"சொக்கன் மெட்ராஸில் இருந்து கூப்ட்டு இருக்கான்டா. கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுன்னு சொல்லியிருக்கேன்"
எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டே சொன்ன பாமா அக்காவின் பாதி குரல் தான் என் காதில் கேட்டது. அதற்குள் அந்த மதிய வேளையில் என் தம்பி அக்காவுடன் சேர்ந்து அவர் வீட்டை நோக்கி ஓடினார்கள். சொக்கன் என்னோடு தொடக்கப்பள்ளியில் படித்தவன். ஊர் மாறி பனிரெண்டில் கோடு வாங்கி சென்னையில் வேலையில் இருந்தான்.
அவன் தான் அழைத்து இருந்தான்.
அவன் தான் அழைத்து இருந்தான்.
1985 ஆம் ஆண்டு அந்த ஞாயிற்றுக்கிழமை தான் முதன் முதலாக எனக்கு தொலைபேசி என்பதே அறிமுகம் ஆனது.
எங்கள் கிராமம் பேரூராட்சி என்ற நிலையில் இருந்தது. ஊருக்குள் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் அதிகபட்சமாக பத்து வீடுகளுக்குள் இந்த தொலைபேசி வசதி இருந்தது. முக்கியமான செட்டியார் வீடுகளைத் தவிர சில முஸ்லீம் வீடுகளும் அடக்கம். செட்டியார்கள் எவரும் ஊரில் இருப்பதில்லை.
வெளிநாடுகள் அல்லது சென்னையில் தான் இருந்தார்கள்.
வீடுகளில் நம்பிக்கையான வேலைக்காரர்கள் வீட்டுக்குச் சொந்தகாரர்கள் போல் இருந்தார்கள். முஸ்லீம் வீடுகளில் நிச்சயம் எவரோ ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அப்போது தான் ஊருக்குள் அரிசி ஆலைகள் படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்தது. வளர்ந்த அரிசி ஆலைகளில் படிப்படியாக தொலைபேசி இணைப்புகள் வரத் தொடங்கியது.
வெளிநாடுகள் அல்லது சென்னையில் தான் இருந்தார்கள்.
வீடுகளில் நம்பிக்கையான வேலைக்காரர்கள் வீட்டுக்குச் சொந்தகாரர்கள் போல் இருந்தார்கள். முஸ்லீம் வீடுகளில் நிச்சயம் எவரோ ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அப்போது தான் ஊருக்குள் அரிசி ஆலைகள் படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்தது. வளர்ந்த அரிசி ஆலைகளில் படிப்படியாக தொலைபேசி இணைப்புகள் வரத் தொடங்கியது.
ஊரில் நடுநாயமாக ஊரணிக்கரையைச் சுற்றிலும் இருந்த கடைத் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் டெலிபோன் எக்ஸ்சேஞ் அலுவலகம் சிறய அளவில் இருந்தது. அருகே வாரச் சந்தை கூடும் இருந்த காரணத்தால் சந்தைக்கு உள்ளே செல்லும் போது கட்டாயம் டெலிபோன் எக்ஸ்சேஞ் உள்ளேயிருந்து வந்து கொண்டிருக்கும் வினோத சப்தத்தை கேட்க முடியும்.
உடன்படித்த நண்பனின் அப்பா அதற்கு பொறுப்பு நிலையில் இருந்தாலும் நான் உள்ளே சென்றதில்லை.
உடன்படித்த நண்பனின் அப்பா அதற்கு பொறுப்பு நிலையில் இருந்தாலும் நான் உள்ளே சென்றதில்லை.
பிள்ளையார் ஊரணிக்கரையில் இருந்த தபால் நிலையம் தான் ஊருக்கும் முக்கியமான அலுவலகமாக இருந்தது. அங்கே ஒரு கருப்பு நிற தொலைபேசி இருந்தது. மற்றபடி தந்தி, தபால் தான் ஊரிலிருந்த சொந்த பந்தங்களை இணைத்து வைத்திருந்தது. தபால் நிலையமும் அங்கு பணியாற்றிய முசுடு தபால்காரரும் அனைவரும் மரியாதை செலுத்தக்கூடிய வகையில் இருந்தார். அவரை எவரும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள்.
