற்று ரீதியான மாறுதல்களை, முக்கிய நிகழ்வுகளை வலைபதிவில் எழுதிக் கொண்டு வந்த போது பலத்த ஆதரவு, விமர்சனங்கள் என்று பலரையும் உள்ளே வந்து கபடி ஆட வைத்தது.  ஒரு பதிவுக்கு 140 விமர்சனங்கள் வந்து திக்குமுக்காட வைத்தனர். அத்தனை விமர்சனங்களும் நான் எழுதிய பதிவை விட ஆக்கபூர்வமான விசயங்களை விவாத பொருளாக வைத்து களத்தை சூடாக்கினர்.  அந்த முக்கியமான விமர்சனங்கள் காலம் மறந்து விடக்கூடாது என்பதற்காக அதையும் ஒரு தனி அத்தியாயமாக தொகுத்துள்ளேன். சென்னை நண்பர் கும்மி என்ற உமருக்கு இங்கே நன்றியை எழுதி வைக்க தோன்றுகின்றது.

வேர்ட்ப்ரஸ் ல் இருந்து மாறி ப்ளாக் ல் எழுத தொடங்கிய போது தமிழர்களின் வரலாற்றை சுருக்கமாக எழுத முயற்சித்தேன். சில ஆண்டுகளுக்கு முன் பலதரப்பட்ட பழைய புத்தகக்கடைகளில் இருந்து கிலோ கணக்கில் வாங்கி (?) வைத்திருந்த புத்தகங்களை படித்த போது கிடைத்த சாற்றை  தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்தேன்.  அப்போது எனக்கு அறிமுகமான பதிவர்களின் தளப் பெயர்களையே ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பாக வைத்திருந்தேன்.

ப்போது முதல் ஆண்டில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த நான் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டுமே அறிமுகமாகியிருந்தேன்.  அதிகப்பட்சம் ஒவ்வொரு தலைப்பையும் வாசித்தவர்களின் எண்ணிக்கை 300 பேர்கள் மட்டுமே. இதுவே இராமநாதபுரம் மாவட்டம் பற்றி தொடர் எழுதிக் கொண்டிருந்த போது அதிகப்ட்சம் 3000 பேர்கள் வரைக்கும் ஒரு தலைப்பை படித்துள்ளனர்.  

தமிழர் தேசம் எனக்கு ரொம்பவே திருப்தி அளித்த மின் நூல். என் பாட்டன்களும், முப்பாட்டன்களும் இந்த கூட்டத்தில் தானே வாழ்ந்திருப்பார்கள் என்று பல இடங்களில் நினைத்துக் கொண்டே ஒவ்வொரு தலைப்பையும் தொகுத்துக் கொண்டு வந்தேன். தொடர்ந்து நள்ளிரவில் பத்து நாட்கள் என்னை வேலை வாங்கிய சவாலான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பிது. 

தமிழர்களின் 2000 வருட சரித்திரத்தை சுருக்கமாக எவரும் இது வரையிலும் வலைபதிவுகளில் தொடர்ச்சியாக எழுதவில்லை. தமிழர்களின் முன்னோர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு இந்த மின் நூல் பயன்படக்கூடும்.  இந்த மின் நூலுக்கும் அட்டைப்படம் வடிவமைத்துக் கொண்டு நண்பர் அவர்கள் உண்மைகள் அவர்களுக்கு என் நன்றி.

o0o

நான் பிறந்த ஊர் புதுவயல் என்றொரு கிராமம். தமிழ்நாட்டில் காரைக்குடி தாலூகாவில் உள்ளது. தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. பிறகு பசும்பொன் தேவர் திருமகனார் என்று பெயர் மாற்றம் பெற்றது. சாதிப் பெயர் கூடாது என்று பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என்று கூட மாறியது. அதுவே இன்று சிவகங்கை மாவட்டமாக மாறியுள்ளது. ஆனால் இந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் தலவரலாறு 1910 ஆம் ஆண்டு தான் தொடங்கியது. நான் காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் கல்லூரியில் படித்து முடியும் வரையிலும் முதல் இருபது ஆண்டுகள் அங்கு தான் வாழ்ந்தேன். கடந்த இருபது ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வருகின்றேன்.

