அஸ்திவாரம்

Saturday, October 26, 2013

போரும் அமைதியும்


அலுவலகத்தில் எந்த வேளையிருந்தாலும் தினந்தோறும் மதியம் மூன்று மணிக்கு வீட்டில் இருப்பது போல பார்த்துக் கொள்வது வழக்கம். அந்த நேரம் பள்ளி விட்டு மூவரும் வீட்டுக்கு வரும் நேரம்.  ஒருவர் மட்டும் சிலசமயம் தாமதமாக வருவார். காரணம் பள்ளி விட்டதும் நேராக விளையாட்டு மைதானத்திற்குச் சென்று களைத்துப் போகும் அளவுக்கு விளையாடி விட்டு வர மற்ற இருவரும் வந்து விடுகின்றார்கள். 

பள்ளியில் ஆறாவது வகுப்புக்கு மேல் தான் மாணவர்களை விளையாட்டு மைதானம் பக்கம் அனுப்புகின்றார்கள்.  

கீழே உள்ள வகுப்பிற்கு பெயருக்கென்று ஏதோவொரு விளையாட்டை விளையாடச் சொல்லிவிட்டு கண்காணிப்போடு வகுப்பறைக்கு அனுப்பி விடுகின்றார்கள். ஆனால் வீட்டில் மூத்தவருக்கு படிப்பைப் போல விளையாட்டிலும் அதீத வெறி. பன்முகத் திறமைகள் கொண்ட குழந்தைகள் உருவாவது இயற்கை தந்த வரம்.

ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கும். பயிற்சி இல்லாமலேயே அவர் காட்டும் ஆர்வமும், முயற்சியும் வியப்பில் ஆழ்த்தும். தடை சொல்லாமல் அனுமதிப்பதால் அவராகவே உருண்டு புரண்டு கொண்டிருக்கின்றார். 

அருகாமைப் பள்ளியென்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் ஆயிரமாயிரம் சந்தோஷத்தை தரக்கூடியது. பள்ளியிலிருந்து தொலைவில் இருந்து வருபவர்கள் படும் பாட்டையும், பள்ளி வாகனங்களில் வந்து போகும் குழந்தைகளின் அவஸ்த்தைகளையும் பார்த்துக் கொண்டிருப்பதால் நகர்புற வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் ஏறக்குறைய நரகத்திற்கு சமமானதே. 

எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு கூப்பிடு தொலைவு தான். ஐந்து நிமிடத்திற்குள் நடந்து போய் விடலாம். ஆனால் அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது அவர்களின் அலுப்பை பார்க்கும் போது தொடக்கத்தில் பாடச் சுமையின் தாக்கமோ என்று நினைத்துக் கொண்டதுண்டு. ஆனால் நாள்பட அவர்களின் சுகவாசி தன்மையை உணர வைத்தது. 

கிராமத்து பள்ளிகளில் ஐந்து கிலோ மீட்டர் மிதிவண்டி மூலம் பள்ளிக்கு வந்தவர்களும், நீண்ட தொலைவை நடந்தே வந்தவர்களையும் பார்த்த வாழ்க்கையில் அருகே உள்ள பள்ளியின் தொலைவை கணக்கீடும் போது பெரிய தூரமில்லை தான். ஆனால் இன்று குழந்தைகளின் உடல் வலுவின் தன்மை மாறியுள்ளது. ஓடி விளையாடிய காலம் மலையேறிவிட்டது. வீடு தான் மைதானம். கணினியும், தொலைக்காட்சியும் தான் விளையாட்டுப் பொருட்கள். இதுவே குழந்தைகளின் கண்களையும், கவனத்தையும் திருடிக் கொள்ள அடிப்படை ஆரோக்கியமும் அதோகதியாகிவிட்டது. 

நடுத்தர வாழ்க்கையில் குறுகிய வீடுகளும், போராட்ட வாழ்க்கையும் ஓட வைத்துக் கொண்டிருக்க நாம் விரும்பிய வாழ்க்கையை விட கிடைத்த வாழ்க்கையை தக்க வைப்பதே பெரும்பாடாக உள்ளது. 