யாராவது எக்குத்தப்பாக பேசிவிட்டால் ஆபிஸ்லே வந்து வாங்கிக்க என்று சொல்லிவிட்டு போய்க் கொண்டேயிருப்பார். இதன் காரணமாக அவர் என்ன திமிராக பேசினாலும் எவரும் எதிர்த்து பேச மாட்டார்கள்.
யாராவது எக்குத்தப்பாக பேசிவிட்டால் ஆபிஸ்லே வந்து வாங்கிக்க என்று சொல்லிவிட்டு போய்க் கொண்டேயிருப்பார். இதன் காரணமாக அவர் என்ன திமிராக பேசினாலும் எவரும் எதிர்த்து பேச மாட்டார்கள்.
அக்கா, தம்பியுடன் பாமா அக்கா வீட்டுக்கு சென்றேன். அதுவொரு பெரிய வீடு. சந்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கு நீண்டதாக இருக்கும். முகப்பில் உள்ளே நுழைந்து பின்கட்டு வழியே வெளியே வர வேண்டும் என்றால் சில நிமிடங்கள் ஆகும். பெரும்பாலான அறைகள் பூட்டப்பட்டு இருக்கும். முன்வாசல் எப்போதும் பூட்டியே இருக்கும். வெளியூரில் இருந்து ஆட்கள் வரும் போது தான் திறப்பார்கள். பக்கவாட்டு சந்து மூலமே பின்னால் செல்ல வேண்டும். நாங்களும் அப்படித்தான் பின்னால் சென்றோம்.
காரணம் பின்னால் இருந்த சமையல்கட்டு போன்ற இடத்தைத் தான் பாமா அக்காவின் குடும்பத்திற்கு செட்டியார் கொடுத்திருந்தார். அவர் மொத்த குடும்பமும் அந்த சமையல்கட்டு ஒட்டிய வாராண்டா போன்ற பகுதியை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அங்கே தான் தொலைபேசி இருந்தது. ஒரு தனியான மேஜையில் ஒரு பெரிய துணி போட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது.
அதுவரையிலும் நான் தொலைபேசியை பார்த்தது இல்லை. என்னைவிட தம்பியும் அக்காவும் எப்பொழுது அந்த துணி நீக்கப்படும் என்பதில் அதிக ஆர்வமாக இருந்தார்கள். எனக்கு சற்று கர்வமாகவும் இருந்தது. நமக்கு ஒருத்தன் போன் மூலம் அழைத்து இருக்கின்றானே? என்று.
அன்று காத்திருந்த நிமிடங்களை இப்போது நினைத்தால் கூட இதயத்தில் லப் டப் என்ற ஓசை கேட்பது போலவே உள்ளது. சற்று நேரத்தில் ட்ரிங்... ட்ரிங்.. என்ற ஓசை கேட்க அந்த ஓசை வீடு முழுக்க எதிரொலியாக கேட்டது. எனக்கு படபடப்பாக இருக்க உள்ளே வேலையாக இருந்த பாமா அக்கா துணியை நீக்கி விட்டு உனக்குத்தாண்டா........ எடுத்து பேசு என்று சொல்லி விட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டார்.
மணி அடித்துக் கொண்டேயிருந்தது.
எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை. எதை தூக்க வேண்டும்? எப்படி பிடிக்க வேண்டும் என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்று உத்தேசமாய் கையில் எடுத்து பேசும் பகுதியை வாயிலும், கேட்கும் பகுதியை வாயிலும் வைத்த போது உடம்பு முழுக்க வேர்த்து ஒழுகியது.