நான் 1992ல் திருப்பூருக்குள் நுழையும் போது இந்தப்பகுதி கோவை மாவட்டத்தில் இருந்தது. தற்பொழுது திருப்பூர் தலைநகராகவும் அத்துடன் மாவட்டம் என்ற புதிய அந்தஸ்தும் பெற்றுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் நான் வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு ஊர்களுக்குப் பின்னால் நம்ப முடியாத மாற்றங்கள். மனிதர்களுக்குண்டான வரலாறு போல ஒவ்வொரு ஊருக்கும், மாவட்டத்திற்கும், குறிப்பிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுவராசியங்கள் உண்டு என்பதை நாம் வாழும் போது, வரலாற்றுப் புத்தகங்களை படிக்கும் போதும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.


o0o

"ஈழம்- வந்தார்கள் வென்றார்கள்",  "வெள்ளை அடிமைகள்" இரண்டு மின் நூல்களும்  வெளியிட்ட பின்பு கடந்த இரண்டு மாதங்களில் இன்று வரையிலும் 17,000 பேர்களுக்கு நான் அறிமுகமாகியுள்ளேன். இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த திரு. சீனிவாசன் அவர்களுக்கு மிக்க நன்றி.

41 comments:

  1. தரவிறக்கம் செய்து கொண்டு இருக்கிறேன்...

    தமிழர் தேசம் மூன்றாவது மின் நூலுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வலையுலகின் ஆச்சரியமான அதிசயமான மனிதர் . நன்றி.

      Delete
  2. மூன்றாவது மின்னூல் 'தமிழர் தேசம்' - மிகப்பெரிய சரித்திரம் படைக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிங்கோ

      Delete
  3. நண்பர்களுக்கு மின் நூல் பற்றி அறிவிக்க (எனது குறிப்புக்கு) இங்கே பதிவு செய்து வைக்கிறேன்... 01.03.2014 - 9.05 pm

    .epub - 45 times – 13 MB
    A4.pdf - 102 times – 7 MB
    6 Inch.pdf - 28 times – 4 MB

    ReplyDelete
    Replies
    1. முதல் நாள் கணக்கு வழக்கா?

      Delete
  4. அசத்துங்க சார்!
    வாழ்த்துக்கள்!!
    சாதனைகள் தொடரட்டும்!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடரும் அன்புக்கு நன்றி அஜீஸ்

      Delete
  5. வெயிலில் ஆரம்பித்து மின் நூலுக்கு வந்து அப்படியே காரைக்குடி தாலுக்காவை ஒரு வட்டமடித்து திருப்பூருக்குக் கூட்டிவந்து விட்டீர்கள்.( இதன் நடுவே அந்த வெயில் பாடல் மிக அருமையாக எழுதப்பட்டு, மிக அருமையாக இசையமைக்கப்பட்டு, மிக அருமையாகப் படமாக்கப்பட்ட பாடல்களில் ஒன்று. இதற்குக் காரணமாயிருந்த நா.முத்துக்குமார், ஜி.வி.பிரகாஷ், வசந்தபாலன் மூவருமே பாராட்டிற்குரியவர்கள்)

    தமிழர்தேசம் எழுதப்பட்ட விதமும், எழுதப்பட்டதற்கான நோக்கமும் பாராட்டிற்குரியவை. அதன் அட்டைப்படமும் மிக நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    செயல்படக் கிடைத்த தளத்தில் நின்றுகொண்டு பெரிதாக எதையாவது சாதிக்கவேண்டும் என்ற உங்களுடைய உணர்வும் அதற்கான முயற்சிகளும் வியப்பிற்குரியவை.
    மின் நூலைப் பொறுத்தவரை பெரிதான சாதனை ஒன்றை நிகழ்த்திவிட்டுத்தான் அடுத்தவேலையைப் பார்ப்பீர்கள் என்றே நினைக்கிறேன். தொடரட்டும் தங்கள் பணிகள்............

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அக்கறைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கடைசி மின் நூலாக கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு. அத்துடன் இந்த மின் நூல் பயணம் முடிந்தது. இந்த ஐந்தாவது வருடத்தில் 70 சதவிகித வலையுலக எழுத்தை ஆவணமாக்கி வைத்து விட எண்ணினேன். திருப்தி. மகிழ்ச்சி.

      Delete
  6. வணங்குகிறேன் நண்பரே.சிலிர்க்க வைக்கும் விவரங்கள்.
    அவர்கள் உண்மைகள் பாராட்டுக்குரியவர்.

    ReplyDelete
    Replies
    1. *********"பாராட்டுக்குரியவர் நம்ம ஜோதிஜி அவர்கள்தான்""****** அவர் எல்லோரையுமே மிக தூக்கி வைத்து பாராட்டுவார் எதுவும் எதிர் பார்க்காமல்.