ஒரே இடத்தில் உட்கார்ந்து பழகி விட்ட குழந்தைகளிடத்தில் ஆரோக்கிமென்பது அளவாகத்தானே இருக்கும். 

"அடைகோழியாட்டாம் என்னடா வீட்டுக்குளே?" என்று கேட்டு வெளியே விரட்டிய கிராமத்து வாழ்க்கையென்பது தற்போது "வெளியே போகாதே. கண்ணு மணணு தெரியாமா வர்றவன் மோத போறான்" என்று பயந்து வாழும் வாழ்க்கையில் சிலவற்றை இழந்து தான் குழந்தைகள் வளர வேண்டியதாக உள்ளது. 

நாம் தான் காரணம். 

இதுவும் ஒருவகையில் நாம் உருவாக்கி வைத்துக் கொண்ட வசதிகளை யோசிக்க வைக்கின்றது. எது நமக்குத் தேவை? என்பதை விட நம் குழந்தைகள் ஆசைப்படுகின்றார்கள் என்பதற்காக ஒவ்வொன்றாக சேர்த்து வைக்க அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையாகவும் மாறிவிடுகின்றது. 

காலை எழுந்தது முதல் எப்போதும் போல பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பல சமயம் கரையை கடக்கப் போகும் புயலைப் போல ஒவ்வொரு நிமிடமும் திகிலாக நகரும். ஆனால் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துக்களில் நான் கலந்து கொள்வதில்லை. காரணம் நாம் தான் கடைசியில் ப்யூஸ் போன பல்பு போல மாறிவிடும் அபாயமிருப்பதால் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. 

வீட்டுக்குள் மூன்று பேர்கள் இருக்கின்றார்கள் என்று தான் பெயரே தவிர முப்பது பேர்கள் இருப்பதைப் போலவே ஒவ்வொரு முறையும் களேபரபடுத்துகின்றார்கள். ஓயாத பேச்சும், நிறுத்த முடியாத சண்டைகளும், விடாத கேள்விகளுமாய் காலையில் இரண்டு மணி நேரத்திற்குள் வீட்டுக்குள் ஒரு போர்க்கள சூழலை கொண்டு வந்து விடுகின்றார்கள். 

பத்து வயதில் நாமெல்லாம் இப்படியா இருந்தோம்? என்ற வயதானவர்கள் எப்போதும் சொல்லும் கேள்விகள் மனதிற்குள் வந்து போனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டே வருவதுண்டு. 

என்ன செய்கின்றார்கள்? ஏன் செய்கின்றார்கள்? என்ற இரண்டு கேள்விகளுக்கும் தினந்தோறும் ஏராளமான பதில்களும் உடனடியாக கிடைத்து விடுகின்றது.

மூவரும் காலை எழுந்தது முதல் பள்ளிக்குச் செல்வது வரைக்கும் உண்டான ஒவ்வொரு அடியிலும் எவரோ ஒருவரின் சப்தம் ஓங்கியிருக்கும். தேவையிருக்கின்றதோ இல்லையோ எவரோ ஒருவர் மற்றொருவருடனும் வம்பிழுப்பதும் வாடிக்கையாகவே உள்ளது.  

நிறுத்தவும் முடியாது.

அறிவுரையாகச் சொன்னாலும் எடுபடவும் செய்வதில்லை.  


"வலுத்தவான் வாழ்வான்" என்று  நினைத்துக் கொண்டு கவனித்தாலும் கடைசியில் அதுவும் தோற்றுப் போய்விடுகின்றது.  சண்டைகள் உக்கிரமாகி என்னவோ நடக்கப் போகின்றது என்று யோசிக்கும் தருணத்தில் சம்மந்தமில்லாமல் வெள்ளைக்கொடி பறப்பதும், எதிர்பாராத சமயத்தில் வாள சண்டையின் ணங் டங் என்ற சப்தம் கேட்பதும் வாடிக்கை என்றாலும் ஒவ்வொரு முறையும் நம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பார்க்க வேண்டியதாக உள்ளது. 

