டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவிற்கு நான் எதிர்பார்த்த, எதிர்பாராத நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். எதிர்பார்த்து ஏமாற்றம் அளித்தவர்களும் உள்ளனர். அவரவர் சூழ்நிலையை கருத்தில் எடுத்துக் கொண்ட போதிலும் வெகு தொலைவில் இருந்து இதற்காகவே வந்திருந்த நபர்களில் எனக்கு ஆச்சரியம் அளித்தவர்களில் முக்கியமானவர்கள்.
ராஜ்குமார் சின்னச்சாமி (கடைசி வரைக்கும் படம் காட்டிக் கொண்டேயிருந்தார். ஆனால் நிச்சயம் அருகே உள்ள ஊர் தான் சொந்த ஊராக இருப்பதால் வந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் வைத்திருந்தேன். குறுகிய காலத்தில் கூகுள் ப்ளஸ் ல் தன்னை சுனாமியாக அறிமுகப்படுத்தி இன்னமும் சூறாவளி போல களத்தில் இருக்கும் தம்பி. ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் மனதில் பட்டத்தை, தான் நினைத்ததை அப்படியே அட்சரம் மாறது எடுத்து வைப்பவர்)
ராமச்சந்திரன் (பிகேஆர்) இவரைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். ஊரில் இருந்து பேரூந்தில் ஏறும் போது நள்ளிரவில் ஒரு அலைபேசி அழைப்பு. திருப்பூருக்கு வந்து சேர்ந்ததும் ஒரு அழைப்பு. அன்பால் அசத்திவிட்ட தல.
ஜோசப் பால்ராஜ். இவரைத் தெரியும். ஆனால் அறிமுகம் இல்லை. என்னை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர். சென்னைக்கு வந்தவர் அண்ணன் விழாவில் நானும் கலந்து கொள்வேன் என்று அப்துல்லாவுடன் கிளம்பி வந்தவர். சென்னையில் இருந்து கிளம்பும் போது அப்துல்லா அழைத்துச் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. ஒரு அழைப்பு கூட அனுப்பவில்லை.
உண்மையான அன்பையும் அக்கறையும் காட்டிய தம்பி.
முகநூலில் தீவிரமாக செயல்படும் ஆகாயமனிதன். உறவோடு தளம் நடத்திய விழாவில் நேரிடையாக வந்து அறிமுகம் ஆனார். உங்கள் தளம் படித்து படித்து தான் சாயப்பட்டறை பிரச்சனையில் மோகன் கமிட்டி செயல்பாடுகளை புரிந்து கொண்டேன். நானும் திருப்பூர் மண்ணின் மைந்தன் என்றாலும் உங்கள் எழுத்து தான் என்னை பலவற்றை அடையாளம் காட்டியது என்ற தம்பி. இவர் அடையாள புகைப்படத்தைப் பார்த்து பல நாட்கள் 70 வயதுக்கு மேற்பட்ட நபராக இருப்பார் என்று மனதில் வைத்திருந்ததை உடைத்த தம்பி. எப்போதும் வெங்கல கடையில் புகுந்த யானை போல தான் சார்ந்திருக்கும் இடத்தை கலகலப்பாக மாற்றும் சிபி செந்தில் குமார் விழாவில் அமைதியாக இருந்தது எனக்கு ஆச்சரியமே.
சேர்தளம் சார்பாக பலரும் வந்திருந்த தம்பிமார்கள்.
தொழிற்களம் சார்பாக வந்திருந்த பெண்கள் வரவேற்பு பணியை மற்றும் வருகை புரிந்தவர்களை குறிப்பெடுக்கும் வேலையை சிறப்பாக செய்தனர்.
வலையுலகத்தை அலற வைக்கும் திண்டுக்கல் தனபாலன் மண்டபத்தின் உள்ளே வந்து என் அருகே பின்னால் நின்று கொண்டு இன்று என்னால் வர முடியாது என்று சொல்லி கலாய்த்த தம்பி.
திரு. பழனி கந்தசாமி அவர்களுக்கு முதல் நாள் என் இடுகையின் தலைப்பை அவர் இடுகையில் போட்டு நீங்க அவசியம் வருவீங்கன்னு நினைக்கின்றேன் என்று தான் போட்டேன். மனுஷர் டாண் என்று முதல் ஆளாக கூட ஒரு துணை நபரையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.
இவர்கள் இருவரும் ஒரு கிளையில் பூத்த இருமலர்கள். பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்.
எனக்கு நேரிடையாக அறிமுகம் இல்லாத போதும் கூட விழாவிற்கு முதல் நாள் ஒரே ஒரு அலைபேசி அழைப்பு. மனிதர் தனது வாகனத்தில் முக்கியமான நபர்களுட்ன் வந்த ஈரோடு திரு. தாமோதர் சந்துரு.
தனது திருமண பத்திரிக்கையை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்த நாள் முதல் இன்று வரையிலும் என்னுடன் நல்ல புரிதலோடு இருக்கும் சஞ்சய் காந்தி.
இந்த விழாவின் தொடக்கப்புள்ளி முதல் கடைசி வரைக்கும் மறைமுகமாக பல விதங்களில் எனக்கு உதவிய தம்பி சிந்தன்
நன்றி அண்ணே !
ReplyDeleteஎனக்கும் பெருமை தான்..
ஆத்தாடி எப்படியே உள்ளே வந்துட்டீங்க. நன்றி குமாரு.
ReplyDeleteவந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅனைவரையும் சிறப்பித்தமைக்கு நன்றி...
பாராட்டு கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டும் உரித்தாகுக!
ReplyDelete