      Delete
    2. நன்றி அப்பாதுரை. வலையுகில் தன் முழுத் திறமைகளை வெளியே கொண்டு வராமல் இருப்பவர்களின் நண்பர் அவர்கள் உண்மைகள் மிக முக்கியமானவர்.

      இடையிடையே ஒரு டிஸ்கி வேறு போட்டு விடுவார். ரொம்ப எதிர்பார்க்காதீங்க என்று.

      Delete
  7. Visit : http://ranjaninarayanan.wordpress.com/2014/03/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

    ReplyDelete
    Replies
    1. அம்மாவுக்கு உங்கள் சார்பாக என் நன்றிகள் என்றுமே உண்டு

      Delete
  8. தரவிறக்கம் செய்து கொண்டேன் ஐயா
    வாழ்த்துக்கள்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆசிரியரே.

      Delete
  9. டாலர் நகரத்தைத் தவிர மற்ற புத்தகங்களை இன்னும் முடிக்கவே இல்லை. அதற்குள் அடுத்தடுத்த புத்தகங்கள்?! பதிவுகாளாகப் படித்திருக்கிறோமே அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்கிற சோம்பேறித்தனம்தான். சோம்பலிலிருந்து எழவேண்டும். எழுத்தே படி என்கிற சபதத்தை எனக்குள்ளே ஏற்கவேண்டும். வேலூர் வெயிலைப் பற்றி பராட்டி எழுதியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சிலவற்றை நம் அன்றாட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஈடுபட முடியாமல் போகும் பட்சத்தில் குறிப்பிட்ட காலம் கழித்துப் பார்த்தால் நான் என்ன செய்தோம்? என்ற கழிவிரக்கம் வந்து சேர்ந்து விடும். இடையிடையே அடித்து ஆடுவதே நமக்கும் நம் மனதிற்கும் நல்லது.

      Delete
  10. வெயில் எனக்கும் கூட ரொம்ப பிடிக்கும்.
    அந்த பாடலும் தான் .
    புதுவயல் !! என் அம்மா சீதா லட்சுமி ஆச்சி கல்லூரியில் தான்
    படிச்சாங்க. அம்மா அழகாபுரி !
    அட்டை வடிவம் அருமையா இருக்கு. தமிழன் சகோ நல்லா வடிவமைச்சுருகார்.
    வாழ்த்துக்கள் சார்! முதலில் டாலர் நகரத்தை படித்து முடிக்கிறேன் !!

    ReplyDelete
    Replies
    1. ஆகா ஊரும் வாழ்வும் கொஞ்சம் மலரும் நினைவுகளா? வாழ்த்துகள்.

      Delete
  11. குளிர்ந்த அறையில் கிடந்தாலும் வெயிலில் வாழ்ந்த வாழ்வே இனிமை எனக்கு.

    வெயில் நினைவுகளுக்கும் மின்னூலுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். ஆனால் அடி வரைக்கும் சூடு கிளப்ப அனைத்தும் நம்மை மறக்க வைத்து விடுகின்றது. உங்கள் தொடர் சேவைக்கு முயற்சிக்கு வாழ்த்துகள் சீனிவாசன்.

      Delete
  12. வாழ்த்துக்கள் சார்! தரவிறக்கி படிக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  13. மென்நூல் பகிர்வுக்கு நன்றி ! நல்ல பாடல் மலரும் நினைவுகளுடன் ...

    ReplyDelete
  14. ஈழம் வந்தார்கள் வென்றார்கள் முடித்துவிட்டேன் ... தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாண்டியன்.

      Delete
  15. நினைவுகளை மலரவைத்தமைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  16. என்னடா, நம்ம பேர் தலைப்புல தட்டுப்படுதேனு வந்தேன் :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பெயரும், ஊரும், நீங்கள் எனக்கு செய்த உதவிகளும் மறக்க கூடிய ஒன்றா?

      Delete
  17. sir,...தமிழர் தேசம் மூன்றாவது மின் நூலுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடர் வாசிப்புக்குநன்றி சிவா

      Delete
  18. தொகுப்பில் ஒவ்வொன்றும் சுவையாய் இரசிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அக்கறைக்கு நன்றி நிஜாமுத்தீன். முடிந்தால் ஒரு விமர்சன பார்வையை அனுப்பி வைக்கலாமே? மற்றவர்களுக்கு தூண்டுகோலாக இருக்குமே?

      Delete
  19. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ஜோதிஜி. பட்டையக் கிளப்புங்க :-)

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.