எதிர்பாராத சமயத்தில் கைகுலுக்கிக் கொள்கின்றார்கள். உள்ளே நுழைந்த நாம் தான் பல்பு வாங்க வேண்டியதாக உள்ளது.

"என் பென்சிலை பார்த்தீங்களா?"
"என்னுடைய ஹோம் ஒர்க் நோட்டை காணல"

என்று தொடங்கி கடைசியில் "என் ஜட்டியை இவள் போட்டுக்கிட்டாள்" என்பது வரைக்கும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது.

வெறும் கேள்விகளாக வந்துகொண்டிருக்கும் அவர்களின் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளுக்கும் நாம் கண்டும் காணாமல் இருந்தாலும் திட்டுக்கள் வரும். நான் கண்டு பிடித்து தருகின்றேன் என்றாலும் "ஆமா நீங்க கண்டு பிடித்து தருவதற்குள் எங்க பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுடுவாங்க" என்று நோ பால் ஆக்கும் தந்திரமும் நடக்கும்.

அவர்கள் தேடுகின்ற அனைத்தும் அருகே தான் இருக்கும். ஆனால் செயல்களின் அவசரமும், பொறுமையின்மையும் களேபரப்படுத்த நமக்கு அதிக கோபத்தை உருவாக்கினாலும் மூவரும் பள்ளிக்குச் சென்றதும் வீட்டைக் கவனித்ததால்  வீட்டுக்குள் நிலவும் அமைதியென்பது நமக்கு தாங்க முடியாத வெறுமையை உருவாக்குகின்றது.

37 comments:

  1. அருகாமைப் பள்ளியென்பது பலருக்கும் வாய்ப்பதில்லை... இங்கு மாலையில் ஒரு ஐந்து நிமிசம், ஆட்டோகாரன் குழந்தையை கூடி வர தாமதமானால் மனதில் திண்டாட்டம் தான்...

    என்னதான் களேபரபடுத்தினாலும் அது மிகவும் சந்தோசம் தானே என்பதை முடிவில் உள்ள வரியில் புரிகிறது...

    ReplyDelete
    Replies
    1. Are we more insecure about our town city world now, than what our parents felt. I feel the same thing. Whereas in my teens in Madras Mylapore, I used to be gone for the whole day. My parents had no clue where I was, but never worried. Why is that? ... Rajamani

      Delete
    2. தனபாலன் இது இன்னமும் நாலைந்து பதிவுகளாக வரும். உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.

      Delete
  2. குறும்புகள் செய்து கூத்தடித்தால் தான் அது குழந்தை .

    ReplyDelete
    Replies
    1. அழகான எளிமையான சக்தி வாய்ந்த வார்த்தைகள். ஒரு பதிவுக்கு எழுத வேண்டிய விசயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கீங்க. நன்றி.

      Delete
  3. 600க்கு வாழ்த்துகள். பதிவை படித்தவுடன் கொசு வர்த்தி ஏத்தியாச்சு. என் இளமை காலத்தை பார்க்க போய் ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப அழகா எழுதுறீங்க. நிச்சயம் அந்த கொசுவர்த்தியை படிக்க ஆவலாக உள்ளேன்.

      Delete
  4. Enjoy your children while they are not home. They grow too fast.The world has changed a lot since my time (born 1950). I used to play கில்லி பம்பரம் கோலி காத்தாடி (மாஞ்சாவுடன்) growing up in Madras of 50s and 60s. Each had its own season like clockwork. The generation don't know about these games atleast in Chennai of today. They appear to be overwhelmed by the curriculum as well as the weight of the books! I do not know, if this is good or bad. Just that the world has changed.

    ReplyDelete
    Replies
    1. பல முறை நீங்கள் விமர்சனம் எழுதியிருந்தாலும் இன்று தான் உங்கள் வயது பின்புலத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றிங்க.