வாயிலிருந்து வார்த்தைகள் வராமல் குழற கை கால் நடுக்கமும் சேர்ந்து கொள்ள மீண்டு வரவே சில நொடிகள் ஆனது.
பேசி முடித்து வெளியே வந்த போது உருவான பெருமையை விட ஏற்பட்ட அவஸ்த்தைகளின் மிச்சம் என்னுள் இருக்க அக்கா கிண்டலடித்துக் கொண்டே வந்தார்.
காலமாற்றங்களில் பல இடங்களில் பலவிதமான தொலைபேசிகளைப் பார்த்து கையாண்டு இன்று தொலைபேசி தேவையில்லாமல் மாறி அந்த இடத்தை கைபேசிகள் அடைந்து விட்டது. இன்று பலருக்கும் தினசரி வாழ்க்கையில் கைபேசியென்பது மூன்றாவது கையாக மாறியுள்ளது.
காலமாற்றங்களில் பல இடங்களில் பலவிதமான தொலைபேசிகளைப் பார்த்து கையாண்டு இன்று தொலைபேசி தேவையில்லாமல் மாறி அந்த இடத்தை கைபேசிகள் அடைந்து விட்டது. இன்று பலருக்கும் தினசரி வாழ்க்கையில் கைபேசியென்பது மூன்றாவது கையாக மாறியுள்ளது.
திருப்பூர் வந்து சேர்ந்த போது தான் கைபேசி என்பது கண்ணில் தெரிந்தது.
ஆம்.
மற்றவர்கள் கைகளில் வைத்திருந்ததுதான் என் கண்களில் தென்பட்டதே தவிர முதல் ஒரு வருடம் கைபேசிக்கும் எனக்கும் சற்று தூரமாகவே இருந்தது.
நான் சேர்ந்த இரண்டாவது நிறுவனத்தில் ஒரு மாதம் கழித்து ஒரு நாள் மாலையில் ஒரு பைக் சாவியுடன் ஒரு கைபேசியைக் கொடுத்து இது ரெண்டும் உங்களுக்குத்தான். பத்திரமாக வைத்துக் கொள்ளுங்க என்ற போது இந்த பேசிகளுடன் வாழ வேண்டிய வாழ்க்கைத் தொடங்கியது. ஒவ்வொரு நிலையிலும் மாறிய நிறுவனங்கள் மாற்றம் உருவாக்கிய பதவிகள் என்று இந்த பேசிகளின் உறவும் பிரிக்கமுடியாத பந்தமாகவே மாறியது. விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்குச் சென்றாலும் கட்டாயம் இந்த கைபேசி நிறுத்தி வைக்க முடியாத அளவுக்கு எவரோ ஒருவரிடமிருந்து தொடர்ச்சியான அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அம்மா பலமுறை சப்தம் போடுவார்.
ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் போது அந்த நிறுவனம் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் சியூசி தொடர்பு மூலம் காலை முதல் மாலை வரைக்கும் பேசிக் கொண்டேயிருப்பதாக இருக்கும் சூழ்நிலை தரும் அழுத்தம் எழுத்தில் எழுத முடியாத ஒன்று.
ஏணைய சார்பு நிறுவனங்கள் என்று நாளொன்று 300க்கும் மேற்பட்ட அழைப்புகள் என்ற காது வலியோடு தலைவலியோடு இதை எவன்டா கண்டுபிடித்தான்? என்று வெறுக்கும் அளவுக்கும் மாற்றியும் உள்ளது.
இது தவிர அலுவலகத்தில் சொந்த கைபேசிகளின் பயன்பாட்டுக்களை நிர்வாகத்தின் கட்டளைப்படி பெரும்பாலும் அமைதியாக வைத்திரு என்பதே தராக மந்திரமாக மாறியுள்ளது.