      Delete
  5. Replies
    1. என்ன தவம் செய்தேன்? விக்கிபீடியாவே வந்து இப்படி ஒரு வார்த்தை எழுதி வைக்க. கண்கள் பனித்தது. இதயம் நொறுங்கியது.

      Delete
    2. இதை (இந்த கிண்டலை) மிகவும் ரசித்தேன்... ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...

      Delete
    3. கொசுத்தொல்லை தாங்கலடா சாமி அவ்வ்!

      தொழிலதிபதிவரே எதாவது கொசுமருந்து அடிச்சி கட்டுப்படுத்தும்,அப்பறம் நானே மருந்து அடிக்க கிளம்பினா சேதாரம் அதிகமாயிடும் :-))

      Delete
  6. அருகாமைப் பள்ளி என்பது வரப்பிரசாதம்...
    எங்கள் வீட்டில் இருவரும் 7 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று வருகிறார்கள்.
    வீட்டில் இருவரும் எப்பவும் சண்டைதான்... அவங்க அம்மா மேய்க்க முடியலைன்னு ரொம்ப புலம்பல்...
    புள்ளைங்க கூட இருக்கிறதே ஒரு சுகம்தான் அண்ணா...

    ReplyDelete
  7. அண்ணா 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. குமார் உங்களுக்கு உண்மையிலேயே அழகாக கவிதை எழுத வருகின்றது. நான் தான் நம்ம வவ்வால்கிட்டே பயிற்சி எடுத்துட்டு எழுதலாம்ன்னு அவரோட அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்துருக்கேன். நந்தவனம் இந்தியா வந்ததும் நாங்க ரெண்டு பேரும் கத்துக்ற ஐடியாவுல இருக்கோம். அதன்பிறகு நிச்சயம் எழுதுவேன்.

      Delete
  8. அறுநூறாவது பதிவா? வாழ்த்துகள். எங்கள் வீட்டிலும் இதே கதைதான். வயதில் சிறியவர்களாக இருக்கும் போது போகப்போக சரியாகிவிடும் என்று நினைத்தேன். பெரியவள் கல்லூரிக்கும், சின்னவள் பத்தாவதும் போகும் இந்த சண்டை ஓய்ந்தபாடில்லை. ஆச்சர்யம் உடனேயே கூடிவிடுவதுதான். நாம் சமாதானப்படுத்தி புத்தி சொல்வது எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்!

    ReplyDelete
    Replies
    1. கல்லூரி போகின்ற அளவுக்கு பெரிய ஆள் வீட்டில் இருக்கின்றார்களா? அப்படி போடு.
      அப்ப கொஞ்சம் நீங்க சுதாரிப்பாத்தான் எழுதனும்ன்னு நினைக்கின்றேன். அவங்க உங்க எழுத்தை படிக்கின்றார்களா?

      Delete
  9. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் என நினைத்தேன் ,படித்தபின் தெரிந்தது இது டாலர் நகரத்துக்காரரின் போரும் அமைதியும் என்று !
    என் வீட்டிலும் இதே நிலைமைதான் ,நாலு பேரிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டு இருப்பது ஒரே ஒரு கம்ப்யூட்டர் !
    அறுநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ...பயணம் தொடரட்டும் !

    ReplyDelete
    Replies
    1. தலைவரே பள்ளிக்கூட சமயத்தில் ஒரு மத்தியான சமயத்தில் இந்த டால்ஸ்டாய் புத்தகத்தை படித்த ஞாபகத்தில் அந்த தலைப்பு மட்டும் இன்று மனதில் இருந்தது. ஆமா உங்க வீட்ல இம்பூட்டு தொந்தரவு இருந்தும் கடி கடின்னு கடித்து துப்புறீங்களே? அவங்ககிட்டே உங்க பாட்சா பலிக்கலையோ? அவங்களுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லிடுங்கோ.

      Delete
  10. பல தளங்களில் அவர்களின் எழுத்துக்களை விட அங்கே உள்ள விளம்பரங்களும், இடையிடையே நம்மை தொந்தரவு செய்யும் தொழில்நுட்பமும் எரிச்சலைத்தரும். ஆனால் இன்று முதல் ப்ளாக்கர் முதலாளிங்க அந்த புனிதப்பணியை எல்லா தளங்களிலும் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்று நினைக்கின்றேன். குறுக்கு வெட்டு(டி)த் தோற்றத்தில் படுத்தி எடுக்கின்றார்கள்.

    தொழில் நுட்ப அறிஞர்களின் ஆலோசனையை எதிர்பார்க்கின்றேன். எப்படி வராமல் தடுப்பது?

    ReplyDelete
    Replies
    1. காம்ரேட் தொழிலதிபதிவரே,

      எங்க்கண்ணுக்குலாம் கூகிள்/பிலாக்கர்காரன் வெளம்பரம் ஒன்னுமே தெரியலை..நீங்க பெருசு பெருசா ஒட்டி வச்சிருக்க போஸ்டர் தான் தெரியுது, எதுக்கும் ஒருக்கா கண்ணை நல்லாத்தொடைச்சிட்டு பாருங்க அவ்வ்!

      Delete
  11. குழந்தைகளின் குறும்புத்தனங்கள் ரசிக்ககுடியதே!! 600 க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நம்முடைய சின்ன வயது ஞாபகத்தை அசைபோடுவது என்பது வேறு; இப்போதைய சின்ன வயதுப் பிள்ளைகளை, அவர்களின் பருவத்தை அணுகியிருந்து பார்த்து அதுபற்றிப் பேசுவது என்பது வேறு. இரண்டாவதை அழகுபட சொல்லத் துவங்கியிருக்கிறீர்கள். இன்னும் தொடர்ச்சியாய் சில பதிவுகள் வரும் என்பதால் அத்தனையையும் படித்துவிட்டுப் பிறகு பாராட்டலாம் என்றிருக்கிறேன்.
    அறுநூறு பதிவு எழுதியிருக்கிறீர்களா? ஆச்சரியம். வாழ்த்துக்கள்..........
    இங்கேயும் வவ்வாலுடன் மல்லுக்கட்டுவது தொடருமோ?

    ReplyDelete
    Replies
    1. அமுதவன் சார்,

      முதலாளிங்கனாலே தொழிலாளிங்க கூட மல்லுக்கட்டத்தானே செய்வாங்க, அதுவும் விவசாயத்தொழிலாளினா சும்மா விட்ருவாங்களா அவ்வ்.

      ஹி...ஹி எல்லாம் சித்தாந்த உரசல்களே.

      #//அறுநூறு பதிவு எழுதியிருக்கிறீர்களா? ஆச்சரியம். வாழ்த்துக்கள்..........
      //

      எங்கே 600னு போட்டிருக்கு ஒன்னும் புரியலையேனு பார்த்தால் லேபிளில் போட்டு இருக்கு, வழக்கமா ஆர்ப்பாட்டமா எண்ணிக்கைகளை கொண்டாடுவார் இம்முறை என்னமோ லேபிள் ஒட்டுனதோட அடக்கிவாசிச்சுட்டரே,நானும் கவனிக்கலை.

      நாமும் வாழ்த்து சொல்லிடுவோம்,

      காம்ரேட் தொழிலதிபதிவரே,

      3,60,000 சொற்களை எழுதியமைக்கு வாழ்த்துக்கள் அய்யா!

      ஹி...ஹி ஒருப்பதிவுக்கு 600 சொற்கள் என்றால் 600 பதிவுக்கு மொத்தமா சொன்னேன்!


      Delete
    2. இங்கேயும் வவ்வாலுடன் மல்லுக்கட்டுவது தொடருமோ?

      மரம் சும்மா இருக்கின்றதே என்று காற்று விடுமா?