ஏணைய சார்பு நிறுவனங்கள் என்று நாளொன்று 300க்கும் மேற்பட்ட அழைப்புகள் என்ற காது வலியோடு தலைவலியோடு இதை எவன்டா கண்டுபிடித்தான்? என்று வெறுக்கும் அளவுக்கும் மாற்றியும் உள்ளது.
இது தவிர அலுவலகத்தில் சொந்த கைபேசிகளின் பயன்பாட்டுக்களை நிர்வாகத்தின் கட்டளைப்படி பெரும்பாலும் அமைதியாக வைத்திரு என்பதே தராக மந்திரமாக மாறியுள்ளது.
முதன் முதலாக ரிலையன்ஸ் கொண்டு வந்த 500 ரூபாய் திட்டத்தில் இந்த கைபேசி என்பது எவருக்கும் சாத்தியம் என்று மாறி இன்று அடித்தட்டு மக்களின் வீட்டில் கூட நான்கு பேர்கள் இருந்தால் ஒவ்வொருவரின் கையில் ஒரு தனியான கைபேசி இருக்கும் அளவுக்கு கால மாற்றங்கள் இந்த பேசிகள் மனிதர்களை சுதந்திர பறவையாக மாற்றியுள்ளது.
இன்னமும் மிஸ்டு கால் விட்டு பேசும் வீரர்களை பார்த்துக் கொண்டே இருந்தாலும் சமீப காலத்தில் உருவாக்கிய மாற்றங்கள் எனக்கு மற்றொரு ஆச்சரியத்தையும் தந்து கொண்டிருக்கின்றது.
இன்னமும் மிஸ்டு கால் விட்டு பேசும் வீரர்களை பார்த்துக் கொண்டே இருந்தாலும் சமீப காலத்தில் உருவாக்கிய மாற்றங்கள் எனக்கு மற்றொரு ஆச்சரியத்தையும் தந்து கொண்டிருக்கின்றது.
ஒருவரை அழைக்கும் போது இரவு வேலை பார்த்து விட்டு தூங்கிக் கொண்டிருப்பார். மற்றொருவரை அழைக்கும் போது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருப்பார். வேறொருவர் அழைப்பை பார்த்தும் "தலைவரே ஞாயிறு அன்று பேசுவோமா?" சொல்லி விட்டு அவசரத்தில் ஓட பேசிகளின் பயன்பாடு எனக்கு பேசத் தேவைப்படாத பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றது.
சென்ற மாதத்தில் நண்பர் கொடுத்து விட்ட மைக்ரோமேக்ஸ் அலைபேசியில் இன்று என் குழந்தைகளின் ஆர்வம் தொடங்கி விட என் வட்டம் முடிவுக்கு வந்தது போலவே எனக்குத் தெரிகின்றது. பத்து நிமிடம் இந்த பேசிகள் கையில் இல்லாவிட்டால் கூட வாழ்க்கை போய்விடும் என்ற பயம் மாறி பல சமயம் இந்த பேசிகளை விட்டு விட்டு எங்கேயாவது போய்விடுவது இன்று எனக்கு வாடிக்கையாக மாறி உள்ளது.
))((
ஆகஸ்ட்டு 15 2013
இந்திய சுதந்திரத்தின் வயது 67,
என் மேல் அதிக அக்கறை கொண்ட நண்பர் அவர்கள் உண்மைகள் இந்திய வளர்ச்சி, மாற்றம், முன்னேற்றம் குறித்து எழுதச் சொல்லியிருந்தார்.
இந்த சமயத்தில் இன்றைய இந்தியா மேல் நான் கொண்டுள்ள பார்வை இது.
சென்ற மாதத்தில் நண்பர் கொடுத்து விட்ட மைக்ரோமேக்ஸ் அலைபேசியில் இன்று என் குழந்தைகளின் ஆர்வம் தொடங்கி விட என் வட்டம் முடிவுக்கு வந்தது போலவே எனக்குத் தெரிகின்றது. பத்து நிமிடம் இந்த பேசிகள் கையில் இல்லாவிட்டால் கூட வாழ்க்கை போய்விடும் என்ற பயம் மாறி பல சமயம் இந்த பேசிகளை விட்டு விட்டு எங்கேயாவது போய்விடுவது இன்று எனக்கு வாடிக்கையாக மாறி உள்ளது.