      அலைகள் ஆர்ப்பட்டமாய் இருக்கின்றதே என்று மீனவன் அமைதியாய் இருந்து விடுவானா என்ன?

      Delete
    3. அடக்கிவாசிச்சுட்டரே,நானும் கவனிக்கலை.

      அடக்கி வாசிப்பது வளர்ச்சியின் நீட்சி.

      Delete
    4. கவனிக்கவும்... 600 வது பதிவு...! மலைக்க வைக்கிறது சாமீ....!!!!!!!!

      50 ஆம் பதிவே யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைத்திருந்தேன்... கண்டுபிடித்தவர் யார் தெரியுமா...? அவர் தான் உண்மையான நண்பர்... (http://dindiguldhanabalan.blogspot.com/2012/10/Top-Ten-First-Ten.html) அவர் தான் இன்று வரை தொடர்பில் இருக்கும் நண்பர்...

      நன்றி...

      Delete
    5. நன்றி தனபாலன். என்ன ப்ளாக்கர் கானுங்க இப்படி விளம்பரத்த போட்டு கொன்னு கொலையெடுக்குறானுங்க. ஏதாவது மாற்ற வழியுண்டா?

      Delete
  13. அருமையான அனுபவமான பதிவு. குழந்தைகளின் விளையாட்டுக்கு உரிய ஆடுகளங்கள் இன்று பல பள்ளிகளில் கிடையாது. அப்படியிருந்தும் அவர்களில் சிலர் சிறந்த ஆட்டக்காரர்களாக உருவாவது நம்பிக்கையூட்டுகிறது. திங்கள், செவ்வாய், புதன் மூன்று நாள் மட்டுமே பாடம், வியாழன் அன்று விளையாட்டு மட்டுமே, பிறகு வெள்ளி அன்று படிப்பு, எல்லா சனி, ஞாயிறும் விடுமுறை என்ற நிலைமை அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே சரிவிகித உடல்வலுவும் அறிவு வலுவும் கொண்ட மாணவர்களை உருவாக்கமுடியும். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்) , சென்னை

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க. அதற்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கின்றேன். இதன் தொடர் பதிவில் எழுதுகின்றேன். ஏன் என்று உங்களுக்கு படிக்கும் போது புரியம்.

      Delete

  14. 600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கடலுக்குள் சென்று முத்து குளித்து நல்ல முத்துவை எடுத்து வருவார்கள் . நான் நெட்டில் சென்று எடுத்து வந்து முத்து "மதிப்பு மிக்க முத்து" உங்கள் தளம்தான்.


    இந்த பதிவை படிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான இந்திய குடும்பத்தின் அன்றாட நிகழ்ச்சியை படித்து மகிழ்ந்தேன். இந்த மாதிரியான சுவாரஸ்யம் இங்கு இல்லை

    ReplyDelete
    Replies
    1. என் மதிப்பிற்குரிய நண்பருக்கு என் நன்றி.

      Delete
  15. 600 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! என் ஒரே மகளையே சமாளிப்பது பெரிய பாடா இருக்கும்.. ஸ்கூல் கிளம்பியாச்சுன்னா மழை பெய்து ஓயந்த மாதிரி நிசப்தமா இருக்கும்... ! ஆனாலும் குழந்தைகள் விஷயத்தில் போர்க்களம்தான் நமக்கு பிடித்தமானதாயிருக்கிறது.
    இன்று குழந்தைகளின் வலுவின் தன்மை மாறிவிட்டது என்று சொன்னது மிக உண்மை .. எங்க வீட்டு இளவரசி... ஸ்கூல் விட்டு வந்து பார்த்தா சாப்பிட்டு நாலு நாள் ஆனது மாதிரி ரொம்ப அலுப்பா தெரிவாங்க..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனம் ஒவ்வொரு வரியையும் படித்து ரசித்த விதம் மகிழ்ச்சியை தந்தது. தொடர் பதிவில் இந்த ஒரு குழ்ந்தை சமாச்சாரமும் வருகின்றது. நன்றி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.