))((
ஆகஸ்ட்டு 15 2013
இந்திய சுதந்திரத்தின் வயது 67,
என் மேல் அதிக அக்கறை கொண்ட நண்பர் அவர்கள் உண்மைகள் இந்திய வளர்ச்சி, மாற்றம், முன்னேற்றம் குறித்து எழுதச் சொல்லியிருந்தார்.
இந்த சமயத்தில் இன்றைய இந்தியா மேல் நான் கொண்டுள்ள பார்வை இது.
தொலைபேசி சில நேரங்களில் தொல்லையாகி விடுவதுமுண்டு
ReplyDeleteஇப்போது தான் விளம்பர மனிதர்கள் அழைப்பு குறைந்துள்ளது.
Deleteஎனக்கு ஆர்வமில்லாமல் போன சில விஷயங்களில் இந்த கைப்பேசியும் ஒன்று. ப்ரஷ்டை ஆகி விடுவேனோன்னு ஒன்னு வச்சுருக்கேனே தவிர இதுவரை ஒன்னும் பிடிபடலை:(
ReplyDeleteYou cannot teach a new trick to an old dog
சந்தையில் வந்துள்ள புதிய வசதிகளை பார்க்கும் போது படிக்கும் போது உருவான ஆர்வம் அதை பயன்படுத்தும் போது உருவாகவில்லை. வயது காரணமா? நாம் பழகிய விதமா? போன்றவை குறித்து யோசித்துக் கொண்டேயிருக்கின்றேன். முதன் முதலாக இந்த கைபேசிகள் மேல் உருவான ஆர்வம் இப்போது சுத்தமாக போய்விட்டது. நீங்க சொன்ன மாதிரி நாம் பழைய மனிதர்களாக இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமோ?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஏன் எழுதியதை எடுத்துட்டீங்க?
Deleteஎழுத்து பிழையை சரி செய்ய.மறுபடி பின்னூட்டமிட முடியவில்லை
Deleteஎனக்கு இந்த கைபேசிகள் பிடிக்காமல் போகக் காரணம், எடுத்தவுடனே 'எங்க இருக்க?' என்ற கேள்வி. பேசிவிட்டு வைத்த பின்னரும், யாரோ என்னைத் தொடர்ந்து வருவது போல உணர்வு! உண்மையில் தொல்லை பேசிதான்!
ReplyDeleteநானும் இதே போல யோசித்துள்ளேன்.
DeleteHELLO, EVERYDAY I AM OPENING AND READING UR ARTICLES, TODAY I NOTICED THE SAME ARTICLE IN OTHER BLOG NAME OF AMBALAM WETHRE THAT IS UR"S OR NOT
ReplyDeleteஅந்த வலைதளத்தின் இணைப்பு கொடுங்களேன்.
Deletehttp://www.ampalam.com/
Deletehttp://www.ampalam.com/2013/08/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Deleteதளத்தில் கடைசியில் என் தள இணைப்பும் கொடுத்துள்ளார்கள் செந்தில்.
Deleteok copied
DeleteWHAT IS THAT C U C?
ReplyDeleteஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் நூறு பேர்கள் இருந்தால் ஒரு குறிப்பிட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனம் அந்த நூறு பேர்களுக்குள் எப்போது அழைத்தாலும் இலவச சேவை தரும். வாடகை கட்டணம் மட்டும் மாதம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
Deleteநான் வேலை செய்யும் நேரத்தில்மட்டும் என் செல்போனை என்னுடன் வைத்திருப்பேன். நான் வீட்டிற்கு வந்த பின் எங்காவது போட்டு விடுவேன் அடுத்த நாள் வேலைக்க்கு செல்லும் போதுதான் அதனை தேடி எடுத்து செல்வேன் அதனால் தொலைபேசி என்ரும் எனக்கு தொல்லை பேசியாக இருந்தது இல்லை. எனக்கு என் மனைவி மகள் மற்றும் எனக்கு அருகில் நான் ஒடிப்போய் உதவும் தூரத்தில் உள்ள நண்பர்களின் கால்கள்தான் முக்கியம் மற்றவை முக்கியம் அல்ல என நினைப்பவன் நான்
ReplyDeleteஇங்கே வாய்ப்புகள் எப்போது எங்கேயிருந்து வரும் என்று சொல்வதற்கில்லை, தொழில் ரீதியாக வளர்ந்தவர்கள் கூட காலை முதல் இரவு வரைக்கும் பயன்பாட்டில் தான் வைத்திருக்க வேண்டியதாக உள்ளது.
Deleteஉண்மையிலேயே தற்போதைய சூழலுக்கு தொல்லை பேசிதான். அழைப்பு வருகிறது என்றாலே எரிச்சல் வருகிறது! அதே போல நானும் அலுவல் தொடர்பு தவிர யாருக்கும் தொல்லை கொடுப்பதும் இல்லை. அனுபவங்களை நன்றாக எழுத்தாக்கியிருக்கிறீர்கள்.
ReplyDeleteகட்டுப்பாடுகள் தான் நம் ஆர்வத்தை சரியான முறையில் கடைசி வரைக்கும் கொண்டு செலுத்துகின்றது.
Deleteஇன்னமும் மிஸ்டு கால் விட்டு பேசும் வீரர்களை பார்த்துக் கொண்டே இருந்தாலும் சமீப காலத்தில் உருவாக்கிய மாற்றங்கள் எனக்கு மற்றொரு ஆச்சரியத்தையும் தந்து கொண்டிருக்கின்றது.
ReplyDeleteஇப்போ தொலைபேசி இல்லை என்றால் வாழ்க்கை இல்லை.... தொலைபேசிகள் தொல்லை பேசிகளாகி நாட்களாகிவிட்டது.
குறிப்பிட்ட காலத்திற்குள் பொருளாதார தன்னிறைவு பெற்று விட்டால் இந்த தொலைபேசிகளின் பயன்பாடு ஒரு கட்டுக்குள் வந்து விடும். மனம் தான் காரணம்.
Deleteதொலை பேசியில் பேசுகையில் எதிராளியின் கண்களை பார்த்துபேசவேண்டிய அவசிமில்லாததால் மிக தையிரியமாக பொய் புழங்குகிறது.
ReplyDelete\\கட்டுப்பாடுகள் தான் நம் ஆர்வத்தை சரியான முறையில்
ReplyDeleteகடைசி வரைக்கும் கொண்டு செலுத்துகின்றது.//
நேற்றைய மனிதர்களுக்கு இது நிறைய சாத்தியம் ஆனால்
இன்றைய இளையோர்க்கு கொஞ்சம் தடுமாற்றமே.
+1
ReplyDeleteதொலைபேசி இல்லாமல் என்னால் இருப்பது சிரமம். என்னுடைய பெரும்பாலான பணிகள் இதை சார்ந்தே உள்ளது. அதுவும் தற்போது இதில் இணையம் வந்த பிறகு பயன்பாடு அதிகம் ஆகி விட்டது.
ReplyDeleteமொபைல் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பதே உண்மை. எனக்கு அலுவலக அழைப்பு மட்டுமே கடுப்பு.. அழைப்பு வந்தால் மட்டுமே கடுப்பாகும்..மற்றபடி இவை இல்லாமல் இருப்பது சிரமமே. இணையம் இல்லாமல் இருக்க முடியும் தொலைபேசி இல்லாமல் முடியாது.
என்னுடன் எப்போதும் இருப்பது மொபைலும் பர்ஸும் தான்.